இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

என்னை மன்னிச்சுடுங்க...!

பாரதியான்

நிலையத்திலிருந்து,சென்னை செல்லும் தொடர் வண்டி கிளம்பிவிட்டது...

பெட்டிக்குள் தங்களின் இருக்கைகளைத் தேடி, அந்தப் பக்கமாகவும் இந்தப் பக்கமாகவும் அலைந்தபடியே, பயணிகளின் பேச்சுக்குரல்...முன்பின் அறிந்திராதவர்களின் அந்த சப்தம், கேட்பதற்கு, அதுவொரு சுவாரசியமான ஒலி!

இரவுக்கான உணவைப் பொட்டலம் கட்டி வந்து தொடர்வண்டிக் குலுங்களோடு 'இட்லி வெச்சுக்கோ', 'எனக்கொரு சப்பாத்தி வை', 'நாம டீ குடிச்ச கடையில சில்லிப் புரோட்டா நல்லா இருக்குமாமே' என்றபடியே சாப்பிடுவதைக் கிட்டத்தட்ட தொன்னூறு விழுக்காடு பயணிகள், விரும்பும் அனுபவச்சுவை.

'அப்பா எனக்கு ஜன்னல் சீட்...'

'ம்ம்ம்...எனக்கு...'

'இது என்ன பகலா... சாப்பிடதும் தூங்கணும்... கீழ அம்மாவும் நீயும், மேல நானும் அண்ணாவும்' சிறுவர்களுக்குச் சாப்பாடு கொடுத்தபடியே,ஒருவர்.

'சூடான டிபன், டிபன்... வாட்டர், வாட்டர்...' விற்பனையாளரின் குரல்.

'என்னங்க,பெரிய பேக் கீழேயே இருக்கட்டும், சின்னப்பேக்க நீங்க தலைக்கு வெச்சுப் படுத்துக்குங்க' ஜம்பது வயதைத் தாண்டிய பெண்மணி

நீட்டிய பேக்கை வாங்கியதும் 'மேல் பெர்த்துலேயே படுத்துக்கறேன்... தூங்கினபிறகு இந்த பெர்த்காரங்க வந்துட்டா அப்புறம் மாறத்தானே செய்யனும்' என்ற கணவரை முறைப்போடு ஏறிட்டுப் பார்த்ததும்

'வாரவங்க கிட்ட உங்களால ஏறமுடியாதுனு சொன்னா போதும் கேட்பாங்க..' 'நீங்க நான் சொல்வதைக் கேளுங்க' என்னும் தொனியில் பெண்மணி கூற, பிள்ளைகள் வைத்திருந்த தம்பதிகளுக்கு கொஞ்சம் சிரிப்பூட்டியது.

எட்டுப் படுக்கைகள் கொண்ட அத்தடுப்பில் இன்னும் ஒரு பயணி தான் வரவேண்டும்...மாறிப்படுத்துள்ள பெரியவரின் எண்ண ஓட்டம் ஒரு நிலையில் இல்லை. 'வரும் நபர் திடமானவராக, சகிப்பு தன்மை கொண்டு இருத்தல் வேண்டும், சொன்னவுடன் 'சரி 'ன்னு மேலேறிப் படுத்துக் கொள்ளனும். மாறாக, முசுறானவர் என்றால்...

'ஏங்க உங்க பெர்த்துல படுக்க வேண்டியதுதானே' என முகம் சுழித்தால்... நம்ப வயசுக்கு அசடு வழிய தலையைச் சொறிவது தேவையா? சின்ன தயக்கத்தைத் தொடர்ந்து 'ம், வரும் போது பார்த்துக்கலாம்.' எனவும் நினைத்துக் கொண்ட பெரியவர், பரிசோதகர் வந்து ,அங்கே ஏறியவர்களின் முன் பதிவைச் சரி பார்த்து, 'இந்த பெர்த்துக்கான லேடி இங்க ஏறியிருக்கனுமே...'என்றபடி அடுத்தத் தடுப்புக்குச் செல்ல, ' பெண் ' என்றதுமே சத்தமில்லாமல் தனக்கான மூன்றாவது படுக்கைக்கு மாறிக் கொண்டார்

எதிலுமே பார்வை திருப்பாது, சின்னதாய்க் கூட கவனம் செலுத்தாது. கீழிருக்கையில் நெஞ்சுவரை சால் துணிப் பொத்திப் படுத்திருந்த அந்த இளைஞன்... கைபேசிக்கு இணைப்பு கொடுத்து, ஒலிக்கருவிகளை காதில் சொறுகி, பாட்டு கேட்டுக் கொண்டிருந்த தனிமையான நிலைப்பாடு. 'என்னை யாரும் எதற்காகவும் தொந்தரவு செய்யாதீர்கள்' என்னும் எச்சரிக்கை காட்டியது. அவனின் பெயர் ம்...வேண்டாம்.

"அக்கா இந்த சீட்தான்..."

"உனக்குயா?"

இரண்டு தடுப்பு போய் பார்த்துவிட்டு வந்த அவன்.

"அங்க இருக்கு... மூணாவது படுக்கைக்கா..."

"இடத்தைத் தேடி அலஞ்சதுல கால்வலியே வந்துருச்சுயா..."

"அக்கா உங்களுக்கு இந்த ரெண்டாவது படுக்கை ஏறீடுவீங்களா.." என்றபோது, அக்காவின் முகத்தில் முடியாமை தெரிந்தது.

'மாமா, அம்மாவால மேல் சீட்ல ஏற முடியாது... கீழ இருக்கறவங்க கிட்ட மாறிக்க சொல்லுங்க' அக்கா மகன் சொல்லிவிட்டது ஞாபகத்தில் வரவும்



கீழ் பகுதியை நோட்டமிட்டான். பக்கவாட்டில், தாயும் சேயும்...இந்த பக்கம்... படுக்கைக்கு கீழ்ப் படுக்கையில் வயதான பெண்மணி... அந்த பக்கம்?திரும்பியபோது அதே இளைஞன் எதார்த்தம் போல், அடைப்பாகப் புரண்டு படுத்துக் கொள்ளத் தயாராகையில், "சார்... அக்காவுக்குக் கால் வலி கொஞ்சம் மாறி மேல் சீட்ல நீங்க படுத்து " அனுமதிக் கோரலை முடிக்கக் கூட இல்லை...

"அதெல்லாம் முடியாது அவங்களே அங்க படுத்துக்கட்டும்"இளைஞனின் அந்தத் தரமற்ற, அன்னியமான சொல் முகச்சுழிப்புத்தானே...

கண்ணுக்குத்தெரியாத புள்ளியாக மனசுகளை மாற்றிக் கொண்டிருக்கும் இன்றைய மனிதர்களிடம் உதவி கேட்பதே தப்பான சொல்லாகி விட்டதோ! பகையாளி போல் வார்த்தை வீச்சு தேவையே இல்லை, மற்றவர்களும், தங்கள் வரை இருக்கை சரியாகிவிட்ட மனோபாவத்தில் மெளனமாயிருந்தனர்.

அக்காவின் சிரமமறிந்து அந்தப் பெட்டி முழுவதும் சுற்றிப்பார்த்து வந்து 'கீழ் பெர்த்தை யாரும் விட்டுத்தர மாட்டாங்களோ' உதடுபிதுக்கி நின்ற தம்பியிடம் 'யோசிக்க என்ன இருக்கு... நான் சமாளிச்சிக்கிறேன், நீ போய் படுயா... பை பத்திரம் ' என்று அனுப்பினாள். தொடர் வண்டியோ இரவின் நேரத்தைப் பின் தள்ளியபடி முன்நோக்கி ஓடிக்கொண்டிருந்தது.

காலை ஏழு மணி. வண்டலூர் வந்துவிட்டது...

அரவம் கேட்டு விழித்துப் பார்த்தாள் அவள். பயணிகளோ இயற்கை உந்தலைக் கழிக்கக் கழிவறைக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரில் பக்கவாட்டில் உள்ளவர்கள் எழுந்து உட்கார ஆரம்பித்து விட்டனர்.

அந்த இளைஞனைத்தான் முக்கியமாய்ப் பார்த்தாள் அந்தப் பெண்? அப்போதும் அவன் தன்னை தனிமைப்படுத்தியே, இறுக்க முகத்துடன் அருகே இருப்பவர்கள் ஏதோ வேறானவர்கள் போல் காட்டினான்!

தான் எழுந்தால், இருக்கையை இறக்கிவிட்டுத் தாங்களும் எழுந்து அமரலாமென பெரியவரும், அவர் மனைவியும் எதிர்பார்த்திருந்ததை உணர்ந்த அவள் ஒருகனம் 'நறுக்' பட்டாள்.

'ச்சே...நம்மால் அவர்கள் சிரமப்படுவதா...' வருந்தியபடியே இறங்க முயற்சிக்கையில், தம்பி வந்தான்...

"என்னக்கா சார் மாற மாட்டேன்னு சாதிச்சிட்டாரோ?" கேட்டான்.

"பரவாலயா" என்றவள் இறங்க அதிகப்படியாகக் கஷ்டப்பட்டாள்.

தாங்க முடியாத வலி உணர்ந்தாற் போல்... தடுப்பிலிருந்த அனைவரது இருதயங்களும் வழக்கத்தை விட நூலிழை வேகம் கூட்டித் துடித்தது, குழந்தைகள்கூட 'உச்' கொட்டியது,



தம்பி துணையில் ஒருகாலை இழுத்திழுத்துப் போய் முகம் கழுவி வந்து, கம்பியைப்பிடித்து நின்றவள்,மொழங்காலை ஒருகையால் அமுக்கி, அமுக்கி விட்டவாறே "இறங்கற இடம் வந்துருச்சாய்யா?" கேட்டாள்.

"சார் தாம்பரம் வரவும் சொல்லுங்க இறங்கனும்" பெண்ணின் தம்பி, இப்படி இளைஞனிடம் கடுகளவு கோபமும் இல்லாது பேச, அவ்வளவுதான்... மனம் சட்டென நெகிழ்ச்சியாகி விட்டது.

'என்னொரு வெளிப்படையான, வெள்ளையானவர்கள். இவர்களையா இரவு, தள்ளி வைத்து முகம் திரும்பிக் கொண்டேன்... சமூகப் பிழை நான்.

இந்தத் தொடர் வண்டியில், பத்துமணி நேரத்தில், பதினைந்து நிமிடமே சக பயணிகளுடன் பார்த்தல், புன்முறுவல் காட்டல், சில பேச்சுப்பரிமாற்றம், சின்னதான விட்டுத்தருதல், இதிலேயே இணைந்து கொள்ள நான் தயாரில்லை என்றால் கால நடைமுறை வாழ்க்கையில் ஒட்டுதலற்ற நிலையைத்தானே எதிர்கொள்ளனும்... அதுவொரு கருப்பான நிகழ்வுதானே... வேண்டவே வேண்டாம்.

இரவில்,கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் அந்தம்மா வேதனை தெரியாமல் உறங்கியிருப்பாரே... முதல் முறையாக தனக்குத்தானே உணரத் தலையாட்டினான்.

தாம்பரம் நிலையம், தொடர் வண்டி நிற்கவும்

'மெல்லமா இறங்குங்கம்மா... அப்படியே என்ன மன்னிச்சுடுங்க' என்று தன்னை முழுமையாக மாற்றியிருந்தான் அந்த இளைஞன்...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p216.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License