இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

முதல் மழை


முனைவர் பி. வித்யா
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,
நா.ம.ச.ச. வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி,
நாகமலை, மதுரை.

நவீன வசதிகள் கொண்ட பெரிய என்ஜுனியரிங் காலேஜ் அது. அதன் கீழே, அதே பெயரில் ஏக்கர் கணக்கில் தொடக்கப்பள்ளி, மேனிலைப்பள்ளி என்று மிகப் பெரிய வளர்ந்த நகரத்தின் தன்மையைக் கொண்ட கல்லூரி. மிகப் பெரிய வளாகம் எல்லாமும் அந்த வளாகத்துள்ளேயே கிடைக்கும். அவை கல்விக் குழுமங்களாக ஒன்றின் கீழ் ஒன்றாக இணைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. மிகப்பெரிய 300 பேர்களுக்கும் மேல் தாராளமாக அமர்ந்து சாப்பிடும் பெரிய உணவகமும் உண்டு. அங்கே பெரிதாய் ஒரு விளையாட்டுப் பூங்கா. விடுமுறை நாட்களில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள், நிகழுமிடங்கள் என்று அத்தனையும் இருக்கக்கூடிய பெரிய கல்விக் குழுமம் அது.

அங்கே நான்காமாண்டு கம்ப்யூட்டர் என்ஜினியரிங் படிப்பவள் வசந்தி. மாவட்டம் மூன்று நான்கினைத் தாண்டி படிப்பே முக்கியமென வந்து சேர்ந்தவள். தோழிகள் பெரும்பாலும் படம், கட்டடித்தல் என்று என்னவென்னவோ செய்கின்ற காலத்திலும், விடுதியின் அறைகளுக்குள் தன்னைத்தானே அடைத்துக் கொண்டு படிப்பிற்கு முக்கியத்துவம் தருபவள். அதுபோக அனைவரும் வீட்டிற்கு விடுமுறைக்குச் செல்லும் போதும், ஊரின் தொலைவு கருதியும் பொருளாதாரம், நேரம் என்று அனைத்தையும் கருதி அவள் வீட்டிற்கே செல்வதில்லை.

பிள்ளைகள் அனைவரும் சுவாரசியமாக பேசக்கூடிய முக்கியமான விசயமே யார், யார் யாரைப் பார்க்கிறார்கள்? யார் யார் காதலிக்கிறார்கள்? யாரெல்லாம் ஒன்றாய் இருக்கிறார்கள்? யாரெல்லாம் பிரிந்திருக்கிறார்கள்? என்றெல்லாம் பார்ப்பதுதான்.

எல்லோருக்கும் ஏதாவதொரு கதை இருக்கும். சிலர் சொல்வதுண்டு, சிலர் சொல்வதில்லை. சிலர் முயல்கிறார்கள். சிலர் முயல்வதில்லை அவ்வளவுதான். சிலர் காதல் என்று சொல்வது இல்லை என்றாலும், சிலருக்கு மீள முடியாத காதல் இல்லை என்றாலும், தான் விரும்புவரைப் போன்ற தன்மையுள்ளவரை மனதில் வைத்துக் கொண்டு சிலரை அணுகுவது என்பது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும். அதாவது, அவரைப் போல எனக்குக் காதலன் அல்லது கணவன் வேண்டும் என்று யாரையாவது கடக்கத்தான் வைக்கிறது வாழ்க்கை. ஆனால், அவரிடம் அதைச் சொல்ல மாட்டோம். சிலருக்கு நாம் அவரை நேசித்தோம் என்று கூடத் தெரியாது. அப்படி ஒரு நிகழ்வு இந்தக் கல்லூரியில் வந்ததும் நிகழ்ந்தது வசந்திக்கு.

இங்கு வந்தபோது, முதல்நாள் இந்தக் கல்லூரியில் யாரையும் தெரியாது அவளது குடும்பத்திற்கு. ஒரு சேர்க்கை விண்ணப்பம் எழுதுவதில் கூட அவளுக்குச் சிரமம். யாரிடம் கேட்பது அப்பாவுக்கும் தெரியாது. இங்கும் யாரையும் தெரியாது. அதனால் இவள் பரிதவிப்பாக இருந்தாள். அந்த நேரத்தில் இவள் பரிதவிப்பைக் கண்டுதான் அங்கிருந்த ஒருவர் அங்கு வந்து ஒவ்வொன்றையும் தமிழில் அவளுக்கு புரியும்படிச் சொல்லி உதவினார். முதல் தலைமுறையாய் என்ஜினியரிங் கல்லூரியில் கால் வைக்கும் அவளால் தன் உலகத்திலிருந்து முழுவதும் வேறுபட்டிருக்கும் இந்த உலகத்திற்குள் அவ்வளவு சுலபமாக ஐக்கியமாக முடியவில்லை.

விண்ணப்பம் பூர்த்தி செய்ய உதவியரைப் போல் எல்லோரும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தனக்குத்தானே தன் குல தெய்வங்களை வேண்டிக் கொண்டாள். அவரை அவ்வப்போது நினைத்துக் கொள்வாள். அப்படிப்பட்ட நேரமெல்லாம் இதமாய் இங்கே காலம் தள்ள முடியும் என்று மனசு லேசாகும். வகுப்பறைக்குச் சென்றால் அங்கு அவரே தன் துறையின் பேராசிரியராய் இருப்பார் என்று நினைக்கவில்லை அவள்.


எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். அவரை ரசிக்கும் அந்த ரசிகக் கூட்டத்தில் ஒருத்தியாக அவளை நினைத்துக் கொள்ளத் தாழ்மையாக இருந்ததால், அவளுக்கு மட்டும் தெரிந்தபடி நேசித்துக் கொண்டாள். முதல் நாளில் இருந்தே பிடித்துப் போன ஒரு முகத்தை மாற்றிக் கொள்ள யாரால் முடியும்? அவளாலும் முடியவில்லை. கல்லூரியின் முகப்பில் இரண்டு பக்கம் தெரியும் கண்ணாடிகளில் ஒரு புறம் இவளும், மறுபுறம் அவரும் இருக்கும் நாளொன்றில், இவள் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்தப்பக்கம் இருக்கிறவர்களுக்கு இங்கிருப்பவர்களைத் தெரியாது. இங்கிருக்கும் அவளுக்கு அவர் தெளிவாகத் தெரிந்தார்.

அதோடு அவர் தன் கைகளால் தன் தலையைக் கலைத்துச் சீவி நெழியும் அம்முடிகள் காற்றில் அழகாய் அசைவதைப் பார்த்துக் கொண்டு எப்படித்தான் கண்களை மூடிக் கொள்ள முடியும் என்று தனக்குத்தானே நினைத்துக் கொண்டு கண்களை சிமிட்டாமல் அவரைப் பார்த்துக் கொண்டு சிலையாய் நின்றிருந்த வசந்தியின் முகம் நல்ல வேளை அவருக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் என்னவாயிருக்குமோ? தனக்கு மட்டுமே பிடித்தமான ஒருவரை எப்படித்தான் கடந்து போவது? அவள் மனம் படபடவென அடித்துக் கொண்டது. மற்றும் ஒருநாள் இதே போன்று மிகச் சாதாரணமாக கண்ணாடிகள் மாட்டப்பட்ட கட்டிட வரவேற்பறைகள் அங்கே கல்லூரி முழுதும் உண்டு. அங்கு நடந்த நிகழ்வு அவளால் மறக்க முடியவில்லை.

அந்த நிகழ்வு அவள் பக்கத்தில் நிகழ்ந்தது. இவள் உள்ளே பார்த்துக் கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த அவர், அருகே இருக்கும் கண்ணாடியில் தன் தலையைக் கோதவும், காற்று அவரது முடியை மெலிதாகத் தன் பங்கிக்கிற்கு தடவிச் செல்ல இவள் திடீரெனத் திரும்ப, சிவந்த முகத்தில் கன்னக்குழி விழ ஒரு சிறு புன்னகையானது இதழ் விளிம்பில் அவர் சிந்த, இவளைப் பார்த்ததும் அவர் வெட்கத்தில் தத்தளிக்க ஐயோ விழுந்தே விட்டாள். ஆண்களின் வெட்கப் புன்னகையை மிஞ்ச இன்னும் எந்தப் பெண் தேவதையும் பிறக்கவில்லை என்று அவளுக்குத் தோன்றியது.

அவசரக் கவியாகி இதயத்தில் ஆயிரம் கவிதைகள் மின்னலில் எழுந்து கொண்டே இருந்தது. நல்ல வேளையாய் அவர் கடந்து போனதால் இவள் முகம் வெட்கம் பூத்ததை அவர் அறிந்திருக்கவில்லை. எத்தனையோ பெண்கள் பின் தொடர்கையில் இவருக்கு இவள் என்ன புதிதாகத் தெரிந்து விடப் போகிறாள். கடந்து விட்டார். அவளால் கடக்க முடியவில்லை. அவர் தன்னைக் கவனிக்கவேயில்லை என்பது முதலில் சிரமமாக இருந்தாலும், தான் மட்டும் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தச் சுதந்திரம் அவளுக்குப் பிடித்துப் போனது.

மறக்க நினைக்க நினைக்க, அவள் மனம் முழுவதும் அவரே சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தார். தன்னைக் கண்டுகொள்ளவே இல்லை என்ற சிறுமை ஒருபுறம் இருந்தாலும், மாற்ற முடியாத ஒருதலைக் காதலாய் அது உருப் பெற்றிருந்தது. சொல்லவும் முடியாத, தானே வைத்துக் கொள்ளவும் முடியாத காதல் அல்லது அவரைத் தன் மனதிலேயே உச்சபட்சக் காதலில் அவனாக மாற்றி, அவனை மட்டுமே வட்டமிட்ட ஒரு பெண்ணின் உலகம் வசந்தியின் உலகம் மாறிக் கொண்டிருந்தது என்றம் சொல்லலாம்.

படிப்பெல்லாம் அவன் நினைவாக அவனிடம் பாராட்டுப் பெற வேண்டும் என்ற நிலையில் மிக நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஒருதலைக் காதலில் ஒரு வகையில் சுதந்திரம் உண்டு. வெளிப்படையாய் எப்படி அழைத்தாலும் மனதுக்கு நெருக்கமானவரை தனிமையில் அவன் இவன் என்று அழைத்துக் கொள்வதும், பார்க்காததற்கும், கண்டு கொள்ளாததற்கும் திட்டுவதும், தண்டனை செய்வதும் தனக்குத்தானே தினமும் நிகழும் ஓரங்க நாடகங்கள். சில நேரங்கள் அவை கவிதைகளைப் பிரசவிக்கும். சில நேரம் கண்ணீரைப் பிரசவிக்கும்.


முதல் நாளில் தொடங்கிய பெயரற்ற அன்பு, பின்பு ஆசை, பார்க்க வேண்டும் என்கிற ஆவல், தனக்குத் தானே காதல் என்று நினைத்துக் கொண்டு, பின்பு அது கைகூடாமல் போன கவலை அதனால் இது காதல் இல்லை என்ற தேற்றல், பின்பு காதலாய்தான் இருக்குமோ என்ற ஐயம், பின்பு தன்னைப் பற்றித் தானே குறைவாக மதிப்பிடல், பின் ஒருதலைக் காதலாய்த்தான் கிளை பரப்பும் எனத் தனக்குத்தானே தாங்கிக் கொள்ளல் இது எல்லாம் வசந்திக்கு கடந்த மூன்று வருடங்களுக்கும் உள்ளாக தெளிவாக படிப்படியாக நடந்தவை.

இது கடைசி வருடம் அதற்குப் பிறகு பார்க்கக் கூட முடியாத நிலை வரப்போகும் காலம் என்பதால் பார்த்தால் கூட பார்க்காதததைப் போலவும், ஒருவேளை இயல்பாக பார்த்துக் கொள்ளும் நிலை வந்தாலும், வேறு வழியில்லாமல் தன் காதலைத் தன்னோடு வைத்துக் கொள்ளும் முடிவில் கொஞ்சம் விலகி நடந்தாள். என்னவோ ஒருதலைக் காதலில் எவ்வளவு ஆசை இருக்கிறதோ, அதைவிட ஒரு படி அச்சம் கூட இருக்கும் போல, அவரைப் பார்க்காததைப் போல தனக்குத்தானே சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

என்றும் அவரை, அவளது அவனை மறக்க முடியாத அளவிற்கு மரண அடி ஒன்று இருவருக்கும் இடையே நிகழப் போகிறது என்று அவள் அப்போது நினைக்கவே வாய்ப்பில்லை. ஆனால் நடந்தேவிட்டது. அவள் வாழ்வில் சிறிதும் சம்பந்தமில்லாத அந்த நிகழ்வு. 5 நாட்கள் விடுமுறை எல்லோரும் விடுதியை விட்டுக் கிளம்பி விட்டார்கள். அனைவரும் வேறு வேறு இடம் சேரும் பறவைகளாகக் கடந்திருக்க, சில பிள்ளைகள் மட்டும் கடைசி வருடம் என்று ஊருக்குச் சென்றால் வேலை நடக்காது எனபவர்களும்; வசந்தியைப் போலக் குக்கிராமங்களில் இருந்து வருபவர்களுக்கும், கிராமங்களில் அவர்களுக்குத் தேவைப்படும் வசதிகள் வந்தே சேரவில்லை என்பதாலும் போகாமல் விடுதியில் இருந்தார்கள்.

எல்லோரும் குடும்பங்களோடு இருப்பதற்கு வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் ஏதோ காரணத்திற்காக செந்திலும் போகவில்லை என்பது அவளுக்குத் தெரியும். வசந்தி ஒருதலைக் காதலோடு பின் சென்று கொண்டிருந்தாளே அவர் பெயர் செந்தில். எத்தனை முறைதான் அந்தப் பெயரை மனதிற்குள் சொல்லிச் சொல்லி அழைப்பாளோ? வெளியில் கம்ப்யூட்டர் பயன்படுத்தப் போகும்போதெல்லாம் அவன் அங்கிருப்பதை அவள் அறிந்திருந்தாள். அவன் மனதில் தனக்கு என்ன இடம் என்பதை மட்டும் அறிந்திருக்கவில்லையே தவிர மற்ற எல்லாவற்றையும் அறிந்திருந்தாள்.

செந்தில் இங்கே ஆசிரியராய் இந்த வருடம்தான் இணைந்திருந்தான் அதற்கு முன்னதாகத் தன் படிப்பினை பிரபலமான கல்லூரியில் முடித்துவிட்டு அவளுக்கு கொஞ்சம் முன்னதாக கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கும் இது சொந்த ஊர் இல்லை. தூத்துக்குடி பக்கம் எங்கோ இருப்பதாகச் சொன்னார்கள் இருவர் மட்டும் தங்கும் இடத்தில் கல்லூரியின் தங்கும் மனையில் தங்கி இருந்தான்.

இன்று பெண்கள் விடுதியில் 200, 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் இருக்கும் இடத்தில் இருந்தது 20 பேர்கள் தான். விடுதியில் அப்படி நிகழ்ந்தால் எல்லா அறைகளிலும் இருக்கும் பெண்கள் ஒரே இடத்தில் கதை பேசிக்கொண்டு தொலைக்காட்சி அறையில் இரவு நெடுநேரம் வரை இருந்துவிட்டு சாப்பிட்டு பின்பு தங்கள் அறைகளுக்குச் செல்வது வழக்கம். தாழிடாத வெளிக் கதவும் நிலா முற்றத்தை பார்க்கும் வாய்ப்பும் அப்பொழுதுதான் நிகழும் கம்மியான பெண்கள் இருந்தால் வெளியிலிருந்தும், அருகிலிருந்தும் வரும் வார்டன்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்வது வழக்கம். எப்போது தொலைபேசியில் அழைத்தாலும் வந்து கொள்ளலாம் என்ற நிலையில் சென்றிருப்பார்கள். இதுவரையிலும் அவசரம் என்றும் எதுவும் நிகழ்ந்ததில்லை அதனால் அவர்கள் அங்கு வரும் அவசியமும் வரவில்லை.

அப்படி அசந்து கிடந்த விடுதியின் இரவு 11 மணிக்குத்தான் அப்படி ஒன்று நிகழ்ந்தது. மிக வேகமாக கார் ஒன்று வந்து விடுதியின் முகப்புப் பகுதியில் கோணல் மாணலாக நின்றது. கதவு திறந்தும் திறக்காமலும் காரிலிருந்து இறங்கி பளபளக்கும் வேட்டி சட்டையோடு, நான்கு ஊருக்கு அந்தப்பக்கம் இருப்பவர்க்குக்கூட நாற்றம் வருகிற அளவுக்கு ஏதோ சரக்கினை உள்ளிறக்கிய வேகத்தோடு வேட்டியைக் கையில் பிடித்தவாறு தட்டுத்தடுமாறி கேட்டைத் துறந்து முற்றம் வரை வந்துவிட்ட ஒருவரை பெண்கள் கூக்குரலோடு கூடி பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.


யாரும் எதுவும் கேட்க முடியவில்லை. அப்படிக் கேட்டிருந்தாலும் பதில் சொல்லும் நிலையில் அந்த ஆள் இல்லை. பெண்களின் மிக அருகே தைரியமாக நெருங்கிக் கொண்டிருந்தார். மிரட்சியோடு ஒருவர் பின்னே ஒருவராக பின்னே ஒழிந்து கொண்டு பயத்தில் நடுங்கியும் கத்தியும் கொண்டிருந்தனர். தைரியமாக கிராமத்தில் வளர்ந்ததால் வசந்தி அவளையும் அறியாமல், “தள்ளி நில்லுங்கள். யார் நீங்கள்?” என்று கேட்டதுதான் தாமதம் . அவளைத் தலைமுடியைப் பிடித்துத் தள்ளி பக்கத்தில் இருந்த தூண் வரை இழுத்துச் சென்றார்.

பெரும்பாலும் கல்லூரிக்கு வரும் முக்கியஸ்தர்கள்தான் உள்ளே வர அனுமதியுண்டு. அப்படிப்பட்ட ஒருவர்தான் இவர் என்று தெரிந்தாலும், “கையை எடுங்கள். மரியாதை கெட்டுடும்” என்று கோபமாக கத்திக் கொண்டு அவர்களைப் பார்த்து முறைக்கவும் மிக வேகமாக வசந்தியின் கன்னத்தில் ஓங்கி பளார் என்று அறை விட்டுவிட்டு திறந்து கிடந்த காருக்குள் எதையோத் தேடி பாட்டிலிலிருந்த மதுவோடு தள்ளாடி நடந்து வருவதைப் பார்த்ததும் ஒருத்தியிடம் வார்டனை அழைத்து வரச் சொல்லியும், இன்னொருத்தியிடம் தனக்கு உதவி செய்யச் சொல்லி செந்திலை அழைத்து வரவும் அனுப்பிவிட்டாள் வசந்தி. வந்தவர் அவளை மீ;ண்டும் கோபமாகத் தள்ளி வாயில் மதுவை ஊற்றப் பார்க்கவும்.

“நீ என்ன எங்கிட்ட துள்ளுறியா? நீயெல்லாம் ஒரு ஆளு….” என்று துள்ளிய வசந்தியின் வாயில் ஊற்றுவதை அந்த ஆள் கோபமாகச் செய்து கொண்டிருக்கவும், அவள் கையால் தடுக்கவும் கீழே விழுந்து பாட்டில் உடையவும், “நீ என்ன மீறி இந்த காலேஜ்ல படிச்சிருவியா? என்று கீழே விழுந்து உடைந்த பாட்டிலை எடுத்து, கழுத்தருகே கொண்டு செல்லவும், அவளைக் காப்பாற்ற கடவுளென அவன் வரவும் மிகச் சரியாக இருந்தது. ஏதோ திரைப்படத்தில் நடக்கும் நிகழ்வைப் போல இவையெல்லாம் நடந்து கொண்டிருக்க, கடைசி நொடியில் அவள் நம்பியவன் வந்திருந்தான். வெளியில் இருந்து நான்கு ஐந்து நண்பர்களோடு இணைந்து அவளை மீட்கவும் செய்தான்.

இதுவரையில் மிகத் தைரியசாலியாய் நடந்து கொண்டவள், அவனைக் கண்டதும் பொலபொலவென்று அழுதுவிட்டாள். இந்த அடத்தில் அவள் நேசித்த ஜீவன் அவன் மட்டுமே என்பதால் தைரியம் போய் அவனை அண்டும் பெண்ணாக மாறி இருந்தாள் வசந்தி. ஆபத்திற்குப் பாவமில்லை என்று அவள் கட்டியணைத்துக் கொண்டு கதறியபோது பரவாயில்லை என்று அருகிருந்து ஆறதல் கூறியதோடு, அவன் சட்டையை முதலில் அவளுக்குப் போர்த்திவிட்டான். அவள் அலங்கோலமாய் நின்றிருந்தது அப்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு. பெண்மை விழித்துக் கொள்ள அவனை விட்டு விலகிக் கொண்டாள். அதன் பிறகும் அதனைப் பற்றி என்னவெல்லாமோ விசாரிப்புகள், நடந்ததை விடவும் சொல்லும் போது அவளுக்கு வலி கூடிக் கொண்டே வந்தது. ஒவ்வொரு விசாரணையின் பின்னரும் அவளால் தாள முடியாமல் கலங்கிக் கொண்டிருந்தாள். அவள் கலங்கி அழுவதாகக் கேட்கும் போதெல்லாம் அவள் அருகிருந்து செந்தில் ஆறுதல் கூறினான்.

அதோடு கல்லூரி மற்றும் விடுதிகள் அருகில் அதிகப்படியான கண்காணிப்புக்கு ஆட்கள் போடப்பட்டது. இந்த விசயம் வெளியில் போக வேண்டாம் என அவர்கள் கேட்டதால் அத்தோடு விட்டுவிட்டதாகவும் அவன் சொன்னான். அதன் பிறகும் பல முறை இதற்கு மேலும் வழக்கு எதுவும் போடுவோமா? என்று கேட்டு கேட்டு முடிவெடுத்தான் அவன். கொஞ்சம் கொஞ்சமாக சுமை குறைந்தது. இப்போது அவன் அணுக்கமே அவளது பெரும் போதையாகிப் போனது.

இருந்தாலும் ஏதோ உதவி என்ற நோக்கத்தில் அவன் செய்தாலும் இவள் அந்த நோக்கத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. மிகப் பெரிய மோசமான சூழலில் இருந்து காப்பாற்றியதோடு அங்கு இப்படி ஒன்று நிகழவிடாமல் மேலிடம் பேசியிருந்தான். தனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை என்றும் இப்பொழுதுதானே இங்கு வந்தோம் நமக்கு எதற்கு இது என்றும் நினைக்கவில்லை.

இனி இங்கே நடக்கக்கூடாது என்று தடுத்தது. இவள் தவிர்க்க நினைத்த காதலுக்கு தண்ணீர் வார்த்ததைப் போல் ஆகிவிட்டது. இருந்தாலும் இறுதியாண்டு முடித்துப் போகும்போது அவனைப் பிரிய முடியாத வேதனையின் வலியில் தத்தளித்து ஒரு வாரமாக யாருக்கும் தெரியாமல் போர்வையைப் போர்த்திக் கொண்டு அழத் தொடங்கினாள் வசந்தி. கடைசியாக அவனிடம் அன்பைச் சொல்லி விட வேண்டும் என்று ஒரு நீண்ட கடிதம் எழுதி அதன் இறுதியில் தான் விரும்புவதை எழுதியிருந்தாள்.

அந்த நேரம் வேறு சில பிள்ளைகளும் அவருக்கு ரசிகைகளாக சத்தம் போட்டே உங்களை எங்களால் பிரிய முடியாது என்று சத்தமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். தன்னால் அப்படி வெளிப்படையாகச் சொல்ல முடியாததன் காரணத்தை அவளால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. கூட்டம் கலையட்டும் கடைசியாக நாம் கடிதத்தைக் கொடுப்போம் என்று காத்திருந்தவளை, “வசந்தி இங்க வா. வசந்தி உங்களப் போல ஒரு மாணவிதான. ஆனா... மாணவிக்கும் மேல…… எனது மகள் போல. அதே போலத்தான் நீங்களும் “ என்று மற்றவர்களுக்கு உதாரணமாய்க் காட்டிச் சொன்னதுதான் தாமதம் அவள் கனவெல்லாம் போய் கண்ணீர் ததும்பி நின்றது. நான் செந்திலுக்கு மகளா? கேட்டது உண்மைதானா? நான்? என் கடிதம்? என் நினைவுகள் எல்லாம் பொய்யா? நீ என் பிள்ளையைப் போல என்று சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்ததால் அவள் இதயம் நொறுங்கிவிட்டது. மீண்டும் இதயம் சத்தமாய் தொடர்ந்து உடைந்து கொண்டே இருந்தது.

அங்கிருந்து வெளியேறி ஏதோ ஒரு வகுப்பறையில் நுழைந்தாள். அவள் எழுதிய கடிதத்தை எடுத்தாள். இந்தக் கடிதம் செந்திலுக்கு உரியதுதான். ஆனால் காதல் மட்டும் சொல்ல முடியாது. என்ன செய்ய என்று யோசித்து, கடைசிப் பக்கத்தை மட்டும் சுக்குநூறாய்க் கிழித்தாள். கண்ணீர் தன் உடையெல்லாம் நனைத்து விட்டதைக் கூட அவளால் உணர முடியவில்லை. இந்தக் கண்ணீரைத் துடைக்க செந்திலால் முடியாது என்பதால் தானே துடைத்துக் கொண்டு கடைசியில் நலமாய் வாழட்டும் என்று சில வார்த்தைகளை மட்டும் எழுதி மீண்டும் அவனை பார்க்கும் திராணி இல்லை என்றாலும் இதுதானே கடைசி முறை என்று அவளுக்குத் தெரியும்.

ஆதலால், அக்கடிதத்தை அவனிடம் சேர்ப்பித்துவிட கண்களைத் துடைத்துக் கொண்டு கொடுக்கப் போகும்போது யாரும் இல்லை அவன் மட்டுமே தனித்திருந்தான். கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றினாலும் வேண்டாம் என்று விலகி நின்ற படி கடிதத்தைக் கொடுத்துவிட்டு அவன் கூப்பிட கூப்பிட கேட்காததைப் போல் ஓடியே வந்து விட்டாள்.


தவிர்க்க முடியாத முதல் காதல் பூமி கேட்டுப் பெய்யாத மழையைப் போல பெய்யாமல் பொய்த்து விட்டுப் போனது. மழை பெய்து கொஞ்ச நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தடங்கள் காணாமல் போவதைப் போல காதலும் காணாமல் போனால் ஒருவேளை நன்றாயிருந்திருக்கும் என்று அழுகையும் அவள் மேலேயே ஆத்திரமும் வந்தது. ஆனால் அது அப்படி நிகழவில்லையே, இப்போது நினைத்தாலும் ஒரே நேரத்தில் பூக்களையும் கண்ணீரையும் தருகிறதே இதனை எவ்வாறு மறப்பது. முதல் காதல் முதல் மழையைப் போலத்தான். இப்போதும் மனதில் அடைமழையாய் பெய்து கொண்டிருக்கும். முதன் முதலில் பெய்ததைப் போல மீண்டும் மீண்டும் சாகும் வரை.

அவளால் எதையும் மறக்க முடியவில்லைதான். ஆனாலும் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு வரும் போது அவர் அங்கே இருக்கக் கூடாது என்று குலதெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டாள். எப்படி வேண்டினாலும் அவரைப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆவல் இல்லாமல் இல்லை. பெண்கள் பிறக்கும் போதே இவ்வாறான இரட்டை மன நிலையில் தான் பிறக்கிறார்களோ என்னவோ? பெண்கள் வரவேற்கப்படுவதும் இம்மாதிரியான இரட்டை மன நிலையில் தானே. பிள்ளையே இல்லாதவர் கூட பிள்ளை பிறந்தால் போதும் என்று நினைப்பார். பின் பிறந்ததும், பிறந்தது ஏன் பெண் பிள்ளை என நினைப்பார்? இதுதான் இன்று வரை நிலை. உலகம் இப்படி இரட்டையாய் நினைக்க நினைக்க பெண்கள் வாழ்க்கை வாழும் வரை இரட்டையாகவேதான் இருக்கிறது. இங்கு இன்றாவது செந்திலைப் பார்க்க வேண்டும் என்று பேராவல் தோன்றி விட்டது.

ஆனால் அன்று போலத்தான் இன்றும் நிகழ்ந்தது. இந்தக் கல்லூரியில் முதன்முதலில் வந்தபோது என்ன நிகழ்ந்ததோ அதேதான் இன்றும் நிகழ்ந்தது கல்லூரிக்குள் நுழைந்ததும் அவளின் அவராக இருந்தவர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் வழிகாட்டுதல்களையும் செய்திருந்தார்.

பார்த்த கணம் அவள் மூச்சு விடவும் மறந்து விட்டாள். அப்பாவும் அவரை நினைவு வைத்து பேசிக் கொண்டிருந்தார். அவருக்குத் திருமணம் ஆகி மூன்று மாதம் ஆகிவிட்டதை அவர் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் மீண்டும் என்னைக் குழந்தையாகப் பார்ப்பதாகச் சொல்லிவிடக் கூடாது என்று வணக்கத்தோடு நகர்ந்து கொண்டாள். தனக்கும் தன் கல்லூரிக்குமான இறுதிநாள் அது. அதோடு அவளின் நினைவுகளையும் அனைத்தையும் மூட்டைக் கட்டித்தானே ஆக வேண்டும். தனக்குச் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அவனின் நினைவுகளை வைத்துக் கொள்வதில் இனி பயனேதும் இருக்கப் போவதில்லையே.

செந்திலே சொன்னார் “வசந்தி உன்னிடம் பேச வேண்டும். உடனே போய் விடாதே விழா முடிந்ததும் கொஞ்சம் காத்திரு” என்று சொன்னான். அங்கிருந்த அவரை இன்னொருத்தி அதாவது அவனின் ஒருத்தியாகிய அவளோடு பார்க்கும் தைரியம் எனக்கில்லை என்று நினைத்தபோதே கண்களில் நீர் ததும்பி நின்றது. மற்ற பிள்ளைகளோடு இணைந்து, நிழற்படம் எடுத்துக் கொண்டாள். பின்பு விழா முடிந்ததால் அவரையும் அழைத்து வந்து குழவாக நிழற்படம் எடுத்துக் கொண்டார்கள்.

செந்தில் கையசைத்து அவளை பக்கம் அழைத்த போதும் கண்டு கொள்ளாததைப் போல தூரமாக ஒரு ஓரமாக நின்று கொண்டாள். ஒருவேளை இந்தப் நிழற்படத்தைப் அவர் பார்க்க நேர்ந்தாலும் தன்னை அவர் கண்கள் பார்க்கக் கூடாது என நினைத்து ஒதுங்கி நின்றிருந்தாள்.

அவளுக்கே கூட அவள் தெரியாத இடம் அது. இத்தனை அன்பு மழையில் நனைகையில் தன்னால் அவர் அருகே கூட செல்ல முடியாது. அப்புறமும் எல்லோரும் அவரிடமிருந்து விடை பெறும் போது ஒரு வார்த்தை பேசிவிட்டு வருவோமா? என்று மனம் தத்தளிக்க அவளின் மனமெங்கும் நிறைந்திருந்த அவன். வேறு ஒருத்தியின் அவன் ஆன பின்பு அவளுக்கு அவர்தானே எந்த உரிமையில் மனம் நிறைய எப்படிப்பட்ட ஆசையெல்லாம் சுமந்து கொண்டு எப்படி நெருங்குவது? அவனோடு எத்தனை நெருக்கமாய் வாழ்ந்து கொண்டிருந்தாள்.

இப்போதும் மறக்க முடியாத அவனை, அன்பை முழுவதுமாக மறைத்துக் கொண்டு சாதாரண மாணவியைப் போல ஒரு நடிப்பான முகத்தை வைத்துக் கொண்டு எப்படி அருகில் போவது? கால்கள் பின்னோக்கிப் போயின இருந்தும் அவன் வசந்தியின் பெயர் சொல்லி அழைத்ததும் அவளுக்கு அவனாகிப் போனான்.

“வசந்தி நீ ஒரு கடிதம் குடுத்தியே. அதைப் பற்றி பேச வேண்டும் நில்” என்று அனைவரின் முன்னிலையில் சொன்னதும் அவள் இதயம் நின்று விட்டது. வேறு வழியில்லை. முதல் மழை கடந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் அதன் தடங்கள் பூமியில் இருந்து அழியத்தான் வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அழுது கொண்டே ஓடிக் கொண்டிருந்தாள் வசந்தி வார்த்தையில்லததால்….!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p378.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License