இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

அன்புள்ள அப்பா...!

முனைவர் பி. வித்யா

எப்பொழுதும் போல்தான் அந்த நாள் தொடங்கியது மீனாவுக்கு .

காலையில் வேக வேகமாக எழுந்து தனது மகனையும் மகளையும் பள்ளிக்கு அனுப்பக் காலை வேளையின் உணவுகள் அவன் சிற்றுண்டி நேரத்தில் சாப்பிட வேண்டியவை மற்றும் மதியத்திற்கான உணவுகள் என்று எல்லாவிதமான உணவுகளையும் அதற்கான பாத்திரங்களில் சேர்த்து கணவரின் அலுவலகத்திற்கும் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டுத் தனக்கும் என்று எல்லாவற்றையும் முடித்து குழந்தைக்கு அவனுக்கான உடைகளை அணிவித்து வேகவேகமாக அவர்களது பள்ளியில் இறக்கிவிட்டு இன்னும் பத்து நொடிக்குள்ளாகச் சேர வேண்டிய தனது பள்ளிக்கு ஓடிக் கொண்டிருக்கும் சாதாரண பள்ளி ஆசிரியைதான் மீனா.

அவளின் அன்றாடம் இப்படித்தான் எப்பொழுதும் போல் துவங்கியது. தனது மெல்லிய சேலையை எடுத்து, தன் தலையில் வடிந்த வியர்வையை துடைத்துக் கொண்டாள். வேகவேகமாக தனது பள்ளிக்கு உள்ளே சென்று அன்றைக்கான பதிவேட்டில் கையொப்பமிட்டு விட்டு தனது வகுப்பறை நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். பள்ளியில் இதோடு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இன்றுதான் இப்படி ஒரு திருப்புமுனையை அன்றாட வாழ்க்கையில் இருந்து மீனா அனுபவிக்க வேண்டி வரும் என்று நினைத்திருக்க மாட்டாள் .

எல்லா நாள்களையும் போலத்தான் சாதாரணமாக அந்த நாளும் ஆரம்பித்தது. எப்பொழுதும் போல் தமிழ் வகுப்பு புதிதாக எதுவும் இல்லை கற்றுத்தர என்றாகிவிட்டது இன்றைய நிலை. மதிப்பெண்ணைத் தாண்டி கற்றுத் தந்தால் பல நேரங்களில் மாணவர்களுக்கும் ஏன் நிர்வாகத்திற்கும் கூட பிடிப்பதில்லை. மதிப்பெண் ஒன்று மட்டுமே குறியாகிப் போன நிலையில் அதுவும் தமிழ் பாடம் எல்லோருக்கும் இளப்பமாய் இருப்பது மீனாவைப் பொறுத்தவரை இவையெல்லாம் குற்றம் என்றே கருதுபவள். ஆனால் சுற்றியுள்ள நடைமுறை வேறாக உள்ளதே. இவ்வுலகம் இன்னும் அவளுக்குப் பழகவில்லை. மற்றவர் சொல்வது போல் வாழத் தெரியாத கொள்கைகளைத் தூக்கித் திரியும் ஆசிரியை அவள். பத்து ஆண்டுகளாகியும் மதிப்பெண் அடிப்படையிலான இந்த நடைமுறைகள் இன்னும் பழகவில்லை அவளுக்கு.

எப்படியேனும் மதிப்பெண்‌ மாணவர்கள் வாங்கினால் போதும் என்பதுதான் நோக்கம். இன்றைய நிலை அப்படித்தான் மாறிப்போய் இருக்கிறது. இன்றைய சூழல் அடிப்படை புரிதல் குழந்தைகளுக்கு எப்படி ஏற்படும் அதற்கான சூழல் என்ன அவர்களை இத்தகைய சூழல் எவ்வாறு மாற்றும் என்பதெல்லாம் அனைவருக்கும் என்றோ மறந்து போய்விட்டது.


எப்பொழுதும் தனது வகுப்பில் ஏதாவது ஒன்று புதிதாக மொழித்திறனைக் கற்றுக் கொள்ள மாணவர்களைத் தூண்டும் முயற்சி செய்து கொண்டிருப்பாள் மீனா. தினம் புதிதாக யோசித்து வருபவள் இன்று என்ன செய்யலாம்? என்று யோசனையின் ஊடாக 11 ஆம் வகுப்பைத் தேடி அவளது கால்கள் சென்றது.

இன்று கடிதம் எழுத வைக்கலாம் ஏதேனும் உனக்கு தேவையான நீ இன்று யோசிக்க கூடிய இழந்த அல்லது விரும்பிய ஏதாவது ஒருவருக்கு ஒரு கடிதம் எழுதும்படி சொல்லலாம் என்று நிதானித்து உள்ளே சென்றதும் எப்போதும் போல் அனைவரும் இருக்கிறார்களா? என்று பதிவேட்டில் குறித்து விட்டு இன்று சில பொதுத் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று பொதுத்தகவல்களோடு கடிதம் எப்படி எழுதலாம்? என்று ஒரு வரைமுறையையும் சொல்லிக் கொண்டிருந்தாள் மீனா.

எப்பொழுதும் போல் நிதானமாக அந்த வகுப்பு எங்கு ஆரம்பித்து எங்கு முடியும் எந்த நிமிடத்திற்கு உள்ளாக எவ்வளவு பேச வேண்டும் என்பது பழகிப் போய்விட்ட ஒன்றாக மாறிவிட்ட ஆசிரியை மீனா. காலை நேரத்தில்தான் இந்த நேர நிர்வாகம் அவளுக்கு கை வருவதில்லை அவள் பிள்ளைகளை கிளப்புதலும், கணவனை நேரத்திற்கு எல்லாவற்றையும் செய்ய வைத்தலும் அவளுடைய காலை நேர நிர்வாகத்தைப் பாதிப்பதால் இருக்கலாம்.

இங்கு ஓரளவு நல்ல காலத்தைப் பயன்படுத்தக் கற்றுக் கொண்ட மாணவர்கள்தான் பதினோராம் வகுப்பு மாணவர்கள். ஆசிரியையின் நடைமுறைகளைப் புரிந்து கொண்ட மாணவர்கள் என்பதால் எதற்கும் தயாராய் இருந்தார்கள். மீனா பொதுத்தகவல் முடித்து கடிதம் எழுதுங்களேன் என்று சொன்னதும் முதல் முயற்சியாக கடிதம் எழுதுங்கள் . “நான் ஏதாவது ஒரு பரிசினை உங்களுக்கு கொடுக்க நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஏதாவது ஒரு புத்தகம் தான் கண்டிப்பாக பரிசாக இருக்கும்” என்று சொல்லி எழுதச் சொன்னாள்.

தங்கங்களே யாராவது உங்களுக்குத் தோன்றிய நபருக்குக் கடிதத்தை எழுதுங்கள். உங்களுக்கு மிக விருப்பமான நபர் அல்லது பேச நினைக்கக்கூடிய நபர் அல்லது பேச முடியாமல் போய்விட்ட நபர் யாருக்காவது உங்களுடைய மன உணர்வுகளை கடிதம் எழுதுங்கள் என்று சொல்லிவிட்டு ஒரு அரை மணி நேரம் அவர்கள் காகிதத்தோடு போராடுகையில் பார்த்து கொண்டே நடந்து கொண்டிருந்தாள் மீனா.

சரி ஏற்கனவே கால் மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறாள். அரை மணி நேரத்திற்கு மேலாகப் பிள்ளைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 55 நிமிடங்களை நோக்கி அந்த வகுப்பறைக்குச் செல்கையில் சரி முடிக்கலாம் என்று சொல்லி எல்லோருடைய கடிதத்தையும் வகுப்பின் தலைவரை வாங்கச் சொல்லி தாள்களை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு தனது ஆசிரியர் அறைக்குச் சென்றாள் மீனா.

இப்பொழுது போல் தான் ஆசிரியராய் இருக்கும் இத்தனை வருடங்களாகவும் இனியும் இந்த மாதிரியான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறாள் செய்து கொண்டிருப்பாள் மீனா. எழுதுங்கள் என்று சொன்னதும் எப்பொழுதும் போல் ஒரே மாதிரியாகத்தான் மாணவர்கள் எழுதிக் கொண்டிருப்பதாக அவள் மனதுக்குள்ளே ஒரு சலிப்பு தட்டிவிட்டது.

இப்படி ஏனோ ஒரு புது முயற்சியில் ஒரு மாணவனின் முகம் மலர்ந்து விடாதா? என்றுதான் ஒவ்வொரு நாளும் புதுப்புது முயற்சிகளோடு போகிறாள். ஒரு வார்த்தையில் ஆரம்பித்து அந்த வார்த்தையைத் தொடர்ந்து சொல்லி முடிக்கும் இடத்தில் தொடங்கும் வார்த்தைகளைத் தமிழில் சொல்ல வைத்தல், கதைகள் சொல்ல வைத்தல் இப்படியாக ஒரு நாள் கவிதை எழுத முயற்சி, ஒருநாள் கட்டுரை எழுதும் முயற்சி, ஒரு நாள் பாடல் எழுதும் முயற்சி , ஒரு நாள் வேறு விதமாக என்று அத்தனை அடிப்படைகளும் எப்படியாவது தொட்டுத் தூக்கி மாணவர்களின் கையில் கொடுத்து விட வேண்டும் என்ற அரிய முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதாகத் தான் ஒரு ஐந்து ஆண்டுகள் அவளுக்குத் தோன்றிக் கொண்டிருந்தது .


எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாகத் அவளுக்கு தோன்றவில்லை. அது போக, பாடத்தைச் சொல்லித் தரவில்லை என்கிற கோபம் மற்ற ஆசிரியர்களிடம் இருப்பதையும், அவளை நோக்கி ஏதாவது மாணவன் மாணவியோ வந்தால் அவர்களின் பொறாமையும் கோபமும் அதிகமாவதலயும் அவள் கண்டுதான் இருக்கிறாள். இருந்தும் என்ன செய்வது மொழி என்றாலே அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு மிகச்சிறந்த கருவி என்பதை மாணவர்கள் ஒரு வரியிலாவது புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான மெனக்கெடல்தானே இவையெல்லாம் என்று ஒவ்வொரு முறையும் முயற்சித்தாள்.

இன்றும் அதே போலத்தான் பழக்கமான சலிப்பான வார்த்தைகளோடு மாணவர்கள் எழுதி இருப்பார்கள் என்று அந்த கடிதத்தை வீட்டில் போய் பார்த்துக் கொள்ளலாமே என்று ஒருபுறமாக வைத்திருந்தாள்.

சரி அன்றைய நாளும் முடிந்தது . பணி முடிந்து வந்து மிக அவசர அவசரமாக வந்ததும் வராததுமாக குளித்துவிட்டு வேலைக்கு ஏற்ற உடைக்கு மாறியதும், பிள்ளைகள் வரும் நேரமும் ஒன்றாக இருந்தது. ஒரு அடுப்பில் தேநீரை வைத்துவிட்டு இருவரையும் குளிக்கச் செய்துவிட்டு தேநீரையும் மாலை நேரத்திற்கான பதார்த்தங்கங்களையும் எல்லோருக்கும் கொடுத்து விட்டு, இருந்த அத்தனை உடைகளையும் துவைத்து ,எடுத்து காய வைத்து, பாத்திரங்களை விளக்கி , சமையலறை பாத்திரங்களை ஒதுக்கி வைத்து, இரவுக்கான டிபனை ரெடி செய்து எல்லாவற்றையும் முடித்து விட்டு அச்சோ என்று உட்கார ஒரு ஒன்பது முப்பதுக்கு மேல் ஆகிவிட்டது .

குழந்தைகள் இருவரும் உறங்கி விட்டனர். இன்னும் வீட்டுத் தலைவன் வரவில்லை. 10 மணிக்குத்தான் அவர் வருவார். அதற்குள்ளாக வாங்கி வைத்திருந்த இந்தக் கடிதங்களை ஒரு முறை பார்த்து விடலாம் அரை மணி நேரம்தான் எடுக்கும் பெரும்பாலும் வழக்கமான வார்த்தைகள்தான் இருக்கும். எதுவும் புதிதாக நம்மை பாதிக்காது என்றுதான் நினைத்திருந்தாள், அந்த கடிதத்தை பார்க்கும் வரை.

எடுத்து எடுத்து வாசித்து விட்டு சரி பரவாயில்லை ஓரளவுக்காவது தமிழில் தொடர்ந்து எழுத வருகிறது என்று நினைத்துக் கொண்டாள். எல்லாவற்றுக்கும் மாறாக இருந்தது “அன்புள்ள அப்பா” என்று எழுதப்பட்ட கடிதம் . இன்னும் சொல்லப் போனால் கண்களில் கண்ணீரை வர வைக்கும் கடிதமாக இருந்தது. இதோடு பத்து முறை படித்து விட்டாள்.

இவ்வாறு இருந்தது அந்தக் கடிதம்...

”அன்புள்ள அப்பா என்னை நீங்கள் இப்பொழுது மறந்து இருக்கலாம் ஆனால் என்னால் மறக்க இயலவில்லை. வேறு உலகத்தில் உறவுகளின் நினைவு வராதாமே? அப்பா நான் உங்க செல்லமான கௌரி எழுதுறேன். மேலே எப்படி இருக்கீங்க அப்பா ? எப்பவும் என் கூடவே இருந்தீங்க . எல்லா முயற்சியிலும் என் கூடவே இருந்தீங்க. பள்ளிக்கூடம் போயிட்டு வந்து முதல்ல பேசுற எல்லா வார்த்தையும் உங்ககிட்டதானப்பா. நான் ஒரு சின்ன கவிதை எழுதினாலும், ஒரு கட்டுரைப் போட்டிக்கு போனாலும், ஒரு பேச்சுப் போட்டிக்கு போனாலும் உங்ககிட்ட தானே சொல்லுவேன் . எல்லாத்தையும் மறந்துட்டீங்களா? எப்படிப்பா இருக்கீங்க? உங்களப் பாத்து எவ்வளவு நாளாச்சு? அப்பா உங்களுக்கு அவ்வளவு எங்களப் பிடிக்காதா? அப்பா எனக்கொரு சந்தேகம்? என்ன அண்ணன அம்மாவிட குடி மட்டும்தான் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா? அம்மா எவ்வளவு வேதனை பட்டாங்க. அவங்கள பத்தி உங்களுக்குக் கவலையே இல்லையா? உங்களுக்கு எவ்வளவு தெரிஞ்சது. உங்களுக்குச் சிலம்பம் தெரியும். வர்மம் தெரியும். நாட்டு வைத்தியம் தெரியும். உங்களப் பாக்க எத்தன பேர் தினமும் வருவாங்க. உங்கள மட்டுமே எத்தனை பேர் நம்மள மாதிரி காசில்லாதவர்கள் நம்பியிருந்தார்கள் அவர்கள் நிலம் என்னப்பா ?


என் தோழி உங்களுக்கும் தெரியும் கீழக்குடி சந்தியா. அவ இன்னைக்குக்கூட உங்கள கேட்டாப்பா. அவ கால் பெசகி பள்ளிக்கூடத்திலிருந்து நடக்க முடியாம வந்தப்போ நீங்க சரி பண்ணத நினச்சு நினச்சு எங்கிட்ட சந்தோசமாச் சொன்னா. அவ நினவுல ஒருநாள் தான் பா நீங்க இருப்பீங்க. ஆனா எங்களுக்கு ? எவ்வளவு தைரியமானவர்னு உங்கள நினைச்சிட்டு இருந்தேன் தெரியுமா? உங்களை நான் ரொம்ப தைரியமானவர் என்று நினைத்து இருந்தேன்பா. இப்பவும் நீங்க தான்பா எனக்கு ஹீரோ, அதையும் தாண்டி எல்லாமே... நானும் உங்கள மாதிரி எல்லாத்தயும் கத்துக்கணும்பா என கேட்டப்போ நீ பொம்பளப் புள்ள உனக்கு எதுவும் வேணாம்பா அண்ணன் இருக்கான் அவனுக்கு கத்துத் தரேன்னு சொன்னீங்க. நானும் சரி அப்பா அண்ணனுக்கு கற்று தருகிறார் அப்படின்னு அமைதியா இருந்துட்டு இருந்தேன். ஆனா நீங்க எங்க ரெண்டு பேருக்கும் எதையும் கத்துத்தராமலே போயிட்டீங்கப்பா.

எல்லாரும் ஸ்கூல் மீட்டிங்கு அவங்க அப்பாவ கூப்பிட்டு வர்ராங்க. ஆனா நான் மட்டும் யாரையும் கூட்டிட்டு வராம வாத்தியார் கிட்ட திட்டு வாங்கறேன்பா. அம்மாவால வர முடியல. அவங்க வந்தா எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இருக்காது. அதனால அம்மா வர மாட்டுறாங்க. எனக்கும் புரியுது பா. ஆனா ரொம்ப அழுகையா வருதுப்பா. உங்களுக்கு இவ்வளவு தெரிஞ்சும் எங்களோட மனசு மட்டும் தெரியாம போய்டுச்சு. என்ன பண்ண? நீங்க இல்லாம எங்க வாழ்க்கை தெச மாறிப் போகுது. அம்மாவால எல்லாரையும் சமாளிக்க முடியல. எங்களப் படிக்க வைக்க காசு. வாங்கியிருந்த கடன்னு எல்லாத்தையும் அம்மா சமாளிக்க முடியாமக் கஷ்டப்படறாங்க. நீங்க இருந்த வரைக்கும் அம்மா வேலைக்கு வெளில போல ஆனா இப்போ களை எடுக்க, பருப்பு போட , கரும்பு வெட்ட , நெல் களை எடுக்க அதெல்லாம் பத்தலைன்னு அம்மா இப்போ சித்தாள் வேலைக்குப் போறாங்கப்பா” என்று எழுதியிருந்த இடத்தில் அவள் அழுதிருக்க வேண்டும் பேனா மை கசிந்து அடுத்தடுத்த வரிகளில் கொஞ்சம் கொஞ்சம் அழுந்திருந்தது.

அப்பா இந்தக் கடிதம் உங்களுக்கு கெடைக்காதுன்னு எனக்குத் தெரியும். ஆனா இத யார்கிட்ட சொல்லன்னே தெரியலப்பா. அம்மா சித்தாள் வேலைக்கு மொதமொதல்ல போனதால கையெல்லாம் பொத்துப் போயிடுச்சுப்பா. வீட்டுல எங்க ரெண்டு பேருக்கும் சோறு போட்டுட்டு அவங்களால சோத்துல‌ கையே வைக்க முடில அவங்களால எங்களுக்கு தெரியக்கூடாதுன்னு வலியோடயே சாப்பிட்டாங்கப்பா. நீங்க வெறும் வயித்துல குடிக்க ஆரம்பிச்சீங்க. அம்மா கேட்டாலே சண்ட போட ஆரம்பிச்சிட்டீங்க. ஏன்பா இப்படி பண்ணீங்க. உங்களுக்கு இருந்த அறிவுக்கும் தெறமைக்கும் எங்கேயோ இருக்க வேண்டியவர்னு அத்தனை பேரும் சொல்வாங்க. ஆனா நீங்க அந்த அறிவயெல்லாம் பாட்டிலுக்கு கடன் குடுத்திட்டீங்க. கேட்டா என்னென்னமோ காரணம் சொல்வீங்க.

அப்பா இன்னும் மோசமான சூழ்நிலைல இருக்கோம்பா. அம்மா எங்கிட்ட சொல்லல ஆனா எனக்குத் தெரியும். அண்ணன் ஐடிஐ ல படிச்சு முடிப்பதற்குள்ள நீங்க எங்கள மறந்துட்டு பாட்டில் வாழ்க்கைய தேர்ந்தெடுத்து நாங்க அழுதாலும் கேக்காத தூரத்துக்கு போயிட்டீங்க. அண்ணன பரீட்ச எழுத வைக்கக் காசு கட்ட அம்மாவால முடியல. சொந்தக்காரவங்க இப்ப அம்மாவ கண்டுக்கிடறதுகூட‌ இல்ல. அம்மா ஒதவி கேட்டப்பயும் கேவலமா பேசிட்டாங்க. அப்பறம் அம்மா என்ன செய்றதுன்னு தெரியாம இருந்தப்ப ஒங்க நியாபகமா அம்மாகிட்ட இருந்த ரெண்டு கிராம் தாலி அதயும் வித்துத்தான் கட்டுனாங்க.


என்ன செஞ்சு என்ன பண்ணப்பா. அண்ணன் இப்ப உங்கள மாதிரி மாறிடுச்சு. அதுவும் இப்ப பாட்டில் வாழ்க்கைய தேர்ந்தெடுத்து எங்களுக்கு சாபமான வாழ்க்கையத்தான் தருது . என்னப்பா பண்றது. அம்மாவால எதை எதைத் தாங்க முடியும். நான் படிப்பு விட்டுட்டு பக்கத்தில இருக்கற கம்பெனி வேலைக்குப் போறேன்னு சொன்னாலும் கேக்க மாட்டுது. அண்ணன் வேலைக்கு போகலயான்னு கேக்குறியாப்பா. உன்ன மாதிரித்தான் சம்பாரிக்கறதெல்லாம் பாட்டிலுக்குத்தான் போகுது. வீட்டுக்கு எதுவும் இல்ல. உன்ன மாதிரியே கேள்வி கேட்டா கோவமும் படுது. அப்பா.... எங்களால முடிலப்பா. நான் பள்ளிக்கூடம் வர விருப்பம் இல்லாமத்தான் வரேன். எனக்கு ஆகுற செலவுக்கு அம்மா ரத்தம் சிந்துதுப்பா. நீ எங்கள நெனச்சிருந்தா இப்படி அம்மா நெலம மாறி இருக்காதுப்பா. குடிகாரன் மகள்னு காது படவே பேசுராங்க . இப்பவும் அண்ணனும் குடிகாரன்னு அசிங்கமா பேசுறாங்க. அம்மாவ என்ன எல்லாம் பேசுறாங்களோ தெரியாதுப்பா.

நீ சந்தோசமா செத்துட்டப்பா. ஆனா நாங்க தெனம் தெனம் சாகுறோம்ப்பா. அசிங்கமா இருக்குப்பா. இப்போ உன்ன நெனச்சா கோபமா வருதுப்பா. நான் ஏன் உங்கூடயே செத்துப்போகலன்னு கூட தோணுதுப்பா. ஆனா இந்த ஒலக்த்துல அம்மா தனியா விட்டுட்டு போக மனசில்ல பா. அம்மாவ நான் பாத்துக்கிறேன் பா. நீங்க நல்லா இருப்பீங்கன்னு நம்புறேன்பா. அப்பா செத்தவங்கெல்லாம் தெய்வம்னு பாட்டிக சொன்னாங்க. நீ தெய்வமா மாறிட்டீனா அண்ணன மட்டும் தயவு செய்து உன்ன மாதிரி மாத்தாம. குடிக்க விடாம செஞ்சுருப்பா” என்று எழுதியவள் அதற்கு மேலும் எழுத நினைத்திருப்பாள் போல அதோடு கடிதம் அப்படியே நின்றது.

கண்கள் முழுவதும் குழந்தையின் ஏக்கமும் கவலையும் நிரம்பி இருந்ததை வார்த்தைகள் வழியாக உணர்ந்த மீனாவின் மனதும் கண்களும் கலங்கி இருந்தது. ஏதாவது கல்வி உதவியாவது அந்தப் பெண்ணுக்குச் செய்ய வேண்டும் என்ற நினைவுடன் மாணவர்களில் சிலர் மாணிக்கங்களாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இன்று வகுப்பறையில் நுழைந்தாள் மீனா...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p374.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License