இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அவனா அதிர்ஷ்டக்காரன்?

பாரதியான்

வீடு.

அலைபேசி அலாரம் சத்தமிட, விழித்துக் கொண்ட நளினி ,அதில் சத்தம் நிறுத்தம் செய்யும் பட்டனை அழுத்தியதும் திருப்பிப் பார்த்தாள். அதிகாலை நான்கு மணிதானே, கணவன் முரளிதரன் அசந்து உறங்குவது போல் தோன்ற, மெல்லமாய் எழுந்து, போர்வை விலக்கி, சேலையை சரிசெய்து, தலைமுடி கோதி கொண்டையிட்டு, கட்டிலிலிருந்து இறங்கி, பாத் ரூமுக்குள் போய், முகம் கழுவித் துடைத்துப் பெரிய அளவு கண்ணாடி முன் நின்றாள்.

சிரித்த வட்டவடிவமான முகம். கருப்பு மை கொண்டு வரைந்த மாதிரி புருவங்கள், இமைகள், கருவிழிகள்... ஒட்ட வைத்த மூக்கு, எடுப்பான இரு உதடுகள், அதில் பட்டும் படாமலும் ரோஸ் நிற சாயம். சிவப்பு பொட்டெடுத்து நெற்றியில் ஒட்டி, ஒரு கையால் முன்முடியை ஏத்தித் தடவி விட்டபடியே தன்னை மொத்தமாய் கண்ணாடியில் கண்டாள்.

உண்மையில் பெண்ணுக்கு சேலை கட்டல் என்பது அழகுதான், அதிலும் எடுப்பான தோற்றமென்றால்,கொஞ்சம் கூடுதல் மெருகூட்டலாக தெரியும் நளினியை, ரொம்ப கலரானவள் என்றும், சுத்த கருத்தவள்ன்னும் குறை சொல்லமுடியாத அழகானவள் தானே! வயது நாப்பதைத் தாண்டி விட்டது என்றால் நம்ப யோசனை செய்யத்தான் வேண்டும். வழக்கமாய் 'பூ' மலர்ந்த புன்னகை காட்ட, சின்னதான குழி, வலது கன்னத்தில் விழுந்தது .

ஏழு மணிக்கெல்லாம் கிளம்ப வேண்டும் என்றாரே... வேலைகள் கிடக்கே...

ஞாபகம் வந்தவளாய் வேகமாகச் சென்று வாசல் கதவு திறக்க, இரவு சொல்லி வைத்தபடி கூட்டிப் பெருக்கி மஞ்சள் பொடி தண்ணீர் தெளித்துக் கோலமிட்டுத் துளசி மாடத்தைச் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்துக் கொண்டிருந்த,வேலைக்கார பெரியம்மாள் நளினியைக் கண்டதும், "எல்லாம் ஆச்சி தாயி, அடுப்படிக்குப் போங்க பின்னாலயே வாறேன்"என அங்கேயும் ஒரு கலர்ப்பொடிக் கோலம் போட ஆரம்பித்தாள்.

'வேலையில் கண்ணாயிருக்கும் விசுவாசமான பாட்டி, தனக்குள் உயர்வாக எண்ணியபடி நகர்ந்த, நளினிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் உணர்வுப்பூர்வமான ஆனந்தம், ஊற்றெடுத்துப் பொங்கும்.

அன்று அவள், அவளாகவே இருக்க மாட்டாள்,இப்படித்தான் பரபரப்புக் காட்டுவாள். வேலைக்கார பெரியம்மாவைத் துணையாகக் கொண்டு முப்பது பிள்ளைகளுக்கான இட்லி, வடை, சட்னி. சாம்பார் தயாரித்து விடுவாள்! இரவே ரவா உருண்டைகள் பிடித்து தூக்குப் பாத்திரத்தில் எடுத்து வைத்து விட்டாள். சும்மாவே சிரித்த முகமாகயிருப்பவள், அன்றோ சிரிப்பே அவளுக்கு முகமாக இருக்கும்!

"என்ன நளினி இன்று காபி கொடுக்கற முறையில்லையோ..?" தெரிந்தே கேட்ட முரளிதரன், 'இன்று மட்டும் இவளுக்கு எப்படித்தான் ரெக்கை முளைக்கிறதோ?'னு மனைவியின் செயல்பாட்டைச் சாடையாக ரசித்தான்.

அவளோ "குளிச்சி கிளம்பர வழியப் பாருங்க மாமா, சமையக்கட்டுல என் வேலைக முடுஞ்சுருச்சி நானும் குளிக்கனும்" என கண்டுகொள்ளாத வேகமாயிருக்க, சின்ன புன்முறுவலுடன் நகர்ந்தான்.

சப்தகிரி மனவளர்சி குண்றிய,பிற குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் காப்பகம். விருந்து அனுபவிக்கும் சூழல் அங்கே நிலவியது...

அந்த நீளமான வரண்டாவில் ஒரே வரிசையில் மரத்திலான டேபிள், சேர் போடப்பட்டிருந்தது. இரண்டு பொது அறைகள் தாண்டி இருந்த அந்த ஏ.சி அறையில் காத்திருந்தாள்,கோகிலாம்மாள். நளினியின் அம்மா.



நிமிடநேரத்தில், உதவிப்பெண்ணின் ஒரு கையை இருக்கப் பிடித்தவாறு ஒரு கால் மட்டும் தரையில் பட, மறு கால் சூம்பிப்போய் வளைந்திருக்க, சிரித்த முகமாய் "ஹை...பாட்டி..." என குலைந்த குரலோடு திமிரி வந்து ஒட்டிக் கொண்ட அவனின் பெயர் வருண். திடீரென மன உணர்ச்சியின் கொப்பளிப்பில் கண்களிலே தாரைதாரையாகக் கண்ணீர்... உதடுகள் நடுங்க, வாரியணைத்துக் கொண்டு முத்தமிட்டு அழுத கோகிலாம்மாவுக்கு வருண் பேரன்!

தன்னுடைய வம்சாவழியின் முதல் உயிர்ப்பு... பிறந்த ஈரத்துடன் இந்தக் காப்பகத்தில் ஒப்படைத்தாலும், கோகிலாவும் முரளிதரனும் தொடர்ந்து வந்து அவனின் தேவைகளைப் பூர்த்தியாக்கினர். கிட்டத்தட்ட வீட்டு வளர்ப்புதான். நன்கொடை அடிப்படையிலும், கருணை உதவியிலும்...

"அ.., அழாத பாட்டி.. இப்..பெல்லாம் நா..நல்லா.. படம் வர..வென்.." பாட்டிக்குக் கண்ணீர் துடைத்து விட்டான்.

"சாப்பிட்டீங்களா செல்லம்?" கேட்டாள்.

"இன்..னிக்கி அப்பா...வருவா...ங்கள" சொன்னவனிடம் எதிர்பார்ப்பான குதூகலம் பதியமிட்டுத் தெரிந்தது. சத்தமில்லாது கைகள் தட்டினான்.

'அப்பா...அப்பானுதான் உருகுவான், அவன் கூடவே ஒருத்தி வாராளே அவளப்பத்தி ஏதாவது தோனி கேக்குறானா..ம், விதி தீட்டும் கோடுகளில் இது மாதிறியும் விழுந்துருது? எண்ணிப் பெருமூச்சு விட்டாள்.

புது பனியன் சட்டை, முக்கா கால் அளவு ஜீன்ஸ் துணி கால்சட்டை காண்பித்தாள். அவன் ருசிப்பான்னு தேன் குழல் மிட்டாய் கொடுத்தாள். அதை அவன் ரசனையுடன் சப்பி முடிக்கவும், அங்கிருந்த பெண்ணிடம், "தண்ணி கொண்டு வந்து தந்துட்டு நீ உன் வேலைய பாரும்மா, பேரனுக்கு புதுத் துணி மாத்திக்கிறேன். அவங்க வரவும் தகவல் சொல்லு" என்றாள்.

அப்படியே அந்த உதவிப்பெண் செய்தாள்.

காரில். "மாமா அந்தப் பையனுக்கு என்ன வயசு இருக்கும்?" நினைத்துக் கொண்டிருந்தபடியே கேட்டு விட்டாள்.

"என்ன...பத்திருக்கும்" சரியாகத்தான் சொன்னான்.

"அடிக்கடி அங்க போவீங்களோ? எல்லாருமே உங்களப் பெருமையாப் பேசுறாங்க... அந்தப் பையனும் உங்கட்ட அப்பானு உரிமையாயிருக்கான்"

'சும்மா அந்தப் பையன், அந்தப் பையன்னு அன்னியப்படுத்துகிற உனக்கு, அவன் யார்...? அவனோட அம்மா, அப்பா எங்க இருக்காங்க...?ன்னு சிந்திச்சு கேட்கத்தோனுதா... நெஞ்சழுத்தக்காரி என்று எச்சில் விழுங்கியவன், "நம்ம கல்யாணத்துக்கு முன்ன வேலை விசயமாப் போவேன், இந்த மாதிரி ஆறுதல் செயல்களில் எனக்குத்தான் ஈடுபாடுன்னு உனக்குத் தெரியாதா...?" தடுமாறிப் பின் சமாளித்த முரளிதரன்.

மேலும், "தச்செயல ஒரு நாள் அங்க போனப்ப ஒருத்தர் தன் மகள் பிறந்த நாள் என்று இனிப்பு, காரமெல்லாம் கொடுத்தார், அத வாங்கிய அந்தப் பையன் எனக்கெல்லாம் பிறந்த நாள் கெடையாதா..? இனிப்பெல்லாம் வாங்கித் தர மாட்டாங்களான்னு அழ ஆரம்பிச்சுட்டான். எனக்கு எப்படியோ போச்சு, அதான் அவனோட பிறந்த நாளைக் கேட்டு இனிப்பு, காரம் கொடுத்தேன். அன்னையிலயிருந்து என்னமோ தெரியல அப்பா, அப்பானு கூப்பிட ஆரம்பிச்சுட்டான். விசயத்த உன்னிடம் சொன்னப்ப நானும் வாறேன்னு வந்த நீ, இப்பவும் அஞ்சாறு வருசமா வீட்லயே பலகாரம் செஞ்சி கொண்டுப் போற, அதுல உனக்கு சந்தோஷம் கூடிக்கிட்டே போகுது,என்ன நளினி " காரை செலுத்தியவாறே ஓரக்கண்ணால் மனைவியை நோட்டமிட்டான்.



இனம் புரியாத மகிழ்வு அவளை சூழ்ந்திருந்தது.

தனியார் மருத்துவமனை.

"அம்மா எனக்கு எந்தக் குறையும் இல்லாம அழகாகத்தானே குழந்தை பிறக்கும்?" திரும்பத் திரும்ப இதையே கேக்கிறாளே,உள்ளூர நெளிந்தாள்.

"எதிர் வீட்டுச் சரசக்கா'ரத்த உறவுக்குள்ள பிறக்கும் குழந்தைங்க பெரும்பாலும் ஆரோக்கியம் இல்லாமத்தான் இருக்கும்'ன்னாங்க போனவாட்டி இங்க செக்கப்புக்கு வந்தப்பக்கூட நரசு ஏதோ சொல்ல வந்தா என்ன கண்டதும் நிருத்திட்டா ஏம்மா?" மகளின் இந்த கேள்விக்கு, உண்மையான பதிலைக் கோகிலாவால் விளக்க முடியுமா...? மனசுக்குள் நெருடல். அருகிலிருந்த முரளிதரனோ அக்காவை எரித்து விடுமாறு ஏறிட்டதும் மனைவியிடம் "இதோ பாரு நளினிம்மா, நீயே பேரழகு உன் குழந்தையோ அதைவிட அழகாத்தான் பிறக்கும் மனசப்போட்டு குழப்பாம அமைதியா இரு. மதியம் மூன்று மணிக்கு ஆப்ரேசன் தியேட்டருக்கு அழைச்சிப் போக நர்சு வருவாங்க" செயற்கையாகப் புன்னகைத்தவனின் கையைப் பற்றி, "மாமா... மூணு வருச ஏக்கம், ஏதாவது குறைன்னா எதுக்கு என்னைய கட்டீனிங்கனு உங்கள சும்மா விட மாட்டேன்" எச்சரிப்பில் கடுமை.

நளினி, முரளிதரனுக்கு உடன் பிறந்த அக்கா மகள். அவர்களுக்குள் திருமணம் செய்து வைப்பது பற்றி முடிவில்லைதான். பேத்தி துடுக்கானவள், எதிலும் தன்னைத்தானே மிகைப்படுத்திக் காட்டும் குணமுடையவள். அழுத்திச் சொன்னால், சிறிய குடும்ப உறவு வட்டம் அந்தக் கட்டுக்குள் கூட வராது. எப்பவும் தனிமைப்படுத்திக் கொள்வாள். அதட்டினால் சட்டுனு 'நான் அப்படித்தான்' என்பாள், நெஞ்சி நிமிர்த்து.

தன் மகனுக்குப் பேத்தியை மணமுடித்து வைத்தால் முதுமைக்காலத்தில் பாட்டினு பாசமுடன் கவனித்துக் கொள்வாள்... என விருப்பம் கூற 'உறவுல வேண்டாம்மா'

'பாட்டி மாமாவ எனக்குப் பிடிக்கும், கட்டிக்க தோனல'

அவனும் அவளும் சேர்ந்தே அடிக்கடி மறுப்பு சொல்வார்கள்.

இந்த விசயத்தில் கோகிலா தலையிடாமலே இருந்தாலும், விதி விடவில்லை... ஒரு ஆணுக்கும்,பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடக்குமிடத்தில் இவர்களுக்கும் முடிவாகி விட்டதுபோல்...

முரளிதரனோட மாமா டூவீலர் விபத்தில் இறந்து போகவும், சூழ்நிலை இணைப்பாக, வேறு வழி இல்லாமல் கணவன் மனைவியாகி இருவரும் சந்தோசமாகவே வாழ்ந்தனர். மூன்று ஆண்டுகள் நகர்த்தலில் கருவுற்றாள் நளினி .

ஆரம்ப கட்டப் பரிசோதனைகளில் நல்ல செய்திதான்.

ஆறாவது மாதம் மருத்துவமனைக்கு மகளைக் கூட்டிச்சென்ற போதுதான் கோகிலாவைத் தனியாக அழைத்த, மருத்துவப் பெண்மணி 'குழந்தை வளர்ச்சி அதிகமா இருக்குதும்மா...' இடைவெளி விட்டு,யோசித்து, 'இரு கால்களும் சுருங்கித் தெரியுதும்மா. சரி அடுத்த ஸ்கேன்ல பாக்கலாம் '

மருத்துவருக்கே உரிய பாணியில் சொல்லவும் இடி வீழ்ந்த நிலையில், வீடு வந்து, தன்னிலேயே புதைக்க முடியாது, மகளுக்கும் அம்மாவுக்கும் தெரியாமல் அலைபேசி மூலமாகத் தம்பியின் செவியில் போட்டு விட்டாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தையைப் பற்றியும், அதன் பிறப்பு, வளர்க்க வேண்டிய முறை, போட்டுவிடும் ஆடைகள், வாங்கிக் கொடுக்கும் விளையாட்டுப் பொருள்கள், தின்பண்டங்கள், பள்ளிக்கூடம் அனைத்திலும் உயர்வான கற்பனையை நளினி காட்டும் பொழுதெல்லாம்... தம்பி முரளிதரனுடன் கோகிலாவும் மிக நேர்த்தியாகவே நடித்தது மட்டுமில்லாமல் ஒரு நாடக திரைக்கதையையும் யதார்த்தம் மாதிரியே அமைத்தும் விட்டார்கள்..?

மருத்துவப் பெண்மணியும் ஒவ்வொரு முறையும் தன்னை சந்திக்கும் நளினி, நேரடியாகவே ஆர்வமாய்க் குழந்தை பிறப்பு, கவனிப்பு, ஆரோக்கிய வளர்ப்பு, அதன் சிறப்புகள்... மற்ற அம்மாக்களிலிருந்து தான் தனித்தன்மையுடன் திகழ வேண்டுமென்ற சந்திரமுகித்தனமாக கேட்டுக்கொண்டே இருக்க, குறைபாடுடன் பிறக்கும் தன் குழந்தையை நிச்சியம் ஏற்கவே மாட்டாள்?

அவள் எண்ணங்களின் மனநிலையில் விபரீதம் நடக்கவும் வாய்ப்புள்ளதை கவனத்தில் கொண்டு, அம்மாவும் கணவனும் நம்பகமான நடைமுறை சாத்திய விளக்கம் சொல்வதாலும் 'அப்படியே செய்து விடலாம்' என்று சொன்ன மாதிரியே கடுகளவும் பிசகாமல் நாடகத்தை நிறைவு செய்து விட்டார்கள்.

ஆப்ரேஷனில் குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை என்ற பொய்யை நளினிக்கு உண்மையாக நம்ப வைத்தனர்..!



காப்பகம்.

உதவிக்கு யாரையும் விடாமல் கணவனிடம், இலைகள் போட்டு, டம்ளரில் தண்ணீர் ஊற்றச் சொன்னதும், இனிப்புக்கு ரவா உருண்டை வைத்து, மற்ற பலகாரங்களையும் பரிமாறினாள். கோகிலாவின் ஏற்பாட்டில்.

முதலாவதாக அமர்தப்பட்டிருந்த வருண், நிமிர்ந்து, நிமிர்ந்து நளினியை மொத்தமாய் பார்த்தான். அதை நேரடியாகவே கவனித்தான் முரளிதரன்.

கோகிலாவோ ஏ சி அறை வாசலிருந்து எட்டி எட்டிப் பார்த்தாள். நளினியோ உறவின் ஈர்ப்பு இல்லாதவளாக, ஆண்டுக்கு ஒரு தடவை அன்னதானம் பண்ணும் நிலைபாட்டுடன் ஒவ்வொரு குழந்தைகளிடமும் கேட்டுக்கேட்டுப் பரிமாறினாள்.

வேண்டுமென்றே முரளிதரன் கூட, 'நளினி முதல் பையனுக்குச் சட்னி ஊத்து, சாம்பார் போடு'ன்னு இரண்டொருவாட்டி தூண்டிப் பார்த்தாலும் அவள் அதை கடமையாக மட்டுமே செய்தாள்.

விருந்து ஆனது.

காப்பாளர் அறை...

நெகிழ்ந்த பாராட்டும், மனபூர்வமான நன்றியும் கூறி, அன்னதான நன்கொடை ரசீது கொடுத்துக் கொண்டிருந்தார் சிவநாதன்.

உதவிப்பெண் வந்தாள்.

"அய்யா... சார வருண் கூப்பிடுறான்" என்றாள்.

எதிர்பார்த்ததுதான்.

மனைவியையும் முரளிதரன் அழைக்க, 'நீங்களே பாத்துட்டு சீக்கிறமா வாங்க கிளம்பலாம்' என்றவளைக் கேள்வியாக ஏறிட்டதும் நகர்ந்தான்.

எல்லாம் அறிந்த சிவநாதன், இறைவனின் பாத்திரப் படைப்பின் அந்த உறவுக் காட்சியை ஆழமாகச் சிந்தனை செய்து, உள்ளுக்குள் சிரித்தார்.

அக்காவின் மடியிலிருந்த மகனைத் தூக்கி நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சினான் அழுதான் முரளிதரன்.

'அப்..பா...அ..ப்பா..'ன்னு முகம் புதைத்தான் வருண்.

'இப்பவும் வரமாட்டேனு சொல்லிட்டாளா தம்பி..?’ கோகிலாம்மாள் கேட்க அவனால் பேச முடிய வில்லை.

பின் நிதானத்துக்கு வந்து, பையனுடன் விளையாடினான்.

வீடு.

ஒருக்களித்துப் படுத்திருக்கும் கணவனின் முகத்துக்கு நேராக நின்று "மாமா...அந்தப் பையன உத்துக் கவனிச்சீங்களா? பொம்பள முகம்... ஆணுக்குப் பெண் முகமிருக்கறது ரொம்ப நல்லதுனு சொல்லுவாங்க... அவன் அதிர்ஷ்டக்காரன்னும் சொல்லுவாங்க..."

கவனிக்காத மாதிரியே காட்டிக்கிட்ட என்னோட அருமை மனைவியே... 'அவந்தான் உன் மகன், நீ தாம்மா... அவன் அம்மா' என்று உரக்கக் கத்திச் சொல்ல வேண்டும் போலிருந்தது முரளிதரனுக்கு... ஏனோ சொல்ல விருப்பமில்லாமல் அப்படியே மௌனமாக இருந்தான்.

“அவனா அதிர்ஷ்டக்காரன், அப்பாவும் அம்மாவும் இருந்தும் அனாதை போல், அப்பா, அம்மா யாரென்று தெரியாமல் அந்த மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் இருந்து வருபவனா அதிர்ஷ்டக்காரன்...” மனதுக்குள் அழுது கொண்டிருந்தான் முரளிதரன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p199.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License