இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

நன்றி மறக்கலாமா?

நெய்வாசல் நெடுஞ்செழியன்


வாசலில் ஆட்டோ வந்து நிற்க தம்புசாமி நிமிர்ந்து பார்த்தார்.

முதலாளியம்மா கையில் பையுடன் இறங்க அவருக்குள் பழைய நாட்கள் நினைவுக்கு வந்தன. எதற்காக வந்திருப்பாரோ? என்று நினைத்தபடி வாசலுக்கு வந்து "வாங்க" என்று வரவேற்றபடி பையைக் கையில் வாங்கிக் கொண்டார்.

ஆட்டோவுக்கு காசு கொடுத்து விட்டு வந்த கமலம்மாள், "தனியா இருக்கிறது போரடிக்கிற மாதிரி தெரிந்தது. அதான் உங்களையெல்லாம் பார்த்துட்டுப் போகலாமுன்னு வந்தேன்" என்றாள்.

இது உங்க வீடு மாதிரி, நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம். வாங்க வந்து உட்காருங்க என்றவாறு அவள் உட்கார அங்கிருந்த நாற்காலி ஒன்றை எடுத்துப் போட்டார்.

இதற்குள் வீட்டுவாசலில் ஆட்டோ வந்து நின்ற சத்தம் கேட்டு தம்புசாமியின் மருமகள்கள் இருவரும் வெளியே வந்து அவர்கள் பங்குக்கு "வாங்க" என்றனர்.

"வர்ரேம்மா...கடவுள் ஆசியோட நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கனும்" என்று சொல்லி வாழ்த்தியபடி அந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

கமலம் அம்மாளின் வாழ்த்தைக் கேட்டு அவர்கள் இருவரும் சிரித்துக் கொண்டனர்.

"என்ன சாப்பிடுறீங்க...? காபி... இல்லை ஜீஸ்" என்று கேட்க, கமலம் அம்மாள் "எனக்குத்தான் சர்க்கரை வியாதி இருக்கேம்மா...சர்க்கரை இல்லாமல் டீ போட்டுக் கொடும்மா..." என்று அவளின் குறையைச் சொல்லி மாற்றாக டீயைக் கேட்டாள்.



"மாமாவும் நீங்களும் பேசிக்கிட்டிருங்க...கொஞ்ச நேரத்தில கொண்டு வர்றோம்" என்றபடி அவர்கள் இருவரும் சமையலறைப் பக்கம் போனார்கள்.

கமலம் அம்மாளின் மகன்கள் இருவருமே நன்றாகப் படித்து அமெரிக்காவில் கம்ப்யூட்டர் எஞ்சினியர்களாகி விட்டனர். இருவரும் கல்யாணம் முடித்து மனைவி, குழந்தைகள் என்று அங்கேயே குடும்பமாகத் தங்கி விட்டார்கள்.

கமலம் அம்மாள் பக்கத்து கிராமத்தொலிருக்கும் அவளுடைய பெரிய வீட்டில் தனிமையாகத் தங்கிக் கொண்டிருக்கிறாள்.

மகன்கள் எப்போதாவது ஒருமுறை குடும்பத்துடன் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள்.

அவர்களுக்கு வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுத்த கமலம் அம்மாள் இங்கு எந்தத் துணையுமின்றி தனிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

"தம்பிங்க யாராச்சும் போன் பண்ணினாங்களாம்மா...? யாராவது வர்றாங்களாம்மா....?" என்று கேட்டார் தம்புசாமி.

"போன் பண்ணினாங்க யாரும் வர்றதாத் தெரியல தம்பு...பேரன் பேத்தியைப் பார்க்கனும்னு ஆசையா இருக்கு. ஆனால் அவங்களைத்தான் எதிர்பார்த்திருக்கேன்..." என்று அவளின் வருத்தத்தைத் தெரிவித்தாள்.

"பெத்த தாயை இங்கே விட்டுவிட்டு...அங்கே அவர்கள் வசதியா வாழ்ந்து என்ன பயன்?" என்று நினைத்தபடி "கவலைப்படாதீங்கம்மா... இந்த வருசம் வருவாங்க..." என்ற தம்புசாமியைப் பார்த்து அவள் "என்னத்த வரப் போறாங்க... அவனுங்க இங்க இந்தியா வந்தாலும் இங்க ஒரு நாள் எட்டிப்பார்க்கறதோட சரி... மற்ற நாட்களெல்லாம் அவனுங்க மனைவி வீட்டோட போய் இருந்துக்கிடுறாங்க...." என்று மேலும் வருத்தப்பட்டாள்.



"வசதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுத்தவங்களை மறந்து புதுசா வந்த சொந்தம் பெருசாப் போயிடுதும்மா... என்ன பண்றது...?"

"நினைச்சுப் பார்க்கறதும், நிஜம் புரிஞ்சு நடக்கிறதும் மறந்து போச்சு தம்பு. காலம் ரொம்ப மாறிப்போச்சு... ஒவ்வொரு செயலையும் செஞ்சவங்களை யாரும் நினைச்சுக் கூடப் பார்க்கிறதில்லே... காரியம் முடிஞ்சா கழற்றி விடனும்கிற மனோபாவம் அதிகமாயிட்டிருக்கு. அதுக்காக என்ன விலையையும் கொடுத்து விலகிக்க நினைக்கிறாங்க... நாம் கொஞ்சம் கொஞ்சமா பேசி மனசைத் தேத்திக்க வேண்டியிருக்கு..."

"கவலைப்படாதீங்கம்மா... எல்லாருக்கும் நல்ல காலம் வரும். நம்ம தம்பிங்க இரண்டு பேரும் நல்லாப் படிச்சவங்க... மனசு மாறி அவங்க வருவாங்க..."

"ஆமாம். உன் பிள்ளைகள் எல்லாம் உன்னை நல்லாத்தானே நடத்துறாங்க...?"

"அம்மா, எனக்கு எந்தக் குறையுமில்லம்மா... நீங்க அடிக்கடி பையனுங்களைப் படிக்கவைன்னு அடிக்கடி சொல்வீங்க... அவனுங்களும் ஆசிரியர்களாயிட்டாங்க... பெரியவன் உள்ளூர் ஸ்கூலில் இருக்கான். அடுத்தவன் பக்கத்தில கிராமத்து ஸ்கூலில் இருக்கான். எல்லாம் ஒன்னா இருக்கோம்மா... ஆனால் இதையெல்லாம் பார்க்க விசாலாட்சி இல்லைங்கற ஒரு வருத்தம்தாம்மா..." என்றபடி அங்கிருந்த டீ.வீயைப் போட்டார் தம்புசாமி.

"தம்பு விசாலாட்சிக்கு திவசமெல்லாம் பண்றீங்களா?" என்று கேட்டாள் கமலம் அம்மாள்.

"ஆமாம்மா... வருசம் தவறாம திவசம் பண்ணிடுறோம். அன்றைக்கு பக்கத்திலிருக்கிற பாரதி அனாதை ஆசிரமத்திற்குப் போய் ஒரு நாள் மதியச் சாப்பாடு போட்டுடுறோம். அதுக்கு நாலாயிரம் கொடுத்து நல்லா செய்யச் சொல்றோம்."

"கேட்கவே சந்தோசமா இருக்கு... தம்பு... என் வீட்டில நீயும் உன் மனைவியும் வேலை பார்த்தாலும் நீங்க ரெண்டு பேருமே எங்க குடும்பத்துக்காக நிறைய உழைச்சிருக்கீங்க..."



"அம்மா... நாங்க உழைச்சாலும் எங்க குடும்பம் இப்படி முன்னேறியதற்குக் காரணம் அய்யாவும் நீங்களும்தாம்மா... படிக்கப் போக மாட்டேன்னு அடம்பிடிச்ச என்னோட பையன்களை படிப்புதாண்டா பெரிய வேலையை வாங்கித் தரும்... பெரிய வேலை கிடைச்சா குடும்பம் குட்டின்னு சந்தோசமா இருக்கலாம்ன்னு சொல்வீங்க... அவங்க பள்ளிக்கூடப் படிப்புகளுக்கு நிறைய உதவி செஞ்சீங்க... அய்யா இறந்த பின்னாடி நாங்க இந்த நகரத்திற்கு வந்துட்டோம்... எப்படியோ கஷ்டப்பட்டு நல்ல நிலைமைக்கு வந்துட்டோம்மா..." தம்புசாமியின் கண்களில் நீர் துளித்தது.

கமலம் அம்மாள் நெகிழ்ந்து போய், "தம்பு நல்லது செய்தவர்களுக்கு கடவுள் ஒரு குறையும் வைப்பதில்லை... உனக்கும் குறையில்லை" என்றாள்.

கமலம் அம்மாளுக்கு சாப்பிட பிஸ்கட் ஏதாவது கொடுப்போம் என்று எண்ணத்துடன் "அம்மா நீங்க டீவியைப் பார்த்துக்கிட்டிருங்க..." என்று சொல்லி உள்ளே சென்றார்.

கடந்த மாதம் மார்க்கெட்டிற்கு வந்திருந்த தம்பு தற்செயலாய் கமலம் அம்மாளைப் பார்த்து வீட்டிற்கு அழைத்துவர வீட்டில் அவருடைய மகன்கள் இருவரும் இருந்தனர். சிறுகுழந்தைகளாய் இருந்த போது அந்த அம்மாவின் வீட்டில் எத்தனையோ முறை சாப்பிட்டிருக்கிறார்கள். எனவே அவர்கள் அந்த அம்மாவிற்கு ராஜ உபசாரம் செய்து விட மகிழ்ந்து போனாள். அந்த உபசாரம்தான் மறுமாதமும் அந்த வீட்டிற்கு வரவைத்திருக்கிறது.

நடுஹாலைத் தாண்டி சமையலறைப் பக்கம் நெருங்க மருமகள்கள் பேச்சு லேசாக காதில் விழத் தொடங்கியது. முதலாளி அம்மாவை கடந்த மாதம் அவர்கள் கவனித்த விதத்தை நினைத்துப் பார்த்த அவர் சமையலறை வாசல் பக்கம் நின்றார். அவர்கள் பேச்சைக் கேட்ட அவர் முகம் மாறிப் போனது.



"போன மாதம் ஏதோ பெரியவங்க வந்திருக்காங்கன்னு சாப்பாடு அது இதுன்னு பார்த்துக் கவனிச்சோம். அந்த மரியாதையைக் காப்பாற்றிக்காமல் இப்போ ஆட்டோ வச்சு வீட்டுக்கு வர ஆரம்பிச்சிடுச்சு..." "ஆமாங்க்கா... நம்ம வீட்டில் இருக்கிறவங்க எல்லாரையும் பேர் சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு... நாமெல்லாம் இன்னும் அந்தம்மா வீட்டில வேலை பார்த்துக்கிட்டிருக்கோம்னு நினைக்குது போல..." "பால் பொங்கிடப் போகுது..."

"பால்ன்னு சொன்னவுடன்தான் ஞாபகத்திலே வருது காலையில காய்ச்சின ஒரு பாக்கெட் பால் திரிஞ்சு இருக்குதுக்கா..."

"பேசாம அந்தப் பாலைப் போட்டு டீ போட்டுடுவோம்..."

"அதுவும் சரிதான். அப்பதான் அடுத்த தடவை நம்மளைத் தேடி வர மாட்டாங்க..."

"இந்த வீட்டுப் பெரிசு இப்படி யாரையாவது கூப்பிட்டு வந்து நம்ம உயிரை வாங்குது... அடுத்த முறை வந்தா நம்ம வீட்டுப் பெரிசைத்தான் சத்தம் போடனும்..."

"அப்போதான் பழக்கம் அது இதுன்னு வெளியே வச்சுக்கும். வீட்டுவரைக்கும் எதையும் கொண்டு வராது..."

அதற்கு மேல் அவர்கள் பேச்சைக் கேட்க முடியாதவராய், "என்னம்மா டீ போட்டாச்சா" என்றார்.

"இதோ தயாராடுச்சு மாமா..." என்றார்கள் இருவரும் சேர்ந்தவாறு.

டீயைக் குடித்த கமலம் அம்மாள் ஏதேதோ கேட்க பதில் சொல்ல முடியாத வேதனையுடன் தவித்தார் தம்புசாமி.

டீவியில் ஓடிக் கொண்டிருந்த சில நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததில் ஒரு மணி நேரம் ஓடியிருந்தது.

"என்னங்கம்மா வீட்டிற்குக் கிளம்பலையா?"

"ஏன் தம்புசாமி?"

"இல்ல எனக்கு முனிசிபல் ஆபிஸில் கொஞ்சம் வேலையிருக்கு..."

"நீ போயிட்டு வா தம்பு. நான் உன்னோட மருமகள்களோட பேசிக்கிட்டிருக்கேன்..."

"இல்லேம்மா...கிளம்புங்க..."

தம்புசாமியின் பேச்சு அவளுக்குள் கோபத்தைத் தந்தது.

"அப்போ நான் கிளம்பனும்னு சொல்றியா தம்பு..." அவளின் பேச்சில் சிறிது கடுமை தெரிந்தது.



"ஆம்" என்பது போல் தம்புசாமி தலையசைத்தார்.

அடுத்த நிமிடம் வாசலுக்குச் சென்ற கமலம் அம்மாள் சற்று கோபத்துடன் செருப்பை மாட்டிக் கொண்டாள்.

தம்புசாமி ஒரு ஆட்டோவை கை நீட்டி நிறுத்த அவரிடம் சொல்லிக் கொள்ளாமலேயே கமலம் அம்மாள் சென்றாள்.

இதைப் பார்த்த தம்புசாமியின் மருமகள் இருவரும் "அந்த அம்மா கோபமாப் போறாங்களா மாமா?" என்று எதுவும் தெரியாதவர்களாகக் கேட்டார்கள். அவர்களுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

இந்த சொத்து எல்லாம் அந்த அம்மா உருவாக்கிக் கொடுத்த சொத்து. அதை மறந்து இப்படி என்னைப் பேச வைத்துவிட்டீர்களே என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. ஆனால் சொல்லவில்லை.

*****
மாலை வேளை.

ஏதோ வேலையிலிருந்த கமலம் அம்மாள் நிமிர்ந்து பார்த்தாள்.

தம்புசாமி நின்று கொண்டிருந்தார்.

"வா தம்பு? நீ விரட்டி விட்டாலும் நான் வரவேற்கிறேன். இதுதான் எங்க குடும்பத்துப் பண்பு. நாங்க மற்றவர்களை மதிப்பதுடன் வாழவைத்துப் பார்த்திருக்கிறோம். யாரையும் விரட்டியதில்லை."

"அம்மா என்னை மன்னிச்சிடுங்க... உங்களை என்னோட மருமகள்கள் விரட்டியடிச்சிடக் கூடாதேன்னு பயந்துதான் உங்களைக் கிளம்பச் சொன்னேன். வயசானவர்களை மதிக்கனும் என்கிற எண்ணம் இந்தக் காலத்தில் யாருக்கும் இல்லை. அந்த வீட்டில் என்னைப் பெயருக்கு மதிக்கிறார்களே தவிர அவர்களுக்கு உள்ளுக்குள் இந்தப் பெரியவர் இல்லாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்கிற எண்ணமே இருக்கிறது. என் ஒருவனையே அப்படி நினைத்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் தற்போது நீங்கள் வருவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. முந்தைய காலம் போல் கூட்டுக் குடும்பம், பாச உணர்வுகள் எல்லாம் இப்போது இல்லை. எல்லாம் மாறிக் கொண்டிருக்கிறது."

"தம்பு உனக்கும் உன் பிள்ளைக்கும் என்னிடம் விசுவாசம் இருக்கலாம். அந்த விசுவாசத்தை உன் மருமக்களிடமும் எதிர்பார்க்க முடியாது. நான்தான் உன்னைத் தவறாக நினைத்து விட்டேன். இனி நான் உன் வீட்டுக்கு வரவில்லை..."

"நான் வரேன்மா... நம்முடைய கவலைகளை மறக்க நான் தினமும் இங்கே வந்து செல்கிறேனம்மா..." என்றபடி தேம்பித்தேம்பி அழத் தொடங்கினான் தம்புசாமி.

கமலம் அம்மாளும் தான்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p27.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License