Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


கதை
தொடர் கதைகள்

இரண்டாம் தேனிலவு

நெல்லை விவேகநந்தா


6. முதலிரவு பரபரப்பு

வெள்ளைச் சுவற்றில் நின்று கொண்டே ஓடிக்கொண்டிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள் அமுதா. மணி, இரவு ஒன்பதை நெருங்கிக் கொண்டிருந்தது.

இந்நேரம் பெட்ரூம் முழுக்க பூக்களை கொட்டி பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்திருப்பாளே அம்மா...

அப்படியொரு சம்பவத்தை நடக்க விடக்கூடாதே... என்று மனதிற்குள் பரபரப்பானாள் அமுதா.

ஒருவேளை குணசீலன் தன்னை கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது என்ற அச்சமும் அவளது முகத்தில் வெளிப்படையாக தெரிந்தது.

தனக்கு ஏற்பட்ட இப்படியொரு நிலை, காதலித்துக் கொண்டிருக்கும் வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது என்றும் தன் குல தெய்வம் ஆனந்தவல்லி அம்மனை வேண்டிக் கொண்டாள்.

அமுதா மனதிற்குள் கனமாக யோசித்துக்கொண்டிருக்கும் போதே அவளது அம்மா பாக்கியம் பெரும் குரலெடுத்து கூப்பிட்டாள்.

"என்னடி... நல்ல காரியம் நடக்கப் போகுற நேரத்துல மூஞ்ச உம்முன்னு வெச்சிட்டு இருக்க. பெட்ரூம்ல உன்னோட புருஷன் வெயிட் பண்ணிட்டு இருப்பாரு. சீக்கிரமா உள்ளே போ. ரொம்ப நேரம் பேசிட்டு க்காதீங்க. சீக்கிரமாவே விளக்க அணைச்சுக்கோங்க. புருஷன் என்ன செஞ்சாலும் திமிறி நடந்துக்காத.

எல்லாம் உன்னோட நன்மைக்குத்தான் சொல்றேன்..." என்று, சில அறிவுரைகளை ஒப்பித்த பாக்கியம் பாய், தலையணை, போர்வைகளை எடுத்துக்கொண்டு வீட்டு வராண்டாவிற்குள் போய்விட்டாள்.

எப்போதும் அமைதியாய் வலம் வரும் பாக்கியத்தின் கணவர் தங்கதுரையும் அங்கே அமைதியின் ஒட்டுமொத்த உருவமாக அமர்ந்திருந்தார்.

"என்னங்க... சின்னஞ் சிறுசுக இன்னிக்குதான் ஒண்ணாகப் போறாங்க. எதுவும் பேசாம படுத்துத் தூங்குங்க. எது பேசனும்ன்னாலும் காலையில பாத்துக்கலாம்..." என்று, கணவனுக்கு அதிகாரமாய் உத்தரவிட்டு விட்டு பாயில் படுத்துக் கொண்டாள்.



என்ன நினைத்தாரோ தங்கதுரை, திடீரென்று பேச வாயெடுத்தார்.

"ஆமா... இளையவ வாணி எங்கே இருக்குறா?"

"பேசாம படுங்கன்னுதானே சொன்னேன். அவள உங்க அண்ணன் வீட்டுலதான் இன்னிக்கு ராத்திரி மட்டும் படுக்கச் சொல்லி இருக்கேன். நாளைக்கு காலையில வந்திடுவா..."

பாக்கியம் சொல்லி முடிப்பதற்குள், கம்மென்று திரும்பிப் படுத்துக் கொண்டார் தங்கதுரை.

நேரம் வேகமாக ஓடத் துவங்கியது.

தனக்கு முன்பு வந்து நின்ற அமுதாவை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் குணசீலன்.

கையில் ஒரு சொம்பு நிறைய சுண்டக்காய்ச்சிய பால் வைத்திருந்தவள், அதை ஒரு வெள்ளி டம்ளரால் மூடியிருந்தாள். இரு கைகளிலும் நிரம்பி வழிந்த தங்க வளையல்கள் பால் நிரம்பியிருந்த சொம்பை ஒட்டி உறவாடிக் கொண்டிருந்தன.

திருமணத்தன்று கட்டியிருந்த மாம்பழக் கலர் பட்டுப்புடவையைக் கட்டியிருந்தாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருந்தாள். மற்றபடி முகத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக மேக்கப் எதுவும் இல்லை.

உதாரணமாகச் சொல்ல வேண்டும் என்றால், நம் தமிழ் சினிமாக்களில் முதலிரவு காட்சிகளில் வரும் ஹீரோயின் போலவே ஜொலித்தாள் அமுதா. குணசீலனுக்கும் இது நினைவுக்கு வராமல் இல்லை. உடனே அவளது காலைப் பார்த்தான்.

அமுதாவின் வலது கால் பெருவிரல் கோலப்பொடி இல்லாமலேயே கோலம் போடுகிறதா என்று உன்னிப்பாகப் பார்த்தான். ஆனால், அப்படியொரு காட்சி கிடைக்காமல் அவனது கண்கள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.

“சரி... சினிமாவில் வருவதை எல்லாம் நிஜத்தில் எதிர்பார்க்க முடியுமா?” என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவன், அவளது முகத்துக்கு நேராகப் பேசினான்.

என்ன அமுதா. ரூமிற்குள் வந்த வேகத்தில் நின்று விட்டாய். நான் உன் கணவன்தானே? பக்கத்தில் வந்து உட்கார் என்றான்.



அமுதா பட்டுச்சேலையில் பளபளத்தாள் என்றால், குணசீலனும் திருமணத்தன்று கட்டியிருந்த பட்டு வேஷ்டி, சட்டையில் புதுமாப்பிள்ளை போலவே... ஆனால் கொஞ்சம் வெட்கத்தோடு அமர்ந்திருந்தான்.

கொண்டு வந்த பசும்பாலை ஒரு ஓரமாய் வைத்த அமுதா மறுபடியும் தனது மவுனத்தை தொடர்ந்தாள்.

“என் மேல எதுவும் கோபமா? வந்தது முதல் அமைதியா இருக்கிறாயே...”

குணசீலன்தான் அமுதாவின் மவுனத்தை கலைக்கும் விதமாக பேசினான்.

“அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. கொஞ்சம் உடம்புக்கு சரியில்ல...”

அமுதா சொல்லி முடிப்பதற்குள்ளாகவே பதற்றத்தை அவசரமாக வெளிப்படுத்தினான் குணசீலன்.

“என்னது... உடம்பு சரியில்லையா? காய்ச்சல் அடிக்குதா? இல்ல... வேறு ஏதும் பிரச்சினையா?” என்றவன், அவளை தொட முயன்றான்.

அமுதா இதை எதிர்பார்த்தாளோ என்னவோ, சட்டென்று விலகி அமர்ந்தாள்.

“பரவாயில்ல... பெருசா பிரச்சினை ஒண்ணும் இல்ல. மனசுதான் சரியில்ல.”

“அப்படீன்னா...?”

“அத எப்படி சொல்றதுன்னுதான் தெரியல.”

சில நொடிகள் மவுனத்தில் கரைந்தவன், அமுதா இப்படிச் சொல்ல, அதுதான் காரணமாக இருக்க வேண்டும் என்று அவனாக ஒரு காரணத்தை கண்டுபிடித்தான்.

“யூ மீன் தட் த்ரி டேஸ் ப்ராப்ளம்?”



குணசீலன் சொன்னது அமுதாவுக்கு புரியாமல் ஒன்றும் இல்லை.

“அது இல்ல. இப்போ நான் நார்மல் ஆகத்தான் இருக்கேன். ஆனா...” “புரிஞ்சுக்கிட்டேன் அமுதா. திடீர்னு பஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செஞ்சிட்டாங்களே... அங்கே எப்படி நடந்துக்கறதுன்னுதானே யோசிக்கிற?” “ஆமாம்” என்று சொல்வது போல் தலையை மவுனமாக ஆட்டினாள் அமுதா.

“சரி, இதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்ல. பஸ்ட் டிரிப் என்றால் அப்படித்தான் இருக்கும். போகப்போக சரியாகிவிடும்.”

இப்படி “அனுபவசாலி” போல் பேசிய குணசீலனை சட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் அமுதா.



அவளது பார்வை கேட்ட கேள்வியை புரிந்து கொண்டான் குணசீலன்.

“தப்பா நெனைச்சுக்காத அமுதா. நான் பொதுவாகத்தான் சொன்னேன். எந்தவொரு புது விஷயமா இருந்தாலும் முதல்ல தயக்கம் இருக்கும். போகப்போகத்தான் அது சரியாகும். அதுமாதிரி இதுவும் இருக்கலாம்ங்குற யூகத்துலதான் அப்படி சொன்னேன். மற்றபடி, நானும் அந்த விஷயத்துல உன்ன மாதிரியே ஒண்ணாம் வகுப்புதான்.”

குணசீலன் இப்படிச் சொன்னதும்தான் தன்னையே மறந்து சிரித்துவிட்டாள் அமுதா.

அவளது சிரிப்பில் குணசீலனின் திடீர் டென்ஷனும் பட்டென்று மறைந்து போனது.

“இத... இதத்தான் உன் கிட்ட எதிர்பார்க்குறேன் அமுதா.”

“எப்போதும் சிரிச்சுட்டு இருக்குறதயா?”

“ஆமா... உன்கிட்ட எனக்கு பிடிச்ச முதல் விஷயமே இந்த சிரிப்புதான். அதுக்கு என்ன விலை... ஏன், நீ என்ன வரம் கேட்டாலும் கூட கொடுக்கலாம்தான்...” என்று கூறி சற்று இடைவெளி விட்டவன், அமுதாவின் முகத்துக்கு அருகே தன் முகத்தை கொண்டு சென்று, “உனக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் கேள். இப்போதே தந்து விடுகிறேன்” என்றான்.

வரம் தருகிறேன் என்று சொன்ன குணசீலனை புதிராகப் பார்த்தாள் அமுதா.

“பொதுவா சாமிதானே வரம் கொடுக்கும்?”

“இங்கே என்னையும் சாமின்னு வெச்சுக்கோயேன்...”

“எனக்கு இப்போ வரம் தேவையில்லை. நான் கேட்கும்போது கொடுத்தா போதும்.” “நீ இப்பவே ஏதாவது கேட்டுடுவியோன்னு நானே பயந்தேன். நல்லவேளை அப்படி கேட்கல. நீ எப்போ கேட்டாலும் அந்த வரத்தை நான் கொடுக்கத் தயார்” என்ற குணசீலன், தன் இரு கைகளையும் அவளை ஆசீர்வதிப்பது போல் தூக்கிக் காண்பித்தான்.



குணசீலனின் விளையாட்டுத்தனத்தைப் பார்த்து மறுபடியும் கொஞ்சம் சிரித்து வைத்தாள் அமுதா.

“உன் சிரிப்பை திரும்பத் திரும்ப கேட்கும்போது எனக்கு ஒரு கவிதையும் தோன்றுகிறது. அதை உன்னிடம் சொல்லலாம்தானே?” “ம்... சொல்லலாம்.”

தன் தொண்டையை லேசாக இறுமி சரி செய்து கொண்டவன் அந்த திடீர் கவிதையை அந்த அழகான ஓவியத்திடம் ஒப்புவித்தான்.

“நீ
சிந்துவது
சில்லறையும் அல்ல
செல்போன் சினுங்களும் அல்ல
சினேகாவின் புன்னகையும் அல்ல

பிரம்மனின் தூரிகை
ஒன்றுக்குத்தான் தெரியும்
அந்த ரகசியம்...!”

இதற்கு மேல் போகாமல் கவிதையை நிறுத்திக் கொண்டவனிடம், அவ்ளோ பெரிய ரகசியமா என் சிரிப்பில் புதைந்து கிடக்கிறது?” என்று அப்பாவியாய்க் கேட்டாள் அமுதா.

“அப்படித்தான் வைத்துக்கோயேன்...” என்று சொல்லியபடியே அவளை கட்டியணைக்க முயன்றான் குணசீலன்.

அவள் என்ன நினைத்தாளோ, தன்னை அணைக்க வந்த கைகளை தன்னை அறியாமலேயே தட்டி விட்டு விட்டாள். அக்கணமே தன்னையும் அறியாமல் அழுதுவிட்டாள். அதேநேரம்,

குணசீலன் டென்ஷன் ஆகிவிட்டான்.

“உனக்கு என்ன ஆச்சு அமுதா? நான் உன்னை தொட வந்தா, ஒண்ணு பதற்றமாயிடுற; இல்லன்னா விலகிடுற. உன் மனசுக்குள்ள ஏதோ ஒரு பிரச்சினை இருக்குன்னு மட்டும் எனக்கு கன்பார்மா தெரியுது. அந்த பிரச்சினையை நாம பேசித் தீர்த்துக்குற இடம் இது இல்ல. நாளைக்கே நாம ஊட்டிக்கு புறப்படுறோம். அங்கே போயாவது நீ மனசு மாறிடுவாயான்னு பாக்குறேன்...” என்று அவன் சொன்னபோது சுனாமி தாக்கிய பேரதிர்ச்சிக்கு ஆளானாள் அமுதா.

(தேனிலவு தொடரும்...)

*****



இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/serial/p5f.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License