புத்தர் பெருமான் துறக்க வேண்டுமென்று எட்டு விதமான செயல்களைக் குறிப்பிடுகிறார். அவை;
1. உயிரின் புனிதத் தன்மையை உணர்ந்து, எல்லாக் கொலையையும் தடுத்து விடல் வேண்டும்.
2. கொடுக்காததை எடுத்துக் கொள்ளாமலிருந்து, களவைத் தடுத்து விடல் வேண்டும்.
3. கண்டிப்பாக உண்மையைப் பின்பற்றி, பொய்யைத் தடுத்துவிடல் வேண்டும்.
4. பிறரைப் பழிக்காமலிருந்து, பழிப்பதைத் தடுத்துவிடல் வேண்டும்.
5. பிறர்க்கு உரியதில் ஒரு போதும் ஆசைப்படாமலிருந்து, பேராசையைத் தடுத்து விடல் வேண்டும்.
6. இனிமையானதை மட்டும் பேசுவதால் நிந்தனயைத் தடுத்து விடல் வேண்டும்.
7. சாந்தியால், அமைதியால், சினத்தைத் தடுத்து விடல் வேண்டும்.
8. தாழ்மையால் அகந்தையைத் தடுத்து விடல் வேண்டும்.