இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அன்புள்ள அக்கா தங்கைகளுக்கு...!

ராம்ப்ரசாத்

நேற்று மாலையிலிருந்து ஜானகிக்கு நேரம் சரியிருக்கவில்லை. அவள் அண்ணன் தாமோதரன் அவளை கூண்டில் நிற்க வைத்து விட்டு அவள் அம்மாவை கேள்விகளால் துளைக்காத‌ குறைதான்.

அவன் "பெரிய இவளுன்னு நினைப்பா இவளுக்கு? காலேஜுக்குப் போற பொண்ணுக்கு இதெல்லாம் எதுக்கு? படிக்க போறாளா? இல்ல ஃபாஷன் ஷோவுக்கு போறாளா? இதெல்லாம் நீங்க கேக்கமாட்டீங்களா? ..." என்று பொறிந்து தள்ளினான். அவன் குரலில் உஷ்ணம் அதிகமாயிருந்தது.

"அம்மா எதுக்கு கேக்கணும்? அம்மாக்கு ஜீன்ஸ் போடுற‌ வ‌ய‌சா?..."ஜான‌கியும் விடவில்லை. வேண்டுமென்றே காமெடி செய்து அவனை மேலும் வெறுப்பேற்றி வேடிக்கை பார்த்தாள்.

அவன் மேலும் உஷ்ணமானான். விஷயம் வேறு ஒன்றுமில்லை. அவள் காலேஜுக்கு நேற்று அணிந்து சென்ற உடைதான். தொடைகளையும், இடுப்பையும் இறுகப் பிடித்த லிவைஸ் ஜீன்ஸ், அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் அவளின் முன்னழகை இறுகக் கவ்விய டி&ஜி டிசர்ட். தமிழ் நாட்டின் மானமிக்க அண்ணனுக்கு (?!) கோபம் வர இது போதாதா?. அதிலும் ஜானகிக்கு நல்ல வாளிப்பான உடல் வாகு. ஐந்தரை அடிக்கு மேல் நல்ல உயரம், சுண்டினால் ரத்தம் வரும் நிறம், உயரத்திற்கேற்ற எடை. வீட்டில் ஒரு பிரளயமே நடந்து கொண்டிருந்தது.

சற்றேர‌க்குறைய தமிழ் நாட்டில் அண்ணன் தங்கை, அக்கா தம்பி என்று இருக்கும் அனைத்து வீடுக‌ளிலும் ந‌ட‌க்கும் பொதுவான‌ விஷ‌ய‌ம்தான் இது. முரண்பாடான இரண்டு துருவங்களுக்குள் நிகழும் வேதியியல் விளைவுகளால் நிகழும் விளைவு.

ஏனோ ஜான‌கிக்கு அந்த கணத்தில், தன் அண்ணனை, தான் அது நாள் வரையில் சந்தித்த ஒட்டு மொத்த வக்கிர‌ ஆண் வர்க்கத்தின் சாயலாகப் பார்க்கத் தோன்றியது. அவ‌ளுக்குள் இருந்த‌ பெண் சுத‌ந்திர எண்ணங்கள் அவளை, அவனை நறுக்காய் நாலு கேள்வி கேட்டு விட உசுப்பேற்ற...

"இப்போ என்ன‌ பெருசா கெட்டுப் போச்சுனு இப்ப‌டி க‌த்துற‌?"

தாமோத‌ர‌னுக்கு ஏனோ, அவளை, அந்த தருணத்தில், ஒரு பெண் என்ப‌தைவிட‌ ஒரு பேதை என்றே நினைக்க‌த் தோன்றிய‌து.



"புரியாம‌ பேசாத‌, ஜானு... நீ நினைக்கிற‌ மாதிரி இல்ல‌ உல‌க‌ம்" என்றான் வெறுமையாக தாமோதரன் வார்த்தைகளில் கனிவு தெரிவதை கண்டு அவளுக்குள் ஏதோ பனிக்குடம் உடைவது போல் தோன்றியது. மெல்ல சாந்தமானாள். வார்த்தைகளால் இவன் மனதை கீறி விட்டுவிடக் கூடாதென முடிவு செய்து கொண்டாள்.

"ச‌ரி, என‌க்கு புரிய‌ல‌. நீ தான் சொல்லேன்." என்றாள்.

"ச‌ர்க்க‌ரையைத் தேடி அதிக‌மா எறும்புகள்தான் வ‌ரும்." என்றான் அவன்.

"என்ன‌ ச‌ர்க்க‌ரை, எறும்பு?."

"நாம உடுத்தற உடைங்க‌ற‌து மான‌த்தை ம‌றைக்க‌. வார்த்தைக‌ள் இல்லாம‌ல், நாம‌ யாரு, யாரா இருக்க‌லாம், எப்ப‌டிப‌ட்ட‌வ‌ங்க‌னு சொல்லாம‌ சொல்ற‌து, அதோட‌ ப‌ய‌ன்பாடுக‌ள்ல‌ ஒன்னு. ஒரு ச‌மூக‌த்துல‌ இருக்க‌ற‌ப்போ, ந‌ம்ம‌ உடை ந‌ம்மை‌ எந்த மாதிரி காட்டுதுங்க‌ற‌து ரொம்ப‌ முக்கிய‌ம். தழைய தழைய புட‌வை, த‌லைல‌ பூ, நெத்தில‌ கோயில் குங்கும‌ம், இதெல்லாம் ஒரு ம‌ங்க‌ள‌க‌ர‌மான‌‌ தோற்ற‌த்தை குடுக்கும். பாக்கறவன் மனசை உறுத்தாது. பார்க்க நல்ல தோற்றமாயிருந்தால் பார்க்கறவங்களும் நல்ல எண்ணத்தோடப் பார்ப்பாங்க... ஜீன்ஸ் அப்படியில்லை..."

"நல்லா இருக்கே நீ சொல்றது...அப்போ ஜீன்ஸ் போடுகிறவர்கள் எல்லாம் தவறானவங்களா? ஜீன்ஸ் டீசர்ட் போட்டா முழு உடம்பையும் மறைச்சிடுது நீ சொல்ற புடவை கட்டிக்கிட்டா இடுப்பு, வயிறுன்னு வெளியே தெரியுது..." என்று ஜீன்ஸ் உடைக்கு சப்போர்ட் செய்தாள் ஜானகி.

"நான் ஜீன்ஸ் போடுறது தப்புன்னு சொல்லல... புடவை கட்டிக்கிறது பாக்குற‌ நூறு பேர்ல எழுபது பேர் ம‌ன‌சை சி‌ல்மிஷ‌ம் ப‌ண்ணாம‌ வைக்கும். மீதி முப்பது பேர் சி‌ல்மிஷ‌மா நினைச்சாலும், இந்த‌ எழுப‌து பேரால‌ அது காணாம‌ போய்டும். உன் ந‌ட்பு தேடி வ‌ர‌ ப‌த்து பேர்ல‌ எட்டு பேர் உன் ஜீன்ஸ், டிச‌ர்ட் பாத்து வ‌ந்தா, அந்த‌ ந‌ட்பு உன‌க்கு ஆர‌ம்ப‌த்துல‌ இனிக்கிற மாதிரி இருந்தாலும் போக‌ப்போக‌ க‌ச‌ந்துடும்." என்றான் தாமோதரன்.



"எதையும் நெக‌ட்டிவா ஏன் பாக்குற? எட்டு பேர் என் ஜீன்ஸ் பாத்துதான் வராங்கனு ஏன் நினைக்கிற?" என்று ஜானகி அவனுடைய கருத்துக்கு மறுப்பு தெரிவித்தாள்.

"எதையும் நெக‌ட்டிவா பார்க்க‌ கூடாதுதான். முதலில் நெகடிவ் தெரிஞ்சுக்கிட்டா அதைப் பாசிட்டிவாக் கூட மாத்திக்கலாம். ஆனா, எல்லாத்தையும் பாசிட்டிவா பாக்க‌றேன் பேர்வ‌ழின்னு திருடனக்கூட நல்லவனா நினைக்கக் கூடாது. எட்டு பேர் உன் ஜீன்ஸ் பாத்து வரலனு உன்னால கண்டிப்பா சொல்ல முடியுமா?" என்று கேட்கவும் ஜான‌கி பதில் சொல்ல முடியாமல் மவுனம் காத்தாள்.

"உன்னால‌ முடியாது, ஜானகி. அதுதான் உண்மை. ந‌ம்ம‌ யாருக்கும் உண்மை முதலில் தெரியாது. அந்த அன்செர்டெனிடி இறைவ‌னோட‌ ப‌டைப்பு. அத‌ தெரிஞ்சிக்க‌ முய‌ற்சி ப‌ண்ணி நேர‌த்தை வீணாக்க‌ வேணாம். ஆனா, இன்னிக்கு தேதியைக்‌ க‌ட‌த்த‌னும். அதையும் நாளைய‌ ந‌ம்ம‌ வாழ்வாதார‌த்துக்கு ப‌ங்க‌ம் வ‌ராத‌ மாதிரி இன்னிக்கு தேதிய‌ க‌ட‌த்த‌னும்..."

"அப்போ, என் ஃப்ர‌ண்ட்ஸ் எல்லாரும் கெட்ட‌வ‌ங்க‌னு சொல்றியா?" என்றாள் ஜானகி.

"நான் அப்ப‌டி சொல்ல‌ல‌. இப்ப‌டி யோசிச்சிப்பாரு. உன் ஸ்கூல்ல வெண் டயாக்ராம்னு படிச்சிருப்ப. அதன்படி, நீ ஒரு காலேஜ்ல‌ ப‌டிக்கிற‌. அங்க‌ உன் ஆண் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் ந‌ல்ல‌வ‌ங்க‌னு சொல்ற‌. இப்ப‌டியே தான் உன் காலேஜ் முழுக்க‌ இருக்குற‌ பொண்ணுங்க‌ த‌ன்னோட‌ ஆண் ந‌ண்ப‌ர்க‌ள் எல்லாரும் ந‌ல்ல‌வ‌ங்க‌னு சொல்வாங்க‌. எந்த காலேஜுலயும் எல்லா ஆணும் ஏதோ ஒரு பொண்ணுக்கு நண்பனாதான் இருக்கான். அப்போ உன் காலேஜ் ப‌ச‌ங்க‌ எல்லாரும் 100% ந‌ல்ல‌வ‌ங்க‌னு அர்த்த‌மா? இப்ப‌டியே ஒரு ச‌முதாய‌த்துக்கும், ஊருக்கும், உல‌க‌த்துக்கும் யோசிச்சுப்பாரு. இந்த க‌ண‌க்குப்ப‌டி உல‌க‌த்துல‌ யாருமே கெட்ட‌வ‌ங்க‌னு கிடையாதா? எல்லாரும் ந‌ல்ல‌வ‌ங்க‌ளா?"



ஜான‌கிக்கு இந்த வாத‌ம் புதிய‌தாக‌ இருந்த‌து. ஆண் வ‌ர்க்க‌த்தின் க‌ண்மூடித்த‌ன‌மான‌ வாத‌மாக‌ இல்லாம‌ல் கொஞ்ச‌ம் டெக்னிக்க‌லாக‌ இருந்த‌துட‌ன் அவ‌ளால் எளிதில் நிராக‌ரிக்க‌ முடியாத‌ நிலையில் இருந்த‌து. இருந்தாலும் ஜானகி‌ "ஒ.கே. ஒத்துக்க‌றேன். கெட்ட‌வங்க‌ளும் இருக்க‌தான் செய்யிறாங்க‌. நாய்க்கு ப‌ய‌ந்துகிட்டு நான் என் செய‌ல்க‌ளை ஏன் மாத்திக்க‌ணும்?" என்று கேட்டாள்.

"பாதிக்கப்‌ப‌டுற‌து பெண்க‌ள் தானே. போன‌ வார‌ம், உன் ஃப்ர‌ண்ட் மால‌தி ஷாப்பிங் போயிட்டு, திரும்ப‌ வ‌ரும் போது, ப‌க்க‌த்து தெருவுல‌ இருக்குற‌ அவ‌ வீட்டுக்கு போகாம‌ ந‌ம்ம‌ வீட்டுக்கு வ‌ந்தாளே. வ‌ந்த‌தும் நீயும் அவ‌ளுமா ரூம்ல‌ போய், எதையோ க‌ழுவி, அது காயுற‌வ‌ரை வெயிட் ப‌ண்ணிட்டு, அது வ‌ரை ரூம்ல‌ க‌த‌வ‌ சாத்திக்கிட்டு, ஒரு மணி நேரமா அவ‌ அழ‌ற‌தும், நீ க‌ன்சோல் ப‌ண்ற‌துமா இருந்தீங்க‌ளே, அந்த பாதிப்பு இனிமே அவ‌ளுக்கு ம‌ற‌க்குமா? ராத்திரில‌ தூக்க‌ம் வ‌ராம‌ முழிச்சு, த‌லைய‌ணைக்குள்ள‌ அழ‌ற‌துக்கு, ஒதுங்கிப்போய்ட‌ற‌து எவ்வ‌ள‌வோ மேல். சில‌ நேர‌ங்க‌ள்ல‌ ஒதுங்கிப் போற‌தும் புத்திசாலித்த‌ன‌ம் தான்..."

ஜான‌கிக்கு தான் நின்றிருக்கும் த‌ரை, ந‌ழுவுவ‌து போல் இருந்த‌து. அவ‌ன் க‌வ‌னித்திருக்க‌மாட்டான் என்று தான் நினைத்த‌ விஷ‌ய‌த்தை தாமோத‌ர‌ன் க‌வ‌னித்து புரிந்து கொண்ட‌து அவ‌ளுக்கு ஆச்ச‌ர்ய‌மாக‌வும் அதிர்ச்சியாக‌வும் இருந்த‌து. ஒரு வருடம் முன்பே தனக்கு ஸ்கூட்டி வாங்கிக் கொடுக்க அவன் அவசரப்பட்டது ஏன் என்றும் புரிந்தது. தான் தின‌மும் வெளியிட‌ங்க‌ளில் ச‌ந்திக்கும் ஆண் ம‌க‌ன்க‌ளைப் போல் அவன் இல்லாம‌ல் இருப்ப‌தும், பெண்ணின் இன்னொரு ப‌க்க‌த்தையும் தெரிந்த‌வ‌னாக அவ‌ன் இருப்பதும் அவளுக்குத் தோன்றிய‌து. அதுநாள் வரையில் அவனிடம் கவனிக்கத் தவறியதையும், அது எதனால் என்பது இந்தக்கணம் வரையில் புரியாமல் இருப்பதையும் ஜீர‌ணிக்க‌ அவ‌ளுக்கு அவ‌காச‌ம் தேவைப்ப‌ட்ட‌து.

அவள் மவுனமாக இருந்தாள்.

"உன‌க்கு அந்த பிர‌ச்னை இல்ல‌. உன‌க்கு ஸ்கூட்டி வாங்கி குடுத்திருக்கோம். அத‌னால‌ இந்த‌‌ மாதிரி பிர‌ச்னை உன‌க்கு இல்ல‌ங்க‌ற‌தால‌, அதப் ப‌த்தி க‌வ‌லைப்ப‌ட‌ வேணாம்ங்க‌ற‌து இல்ல‌." என்றான் தாமோதரன்.



"பெண்க‌ளே மாத்திக்க‌ணும்னு ஏன் சொல்ற‌. ஆண்க‌ள் மாத்திக்கக் ‌கூடாதா?" என்றாள் ஜானகி.

"ஆண்க‌ள் மாத்திக்குவாங்க‌. நாய்க‌ள் மாத்திக்காது. விதிவில‌க்குக‌ள் எல்லா இட‌த்துல‌யும் இருக்காங்க‌. பெண்க‌ள்ல‌யும் விதிவில‌க்குக‌ள் உண்டு. சில‌ இட‌ங்க‌ள்ல‌ விதிவில‌க்குக‌ளோட‌ எண்ணிக்கை அதுக‌மா ஆகுற‌தும் உண்டு. அவ்லோ புர‌ட்சி பேசுற‌ மால‌தியால‌ ஏன் அந்த ச‌ம‌ய‌த்துல‌ ச‌த்த‌ம் போட‌வோ, இல்ல‌ ச‌ண்டை போட‌வோ முடிய‌ல‌? அவ‌ளால‌ அந்த ச‌ம‌ய‌த்துல‌ என்ன ப‌ண்ண‌ முடிஞ்சிது? அதண்டு பேச எல்லா பெண்களாலயும் முடியாது. நல்லது கெட்டது எல்லாம் ரிலேட்டிவ் கான்செப்ட்ஸ். அதன் அடிப்படைல தான் சூழ்நிலைகள் உருவாகுது. அந்த சூழ்நிலைகளுக்குதான் மனுஷன் பதிலளிக்க வேண்டியிருக்கு. சந்தர்ப்பத்தால் வருவது பழக்கம், சந்தர்ப்பங்கள் தவிர்ப்பது ஒழுக்கமே தவிர, உரிமையை விடறதோ இல்ல தோத்து போறதோ இல்ல. சில‌ விஷ‌ய‌ங்க‌ளை அவாய்ட் ப‌ண்ணா சில‌ மோச‌மான சூழ்நிலைகள் உருவாகுறத தவிர்க்கலாம்னா, கால‌ம் மாறுற‌ வ‌ரை நாம‌ ஏன் அதை செய்ய‌க் கூடாதுங்க‌ற‌துதான் என் கேள்வி."

‌ஜான‌கிக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

"என்ன‌மோ ஜானகி ஒரு அண்ணனா என‌க்குத் தோனின‌தை நான் சொல்லிட்டேன். அதுக்க‌ப்புற‌ம் உன் இஷ்ட‌ம்." என்றவாறு தாமோதரன் வெளியேறிச் சென்றான்.

தாமோத‌ர‌ன் அங்கிருந்து சென்று விட்ட‌ பின்னும், ஜான‌கி அங்கேயே அம‌ர்ந்திருந்தாள்.

அண்ணன் சொன்னதிலும் அர்த்தமிருக்கத்தான் செய்கிறது என்று அந்த ஜானகி உணர்ந்து கொண்டு விட்டாள். அக்கா தங்கை அனைவரும் உணர்வார்களா...?

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p31.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License