இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

காலாழி பீலி

முனைவர் பி. வித்யா

இன்று - 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை. இந்த நாளை மூன்று மாதங்களாக எண்ணிக் கொண்டே இருந்தாள் மீனா. நாட்காட்டியில் குறித்து வைத்த இந்த நாள் ஒரு வகையில் தனக்கு மன நிம்மதியைத் தரும் நாள் என்று அவளுக்குத் தெரியும்.

அலுவலகத்தில் மாலை 5.30 மணிக்கு அலுவலக வேலை முடித்து, அங்கேயே முகத்தையும் கழுவி விட்டு தஞ்சாவூர் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றாள். தேனி போக இரவு ஆகிவிடும் என்றாலும் அவளுக்காகக் காத்திருக்கும் அந்த ஜீவனை நினைத்துத்தான் இவ்வளவு மகிழ்வும் ஓட்டமும்,

இன்றைக்காக போன மாதமே என்ன வாங்க வேண்டும் என்று யோசிக்கத் தொடங்கி, போன வாரம் கார் மனிதனாகவும், மனிதன் காராகவும் மாறும் பொம்மை ஒன்றினை வாங்கினாள். அதனுடன் அவனுக்குப் பிடித்த இனிப்புகளை நேற்றே வாங்கிவிட்டாள். அப்புறம் தழையத் தழைய ஒரு நீண்ட ஜிப்பாவும் பேண்ட்டும் அவன் நிறத்துக்கு ஏற்றார் போல வாங்கியாயிற்று. அப்புறம் மற்றவர்களுக்கு மாமூலாய் வாங்குவதைப் போல் வாங்கிக் கொண்டாள்.

இதையெல்லாம் பையில் எடுத்துக் கொண்டு தன் சொந்த ஊருக்குச் செல்கிறாள் பல மாதங்களுக்குப் பிறகு. அதுவும் அவன் பிறந்த நாளுக்கு அவனே போனில் விடாமல் வற்புறுத்தியதால் மட்டும் தான். இப்பொழுது நேரத்தை வீணாக்காமல் இரண்டு நாட்களையாவது முழுமையாக அவனுடன் செலவிட வேண்டும் என்ற எண்ணத்தில் பேருந்தில் ஒரு குவளைத் தேநீரை வாங்கிக் கொண்டு ஓட்டுநரின் பின் இருக்கையில் பைகளை வைத்துவிட்டு கொஞ்சம் ஆசுவாசமாய் இரண்டு மடக்குச் சுவைத்துக் குடித்தாள்.

“அத்த …. எப்ப வர…. அத்த எப்ப வர…” என்று போனில் போன நொடி வரை கேட்டுக் கொண்டிருந்த மிதுனின் கண்கள் தன்னை பார்த்ததும் மினுங்குவதில் அப்படியொரு மகிழ்ச்சி. அப்பிம்பம் மனதில் அடிக்கடி வந்து போனது. ஒரு கையில் தேநீர் குவளையைப் பிடித்தபடி சுவைத்தபடி மறுகையில் போனில் அவன் மழழை முகத்தையும் சிரிப்பையும் பார்த்தபடி மகிழ்ந்திருந்தாள். உலகத்தைப் புரிந்து கொள்ளாதவரை இந்த வாழ்க்கையின் சிக்கல்களைச் சுமக்காத பிள்ளை வயது எவ்வளவு ஆனந்தமானது என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.

கொஞ்ச நேரத்தில் ஓட்டுநர் அவர் இருக்கையில் வந்து அமரவும், குவளையை படக்கென்று பேருந்தில் இருந்து இறங்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு ஏறினாள்.

அவளது எல்லாப் பயணங்களும் இவ்வளவு ஆவலோடும் மகிழ்ச்சியோடும் அமைந்ததில்லை.


வீட்டில் முதல் பெண் மீனா. பிறகு இரண்டு தங்கைகள், ஒரு தம்பி ஆட்கள் எண்ணிக்கையில் பார்த்தால் மிகப்பெரிய குடும்பம். வீடு ஒன்றுதான் மிகப்பெரிய சொத்தாக இருந்தது. ஆனாலும், அனைவரும் தூங்கி எழும் அளவிற்குக் கூட அது பெரிய வீடு இல்லை. மீனாவின் அப்பா கூலி வேலை போய் வந்த சில நேரம் நல்ல முறையிலும் சில நேரம் வேட்டி தன் இருப்பை மறந்து கீழே கிடக்கும்படியும் படுத்தோ விழுந்தோ கிடப்பது வீட்டின் வெளியே கிடக்கும் கயத்துக் கட்டில்தான்.

தம்பி எப்போதும் திண்ணையிலோ, அம்மாவின் அருகிலோ படுத்திருப்பான். அம்மா கதவின் நிலைப்படியில் தலை வைத்து உள்ளே கால் நீட்டிப் படுத்திருக்க, தடுப்பில்லாத அந்த வீட்டில் காலையில் சமைத்தப் பாத்திரங்களையெல்லாம் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து விட்டு இரண்டு பெண் பிள்ளைகளும், அவர்களின் கால் மாட்டிலும், அம்மாவின் காலுக்குக் கீழும் மீனா படுத்திருப்பாள். அப்படிப்பட்ட வீடு.

மீனாவின் தம்பி ஏழு, எட்டு வயது வரை ஒன்னுக்குப் போய்விட்டால் கால் மாட்டில் படுத்திருக்கும் மீனாவின் முதுகெல்லாம் நனைந்து விருவிருப்பாய் இருக்கும் போதெல்லாம் தான் போட்டிருந்த துணியைக் கழற்றி அந்த இடத்தைத் துடைத்துவிட்டு, தன் உடம்பெல்லாம் துடைத்துவிட்டு, பழைய துணி எதையாவது மாற்றிக் கொண்டு அம்மாவின் பழைய பாதி கிழிந்த இனி போட்டுக் கொள்ள முடியாத பழைய புடவையைப் பொத்திக் கொண்டு அதிகாலை வரை புரண்டு கொண்டிருப்பாள்.

அவ்வளவு துன்பத்திலும் 12 ஆம் வகுப்பு வரை அவளின் அம்மா. ஊராரும் மற்றவரும் என்ன சொல்லியும், “பொம்பளப்புள்ள படிக்கணும். அதுதான் ஒனக்குச் சொத்து. அதுதான் ஒன்னயும் குடும்பத்தையும் காப்பாத்தும்” னு சொல்லிப் படிக்க வைத்தவள் கழுவாயி. அது தெரிந்துதான் மீனாவும் நன்கு படித்தாள்.

“பொம்பளப்புள்ளய கட்டிக் குடுக்காம வச்சு என்ன பண்ணப் போற மதினி” என்ற நாத்தனாரின் நயவஞ்சகப் பேச்சின் காரணம் கழுவாயியிக்கு புரியாமல் இல்லை.

இந்த வீட்டிலிருந்து தான் வரும் முன்னமே கல்யாணமாகிப் போன நாத்தனாரின் மூத்த மகன் ஆறாங்கிளாஸ் தாண்டல. அதுக்கு மேலும் வெட்டிப் பயக சகவாசம் வேற. அந்த வயசுல தேவை இல்லாத அத்தனக் கெட்ட பழக்கமும் அவனுக்கு உண்டு. யாராவது பெரியவங்கங்க முறையில தட்டிக் கேட்டா அறிவுரை சொன்னா அந்த வயசுலயே கெட்ட வார்ததைல திட்டுறது வேற செய்யறான். அப்படிப்பட்டவனுக்கு மீனாவ எப்படியாவது வளச்சுப் போட்றனும். அவனுக்கு வேற யாரு பொண்ணு தரப் போற. புது நெறத்துல இருக்குற அண்ணனோட பொண்ணே போதும்கிறது அவளோட பெருந்தன்மை.

இந்த விசயமெல்லாம் கழுவாயிக்கு தெரியாமலா இருக்கும். தெரிஞ்சுதான் பாதியில நின்னு போகாம இந்த வருசம் வரைக்கும் படிக்க வச்சா. ஆனாலும் அவ விடாம இன்னைக்குப் பொம்பளப்பிள்ளக போக்கே சரியில்லன்னும் கழுவாயிய சீண்டி விடறதும், தன் அண்ணன நல்லா ஏத்திவிடறதும் செஞ்சிகிட்டுத்தான் இருந்தா. இப்படி ஒவ்வொரு வருசமும் ஏதோ ஒன்ன சொல்றதும் அத மீறி படிக்க வைக்கிறதும் கழுவாயியின் பெரிய வேலைகள்ள ஒன்னா இருந்தது.

அவ 12 வது முடித்தும் முடிக்காமலும் வீட்டில் இரண்டு நாட்கள் விடுமுறையில் இருந்திருக்க மாட்டாள். அதற்குள்ளாக என்ன சாய்ச்சலோ பெரிய ஆசுபத்திரில சேந்த கழுவாயி முழுச் சொமையையும் மீனா மண்டையில எறக்கி வச்சிட்டு அவ கரை ஏறிட்டா.

அவ நெனப்புல இருந்த காசெல்லாம் சாராயத்துக்கு கொடுத்துட்டு மூனு வருசம் தாக்கிப்பிடிச்ச அப்பனும் போய்ச் சேரவும், “என்ன பண்ணப் போறியேன்னு” அக்கம் பக்கத்தார் ஆறுதல் மட்டும் சொல்லிட்டு போய்ட்டாங்க. அவங்களுக்கும் வேலையிருக்கும்ல. மீனாதான் மூத்த பொண்ணு, அவதான் அந்த குடும்பத்த கரையேத்த வேண்டிய பொறுப்புல இருந்தா.

பெத்தவங்க இருக்க வரைக்கும் ஏதோ வந்து போய்க் கொண்டிருந்த உறவுகள் இப்போ இல்லாமலெயே போனது. மூனு பேரும் விவரம் தெரியாத பிள்ளைக என்ன செய்ய?சில நல்லவங்க உதவியில் அரசாங்க விடுதிகள்ள தங்கிப் படிக்க வச்சா. சின்ன சின்ன செலவுகளுக்குக் கூட அவ கூலி வேலைக்குப் போறது பத்தல. மகளிர் குழுக்களில் இணைந்து கொஞ்சம் கொஞ்சம் வேலைகள் செய்து காசு பெறட்டி கூலி வேலை போன நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சின்னச்சின்ன வேலைகளும் செய்து மாதம் ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை போய் மூவரையும் பார்த்து விட்டு வருவாள். தனியாக இருப்பது பிரச்சனையாக இருந்தாலும், பக்கத்து வீட்டு அக்கா அவள் வீட்டில் தூங்க இடம் இல்லாததால் அவளோடு தங்க ஒத்துக் கொண்டாள்.

யாரோ நல்லவர்களின் ஒத்தாசையில் தோடு, மூக்குத்தி, கொலுசு என்றும் கொஞ்சம் சேலைகள் மட்டும் கொடுத்துத் திருமணம். ஓரளவுக்கு மாப்பிள்ளைகள் சூழ்நிலை தெரிந்து நடந்து கொண்டதால், மீனாவும் அதற்கு மேலே பிரச்சனைகள் செய்யவில்லை. தம்பியையும் கடைசியாகப் படிக்க வைத்து பெண் பார்த்து, திருமணம் முடித்து அதே வீட்டில் குடி வைத்தாள்.

எத்தனைத் துன்பங்கள் வந்தபோதும் அந்த வீட்டை அடமானம் வைத்துக்கூட அவள் பணம் வாங்கவில்லை. வைராக்யமாய் கொடுக்கல், வாங்கல், குழுக்கள் என்றும், கூலி வேலைகள் என்றும் என்னவெல்லாமோ செய்து கூடவே அரசாங்கத் தேர்வுகளையும் எழுதினாள். அப்பா இருக்கும் போது கூலி வேலையோடு சேர்த்து டைப்ரைட்டிங் படித்தது, அவளுக்கு அரசாங்க வேலை கிடைக்க உதவியது. இப்போது சகோதர சகோதரிகளுக்கு அவள்தான் தாயும் தகப்பனும் எல்லாத் தேவைகளுக்கும் அவள்தான் போய் நின்றாள்.

இன்று எல்லாரையும் செட்டில் செய்து அவர்களின் பிள்ளைகளின் விழாக்களுக்கு தாத்தா பாட்டி பிறந்த வீடு எல்லாம் மீனாதான். அதன்பிறகு கொஞ்ச காலம் யாரையும் தொந்தரவு பண்ண வேண்டாமென்றும் பணச்செலவையும் தேவையையும் குறைக்கும் பொருட்டு ஏற்கனவே வேலை கிடைத்த ஊரிலேயே வேலைக்குச் செல்லும் பெண்கள் தங்கும் விடுதியில் ஊருக்குச் செல்லாத பெண்களில் ஒருவராய் நிரந்தரமாய்த் தங்கி விட்டாள். பல மாதங்களுக்குப் பிறகு மிதுனுக்காய் இந்தப் பயணம்.

பெருசா நம்பிக்கையெல்லாம் போய் இப்போ வேதனை மட்டும் நிரம்பி வழியும் மனமாகிப் போனது மீனாவுக்கு, “ஓடும்போதெல்லாம் கால்வலிக்காம ஓட்டம் நின்னதும் கால் வலிக்கற மாதிரி” பட்டதெல்லாம் வாழ்க்கையின் மீது வெறுப்பினை உண்டாக்கிவிட்டது.

வாழ்வெல்லாம் மற்றவர்களுக்காக என்று ஓடிவிட்டு இப்பொழுது சாய்ந்து கொள்ளக் கூட தோளின்றி மனசின் பாரங்களைக் குறைக்க வழியில்லாமல் ஒரு வார்த்தை மனசாரப் பேசக்கூட ஆளில்லாத ஓற்றையாளாய் தன்னற்தனியாக கிடக்கையில் யாருக்காக வாழ்கிறோம் என்கிற நினைப்பும் தன்னைத் தாங்கும் ஒரு துணையும் இன்றி தெய்வமே துணையாய் தங்கும் விடுதியின் அறைகளே வீடாய் மாறிப் போனதால் வியாழன் இரவே சுத்தம் செய்து அறை துடைத்து கும்பத்தில் தண்ணீர் பிடித்து அடுத்த கோவிலுக்கு 5.00 மணிக்கெல்லாம் பூஜை செய்வதும், கறி உணவு தவிர்த்து காய்கறிகளை மட்டும் உண்பதும், தனக்குப் பின்னால் சிறு பிள்ளைகளாக இருக்கும் விடுதியில் தங்கள் காதல் லீலைகளைப் பேசுவதையும், கைபேசியில் இரவு கூட அந்தரங்கக் கதைகள் பேசுவதையும் தினம் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடிந்தது அவளால், மனசில் தாளாத வேதனை மூண்டு இரவெல்லாம் கசக்க பகலெல்லாம் தாங்க முடியா மற்றொரு இரவை நோக்கி நகர வேதனைகள் தொடர்கையில் தன் தம்பி மகனிடம் இருந்து ஆசையாக ஒரு அழைப்பு.

இப்போ மிதுனுக்காக இந்தப் பயணம். தான் கொடுக்கும் விளையாட்டுப் பொருளைப் பார்த்ததும் அவன் கண்களில் மின்னும் மகிழ்ச்சி. அதில் விரியும் அவனின் கள்ளக்குழிச் சிரிப்பு. அத்தை என்று கட்டிப்பிடித்துக் கொள்ளும் அணுக்கம் எல்லாம் இப்போது மிதுனை விட மீனாவுக்குத்தான் தேவைப் பட்டது. அவன் கட்டிப் பிடிக்கும் போது கரைந்து விடும் எல்லாத் துன்பமும். பிறந்தநாள் கொண்டாடி அவள் கொண்டு வந்த உடை உடுத்தி அவன் நடக்கையில் எல்லாவற்றையும் புகைப்படமாகத் தனது கைபேசியில் சேமித்துக் கொண்டாள். நாளைய மனத் தனிமையின் மருந்து அதுதானே, பிரசர் கூடிவிட்டது இப்பொழுது ஆறு மாத காலமாய் அதற்கெனவும் மாத்திரை சாப்பிட்டு வருகிறாள் யாரிடமும் சொல்லவில்லை.

மிதுன் அவன் வயதுப் பிள்ளைகளுடன் சேர்ந்து கேக்வெட்டி அனைவருக்கும் மிட்டாய்களும் கேக்கும் பகிர்ந்தபின் அத்தை கொடுத்த பொம்மை வாங்கி அனைவரிடமும் பெருமையாகச் சொல்லி யாரிடமும் கொடுக்க அடம்பிடித்தான். எல்லாரும் போனதன் பின்னே இரண்டு மூன்று செல்பிகளோடு தன் இதயக்கூட்டைப் பாதுகாத்துக் கொள்ள ஆயத்தமானாள். பாய் வெளியில் விரித்தாள்.

ஒரு அறை கொண்ட வீடு மற்றொரு அறை சமையலறை தம்பியும் தம்பி மனைவியும் தூங்கட்டும் என்று தான் என்றாவது வந்தால் பயன்படுமே என்று போன ஆறு மாதத்திற்கு முன் வாங்கிப் போட்ட பாய் பரணில் கிடந்ததை இப்போது எடுத்து கொஞ்ச இடத்தில் விரித்தாள்.

வீட்டில் மற்றொரு பாயுமுண்டு. அது தம்பியும் தம்பி மனைவியும் பால் சொம்பு கொண்டு வந்து வாழ்க்கையைத் தொடங்கிய பாய் அன்றோடு சீருக்கு வந்த கட்டிலிலும் மெத்தையிலும் அவர்கள் தூங்குவதால் ஒதுக்கிப் போட்டிருந்தார்கள். அந்த பாயில் தூங்க வேண்டிய நிலை வந்தபோது சிணுங்கலும் கேட்பதைப்போல் இருந்ததால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படிச் சங்கடப் பட்டதை மற்றவரிடம் சொல்ல, அம்மாவின் ஞாபகமாக இருந்த சேலைகளை எடுத்து, பாதி ராத்திரியில் விரித்து பின் உறங்கிப் போனாள்.

அதுக்காகத்தான் இப்பொழுது பாய். என்னவெல்லாமோ மனதில் இப்பொழுது மேகமாய் நிற்பதை யாரிடம் சொல்ல, இப்பொழுதா பதின்ம வயது ஆகிறது? மற்றவரிடம் எப்படி இதனைச் சொல்ல? மனதெல்லாம் ஒருவிதமான கூச்சமும், அந்த மாதிரியான நினைப்பே தவறோ என்கிற மாதிரியான குற்ற உணர்வும் தயக்கமும் பதற்றமும் இன்னும் ஆண்களிடமும் மற்றவரிடமும் பேச முடியாமல் குனிந்த தலை நிமிராதவளாய் இப்போதெல்லாம் தெய்வ நாமங்களைச் சொல்லத் தொடங்கியாயிற்று.

பேசும் போதெல்லாம் வார்த்தைகள் சுருங்குவதையும் அதனாலே உறவுகள் சுருங்குவதையும் உணர்ந்தாலும் வேறு வழியில்லை மீனாவுக்கு. எப்படி உறங்கப் போகிறோம் தயங்கித் தயங்கி பாய் விரித்த போதுதான் மிதுன் அங்கு வந்தான்.

“நான் அத்தக்கூடத்தான் தூங்குவேன்” என்று மிதுன் அடம்பிடிக்கவும், “அக்கா பாத்துக்க அக்கா அவன் 12 மணி வரைக்கும் தூங்க மாட்டான். நீ நாளைக்கு ஊருக்குப் போணும் யோசிச்சுக்க” என்று தம்பி சொன்னபோது தன் தனிமை மறைய இந்த இளம் பிஞ்சின் மழலை போதுமென நினைக்கத் தோன்றியது. தயக்கம் மாறி, “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று வாரி அணைத்து முத்தமிட்டாள்.

மீனாவிடம் வந்ததும், “அத்த… அத்த… எனுக்கு… எனுக்கு… கத… கத” என்றான் மடியில் படுத்துக் கொண்டு, எப்பவும் இப்படித்தான் கதை சொல்லச் சொல்வான். எனக்குக் கதை தெரியாது என்றாலும் விட மாட்டான். வேறு வழியில்லாமல் மிதுனின் தலையைக் கோதிக் கொண்டே தனக்கென்றே எழுதப்பட்ட கதைகளை அவள் சொல்வதுண்டு. அப்படித்தான் இன்றும் நிகழ்ந்தது.

“சரி ராஜா கத சொல்லட்டுமா?” வேண்டாமென்று தலையாட்டினான்.

“தங்கம் அத்தைக்கு ராஜா கதை தான் தெரியும். நல்லா இருக்கும்” என்று சமாதானப் படுத்தியதும் தலையசைத்தான்.

“அத்த உனக்கு இன்னைக்கு காலாழி பீலி கத சொல்றேன்”

“சமத்தா இம் சொல்லிக் கேட்டாத்தான் அத்த சொல்வேன்” என்றதும் “சரித்த…” என்றதும்,

“ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாராம். அவருக்கு காட்டுக்குள்ளப் போய் வேட்டை ஆடுறதுன்னா அவ்வளவு புடிக்குமாம். அதனால தன் படையெல்லாம் விட்டுப்புட்டு தனியா வேட்டையாடுறதுலதான் அவருக்கு ருசியாம். அப்படித்தான் கரடி சிங்கம் புலின்னு மோசமா மிருகங்கள் வாழுற காட்டுக்குள்ள வந்தவரு எப்படியோ வழி மாறிட்டாரு. தண்ணி தாகம் வேற அவர கொடுமப்படுத்த வேட்டையாடுறத விட்டுட்டு தண்ணி கெடைக்கிற எடத்தத் தேட ஆரம்பிச்சாரு. அடங்காத தாகத்துல மனிசத் தடம் தேடி வந்தாராம். கேக்குறியா மிதுன்?”

நடுநடுவே அவனுக்குத் தூக்கம் வருகிறதா? என்பதன் அளவைப் பார்க்க கேள்வி கேட்டு வைத்தாள்.

சொல்லுத்த கேக்கறேன்.

அப்பறம் ராஜா என்ன செஞ்சாரு? என்று கேட்டதை உறுதி பண்ணிக் கொண்டு திரும்பவும் சொல்ல ஆரம்பித்தாள்.

“அப்படித் தேடி ஒரு கெணத்த கண்டுபிடிச்சாராம். உள்ள எறங்குணாத்தான் தண்ணி. தெளிவாத்தன் இருக்கு. மனுசங்க குடிக்கத் தகுந்ததுதான்னு. உள்ள எறங்கப் பாத்தவருக்கு வெளிச்சதுல தகதகன்னு மின்னுற ஒரு பொருள பாத்தாரு. தண்ணிய முதல்ல குடிச்சிட்டு அந்த பொருள படில இருந்து எடுத்து. கொஞ்சம் தண்ணில கழுவ இன்னும் மின்னுச்சாம். அது காலாழி பீலின்னு அவருக்குத் தெரிஞ்சது.” முடிக்கும் முன்னே மிதுனுக்குப் புரியாததால, “அப்படின்னா என்னா அத்த?” என்று மிதுன் கேக்கவும் இன்னும் உற்சாகமாய் கதை சொன்னாள் மீனா.

“அப்படின்னா அது காலுல போடுற மோதரமும் கொலுசும் சேர்ந்து பொம்பள புள்ளக போடுறது. அத்த காலுல கொலுசும் தடையும் போட்டுரக்கனுல்ல. அது ரெண்டையும் சேக்குற மாதிரி மயில் தோக விரிச்சா மாதிரி இருக்கறது. அத கையில எடுத்த ராஜாவுக்கு அத யாரு போட்டுருப்பான்னு மனசுல ஒரு கற்பன வரவும், அந்த பொண்ணு இங்க வந்து தண்ணி குடிச்சிருக்கான்னா இதுக்குப் பக்கத்துல இருக்கற ஏதோ ஒர கிராமத்துலதான்ன இருப்பான்னு மனசுல தோணவும், ஊரெல்லாம் அந்தப் பொண்ணத் தேடி தண்டோரா போடச் சொன்னாரு. எல்லா ஊருலயும் அந்தப் பொண்ண கண்டு பிடிக்க ராஜாவே அந்தக் காலாழி பீலிய போடச் சொல்லி பாத்தாரு. யாருக்கும் பொருத்தமா இல்லாததால, எல்லா ஊருலயும் ஒட்டுமொத்த எளம் வயசுப் பிள்ளகளையெல்லாம் நிக்க வச்சு பாக்கவும் அவருக்கு மனசுத் தாங்கல. பத்து ஊருக்கு மேல பாத்தாச்சு. கடைசி ஊருக்கும் வந்தாச்சு. அங்க எல்லாப் பேரையும் அந்த ஊரு மக்களெல்லாம் ராஜாவ வளச்சுப் போடுற ஆசையில எல்லாரையும் நிப்பாட்ட. உண்மையாவே அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரி வீட்டு வேல செஞ்சுக்கிட்டு இருந்தா அதப் போட்டுப் பார்த்தா யாருக்கும் சேராமப் போகவும், ராஜா வருத்தத்தோட போனாரு. ஒங்க வீட்டுல மூணு பொண்ணுதானன்னு கேட்கவும் இத்தன நாளா அதட்டி வச்சிருக்கற சின்னாத்தாக்காரியா வந்தவ ஆமான்னா சொல்லுவா?


அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரியோட சித்திதான் அது. அவ தான் பிள்ள ரெண்டையும் கூட்டிவந்து நிப்பாட்டினாலே மறந்தும் அவள கூட்டிட்டு வரல. அவ தன் புருசனோட மூத்த தாரத்து மக. அந்தம்மா சீக்குல செத்துப்போக, ரெண்டாவது கட்டிட்டு வந்த மனைவி கொடுமைப்படுத்துவதைக்கூட கண்டு கொள்ளாத அப்பா. அதனாலயே அவள் வீட்டின் வேலைக்காரியாக்கப்பட்டாள். அப்படி விறகு எடுக்க போன நேரத்தில்தான் மனதின் வெறுப்பினால் போன பாதை மாறிப் போகச் சென்ற இடத்தில் நீர் குடிக்கும்போதுதான் தான் அணிந்தது கீழே விழுந்ததைக்கூட கவனிக்காமல் அதற்கும் வீட்டில் அடிவாங்கினாள். அம்மாவின் நினைவுப்பரிசாக அவளிடம் இருந்தது அது ஒன்றுதான்.

அவளே அன்று முழுவதும் தன்னை நொந்து கொண்டாள். இன்று அவளைத் தேடித்தான் வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சித்தி வீடு போய் அவளை கோழி அடைக்கும் பஞ்சாரத்தில் மூடி வைத்தாள். காவலர்களும் வந்து வீடெல்லாம் சோதனையிட்டு திரும்பிச் சென்றனர். இளவரசன் வருத்தம் அடைந்தான். அவர்கள் வேதனையோடு கடக்கும்போது கூரையின் மேலிருந்த சேவல் ஒன்று மனிதக் குரலில் “கொக்கரக்கோ கோழி வீட்டுக்குள்ள ஒரு பொன்னிருக்கு கொக்கரக்கோ கோழி வீட்டுக்குள்ள ஒரு பொன்னிருக்கு” என்று திரும்பத் திரும்பக் கூவவும் காவலர்கள் கோழி வீடான பஞ்சாரங்களைத் திறந்து பார்த்தார்களாம்.

அங்கே மயங்கிய நிலையில் அந்த இளம்பெண் கிடைத்தாளாம். பிறகு இளவரசன் அவளை மயக்கம் நீக்கி, அவள் கால்களில் அந்த காலாழி பீலியை அணிய வைத்து அழகு பார்த்தானாம். காலாழி பீலியின் வழி இவளை நேசிக்கத் தொடங்கியவன். அவளைக் கண்டதும் இன்னும் பிடித்துப் போக திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்களாம்” என்று கதையைச் சொல்லி முடிக்கும்போது தூங்கினானா? முன்பா எனத் தெரியவில்லை.

மிதுன் எப்பவோ தூங்கியிருந்தான்.

தூங்காமல் இருந்தது மீனாவின் மனதுதான். எந்த இளவரசனும் 35 ஐத் தொட்டுவிட்ட ஒரு பெண்ணை குணத்துக்காகத் திருமணம் செய்வதெல்லாம் எந்த இளவரசன் கதையிலும் வருவதில்லை. தனக்கும் காலாழி பீலியைத் தேடிவரும் இளவரசனைப் போல யாராவது காதல் கொண்டு தேடிவந்தால் என்ன? என்ற நப்பாசை அந்த பாதி சாமம் கடந்த இந்த வேளையில் வந்த வேதனையோடு தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைத் தவிர வேறு யாரிடம் சொல்ல, அல்லது யாரிடம் மறைக்க ஒரு வெற்றுப் புன்னகை அந்த வேளையில் அவள் இதழில் பிறந்தது. அதனை, அந்த இருள் மட்டுமே அறிந்திருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p372.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License