இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

கொலையா? தற்கொலையா?

ராம்ப்ரசாத்

"என்ன திமிரு இவளுக்கு? இன்னொரு நாட்டுல இருக்கோம்னு கூட இல்லாம இப்படியா அலைவா ஒரு பொம்பள? இருக்கட்டும். இவள என்ன பண்றேன்னு பாரு" மனதிற்க்குள் கருவியபடி வராண்டாவை தாண்டிக் கொண்டிருந்தான் சுனில்.

சுனில் திருமணமானவன். மனைவி பெயர் மது என்கிற மதுமிதா. மதுவை ஒரு ஒவியக் கண்காட்சியில் பார்த்து அவளின் கண்கவர் ஓவியங்கள் பிடித்துப் போய் பெற்றோருடன் பேசி முடித்த திருமணம். சுனிலுக்கு கென்யா நாட்டில் ப்ராஜெக்ட். இருவரும் ஒரே ஐ.டி. நிறுவனத்தில் வேலை என்பதால் இருவருக்கும் ஒரே நாட்டில் ஆன்சைட் பிடிப்பது சுலபமானது. விளைவு, இருவரும் கென்யா நாட்டில். கலவியலுக்கு பெயர் பெற்றவர்கள் கென்யா நாட்டு கருப்பர்கள். கென்யா ஆன்சைட் இவர்கள் எதிர்பாராதது, ஆனால் அதுதான் இருவரும் ஒன்றாய் பறப்பது போல் கிடைத்தது.

ஆனால் சுனிலுக்கு ஏனோ இங்கு வருவது மதுவின் ஆசையோ என்றொரு எண்ணம் முதலிலேயே வந்தது. காரணம் இதற்கு உதவிய மதுவின் தோழி, கொஞ்சம் அப்படி இப்படி என்று கேள்விப் பட்டிருக்கிறான். மதுவிடம் கேட்டபோது யார் எப்படி இருந்தால் என்ன என்பதே பதிலாய் வந்தது. அதை அப்போதைக்கு சுனிலும் விட்டு விட்டான்.

சுனிலின் தற்போதைய கோபத்திற்குக் காரணம், முன்தினம் அவன் பெட்ரூமில் கண்ட காட்சிதான். உண்மையில் அவன் அப்போது வீட்டில் எதிர்பார்க்கப்படாத தருணம். அந்நேரம் அவன் ஆபிஸில்தான் இருப்பான். அவளும் தான். அன்று தான் எடுக்க மறந்த ஃபைலை எடுக்க வீட்டுக்கு வந்தவன், காரிடாரில் ஜன்னல் வழியே கண்ட காட்சியில் வந்த துவேஷம்தான் இது. அவன் பார்த்தது, இரவு போல் அடர்த்தியாய் திரைச்சீலையால் மூடிக்கிடந்த பெட்ரூமில் மது ஒரு கறுப்பனோடு கட்டித் தழுவிக் கிடந்த காட்சிதான். திரைச்சீலை ஓரமாய் ஒதுங்கியிருந்த இடைவெளியில் சில‌ நொடிக‌ளே அவ‌ன் பார்த்தாலும் அவ‌னை உலுக்கி எடுத்து விட்ட‌து.



உட‌னே அவளைக் கொன்று போட‌த் தோன்றிய‌து. அந்தக் கறுப்பனை ஒரு விதத்தில் குறை சொல்ல முடியாது. அவனவன் ஃப்ரியாய் கிடைத்தால் பினாயிலைக் கூட குடிக்கிற காலத்தில் தளதள தக்காளியாய் மது மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா எவன் சும்மா இருப்பான். இவளுக்கு எங்கே போச்சு புத்தி. அவளைக் கொன்று போடத்தான் வேண்டும். ஆனால் தான் கொலை கேஸில் மாட்டி விட்டால், பாதியில் வ‌ந்த‌வ‌ளுக்காக‌ த‌ன் எதிர்கால‌ம் சிறையிலா?, அத‌ற்காக‌ அவ‌ளை அப்ப‌டியே விட்டு விடுவ‌தா? வேண்டாம், சாவுதான் அவ‌ளுக்கு ச‌ரியான முடிவு. ஆனால் தான் இதில் ச‌ம்ப‌ந்த‌ப் ப‌ட்டுவிட‌க் கூடாது, சுவ‌டே தெரியாம‌ல் காரிய‌ம் செய்ய‌ வேண்டும். நிமிட‌ நேர‌த்திற்குள் அவ‌ன் மூளை கிரிமின‌லாக‌ வேலை செய்த‌து. உட‌னே ஆபிஸ் திரும்பினான். திரும்பும் வ‌ழி முழுதும் அவளை எப்படிக் கொல்லலாம் என்றே சிந்தனை போனது.

வ‌ரும் வ‌ழியில் அடுக்கு மாடிக் க‌ட்டிட‌ம் க‌ட்டிக் கொண்டிருந்தார்க‌ள். சுனில் ம‌ன‌தில் ஒரு மின்னல் வெட்டிய‌து. மெல்ல‌ அந்த‌ க‌ட்டிட‌ம் ‌முழுக்க‌ சுற்றிப் பார்த்தான். கைதேர்ந்த கொலைகார‌னாய் ம‌ன‌ம் வேலை செய்த‌து.‌ ஆபிஸில் வேலையில் ம‌ன‌ம் செல்ல‌வில்லை. பேச்சில‌ராக சுற்றித் திரிந்த கால‌த்தில் விளையாட்டாய் ப‌ழ‌கிய துப்பாக்கி நினைவுக்கு வ‌ந்த‌து. கல்லூரி நாட்களில் செய்த சில எலெக்ட்ரானிக் சமாசாரங்களுடனும் சில புல்ல‌ட்களுடன் ப்ளான் ரெடி. சாய‌ந்திர‌ம் 5 ம‌ணிக்கே வீட்டிற்குக் கிள‌ம்பி விட்டான். முத‌லில் அந்த அடுக்கு மாடிக்க‌ட்டிட‌ம் இரண்டாவ‌து மாடி ஏறினான். அங்கிருந்து பார்த்தால், அவ‌ன் வீட்டு பெட்ரூம் தெரிந்த‌து. லாவ‌க‌மாய் ஒரு டைம‌ருடன், மறக்காமல் சைலன்சருடன், காலை 6 மணிக்கு ஆட்டோமாடிக்காக வேலை செய்வது போல் செட் செய்தான்.‌ க‌ட்டிட‌ம் க‌ட்டுகிறார்க‌ள். சுவ‌ர் வேலை ந‌ட‌க்கிற‌து. நாளைப் பொழுது விடிந்த‌தும் சுவ‌ர் வைத்து விடுவார்க‌ள்.

ராத்திரி அவள் சன்னலோரம் படுத்திருப்பாள். சரியாய் காலை 6 மணிக்கு துப்பாக்கி வெடிக்கும். அவள் மெளனமாக செத்துப் போவாள். சைலன்சர் பொருத்தியிருப்பதால் சத்தமே கேட்காது. உடனே துப்பாக்கியை அகற்றி விடவேண்டும். 8 மணிக்கெல்லாம் சுவர் எழுப்பத் தொடங்கி விடுவார்கள். எப்படியும் இவள் செத்த விவரம் தெரிய குறைந்தது 12 மணி நேரம் ஆகும். அதற்குள் எழுப்பப்படும் சுவர் துப்பாக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மறைத்து விடும். போலீஸ் வ‌ந்து பார்த்தால் சின்ன‌ க்ளூ கூட‌ கிடைக்காது. தானும் இந்த‌ 12 ம‌ணி நேர‌ம் வெளியில் இருப்ப‌தாய் எவிட‌ன்ஸ் க்ரியேட் செய்து விட்டால் போதும். ப்ளான் சூப்ப‌ர். ம‌ட‌ம‌டவென‌ காரிய‌ம் முடித்தான். ந‌ண்ப‌னுட‌ன் த‌ண்ணி பார்ட்டி என்று அவ‌ள் தோழிக்கு வேண்டுமென்றே போன் செய்து மறுநாள்தான் திரும்பப் போவதாக அவ‌ளுக்கு க‌ன்வே செய்து விடும்ப‌டி சொல்லிக் கூடுதல் எவிடன்ஸ் க்ரியேட் செய்து விட்டு நண்ப‌ன் வீட்டுக்குச் சென்று விட்டான்.

இர‌வு அவ‌னுக்கு நீள‌மான‌தாகக் க‌ழிந்த‌து. ந‌ன்றாக‌ குடித்திருந்த ந‌ண்ப‌ன் எழுந்திருக்க‌‌ நேர‌மாகும். காலை 5 ம‌ணிக்கே புற‌ப்ப‌ட்டான். அவ‌ள் சாவ‌தைப் பார்த்து ர‌சிக்க‌ வேண்டும். ச‌த்த‌மில்லாம‌ல் ரூம் திரும்ப‌ வேண்டும். போலீஸ் கேட்டால் அவ‌ன் ந‌ண்ப‌னும், அவ‌ள் தோழியும் தான் எவிடென்ஸ்.



ம‌ணி 5:56.

ச‌த்த‌மில்லாம‌ல் அவ‌ன் ப்ளாட்டை நெருங்கினான். 5:59:59 ம‌ணி வ‌ரை குண்டு பாயாது. சாகும் முன் கடைசியாக அவ‌ளை ஒரு முறையாவ‌து பார்த்து விட‌ வேண்டும் என்று தோன்றிய‌து. 5:59:59 க்கு முன் குண்டுக்கு வழி விட்டு ந‌க‌ர்ந்து விட‌ வேண்டும். அவ‌ள் செத்த‌தும் ம‌ற‌க்காம‌ல் அந்த‌ துப்பாக்கியையும் காலி செய்து விட‌ வேண்டும். அக்கம் பக்கம் பார்த்தான்.

ம‌ணி 5:58:45

மெல்ல‌ ‌காரிடார் தாண்டி ச‌ன்ன‌லை நெருங்கினான். திரைச்சீலை அகன்று முழுக்க திறந்திருந்தது. அந்த விடிகாலையிலும் முன்தின‌ம் பார்த்த‌து போல் அவ‌ள் அந்த‌ க‌ருப்ப‌னுட‌ன்‌ க‌ட்டிப் பிடித்துப் ப‌டுத்திருந்தாள்.

ம‌ணி 5:59:15

அடிப்பாவி, ச‌ண்டாளி... இன்னிக்குமா?

அவ‌னுக்கு ஏதோ வித்தியாச‌மாய் ப‌ட்ட‌து. இவ‌ர்க‌ள் ஏன் நேற்று பார்த்த‌ அதே போஸில் ப‌டுத்திருக்கிறார்க‌ள். அதுவும் இம்மிகூட‌ ஆடாம‌ல் அசையாம‌ல். ஒரு நிமிட‌ம் ம‌ன‌ம் குழ‌ம்பிய‌து. அதே நேர‌ம் ஹாலில் யாரோ இருப்ப‌து போல் தோன்ற‌ அங்கே பார்த்தான். ம‌து எதையோ க்ளீன் செய்து கொண்டிருந்தாள். அப்போ இது யார்? மீண்டும் ப‌டுக்கையை பார்த்தான். மெல்ல‌ விடிந்து கொண்டிருந்த‌ நேர‌த்தில், மெல்ல ப‌ர‌விக் கொண்டிருந்த‌ வெளிச்ச‌த்தில் அது தெரிந்த‌து. அது வண்ணங்களால் வரைந்தெடுக்கப்பட்ட ஒரு மெத்தை விரிப்பு. ம‌து 3டி ஓவிய‌ங்க‌ள் வ‌ரைவ‌தில் கில்லாடி என்ப‌து நினைவுக்கு வ‌ந்த‌து. வெளிச்ச‌ம் ப‌ர‌வ‌ ப‌ர‌வ‌, அந்த ஓவிய‌ம் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாய் புரிந்துகொண்டிருந்த‌து.‌ இருவ‌ர், அரை நிர்வாண‌மாய், ஒன்று ம‌து, ம‌ற்றொன்று, க‌ருப்ப‌ன‌ல்ல‌. வெளிச்ச‌த்தில் அது த‌ன்னைப்போல‌வே இருந்த‌து. இருளில் க‌ருப்பாய் தெரிந்திருக்கிற‌து. 3டி ஓவியம் பார்ப்பதற்கு அச்சு அசலாக இருந்தது. விரிப்பின் வ‌ல‌து ஓர‌ம் ப‌ளிச்சிட்ட‌து அந்த‌ வாச‌க‌ம் "ஹாப்பி ப‌ர்த்டே சுனில்" சுனிலின் மூளை நினைவ‌டுக்குக‌ளில் அவ‌ன் பிற‌ந்த‌ நாளை தேடிக் கொண்டிருந்த‌ நேர‌த்தில்....

ம‌ணி 6:00...

ப்ள‌ப்...

சுனில் சாய்ந்து விழுந்து கொண்டிருந்தான், ம‌ண்டையில் குண்டு துளைத்த ஓட்டை வ‌ழியே ர‌த்த‌ம் குபுகுபுவென‌ வ‌ந்து கொண்டிருந்த‌து...‌

இது கொலையா? தற்கொலையா? என்று கென்ய நாட்டுக் காவல்துறை விசாரணையைத் துவக்கி விட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p35.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License