இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அவள் கதையை முடித்து விட்டால்...!

ராம்ப்ரசாத்

பெட்ரூமில் தொங்கிக் கொண்டிருந்த சீலிங் ஃபேனை தாங்கிப் பிடிக்கும் ஸ்க்ரூக்களை மிகவும் கவனமாக ஸ்க்ரூ ட்ரைவரால் திருகி லூசாக்கிக் கொண்டிருந்தான் வைத்தி என்கிற வைத்தியனாதன். வைத்தி அந்த வீட்டு ஓனர் சாந்தினியின் மாமா. சாந்தினியின் கணவன் ராகவுடன் பிஸினஸ் செய்கிறான். சாந்தினியின் அப்பாவின் உயில்ப‌டி சாந்தினி தான் 50 கோடி ரூபாய் சொத்துக்கு அதிப‌தி. இந்த‌ வீடும் அந்த‌ சொத்தில் அட‌க்க‌ம்.

வீட்டில் யாரும் இல்லை. யாரும் வ‌ருவ‌த‌ற்குள் காரிய‌த்தை முடிக்க‌ வேண்டும். இதோ, இந்த‌ ஸ்க்ரூவைத் தள‌ர்த்தி, ஆன் செய்த‌ 10 நிமிட‌ங்களுக்குள் விழுந்து விடுமாறு செட் செய்துவிட‌ வேண்டும். ம‌ணி இப்போது 1.30 ஆகிறது. மதியம் 2 ம‌ணிக்குள் ஷாப்பிங் சென்ற சாந்தினி வ‌ந்து விடுவாள். மதியமானால் சாப்பிட்ட‌தும் ஒரு குட்டித் தூக்க‌ம் போடுவ‌து அவ‌ள் வ‌ழ‌க்க‌ம். வ‌ந்த‌தும் சாப்பிட்டு விட்டு ஃபேன் ஆன் செய்து ப‌டுத்து விடுவாள்.

ஸ்க்ரூ லூசாகிவிட்ட‌ ஃபேன், அடுத்த‌ 10 நொடிக‌ளுக்குள் சாந்தினியின் மேல் விழும். அதிக‌ ப‌ளுவான கண்ணாடி விளக்குகள் பதித்த டுயல் ஃபேன் விழுந்த‌தும் கூர்மையான கண்ணாடிகளால் அவள் உடல் கிழிக்கப்பட்டு இற‌ந்து விடுவாள். போன வாரம் தான் சரி செய்யப்பட்ட ஃபேன் என்பது எல்லோருக்கும் தெரியும். சாந்தினி பெட்ரூமில், அவள் இற‌ந்தால், ப‌ல‌ன‌டைய‌ப் போவ‌து அவ‌ள் க‌ண‌வ‌ன் ராக‌வ். ஏனெனில் அவ‌ளின் 50 கோடி சொத்து. மேலும் அது சாந்தினியின் படுக்கையறை. அதில் சகல உரிமை உள்ளவன் ராகவ்தானே. அத‌னால் போலீஸின் முத‌ல் ச‌ந்தேக‌ம் ராக‌வ் மீதுதான் விழும். ராக‌வ்தான் கொலையாளி என்ப‌த‌ற்கு இவைக‌ளே கார‌ண‌ங்க‌ளாகி விடும். அவ‌ன் ஜெயிலுக்குச் சென்ற‌தும் கார்டிய‌ன் என்கிற‌ பெய‌ரில் சொத்தை அனுப‌விக்க‌லாம்.



எல்லாம் செய்தாகி விட்ட‌து. இனி அவ‌ள் வ‌ர‌ வேண்டிய‌து தான். ஃபேன் போட‌வேண்டிய‌து தான். சாக‌ வேண்டிய‌துதான். ஆட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேட்டை ஒநாயைப் போல் காத்திருந்தான் வைத்தி. சாந்தினியின் கார்ச் ச‌த்த‌ம் கேட்க‌வே, அவ‌ள் வ‌ரும் நேர‌ம், பேச்சுக் கொடுக்க‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லாத‌வாறு தூங்குவ‌து போல் பாசாங்கு செய்ய‌லானான்.

அவ‌ள் உள்ளே வ‌ரும் அர‌வ‌ம் கேட்ட‌து. தொட‌ர்ந்து பாத்ரூமில் த‌ண்ணீர் ச‌ல‌ச‌ல‌ப்பும், கிச்ச‌னில் பாத்திர‌ங்கள் உருளும் ச‌த்த‌மும் கேட்டன. அவள் முகம் கை கால் கழுவி விட்டு சாப்பிடுகிறாள். அவ‌ன் எதிர்பார்த்தப‌டியே எல்லாம் ந‌ட‌ப்ப‌தாய் அவ‌னுக்கு உண‌ர்த்தின‌.

சிறிது நேர‌ம் க‌ழித்து, அவ‌ள் பெட்ரூம் க‌த‌வுக‌ள் சாத்த‌ப்ப‌டும் ஓசை கேட்ட‌து. வைத்தியை இன‌ம் புரியாத‌ ஒரு உண‌ர்வு தொற்றிக் கொண்ட‌து. என்ன நடக்குமோ என்கிற ஆர்வ‌மா, ஒரு உயிரை சாக‌டிக்க‌ப் போகிற‌ ப‌த‌ட்ட‌மா தெரிய‌வில்லை. காத்திருந்தான். திடீரென்று டெலிபோன் ம‌ணி அடிக்கும் ச‌த்த‌ம் கேட்ட‌து.

அய்யோ, இந்த‌ நேர‌ம் பார்த்தா டெலிபோன் அடிக்க‌ணும். ச்சே..

டெலிபோன் அழைப்பின் ம‌றுமுனையில், ராக‌வ் இட‌து கையில் இருந்த‌ மொபைல் ஃபோனால் வீட்டு லாண்ட் லைனை அழைத்த‌ப‌டி, வ‌ல‌து கையில் இன்னொரு ஃபோனால் ச்ந்த்ருவுக்கு க‌ட்ட‌ளையிட்டுக் கொண்டிருந்தான். ச‌ந்த்ரு, த‌ன் காதுக‌ளில் மாட்டியிருந்த‌ வ‌ய‌ர்ல‌ஸ் சாத‌ன‌த்தில் கேட்டுக் கொண்டே குழல் துப்பாக்கியால் மறைவாக நின்றபடி சாந்தினி வீட்டு டெலிஃபோன் ஸ்டாண்டை குறிவைத்துக் காத்திருந்தான்.

'ச‌ந்த்ரு, க‌ன்ஃப‌ர்ம்ட். அவ‌ சிவ‌ப்பு க‌ல‌ர்ல‌ சுடிதார் போட்ருப்பா. வீட்ல இருக்குற ஒரே பொம்பளை அவதான். கால் வந்தா அவதான் எடுப்பா. டெலிஃபோன‌ எடுத்த‌தும் போட்ரு'.



ரிசீவ‌ரை ம‌றுமுனையில் அவ‌ள் எடுக்கக்‌ காத்துக் கொண்டே ச‌ந்த்ருவையும் காத்திருப்பில் வைத்திருந்தான். வீட்டில் இருப்ப‌து சாந்தினியும் அவ‌ள் மாமாவும். இன்னொருத்த‌ர் வீட்டில் விருந்தாளியாய் த‌ங்கியிருப்ப‌தால், சாந்தினி இருக்க‌, அவ‌ர் ஃபோன் எடுக்க‌ மாட்டார். சாந்தினி தான் எடுப்பாள். சாந்தினியின் மாமா துப்பாக்கி சுடுத‌லில் கைதேர்ந்த‌வ‌ர் என்ப‌து எல்லோருக்கும் தெரியும். அவ‌ர் கைவ‌ச‌ம் வைத்திருந்த தோட்டாக்க‌ளைத்தான் ச‌ந்த்ரு துப்பாக்கியில் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப் போகிறான். ஃபாரென்ஸிக்கில் தோட்டாவிற்க்கான துப்பாக்கி வைத்தியினுடையது என்பது கண்டுபிடிக்கப்படும். சாந்தினி கொலையானால் நிச்ச‌ய‌ம் மாட்ட‌ப் போவ‌து அவ‌ள் மாமாதான். அத‌ற்குப் பிற‌கு சொத்து முழுவ‌தும் த‌ன‌க்குத்தான் என்றெண்ணிய‌ப‌டியே ப‌த‌ட்ட‌மாய் காத்திருந்தான் ராக‌வ்.

எட்டு முறை அலறிவிட்டு அமைதியானது ஃபோன். "இவள் எப்போதுமே இப்படித்தான். ஃபோன் அடித்தால் உடனே எடுக்கமாட்டாள்" என்று கருவியபடியே மீண்டும் தன் வீட்டு லாண்ட்லைனை அழைத்தான் ராகவ்.

ரிஸீவ‌ர் எடுக்க‌ப்ப‌ட்ட‌து. உட‌னே ச‌ன்ன‌மாய் ச‌ந்த்ருவுக்கு சிக்ன‌ல் கொடுத்தான். ஃபேன்சிக்காய் பொறுத்தப்பட்ட வண்ணக் கண்ணாடி ஜன்னல் வழியே சிவப்பு கலர் துணியைக் கிழித்து ஸைல‌ன்ச‌ர் பொறுத்த‌ப்ப‌ட்ட‌ துப்பாக்கி அமைதியாய் த‌ன் வேலையைச் செய்த‌து. பேச‌ப்ப‌ட்ட‌ மீதிப்ப‌ண‌த்தை வாங்கிக்கொண்டு த‌லைம‌றைவானான் ச‌ந்த்ரு.

தான் அனுபவிக்கப் போகும் ராஜ வாழ்க்கைக்கு கடைசி முதலீடாய், மனைவி சாவுக்கு புரண்டு புரண்டு அழுது நடிக்க ஆயத்தமானவாறே அவ‌னை அனுப்பிவிட்டு த‌ன் வீடு நோக்கி ந‌ட‌ந்தான் ராக‌வ். வீட்டை நெருங்க‌ நெருங்க‌ ப‌த‌ட்ட‌ம் அதிக‌மான‌து. வீட்டு புல்வெளியைத் தாண்டி ம‌தில் சுவ‌ரோர‌ம் நின்று ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் கதைக்கும் பெண்ணைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்ட‌து ராக‌விற்கு. கார‌ணம், அந்த‌ பெண் சாந்தினி போல‌வே இருந்ததுதான். கிட்ட‌ப்போக‌ போக‌ ராக‌விற்கு வ‌யிற்றில் புளியைக் க‌ரைத்த‌து போலிருந்த‌து. அந்த‌ பெண் சாந்தினியேதான்.

இவ‌ள் எப்ப‌டி உயிருட‌ன். போனில் சுட்டுவிட்ட‌தாக‌ சொன்னானே ச‌ந்த்ரு. பொய் சொல்லி விட்டானா? அட‌ப்பாவி, அவ‌ள் செத்த‌தை உறுதிப்ப‌டுத்தாம‌ல் அவ்வ‌ள‌வு பெரிய‌ தொகை கொடுத்து விட்டோமே. அத‌ற்கு சாந்தினி க‌ண‌க்கு கேட்டால் என்ன‌ சொல்வ‌து என்று ப‌ல‌வாறு யோசித்த‌ப‌டியே வீட்டினுள் நுழைந்தான். வீடே அமைதியாயிருந்த‌து. வெய்யிலில் சென்று வ‌ந்த‌து புழுக்க‌மாயிருந்த‌து. சந்த்ரு ஏமாற்றியது கோபம் வந்தது. வெறுப்பாய் ஃபேன் ஸ்விட்ச் த‌ட்டிவிட்டு சோபாவில் அம‌ர்ந்தான்.



ச்சே, ஏமாற்றி விட்டானே. அவ‌னை என்ன‌ செய்ய‌லாம்? அய்யோ, அவ‌னை இப்போது எங்கு போய்ப் பிடிப்ப‌து? இவ‌னை மாதிரி நாடோடிக‌ளை எப்ப‌டிப்பிடிப்ப‌து?

விய‌ர்வை வ‌ழிவ‌து நிற்க‌வில்லை. நெற்றிப் புருவம் சுருங்க‌ அப்போதுதான் க‌வ‌னித்தான். ஃபேன் ஓட‌வில்லை. க‌ர‌ண்ட் இல்லை. ஏதோ தோன்றி எழுந்து சென்று டெலிஃபோன் ஸ்டாண்டைப் பார்த்த‌வ‌ன் உறைந்தான். அங்கு வைத்தி ர‌த்த‌ம் ப‌டிந்த‌ சிவ‌ப்பு ஜிப்பாவில் ம‌ல்லாந்து இற‌ந்து கிட‌ந்தான். தான் முத‌ல் த‌ட‌வை அழைத்த போது, கரண்ட் போயிருக்க வேண்டும். காற்றோட்டத்திற்காக சாந்தினி வெளியில் வந்திருக்க வேண்டும். சாந்தினிக்கு ப‌திலாக‌ வைத்தி டெலிஃபோனை எடுத்திருக்க‌ வேண்டும். ஃபேன்சி வ‌ண்ண‌க் க‌ண்ணாடி வ‌ழியே, ஜிப்பாவில் வைத்தியை சாந்தினி என்று நினைத்து ச‌ந்த்ரு சுட்டிருக்க‌ வேண்டும். ராக‌விற்கு புரிந்து போன‌து. நடந்ததை அவன் மனம் ஜீரணிக்க சிறிது நேரம் பிடித்தது. அதிர்ச்சி அவ‌னை ஆசுவாச‌ம் கொள்ள‌ பின்னோக்கி த‌ள்ளிய‌து.

மெல்ல‌ மெல்ல‌ அவ‌ன் விய‌ர்வை அட‌ங்குவ‌து போலிருந்த நொடிகளில் க்ள‌க் என்ற‌ ச‌த்த‌த்துட‌ன் ஃபேன் பார‌ம் தாளாம‌ல் ஸ்க்ரு நெகிழ்ந்த‌து. பின்னோக்கி உந்த, தன்னையும் அறியாமல் பெட்ரூமினுள் வந்த அவன் மீது விழுந்த‌து ஃபேன். ‌ராக‌வ் ர‌த்த‌ வெள்ள‌த்தில் சிறிது நேர‌ம் துடித்துப்பின் மெல்ல‌ அட‌ங்கிப் போனான்.

கரண்ட் வந்து 10 நொடிகள் தாண்டியிருந்தது.

வாச‌லில் இது ஏதும் அறியாம‌ல் சாந்தினி, ப‌க்க‌த்து வீட்டு மாமியிட‌ம் க‌தைத்துக் கொண்டிருந்தாள்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p37.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License