சோடச உபசாரம்
இந்து சமயத்தில் சோடச உபசாரம் என்பது பதினாறு வகையான பணிவிடைகளைக் குறிக்கின்றது.
அவை;
1. அகமம் - இறைவனுக்கு இருக்கை அளித்தல்
2. பாத்யம் - கால் கழுவ நீர் தருதல்
3. அர்க்யம் - கை கழுவ நீர் தருதல்
4. அசமநீயம் - குடிக்க நீர் கொடுத்தல்
5. அபிசேகம் - திருமுழுக்கு நீராட்டல்
6. வஸ்திரம் - ஆடை அணிவித்தல்
7. கந்தம் - நறுமணப் பொருள்கள் அளித்தல்
8. புஷ்பம் - மலர் மாலைகளைச் சூட்டுதல்
9. தூபம் - அகில், சந்தனம் முதலிய நறுமணப் புகையிடல்
10. தீபம் - ஒளிவிளக்குகளால் மும்முறை வலமாகச் சுற்றல்
11. நைவேத்தியம் - உணவுப் பொருள்கள் படைத்தல்
12. கற்பூரம் - கற்பூரம் காட்டுதல்
13. சாமரம் - கவரி வீசுதல்
14. ஆலவட்டம் - விசிறி வீசுதல்
15. சக்கரம் - குடை கவிழ்த்தல்
16. தர்ப்பணம் - கண்ணாடி காட்டுதல்
- தேனி பொன். கணேஷ்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.