இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




ஆன்மிகம்
பிற சமயங்கள்

புத்தரின் முதல் அருளுரைகள் எவை?

- உ. தாமரைச்செல்வி

வாராணசியில் உள்ள இஸிபதனத்தை (மான் பூங்கா) அடைந்தார் பகவான் புத்தர். அங்கே உருவிலா கிராமத்தில் அவருடன் இருந்து பின்னர் விலகிச் சென்ற கௌண்டின்யர், அஷ்வஜித், வஷ்பா, மகாநாமன், பத்ரிகா ஆகிய ஐந்து முனிவர்களும் குளத்தின் படித்துறையில் அமர்ந்திருப்பதைக் கண்டார்.

புத்தர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்தனர். அப்போது, ''கௌதமர் வருகிறார். கடுமையான தவத்தைக் கலைத்துவிட்டு, சுகவாழ்க்கைக்குள் மீண்டும் தன்னை நுழைத்துக் கொண்டவர் அவர். எனவே நாம் எக்காரணம் கொண்டும் அவருக்கு எழுந்து நின்று மரியாதை செய்யக் கூடாது'' என்று அவர்கள் தங்களுக்குள் பேசி முடிவு செய்து கொண்டனர்.

பகவான் அவர்களிடம் வந்தபோது, கௌண்டின்யரைத் தவிர, மற்றவர்களால் ஏற்கனவே செய்து கொண்ட முடிவின்படி நடந்து கொள்ள முடியவில்லை.

ஒருவர் வேகமாக எழுந்து பகவானை வணங்கி எதிர்கொண்டு அழைத்தார்.

இன்னொருவர் அவர் கையில் வைத்திருந்த பாத்திரத்தையும் துணி மூட்டையையும் வாங்கிக் கொண்டார்.

மற்றொருவர் புத்தர் அமர்வதற்கு வசதியாக அந்த இடத்தைத் தூய்மைப்படுத்தி அமருமாறு கூறினார்.

வேறொரு சீடர் அவர் கை, கால் கழுவ நீரைக் கொடுத்து உபசரித்தார்.

ஆனால் கௌண்டின்யர் மட்டும் கோபத்துடன் அவரை வணங்கி வரவேற்காமல் இருந்தார்.

அதனைப் புரிந்து கொண்டு புத்த பகவான், ''கௌண்டின்யா, நலமா?'' என்று கேட்டார்.

உடனே கௌண்டின்யர், ''சித்தார்த்தரே, தாங்கள் தீவிரத் தவ வாழ்க்கையை விட்டு விலகிப் போய்விட்டீர்கள். இனிமேல் நமக்குள் எதுவும் இருக்க முடியாது'' என்றார் கோபம் நீங்காதவராக.


அப்போது பகவான் சொன்னார், ''ததாகதரை சித்தார்த்தர் என்று இனிமேல் அழைக்கக் கூடாது பிக்குகளே. இப்போது ததாகதர் சம்புத்தர் ஆகிவிட்டார். மீண்டும் பிறவாத நிலையை அடைந்தவனாகிவிட்டேன். உங்களுக்குத் தர்மத்தை உபதேசிக்க உள்ளேன். இல்லறத்தை விட்டு துறவறம் பூண்டது எதற்காக? கடுமையான தவம் செய்வது எதற்காக? பரிசுத்தமான உயர்ந்த வாழ்க்கையை அடைவதற்காகத்தானே! அதனை நீங்கள் அடைவீர்கள். அதற்கான வழியை நான் உங்களுக்குப் போதிக்கிறேன்'' என்று அழைத்தார் புத்தபிரான்.

''தாங்களோ கடுந்தவத்தைக் கைவிட்டு இன்ப வாழ்வை மீண்டும் அடைந்தீர். உணவை உட்கொண்டீர். இப்படிப்பட்ட நிலையில் உயர்ந்த புத்த ஞானத்தை எவ்வாறு தங்களால் பெற முடியும்? நம்ப முடியவில்லை'' என்றார் கௌண்டின்யர். மற்ற துறவிகளும் அதனை ஆதரித்தனர்.

''தவறாகப் புரிந்து கொண்டீர்கள் பிக்குகளே. ததாகதர் ஒரு போதும் தவத்தைக் கைவிடவே இல்லை. அவர் சுகவாழ்க்கைக்குள் மீண்டும் செல்லவே இல்லை. ததாகதர் இறவாமை என்னும் பெரும் பதவியைப் பெற்றவர். அவர் காட்டும் வழியில் நீங்கள் நடந்தால், உண்மையைக் கண்டறிவீர்கள்'' என்றார் பகவான்.

எனினும், சீடர்களுக்கு பகவான் மீது நம்பிக்கை வரவே இல்லை. திரும்பத் திரும்பத் தங்கள் சந்தேகத்தையே கூறினர்.

அவர்கள் சந்தேகத்தில் சிக்கியுள்ளதை உணர்ந்த புத்தர், ''பிக்குகளே, ததாகதர் என்றாவது இவ்வாறு பேசியதைத் தாங்கள் கேட்டதுண்டா?'' என்று கேட்டார்.

''இல்லை'' என்றனர்.

''அப்படியானால் இப்போது ஏன் இவ்வாறு பேச வேண்டும்? யோசியுங்கள், பிக்குகளே. ததாகதர் பரிசுத்தமானவர். அவர் கூறப்போவதைச் செவிமடுத்தால் கிடைத்தற்கரிய நிர்வாண மோட்சத்தை அடைவீர்கள்'' என அழுத்தமாகப் பேசினார் புத்தபிரான். அவரது உறுதியான பேச்சும், நம்பிக்கை தரும் வார்த்தைகளும் துறவிகளின் மனதை அசைத்தன. பகவானின் மீது நம்பிக்கை பிறந்தது.

சூரிய அஸ்தமன நேரம்.

கௌண்டின்யர், அஷ்வஜித், வஷ்பா, மகாநாமன், பத்ரிகா ஆகிய ஐந்து முனிவர்களும் தமது சிறிய ஆசிரமத்துக்கு வெளியே அமர்ந்திருந்தனர்.

புத்தப்பகவான் அவர்களுக்கு எதிரே தேக்கு மரத்தால் செய்யப்பட்ட எட்டு அடி உயரமான ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்தார்.

பின்னால் சக்கரம் ஒன்று காணப்பட்டது. அதன் மையத்தில் அச்சுக்கான துளையும், அதைச் சுற்றி நான்கு பெரிய பட்டைகளும், அவற்றைச் சுற்றிலும் வட்டம் ஒன்றும் காணப்பட்டன. அந்த வட்டத்திற்கும் சக்கரத்தின் வெளிச்சுற்றுக்கும் இடைப்பட்ட அளவில் சிறியதான எட்டுப் பட்டைகள் இருந்தன.


இப்போது பகவான் ஐந்து துறவிகளுக்கும் தாம் அறிந்த உண்மையை உபதேசிக்கத் தொடங்கினார்.

* 6 ஆண்டுகள் இடையறாத தேடலின் முடிவில் போதி மரத்தினடியில் ததாகதருக்கு அற்புதமான ஞானோதயம் கிடைத்தது. அதுவே உயர்ந்த புத்தப்பதவி. அதன் மூலம் பல உண்மைகள் விளங்கின.

* துறவிகள் விலக்கிக் கொள்ள வேண்டிய இரு நிலைகள் உள்ளன. ஒன்று, காமசுகல்லிகானு யோகம். மற்றொன்று அத்தகிலமதானு யோகம்.

* காமசுகல்லிகானு யோகம் என்றால் சிற்றின்ப சுகத்தை அனுபவிப்பது என்று பொருள். இழிவும், தாழ்வும் கொண்ட விகாரமான இது இறுதியில் தீமையைத் தரும்.

* அத்தகிலமதானு யோகம் எனில் உடம்பை அதிகம் வாட்டி ஒடுக்கி அடக்கித் துன்பம் தருவது என்று பொருள். கடைசியில் இதுவும் எந்தவிதப் பயனையும் அளிக்காமல் வீணாகிப் போகிறது.

* எனவே இவ்விரு வழிகளும் அல்லாமல் மற்றொரு புதிய நெறியை ததாகதர் கண்டுபிடித்திருக்கிறார். நல்லறிவு, நற்காட்சி ஆகியவற்றைக் கொடுத்து ஞானத்தையும், சம்புத்தியையும், நிர்வாண மோட்சத்தையும் அளிக்கிறது இந்தப் புதிய நெறி.


* நான்கு உயரிய உண்மைகளை அதாவது வாய்மைகளை உங்களுக்குக் கூறுகிறேன். அவை:

1. துக்க சத்தியம் (துன்பம்)

முதல் உண்மை மிக எளியது. ஆனால் ஆன்மிகத்தின் அடிப்படை. ஆசையே துன்பத்துக்குக் காரணம்.

2. துக்க உற்பத்தி சத்தியம் (துன்பத்தின் காரணம்)

ஆசையின் மற்றொரு லட்சணம் என்னவென்றால் அழியப் போகும் மனிதர், பொருட்கள் அல்லது சுகத்தின் மீது பற்று வைத்தல் ஆகும். இந்தப் பற்று தரும் ஆசையின் விளைவு இடையறாத் துன்பமே.

3. துக்க நிவர்த்தி சத்தியம் (துன்ப நீக்கம்)

மூன்றாவது உண்மை, ஆசையை வெல்ல முடியாமல் நம்மைத் தடுப்பது அகம் எனப்படும் 'நான்' என்னும் ஆணவம்.

4. துக்க நிவாரண மார்க்க சத்தியம் (துன்பம் நீக்கும் வழி)

நான்காவது உண்மை, விடுதலைக்குத் தேவையான சக்தியைப் பெற நம்மிடம் உடல், மனம்,சொல் என்னும் மூன்றும் தூய்மை உடைய திரிகரண சுத்தி அவசியம் தேவை. இந்தத் தூய நிலையை நாம் அடைய வேண்டுமானால், நமக்கு எட்டுவிதமான கட்டுப்பாடுகள் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.

அந்த எட்டுவிதக் கட்டுப்பாடுகள், அதாவது அட்டாங்க மார்க்கம் என்னென்ன?

1. நல்ல நம்பிக்கை

நான்கு உண்மைகளில் நம்பிக்கை கொள்ளுதல். நமக்கும் சக உயிர்களுக்கும் நன்மையே நடக்கும் என்னும் நன்னம்பிக்கையைக் கொள்ள வேண்டியது முக்கியமானது.

2. நல்லெண்ணம்

இல்லற வாழ்க்கையை விட்டொழிக்கவும், கோபத்தை அகற்றவும், ஒருவருக்கும் தீமை செய்யாமலிருக்கவும் தீர்மானித்தல். அன்பான சொற்களால் யாரையும் புண்படுத்தாமல் பேச வேண்டும்.

3. நல்லமொழி

பயனற்றதும், கடுமையானதும், பொய்யானதுமான சொற்களைக் கூறாதிருத்தல். பிறரைத் துன்புறுத்தாமல் அகிம்சையைக் கடைப்பிடித்தும், களவாடாமல் நன்னெறியைக் கடைப்பிடித்தும் இருத்தல்.

4. நற்செய்கை

நமது லட்சியம் உயர்ந்த நிலையை எட்டும் குறிக்கோளாக நிலைத்து நிற்பது. நமது நடத்தை அப்பழுக்கற்றதாக அதாவது தன்னலமற்று பிறர் நலம் பேணுவது.

5. நல்வாழ்க்கை

பிச்சையேற்று வாழ்தல். நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதில் நேர்மையும் இருத்தல் அவசியம். ஏமாற்றுவது மறையும் போதே உலகில் ஏமாற்றங்கள் மறையும்.

6. நன்முயற்சி

தீமையை அகற்றி நற்குணங்களை வளர்த்தல். இந்த நெறிகளில் நாம் பிறழாமல் நிலைத்து நிற்றல் வேண்டும்.

7. நற்சாட்சி

சிற்றின்ப ஆசையையும், துன்பத்தையும் அடையாவண்ணம் விழிப்புடனிருத்தல். நம் அறிவை உலக நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துவதில் திடமாக நிற்பதாகும். அறிவை அழிவுக்குப் பயன்படுத்துவோரே உலகெங்கும் துன்ப முட்களை விதைக்கின்றனர்.

8. நல்ல தியானம்

லட்சியத்தை அடைய மனம் ஒருவழிப்பட்டு சிந்தித்தல். இந்த எல்லா நெறிகளுக்கும் நமக்கு உறுதுணையாக நிற்பது தியானம். தியானமே நாம் திரிகரண சுத்தியுடன் வாழ பக்க பலமாகும்.

நான்கு உண்மைகளும், அந்த உண்மைகள் உணர்த்தும் தடைகளைத் தாண்ட எட்டு நெறிகளுமான இந்த வழியை, புத்தன் என அழைக்கப்படும் இவன் ஒரு கருவியாக பௌத்தம் என்னும் மார்க்கமாக உங்கள் முன் முழு மனதோடு சமர்ப்பிக்கிறான்.

இந்த நான்கு உண்மைகளையும், எட்டு நெறிகளான கட்டுப்பாடுகளையும், நாம் எளிதில் நினைவு கூரவே இந்தச் சக்கரம் வைக்கப்பட்டுள்ளது. இது தர்மச் சக்கரமாகும்.

மேற்கண்டவாறு தனது முதல் உபதேசத்தை அந்தத் துறவிகளுக்கும் பகவான் போதித்தார்.


இவ்வாறு அவர் உபதேசித்த பிறகே, கௌதமர் புத்தராகிவிட்டதை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது. பின்னர் மேலும் தொடர்ந்து அவர் உபதேசித்தார்.

சத்திய ஞானம், கிருத்திய ஞானம், கிருத ஞானம் என்கிற மூன்றையும் நான்கு சத்தியத்தோடு பொருத்திப் பார்க்கிறபோது பன்னிரண்டு விதமாக இருக்கிற இந்தத் தத்துவ ஞானத்தை நான் எப்போது அறிந்தேனோ, அப்போதே தேவர், பிரமர், மாரர் இருக்கிற அந்த உலகத்திலேயும், நான் சம்மா சம்போதியை அடைந்தேன்.

இந்த ஞானம் எனக்கு உதித்த போது, 'நான் அடைந்த சம்போதி ஞானம் அழியாது. இதுவே எனது கடைசிப் பிறப்பு. இனி நான் பிறக்க மாட்டேன் என்ற மனவுறுதி ஏற்பட்டது' என்றார் புத்தர்.

''இதனைப் போதிக்கும் பௌத்தம் அனைவருக்கும் பொதுவானது. இதனை ஏற்று புத்தன் தன்னைத்தானே உணர்ந்தான். அப்படியே இதற்கு இணையான இந்த நன்னெறிகளை ஏற்று, அதன் மூலம் ஞானம் பெற விரும்புகிறவர்கள் பௌத்தத்தில் இணையலாம்'' என்று தனது பௌத்தம் பற்றித் தெளிவாக்கினார் பகவான்.

இவ்வாறான உபதேசத்தைக் கேட்டதும் ஐந்து துறவிகளும் மனத்தெளிவினை அடைந்து புத்தரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/others/p31.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License