கி.பி இரண்டாம் நூற்றாண்டு முதல் பௌத்தம் மற்றும் சமணக் கோயில்களில் யட்சினி எனும் பெண்கள் சிற்பங்கள் இருந்தன. இந்தச் சிற்பங்கள் சுரசுந்தரிக்கு இணையாக, கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இந்து சமயக் கோயில்களில் சுரசுந்தரி எனும் வானுலகப் பெண் இடம் பெறத் தொடங்கினார். இவர், அழகு மற்றும் பாலியல் இன்ப உணர்ச்சிகளின் வடிவாகக் கருதப்படுகிறார்.
மனைவி இல்லாத வீடும், பெண் இல்லாத கேளிக்கையும் போன்று, சுரசுந்தரிகளின் சிற்பங்கள் இல்லாத கோயில் சிற்பங்களும் பொலிவற்றதாகும் என இந்து சமயச் சிற்பச் சாத்திரங்கள் கூறுகின்றன. கி.பி 15 ஆம் நூற்றாண்டின் ‘ஷிரார்நவ’ எனும் சிற்ப நூலில், சுரசுதந்தரிகளின் சிற்பம், கீழ் நோக்கியவாறு அல்லது, யாரையும் நோக்கியவாறு வடிக்கக் கூடாது எனக் கூறுகிறது.
வடநாட்டு இந்துக் கோயில்களின் மூலவர் மற்றும் அம்பாளின் ஏவல் பெண்களாக, சுரசுந்தரியின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலும், சுரசுந்தரிகள் நடனமாடும் அரம்பையர்கள் போன்று கோயில்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
* முகம் பார்க்கும் கண்ணாடியை தாங்குபவள்
* செடியின் கிளையத் தாங்குபவள்
* தாமரையை முகர்பவள்
* மலை மாலையை அணிந்தவள்
* தாய்மை வடிவம்
* சாமரம் வீசுபவள்
* நர்த்தகி
* கிளியுடன் உரையாடுபவள்
* காலில் கொலுசு அணிந்தவள்
* மத்தளம் கொட்டுபவள்
* சோம்பலுடன் கூடியவள்
* முட்களைக் களைபவள்
என்று சுரசுந்தரிகளின் சிற்பங்கள் கோயில் சுவர்களில் அழகுடன் வடிப்பது, அந்நாட்டு மன்னர்களின் வளமையைக் காட்டுகிறது.
கஜூரஹோவிலுள்ள சித்திரகுப்தர் கோயில் சுவர்களில் சுரசுந்திரியின் சிற்பங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கிறது.