புத்தர் பெருமான் ஐந்து பயிற்சிகளைப் பெற்றிடல் வேண்டும் என்று வலியுறுத்துகிறார். அவை;
1. தவறுதலின்றி விழிப்பாயும், மனச்சாட்சிக்கு ஏற்ப நடப்பவனாயும் இருக்கப் பயிற்சி செய்ய வேண்டும்.
2. நினைவுச் சொற் செயல்களில் மாசற விளங்குமாறு பயிற்சி செய்ய வேண்டும்.
3. கள்ளங் கபடமற்றவனாய் உள்ளதை உள்ளபடி உரைப்பவனாய் இருக்கப் பயிற்சி செய்ய வேண்டும், பிறரைப் பற்றி அவதூறாகப் பேசாமலும், நினைக்காமலும் இருக்க வேண்டும்.
4. உன் ஐம்புலன்களையும் உன் காவலின் கீழ் வைக்கப் பயிற்சி செய்ய வேண்டும். சுகத்திற்காக உண்ணாமல், அவசியமானதை உண்ண வேண்டும்.
5. ஜாக்கிரதையாயும், எப்போதும் கவனமாயும், தன்னடக்கமுள்ளவனாயும் இருக்கப் பயிற்சி செய்ய வேண்டும்.