Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


40. புதிய காதல்!

“கான்ஸ்டபிள் கந்தசாமி. வெளியே இருக்கற ஷ்ரவ்யாவ இங்கே அழைச்சிட்டு வாங்க..!” - பலமாகக் குரல் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

அடுத்த சில நொடிகளில் இன்ஸ்பெக்டர் அருகில் போடப்பட்டு இருந்த சேரில் பவ்வியமாக வந்து அமர்ந்தாள் ஷ்ரவ்யா. அவளுக்குப் பக்கத்தில், சோகம் அப்பிய முகத்தோடு இருந்தான் ஆனந்த்.

“ஷ்ரவ்யா... உங்களை இங்கே அழைச்சிட்டு வந்த ஆனந்த் எல்லா உண்மையையும் சொல்லிட்டார். நீங்களும் இதுவரைக்கும் உண்மையைத்தான் சொல்லிட்டு வர்றீங்க. உங்க தோழி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கூட உண்மைதாங்கறத நாங்க கன்ஃபார்ம் பண்ணிட்டோம். இனியும் இந்த விசாரணையில உண்மையை மட்டும்தான் நீங்க சொல்வீங்கன்னு எதிர்பார்க்கறோம்.”

“நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இன்ஸ்பெக்டர். என்னோட தோழி சாவுக்கு நியாயம் கிடைக்கணும், உண்மையாகக் காதலிச்ச ஒரே ஒரு தப்பு மட்டுமே பண்ணின இந்த ஆனந்த் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாதுங்கற ஒரே காரணத்துக்காகத்தான் யாருக்கும் தெரியாம நான் இவ்வளவு தூரம் வந்து இருக்கேன். அதனால நான் சொல்றத நீங்க அப்படியே நம்பலாம்.”

“அப்படின்னா... அமுதாவை ஸாரி... குணசீலனைக் கொலை செய்யறதுக்காக ஆனந்த் வெச்சிருந்த விசப் பாட்டல்ல விசத்தை எடுத்துட்டு தேனை ஏன் கலந்தீங்க? ”

“ஆனந்த் மீது நான் வெச்சிருக்கற லவ்தான் அதுக்குக் காரணம்!”

“என்னது... லவ்வா?”

“ஆமா... நான் ஆனந்த்தை இப்போ சின்சியரா லவ் பண்ணுறேன். ”

“விசாரணையை திசை திருப்புறதுக்காகப் பொய் சொல்லாதீங்க மேடம். நீங்க இங்கே வந்த நோக்கமும், ஆனந்த் இங்கே வந்த நோக்கமும் வேற வேற. அப்படி இருக்கும் போது உங்களுக்குள் எப்படி லவ் வர முடியும்?”

“இப்பெல்லாம் பார்த்த உடனேயே லவ் பண்ண ஆரம்பிச்சிடுறாங்க. சிலர் பார்க்காமலேயே கூட லவ் பண்ணுறாங்க. உண்மை இப்படி இருக்கும் போது, நாலைஞ்சு நாளா இவர்கூட நான் இருக்கேன். அவர் என்கிட்ட நிறைய மனம்விட்டுப் பேசி இருக்கார். நானும் நிறைய விஷயங்களை அவர்கிட்ட பகிர்ந்து இருக்கேன். இந்த சில நாள் பழக்கத்துலயே நான் அவரைப் பற்றி நிறைய புரிஞ்சுக்கிட்டேன். அவரும்தான்! அப்படி இருக்கும் போது நான் ஏன் அவரை லவ் பண்ணக்கூடாது? வேணும்னா, ஆனந்த் கிட்டயே கேட்டுப் பாருங்க; அவர்கூட இந்த லவ்வை ஒத்துப்பார். ”

ஷ்ரவ்யா இப்படிச் சொன்னதும் அவளைப் பார்த்து சட்டென்று திரும்பினான் ஆனந்த். அவன் பேசுவதற்கு முன்பாக இன்ஸ்பெக்டரே குறுக்கிட்டார்.

“ஆனந்த்... ஷ்ரவ்யா உங்களை லவ் பண்ணுறதா சொல்றாங்க? இது, எந்த வகையில உண்மை? ”

“இதுல உண்மையே இல்லை சார். என் மீது அவங்களுக்கு லவ் வர்றதுக்கு எந்தக் காரணமுமே இல்லை. சும்மா, விளையாட்டுக்குச் சொல்றாங்கன்னு நினைக்கறேன். ”



ஆனந்த் இப்படிச் சொல்ல, ஷ்ரவ்யா அவசரமாக குறுக்கிட்டாள்.

“ஆனந்த் சொல்றதுல உண்மை இல்லை சார். நான் அவரை சின்சியராத்தான் லவ் பண்ணுறேன். அவரும் என்னை லவ் பண்ணுறாருன்னு எனக்குத் தெரியும். ஆனா, வெளிப்படுத்த தயங்குறாரு. முதல் காதலோட வலி, என் காதலை வெளிப்படுத்த விடாம தடுக்குது. இதுதான் உண்மை! ”

சத்தியம் செய்யாத குறையாகச் சொன்னாள் ஷ்ரவ்யா. மறுபடியும் மறுத்துப் பேச வாயெடுத்தான் ஆனந்த். ஆனால் அவனை இன்ஸ்பெக்டர் தடுத்துவிட்டார்.

“சாரி... மிஸ்டர் ஆனந்த். உங்க லவ் மேட்டர உங்களுக்கு உள்ளேயே வெச்சிக்கோங்க. இப்போ நாங்க கேட்கற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க! ” என்ற இன்ஸ்பெக்டர், ஷ்ரவ்யா பக்கம் திரும்பினார்.

“ஷ்ரவ்யா... உங்ககிட்ட மறுபடியும் அதே கேள்விதான்; விசப் பாட்டல்ல இருந்த விசத்தை எடுத்துட்டுத் தேனை ஏன் கலந்து வெச்சீங்க? ”

“அதே பதில்தான் இன்ஸ்பெக்டர். ஆனந்த்தை நான் லவ் பண்ணுறேன். அவர் விசத்தைக் கலந்து, அதைக் குடிச்சி, அமுதாவோ அல்லது குணசீலனோ இறந்து போயிட்டா... பாவம், இவர் அல்லவா மாட்டிப்பார்? அப்படியொரு சம்பவம் நடந்தால் எங்களோட காதல் என்னிக்கு கைகூடும்? அதனால்தான் விசப் பாட்டலைட் தேன் பாட்டல் ஆக்கிட்டேன். ”

ஷ்ரவ்யா சொல்லவும், திடீரென்று எதையோ யோசித்தவனாக இன்ஸ்பெக்டரைப் பார்த்து அப்படிக் கேட்டான் ஆனந்த்.

“இன்ஸ்பெக்டர்... நான் வெச்சது விசம் இல்ல. அப்படின்னா... குணசீலனைக் கொலை பண்ணினது யாரு? தப்பான வீடியோ எடுக்க முயற்சி பண்ணின பையனா?”

“அது வந்து...”

உண்மையைச் சொல்ல வாயெடுத்தார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன். அதற்குள் அவசரமாக அவர் முன்பு வந்து நின்றார் கான்ஸ்டபிள் கந்தசாமி.

“சார்... ஜி.எச்ல ட்ரீட்மென்ட் எடுத்துட்டு வர்ற அமுதா சுயநினைவுக்கு வந்துட்டாங்களாம். அங்கேயிருந்து டாக்டர் பேசினார்.”

கான்ஸ்டபிள் சொல்லி முடிக்கவும் அவசரமாக ஜி.எச்-க்கு கிளம்பினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5an.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License