Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


32. விசாரணையில் அதிர்ச்சி!

ஊட்டி போலீஸ் நிலையத்தில் கவலை தோய்ந்த முகத்தோடு அமர்ந்திருந்தனர் ஆனந்தும், ஷ்ரவ்யாவும்! 'இவ்வளவு நெருங்கிப் பழகியும், பெரிய ரகசியத்தை மறைத்துவிட்டாளே இவள்' என்று ஷ்ரவ்யா மேல் கோபமாக இருந்தான் ஆனந்த். ஆனால், ஷ்ரவ்யாவுக்கு ஆனந்த் ஊட்டி வந்ததன் நோக்கம் தெரியும் என்பதால் அமைதியாக இருந்தாள்.

"உங்க ரெண்டு பேருக்கும் என்ன ஆச்சு? ரொம்ப நேரமா ரெண்டு பேரையும் கவனச்சிட்டுதான் இருக்கேன். பேசாம அமைதியா இருக்கீங்க. உண்மையை மறைச்சிட்டோமேங்கற தயக்கமா?" - லத்தியைக் கையில் சுழற்றியபடி கேட்டார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல ஸார். இப்படியொரு விபரீதம் நடந்த பிறகு, அவசரப்பட்டுட்டோமோன்னுதான் தோணுது. அதேநேரம், சாந்திங்கற பேருல இங்கே என்னோட வந்திருக்கும் இந்த ஷ்ரவ்யா, உண்மையிலேயே சாந்திதானான்னு எனக்குச் சந்தேகமா இருக்கு. அதை, நீங்களே அவகிட்ட கேட்டுச் சொல்லுங்க ஸார்” கொஞ்சம் வேகமாகவே சொன்னான் ஆனந்த்.

“கூல் ஆனந்த். ஒரு மீடியா பெர்சனான நீங்க, உங்களோட முன்னாள் காதலியை கொலை செய்யும் அளவுக்கு எப்படி துணிஞ்சிங்கங்கறதுதான் எங்களோட முதல்கட்ட விசாரணை. அந்த விசாரணை முடிஞ்ச பிறகு, நீங்க ஊட்டிக்கு கூட்டிட்டு வந்த இந்தப் பொண்ணுகிட்ட அதுபத்தி விசாரிக்கறோம். இப்போ, எங்களோட விசாரணைக்கு நீங்க முழு ஒத்துழைப்பு கொடுத்தா நல்லா இருக்கும்.”



வீரப்பன் ரேஞ்சுக்கு வளர்த்திருந்த மீசை வலது ஆட்காட்டி விரலால் நீவிவிட்டபடி சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனது மேஜை மீது வைக்கப்பட்டு இருந்த லேப்-டாப்பை ஆன் செய்தார்.

“கந்தசாமி, இங்கே வாங்க..!” - சில அடி தொலைவில், தனக்குரிய டேபிளில் அமர்ந்து எப்.ஐ.ஆர். நோட்டியில் வழக்கம்போல் எழுதிக்கொண்டிருந்த ஹெட் கான்ஸ்டபிள் கந்தசாமியை அழைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

“சொல்லுங்க ஸார். எதுவும் டீ, காபி வாங்கணுமா?”

“அதெல்லாம் வேணாம். இவங்க ரெண்டு பேரும் ரொம்பவும் டயர்டா இருக்காங்க. டிரெயினிங்ல இருக்கற பசங்களை ஓட்டலுக்கு அனுப்பி ஏதாவது டிபன் வாங்கிட்டு வரச் சொல்லுங்க. நீங்களும் கொஞ்ச நேரத்துக்கு வெளியே போய் நில்லுங்க. நான் கூப்பிட்ட பிறகு வந்தா போதும். இவங்க கிட்ட நான் தனியா விசாரணை நடத்த வேண்டியது இருக்கு...” என்று அழுத்தமாகச் சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், வலது கையில் இருந்த லத்தியை இடது கை விரல்களுக்குள் திணித்து முறுக்கிக் கொண்டார்.

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனின் செய்கை ஆனந்துக்குக் கொஞ்சம் பயமாகவே இருந்தது. தான் பத்திரிகை நிருபராக பணியாற்றிய காலத்தில் எத்தனையோ போலீஸ் உயர் அதிகாரிகளிடம் வெகு உரிமையாடு பேசிய பழக்கம் இருந்தாலும், இப்போது... குற்றவாளியாக நிற்பதால், தன்னிடம் நடத்தப்படும் விசாரணை வேறு மாதிரியாக இருக்குமோ என்று நினைத்தான்.

“பயப்படாதீங்க ஆனந்த். நீங்க நிருபரா இருந்தப்போ, என்னைவிட மேல் அதிகாரிகள் நிறைய பேரிடம் சகஜமா பழகி இருப்பீங்க. அதுமாதிரியே என்கிட்டேயும் நீங்க பழகலாம். நான் ஒண்ணும் மோசமான ஆள் கிடையாது. ஆள் பார்க்கறதுக்கு வேணும்னா, கொஞ்சம் முரட்டு ஆளாத் தெரியலாம். மற்றபடி, கடவுள் பக்தி என்கிட்ட நிறைய உண்டு. சட்டம்னு ஒண்ணு இருந்தாலும், மனசாட்சிபடி நடக்கக்கூடியவன் நான். அதனால, நம்மள ஏதாவது பண்ணிடுவாங்களோன்னு நீங்க பயப்படாதீங்க. என்னைக் கூடப் பிறந்த அண்ணணாவே நினைச்சி, விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுங்க. அது போதும்.”



இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், இவ்வளவு ஆறுதலாகப் பேசவார் என்றும் ஆனந்த் சிறிது கூட எதிர்பார்க்கவில்லை.

“ஆனந்த்.... உங்களுக்கே தெரியாத ஒரு உண்மையை இப்போ உங்ககிட்ட நான் சொல்றேன். குணசீலனை கொன்னது நான்தான்னு நீங்க சத்தியம் பண்ணிச் சொன்னாலும், உங்களைக் கொலை குற்றவாளியாகக் கருதி தண்டனை தர முடியாது. ஏன்னு நீங்க கேட்கலாம். அதுபத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்னா இந்த வீடியோவை நீங்க மட்டுமில்ல, உங்களோட வந்திருக்கற ஷ்ரவ்யாவும் அவசியம் பார்த்தே ஆகணும்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சஸ்பென்ஸ் வெச்சுப் பேசியதால், அது என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாமல் திணறினர் ஆனந்தும் ஷ்ரவ்யாவும்! அவர்களிடம் கீ செயின் ஒன்றைக் காண்பித்தார் அவர்.

“இது, என்னதா இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?”

“கீ-செயின்!”

“அதுதான் இல்லை. உங்களை அடையாளம் காட்டினதே இந்தக் கீ செயின்தான். இது, சாதாரண கீ செயின் இல்லை. இது, கீ செயின் கேமரா. இதனோட கேமராவுலதான் நீங்க ரெண்டு பேரும் பதிவாகி இருக்கீங்க. அதை வெச்சு நாங்க ஈஸியா கண்டுபுடிச்சிட்டோம்.”

இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் இப்படிச் சொன்னதும் ஆனந்தும் ஷ்ரவ்யாவும் இன்னும் அதிகமாகக் குழம்பினார்கள்.

“நீங்க ரெண்டு பேரும் தங்கி இருக்கற லாட்ஜ்ல நீங்க ரூம் கேட்டப்போ, நீங்க கணவன்- மனைவிதானான்னு சந்தேகப்பட்டு இருக்காங்க. அவங்ககிட்ட நீங்க கொஞ்சம் எமோஸனலாவே பேசி இருக்கீங்க. அதனாலேயே அவங்களுக்கு சந்தேகம் வர, உங்களையும் உங்களுக்குப் பக்கத்துல நின்னுக்கிட்டு இருந்த, இதோ... இந்த ஷ்ரவ்யாவையும், உங்களுக்குத் தெரியாமலேயே போட்டோ எடுத்து, தங்களோட கம்ப்யூட்டர்ல சேவ் பண்ணிட்டாங்க. அவ்வப்போது நாங்க லாட்ஜ்கள்ல சோதனை போடறது உண்டு. நீங்க தங்கி இருக்கற லாட்ஜ்ல எத்தனை பேர் தங்கி இருக்காங்கன்னு நாங்க விசாரிச்சப்போ, உங்க ரெண்டு பேரோட போட்டோவையும் காண்பிச்சாங்க. வழக்கமாக முகத்தை மட்டும்தானே போட்டோவா பதிவு பண்ணுவீங்க. ஆனா, இந்த ஜோடியை முழுசா பதிவு பண்ணி இருக்கீங்களேன்னு கேட்டதுக்கு, அவங்க ரெண்டு பேரும் கணவன் - மனைவியான்னு எங்களுக்கு சந்தேகம் வந்ததுனால, ஏதாச்சு பிரச்னை வந்துட்டா ஈஸியா சமாளிக்கறதுக்காக இப்படி சேர்த்தே எடுத்துட்டோம்னு விளக்கம் சொன்னாங்க. அவங்க சொன்ன விளக்கத்துல உங்க ரெண்டு பேரோட முகம், குறிப்பா... இந்தப் பொண்ணோட முகம் டக்குன்னு என்னோட மனசுல பதிஞ்சுப் போச்சு...” என்று சொன்ன இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் சிறிது நேரம் அமைதியானார்.



“ராஸ்கல்ஸ்... இப்படியெல்லாமா செய்வாங்க. விட்டா... நம்ம பெட்ரூம்ல வீடியோவை சீக்ரெட்டா மாட்டி, நம்ம மானத்தையே வாங்கிடுவானுவ போலிருக்கே...!” என்று ஆனந்த் சொல்லவும், “அதுவும் நடந்துவிட்டது” என்று சொல்லி அதிர்ச்சி வைத்தியம் தந்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

அவரது பதிலைக் கேட்ட இருவருக்கும் பயங்கர அதிர்ச்சி. தங்களுக்குள் 'அந்த' மாதிரியான உறவு எதுவும் நிகழவில்லை என்றாலும், நெருக்கமான அன்னியோன்யம் இருந்ததால்... அந்தக் காட்சிகள் மட்டும் வீடியோவில் பதிவாகி இருக்குமோ என்று பயந்தனர். அதுபற்றி, இன்ஸ்பெக்டரிடமே கேட்டனர்.

“ஆனந்த்... நீங்க ரெண்டு பேரும் அநியாயத்துக்கு நல்லவங்களா இருக்கீங்களே... உங்களை மாதிரியே எல்லோரும் இருந்துட்டா, எங்களுக்கு வேலை பாதியா குறைஞ்சிடும்” என்று சொன்னவர், ஆனந்த்தைக் கூர்ந்து பார்த்தவர், ஆனந்த் எதிர்பார்க்காத அந்தப் பதிலை சொன்னார்.

“ஆனந்த்... நீங்க நினைக்கற மாதிரி இது உங்களோட வீடியோ இல்ல. உங்களோட முன்னாள் காதலி அமுதாவுடையது!”

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5af.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License