Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


1. உல்லாசப் பயணம்

மதியம் 1.30 மணி -

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் வருவதும் போவதுமாக இருந்தனர். எப்பொழுதாவது அதிரடியாக பின்பற்றப்படும் பாதுகாப்பு கெடுபிடிகள் இல்லாததால் மெட்டல் டிடெக்டர் சோதனை வாயில் வழியாக செல்வதை அலட்சியப்படுத்திச் சென்று கொண்டிருந்தனர் அவசர கதியில் ஓடிய பயணிகள்.

ரெயில் நிலையத்திற்குள் ஆங்காங்கே பளிச்சிட்ட பெரிய மானிட்டர்களில் எந்தெந்த ரெயில் எப்பொழுது புறப்படும் என்கிற விவரம் நின்று நிதானமாக ஓடி க்கொண்டிருந்தது.

"பயணிகளின் கனிவான கவனத்திற்கு..." என்று ஆரம்பிக்கும் பதிவு செய்யப்பட்ட பெண்ணின் அழகான குரல், பயணிகளின் பலத்த ஓசைகளுக்கு மத்தியில் தேனிசையாக தவழ்ந்து வந்து கொண்டிருந்தது.

"மே ஐ ஹெல்ப் யூ" என்று பெரிதாக எழுதப்பட்டு இருந்த ரெயில்வே தகவல்களைப் பெறும் அறையில் ஒருசில பயணிகள் எதையோ விசாரித்துக் கொண்டு இருந்தார்கள்.

உலகம் முழுக்க தமிழர்களின் கைமணத்தை பரப்பிய சரவணபவனின் ரெயில்வே கிளை ஹோட்டலில் இருந்து வந்த கமகம வாசனை, பெரும்பாலான பயணிகளை அந்த ஹோட்டலை நோக்கி ஒருகணம் திரும்ப வைத்தது.

அந்த ஹோட்டலுக்குள் ஒரு டேபிளில் பரபரப்பாக அமர்ந்திருந்தான் ஆனந்த். அடி க்கடி ஹேண்ட் வாட்சை பார்த்துக் கொண்டிருந்தான். தனக்கு முன்பாக டேபிள் மீது வைத்திருந்த விலை உயர்ந்த நோக்யா மொபைலையும் அடிக்கடி எ டுத்துப் பார்த்துக் கொண்டான்.

சிறிதுநேரத்தில் ஹோட்டல் சப்ளையர் அவன் ஆர்டர் செய்த காபியை கொண்டு வந்து டேபிளில் வைத்துவிட்டு அவனைப் பார்த்து, "ஸார்... உங்களுக்கு காபி மட்டும் போதுமா? வேறு ஏதாவது வேணுமா?" என்று கேட்டான்.

"இப்போது சாப்பிட எதுவும் வேண்டாம். 2 செட் வடை மட்டும் பேக் செய்யுங்கள். இரண்டுக்கும் சேர்த்து பில் கொண்டு கொண்டு வாருங்கள்."

ஆனந்த் சொன்னதும் அங்கிருந்து சென்றார் அந்த சப்ளையர்.

ஆவி பறந்து கொண்டிருந்த காபியை உதட்டுக்கு கொடுத்து உறிஞ்சத் தொடங்கினான் ஆனந்த்.

அவன் காபி குடித்துக்கொண்டிருக்கும்போதே மொபைல் பளி ச்சிட்டு சினுங்கியது. ஆர்வமாய் மொபைலை ஆன் செய்து பேசினான்.

"ஸார்... நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? நாங்கள் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்துவிட்டோம்." எதிர் முனையில் பேசிய ஆசாமி கூறினான்.

"நான் சரவணபவன் ஹோட்டலில் இருக்கிறேன். இதோ வெளியே வந்து விடுகிறேன். நீங்கள் ரெயில் நிலையத்திற்குள் வாருங்கள்."



"நான் ரெயில் நிலையத்திற்குள் வர முடியாது ஸார்."

"ஏன்?"

"நீங்கள் கோவைக்கு இரண்டு டிக்கெட்தானே ரிசர்வ் செய்து வைத்திருக்கிறீர்கள்?"

"ஆமாம்!"

"நான் உள்ளே வர வேண்டுமானால் பிளாட்பார டிக்கெட் எடுக்க வேண்டும். டிக்கெட் கவுண்டரில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதனால், ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு வாருங்கள்."

"சரி... நீங்கள் அங்கே நில்லுங்கள். நான் ஒரு நிமிடத்தில் வந்துவிடுகிறேன். ஆமாம்..." இதற்கு மேல் சொல்லும் போதுதான் பேச்சில் சற்று தடுமாறினான் ஆனந்த்.

"பயப்படாதீங்க ஸார். அந்தப் பொண்ணும் என்கூடத்தான் இருக்கு. நீங்க தாராளமாக் கூட்டிட்டு போகலாம்!"

"சரி... இதோ வந்துவிட்டேன்."

அவசரமாக மொபைல் இணைப்பை துண்டித்தவன், தான் குடித்துக் கொண்டிருந்த காபியைப் பார்த்தான். அது நன்றாக ஆறிப்போய் இருந்தது. அதனால் அதை அப்படியே வைத்துவிட்டான்.

அவன் ஆர்டர் செய்த இரண்டு செட் வடையும் பில்லோடு வந்துவிட்டதால், அதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு, அவசர அவசரமாக வடையை தனது பேக்கிற்குள் திணித்துக் கொண்டு ரெயில் நிலையத்தின் முகப்பு பகுதிக்கு ஓடினான்.

ஓடி வந்த வேகத்தில் எதிரே சற்று உயரத்தில் பளிச்சிட்ட மானிட்டரில் நேரத்தைப் பார்த்தான். மதியம் 2 மணி 10 நிமிடம் 7 நொடி என்று பளிச்சிட்டது.

ரெயில் புறப்பட இன்னும் 20 நிமிடம்தான் இருக்கிறது என்கிற வேகத்தில் ஓடி வந்தவன், தன்னைத் தேடி வந்தவர்கள் எங்கே என்று பதற்றமாய்த் தேடினான்.

அப்போதுதான், நாம் தேடி வந்தவர்களை இதற்கு முன்பு நேரில் பார்த்தது கிடையாதே... வேறு எப்படி அவர்களை அடையாளம் காண்பது? என்று யோசித்து நின்றான்.

மொபைலில் அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, அவன் அருகில் ஒருவன் வந்து நின்றான்.

"ஸார்... நீங்கள்தானே ஆனந்த்?"

"ஆமாம். நீங்கள்...?"

"நான்தான் பிரகாஷ்."



"ஸாரி... நான் உங்கள் பெயரையே மறந்து போய்விட்டேன்."

"ரெயில் புறப்பட நேரமாகிவிட்டது என்று நினைக்கிறேன். நம்ம அக்ரிமென்ட்டை எந்த சூழ்நிலையிலும் மீறிவிட வேண்டாம். மீறி நடந்தால், நடக்கும் விபரீதங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பாக வேண்டும்."

"இன்னும் எந்த காரியமும் நடக்கவில்லையே... அதற்குள் ஏன் நடக்காததைப் பற்றி பேசுகிறீர்கள்?"

"இல்லை... ஒரு முன்னெச்சரிக்கைகாகத்தான் சொன்னேன்."

"சரி..." என்ற ஆனந்த், மறுபடியும் கண்களால் அந்தப் பெண்ணைத் தேடினான்.

"ஸார்... நீங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்குறீங்க. அந்தப் பெண் உங்களை ஏற்கனவே பார்த்துவிட்டாள். நீங்கள்தான் அவளை இன்னும் பார்க்கவில்லை."

"அப்படியானால் அவள் எங்கே?"

மறுபடியும் ஆனந்திடம் அதீத ஆர்வம் பளிச்சிட்டது.

"உங்களை மேலும் சோதிக்க விரும்பவில்லை. உங்களுக்கான அந்த இளம்பெண் உங்கள் ரிசர்வ் செய்த ரெயில் பெட்டியில் இந்நேரம் ஏறி உட்கார்ந்து இருப்பாள் என்று நினைக்கிறேன்."

"டிக்கெட் என்னிடம் அல்லவா இருக்கிறது? அவளுக்கு எப்படி பயணிக்க வேண்டிய கோச் தெரியும்?"

"என்ன ஸார் மறுபடியும் மறந்துட்டீங்களா? நீங்கள் தானே இன்னிக்கு காலையில் கோவை எக்ஸ்பிரஸில் பயணிக்க உள்ள கோச் மற்றும் சீட் நம்பர் பற்றி மெஸ்ஸேஜ் செய்தீர்கள்?"

"ஆமாம், மறந்துவிட்டேன்..." என்ற ஆனந்த் சற்று வழிந்து தொலைத்தான்.

"ஆனந்த் ஸார்... இதுக்கு மேலேயும் உங்களது பொறுமையை சோதிக்க நான் விரும்பவில்லை. நீங்கள் எங்கள் பாஸின் 'இன்டியன் பேங்க்' அக்கவுண்ட்டிற்கு அனுப்பிய பணம் 70 ஆயிரம் ரூபாய் கிரெடிட் ஆகிவிட்டது. ஸோ... என்ஜாய் யுவர் ஊட்டி ஜார்னி" என்று கை கொடுத்து வாழ்த்தி விட்டு திரும்பினான் பிரகாஷ்.

பதற்றத்தோடு கோவை செல்ல தயாராக நின்றிருந்த சென்னை-கோவை எக்ஸ்பிரஸ் நிற்கும் ஆறாவது பிளாட்பார்ம் நோக்கி வேகமாக ஓடினான் ஆனந்த்.



"பயணிகளின் கனிவான கவனத்திற்கு... அரக்கோணம், காட்பாடி, சேலம் வழியாக கோவை வரை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் இன்னும் சற்று நேரத்தில் ஆறாவது பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லும்" என்கிற தமிழ், ஆங்கிலம், இந்தி மொழியிலான அறிவிப்புகளால் அடுத்த ஓரிரு நிமிடங்களில் தன க்குரிய சீட் ஒதுக்கப்பட்டு இருந்த "கோச்"சான டி52 ஐ சென்றடைந்தான்.

அது சிட்டிங் ரெயில். அதாவது, அமர்ந்து மட்டுமே செல்லும் பயணிக்கும் பகல் நேர ரெயில் என்பதால் ஒவ்வொரு பயணிகளும் தங்களுக்குரிய இரு க்கைகளில் அமர்ந்திருந்தனர். 42, 43 ஆகிய எண்கள் கொண்ட சீட்கள் ஆனந்த்துக்கும், அவனுடன் பயணிக்கும் 22 வயது இளம்பெண்ணுக்கும் ஒதுக்கப்பட்டு இருந்தன.

தன்னுடன், தன்னுடைய எல்லா சேவையையும் பூர்த்தி செய்ய வரப்போகும் அந்த அழகி யார் என்பதை அறிய ஆவலாய் தன் இருக்கையைப் பார்த்தான். அங்கே அந்தப் பெண் இல்லை. பக்கத்தில் எங்கேயாவது நிற்கிறாளா என்பதை அறிய சுற்றும் முற்றும் பார்த்தான். ஆங்காங்கே பல இளம்பெண்கள் நின்றிரு ந்ததால், ஒரு வாரத்திற்கு மட்டும் தனக்குரியவளாக உடன் வாழப் போகும் அந்தப் பெண்ணைத் தேடினான்.

அடுத்த நிமிடமே, அந்த ரெயில் புறப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஆனந்தின் பதற்றம் இன்னும் அதிகமாகியது.

"அந்தப் பெண்ணை இன்னும் காணவில்லை. 70 ஆயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார்களா? நானும், அவர்களை நம்பி இப்படியொரு ஜென்டில்மென் அக்ரிமென்ட் போட்டுக் கொண்டது முட்டாள்த்தனமானதா?” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு அப்செட் ஆனான்.

தனது இருக்கையில் சோகத்தோடு அமர்ந்த அவன் எதார்த்தமாக நிமிர்ந்தான். அவனுக்கு எதிரில் 22 வயது மதிக்கத்தக்க அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள்.

டைட்டாக ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்திருந்தாள். அவளது ஒட்டுமொத்த அழகையும் அந்த ஆடை பளிச்சென்று காட்டியது. அவளது லிப்ஸ்டிக் உதட்டில் திருநெல்வேலி அல்வாவின் இனிப்பு தெறித்தது.



நிச்சயம் அவள்தான் தனக்காக அனுப்பப்பட்டவளாக இருக்க வேண்டும் என்று நினைத்த ஆனந்த், அவளுக்கு புன்னகையோடு ஒரு ஹாய் சொன்னான்.

நிமிர்ந்து பார்த்த அந்த பெண், லேசாக புன்னகைத்துவிட்டு மறுபடியும் குனிந்து கொண்டாள்.

தன்னை அவளிடம் எப்படி அறிமுகப்படுத்துவது என்று தெரியாமல் திணறினான் ஆனந்த்.

"மேடம்..."

"யெஸ். வாட் யூ வான்ட்?"

"ஐ ஆம் ஆனந்த். ஆர் யூ...?"

"ஐ ஆம் ஸ்வேதா."

தன் பெயரை மட்டும் சொன்ன அவள், அதற்கு மேல் பேச ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை.

"இவளது பேச்சைப் பார்த்தால் நமக்காக அனுப்பப்பட்டவள் போன்று தெரியவில்லையே..." என்று திடீரென பதற்றமான ஆனந்த், சீட்டில் இருந்து அவசரமாக எழுந்தான். தனக்குரிய பெண்ணை அனுப்பி வைக்க ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வந்துவிட்டு போன பிரகாஷ் மொபைலை அவசரமாக தொடர்பு கொண்டான்.

தனது கைக்குழந்தை மொபைலை வெகுநேரம் சினுங்க விடவில்லை பிரகாஷ். உடனே ஆன் செய்தான்.

"என்ன பிரகாஷ் என்னை ஏமாற்ற பாக்குறீங்களா? ரெயில்வே ஸ்டேஷனுக்கு முன்பு அந்தப் பெண்ணைக் கூட்டிட்டு வந்ததாக முதலில் சொன்னீர்கள். நான் அங்கே வந்தபோது ரெயிலில் ஏறி இருப்பாள் என்றீர்கள். இப்போது அந்தப் பெண் இங்கே வரவேயில்லை. என்னை சாதாரண ஆளுன்னு நினைச்சு ஏமாற்ற நினைக்காதீங்க. என்னுடைய க்ளோஸ் ப்ரெண்ட் இந்த சென்னையில்தான் ஜாயின்ட் கமிஷனரா இருக்கான். அவனுக்கு நான் ஒரு போன் பண்ணுனாலே போதும். நீங்க எல்லாம் கூண்டோடு உள்ளே இருப்பீங்க..."

"ஸார்... அவசரப்பட்டு கத்தாதீங்க. நீங்க யாரு, உங்க பேக்ரவுண்ட் என்ன என்று எல்லாவற்றையும் விசாரித்துதான் அந்தப் பெண்ணை உங்களோடு அனுப்பி வைக்கிறோம். எங்களுக்கும் தொழில் தருமம்னு ஒண்ணு இருக்கு. வாங்கின பணத்துக்கு நாங்க ஏமாத்த மாட்டோம். ரெயில் புறப்படும்போது அவள் உங்களோடு இருப்பாள். அதுக்குப் பிறகும் அவள் வரவில்லை என்றால் என்னை எப்படி வேண்டுமானாலும் திட்டுங்க. இப்போது மொபைலை கட் பண்ணுங்க..." என்று சொல்லிவிட்டு மொபைல் இணைப்பை துண்டித்துவிட்டான் பிரகாஷ்.

"ச்சே..."

ஆனந்துக்கு மொபைலை வீசியெறிய வேண்டும் என்பது போல் இருந்தது. கோபத்துடனேயே தனது சீட்டில் உட்கார்ந்தான். அப்போதுதான் யாரோ ஒரு இளம்பெண் தன்னை உரசி இருப்பது போல் உணர... திரும்பிப் பார்த்தான்.

அங்கே, நடிகை அனுஷ்கா சாயலில் அழகான இளம்பெண், அவனை ஒட்டி அமர்ந்திருந்தாள்.

ஆனந்த் பேசுவதற்கு முன்பாக அவளே தனது அழகான வாயைத் திறந்தாள்.

"நீங்கள் தானே ஆனந்த்?"

"ஆமாம்!"

"நான் ஷ்ரவ்யா. ஒரு வாரத்திற்கான உங்களது பார்ட்னர்."

புடவையில் ஹோம்லியாக வந்திருந்த ஷ்ரவ்யாவை பார்ப்பதற்கே ஆனந்துக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு அழகியா தனக்கு "கம்பெனி' கொடுக்கப் போகிறாள் என்பதை அந்த நிமிடம் வரை அவனால் நம்ப முடியவில்லை.

(தேனிலவு தொடரும்...)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5a.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License