ஆறுவகை வழிபாடுகள்
கணேஷ் அரவிந்த்
இறைவனுக்கு செய்யப்படும் ஆறுவகையான வழிபாடுகளை ஆறுவகை உபசாரங்கள் என்கின்றனர்.
1. அபிஷேகம்:
தண்ணீர், பால், தேன், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் பல பொருட்களால் செய்யப்படுவது.
2. அலங்காரம்:
பட்டு பீதாம்பரத்தாலும், பொன்னாலும், மலர் மாலைகளாலும், தங்க நகைகளாலும், வைர வைடூரியங்களாலும் அழகுபடுத்துவதாகும்.
3. அர்ச்சனை:
பூக்களாலும், பாக்களாலும் செய்யப்படுவது.
4. நைவேத்தியம்:
பல்வேறு உணவு வகைகள், பால், பழம் முதலியவற்றை படைப்பது.
5. ஆராதனை:
தூபம் காட்டுதல், தீபம் காட்டுதல்.
6. உற்சவம்:
பெரு விழா நடத்தி மூர்த்தியை வலமாக வீதிகளில் கொண்டு செல்லுதல்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.