இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

தமிழுக்கு வேலை கிடைக்குமா?

ராம்ப்ரசாத்

அந்த ஒண்டுக்குடித்தன வீட்டில், ஓரமாய் முடங்கி இருந்த மேஜையை ஒட்டின நாற்காலியில் முருகன் தலையில் கைவைத்து உட்கார்ந்திருந்தான். இவன் ஒருதலையாய் காதலிக்கும் அடுத்த‌ தெரு மாலதியை பெண் பார்க்க பெரிய இடத்திலிருந்து வந்திருந்தார்கள் என்ற செய்தி தான் அதற்கு காரணம்.

மாலதி பி.ஏ படிக்கிறாள். அதுவும் தமிழில். முருகனிடம் சீனியர் என்கிற முறையில் பேச ஆரம்பித்தது. மாலதி, முருகனின் தமிழ் கவிதைகளின் விசிறி. அப்படி ஏற்பட்ட நட்பு, முருகனின் மனதில் காதலை விதைத்திருக்கிறது.

தன் காதலைப் போய் மாலதியிடம் சொல்லிடலாம் தான். ஆனால் எப்படி சொல்வது. அவனுக்கோ வேலைவெட்டி இல்லை. கிராமத்தில் அப்பம் விற்று அம்மா அனுப்பும் தொகையில் தான் இங்கு சென்னையில் இந்த பேசிலர் ரூமில் தங்கிக் கொண்டு வேலை தேடுகிறான். என்னதான் தமிழில் எம்.ஏ, டிஸ்சிங்சனில் பாஸ் செய்திருந்தாலும், வேலை கிடைப்பதென்னவோ குதிரைக் கொம்பாக இருக்கிறது. எங்கு போய் வேலை கேட்டாலும் துரத்துகிறார்கள். வங்கிகளில் மார்கெட்டிங் துறை இந்த ரெசசனில் படுத்து விட்டது. அதை விட்டால் ஐ.டி துறையில் பி.பி.ஒ வில் தான் வேலை வாய்ப்பு இருக்கிறது. மற்றவை எல்லாம் தற்காலிக வேலைகளே. இங்கிலீசில் சரளமாய் பேச வேண்டுமாம். டிகிரிக்கேற்றார் போல் சம்பளம். ஆனால் பள்ளியிலிருந்தே தமிழ் மீடியத்தில் படித்ததில் ஆங்கிலம் அவ்வளவாக பழகவில்லை. இதில் எங்கிருந்து சரளமாய் பேசுவது, வேலை வாங்குவது, பெண் கேட்பது.

ஏதாவ‌து செய்ய‌ வேண்டும். இத்த‌னை வ‌ருட‌ம் த‌ன்னைக் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு படிக்க‌ வைத்த‌ அம்மாவை அவ‌ளின் வ‌ய‌தான‌ கால‌த்திலாவ‌து ந‌ன்றாக‌ வைத்து காப்பாற்ற‌ வேண்டும். தலை நிமிர்ந்து மாலதியிடம் தன் காதலை சொல்ல வேண்டும். மால‌தியின் பெற்றோரிட‌ம் க‌வுர‌வ‌மாய்ப் பெண் கேட்க‌ வேண்டும். இத‌ற்கெல்லாம் தேவை நல்ல சம்பளத்தில் ஒரு வேலை. என்ன‌ செய்ய‌லாம்? எப்ப‌டிச் செய்ய‌லாம்?



முருக‌னுக்கு இருப்பு கொள்ள‌வில்லை. ஆண் பிள்ளைக்கு அழ‌காய் ல‌ட்ச‌ண‌மாய் வேலையில் இல்லாம‌ல் இருப்ப‌து அவ‌ன் ம‌ன‌தை பார‌மாய் அழுத்திய‌து. த‌ன் காத‌லைத் த‌ன‌க்கு சொந்த‌மாக்கிக் கொள்ள‌ முடியாத‌ நிலை அவ‌ன் தூக்க‌த்தை, பசியை விர‌ட்டிய‌து. பெற்று வளர்த்த தாயை காப்பாற்ற இயலாத தன் இயலாமையைக் கண்டு அவன் மீதே அவனுக்கு வெறுப்பு வந்தது.

விர‌க்தி த‌னிமைப்ப‌டுத்தும். அவ‌னையும் த‌னிமைப்ப‌டுத்தியிருந்த‌து மொட்டை மாடியில். இந்த‌ விர‌க்தியை வாழ்நாளில் ஒருமுறையேனும் ச‌ந்திக்காத‌ ம‌க்க‌ள் யாருமில்லை. கோழைக‌ள் விப‌ரீத‌ முடிவைத் தேடுவார்க‌ள். முருக‌ன் கோழைய‌ல்ல‌. நிதான‌மாய் சிந்தித்தான்.

க‌டின‌மான‌ காரிய‌த்தை முத‌லிலேயே செய்து விட்டால் பின் வ‌ரும் அனைத்துக் சுல‌ப‌மே. க‌டின‌மான‌தும், அதிக‌ ச‌ம்ப‌ள‌ம் கிடைக்க‌ப் பெறுவ‌துமான‌ வேலைக்கு முய‌ற்சி செய்தால்தான், குறைந்த‌ப‌ட்ச‌ வேலையாவ‌து க‌ட்டாய‌ம் கிடைக்கும். அந்த‌ வ‌கையில் பி.பி.ஒ வேலைக‌ள் தான் முத‌லில் வ‌ருகின்ற‌ன‌. பி.பி.ஒ வேலைவாய்ப்புக்க‌ளில் முக்கால் ச‌த‌வீத‌ம் ஆங்கில‌ப்புல‌மையைச் சார்ந்தே இருக்கிற‌து. வ‌ள‌ர்த்துக் கொள்ள‌ வேண்டிய‌ திற‌மையும் அதுதான். 216 எழுத்துக்க‌ளைக் கொண்ட‌ த‌மிழைக் க‌ரைத்துக் குடிக்க‌ முடியுமென்றால்... அதில் எட்டில் ஒரு ப‌ங்கு ம‌ட்டுமே உள்ள, மொத்த‌மே 26 எழுத்துக்க‌ளை ம‌ட்டுமே கொண்ட‌ ஆங்கில‌ம் எப்ப‌டி ச‌வாலாக‌ இருக்க‌ முடியும்?

மேலும், தொட‌ர்பு கொள்ளும் எந்த வெளிநாட்ட‌வ‌ரிட‌மும்‌ அதிக‌ம் போனால் ஐந்து நிமிட‌ங்க‌ளுக்கு மேல் பேச‌ வேண்டிய‌ தேவை இராது. ஐந்து நிமிட‌ங்க‌ளில் என்னென்ன‌ பேசிவிட‌ முடியும் என்று சுல‌ப‌மாக‌ க‌ணிக்க‌லாம். அதை, ச‌ப்த‌ம் முத‌ற்கொண்டு ஒரு பாட‌ல் போல ம‌ன‌ப்பாட‌ம் செய்துவிட்டால் வேலை முடிந்த‌து. த‌மிழின் வெண்பா, தொல்காப்பிய‌ம், அக‌நானூறு முத‌லானவ‌ற்றில் உள்ள‌, உச்ச‌ரிக்க‌ க‌டின‌மான‌‌ பாட‌ல்க‌ளையே அடிப்பிற‌ழாம‌ல் ம‌ன‌ப்பாட‌ம் செய்து ஒப்பித்த‌ த‌ன்னால், 26 எழுத்துக்க‌ளில் ஆங்கிலத்தை அவர்கள் எதிர்பார்க்கும் ஸ்டைலில் பேச‌ முடியாதா? நிச்ச‌ய‌ம் முடியும். எந்த‌ வித்தையும் ப‌ழ‌க‌ப்ப‌ழ‌க‌ வ‌ச‌ப்ப‌டும்.

முருக‌ன் ந‌ம்பிக்கை பூண்டான். பி.பி.ஓ வேலைவாய்ப்புக‌ளுக்கு த‌யார் செய்யும் ஒரு க‌ன்ச‌ல்ட‌ன்சி க‌ம்பெனியை ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்து அணுகினான். த‌வ‌ணையில் 3500 ரூபாய் ஃபீஸ் க‌ட்டுவ‌தாக‌ச் சொல்லிச் சேர்ந்தான். அங்கு ஆங்கில‌ உச்ச‌ரிப்பு ப‌ழ‌கினான். ஒரு தொலைபேசி உரையாட‌லில் அதிக‌ப‌ட்ச‌ம் என்னென்ன‌ அம்ச‌ங்க‌ள் இருக்குமென்று வ‌கை பிரித்து, ஒவ்வொன்றாய் பேசிப் ப‌ழ‌கினான். வீட்டில் த‌னிமையில் க‌ண்ணாடி முன் அம‌ர்ந்து ஒரு பாட‌ல் போல் சொல்லிப்பார்த்து ப‌ழ‌கினான். அவ‌ன் எதிர்பார்த்த‌தையும் விட‌ ஆங்கில‌ம் மிக‌ சுல‌ப‌மாக‌ வ‌ந்த‌து. த‌மிழின் தொன்மைக்கு முன் ஆங்கில‌ம் எம்மாத்திர‌ம்?



அவ‌ன் முய‌ற்சியை, புத்திசாலித்த‌ன‌மாய், ஒரு தொலைபேசி உரையாட‌லைக் குறிவைத்து, வ‌கை பிரித்து அவ‌ன் அணுகிய‌ முறையை, அதில் காட்டிய‌ க‌டின‌ உழைப்பை, உச்ச‌ரிப்பில் காட்டிய‌ நுணுக்க‌த்தை க‌ன்ச‌ல்ட‌ன்சி வெகுவாக‌ப் பாராட்டிய‌து. அதுவே அவ‌னை ஒரு ந‌ல்ல‌ பி.பி.ஓ க‌ம்பெனிக்கு நேர்காண‌லுக்கு சிபாரிசு செய்த‌து. நேர்காண‌லில் த‌ன் வெற்றியைப் ப‌திவு செய்த‌ முருக‌னுக்கு மாத‌ம் பதினைந்தாயிர‌ம் ச‌ம்ப‌ள‌த்தில் வேலை கொடுத்தது அந்த கம்பெனி. அது த‌விர‌, மெடிக்க‌ல் இன்ஷுர‌ன்ஸ், போக்குவ‌ர‌த்து, திற‌மையாய் வேலை செய்யும் ப‌ட்ச‌த்தில் ஆறு மாத‌த்திற்கொருமுறை ச‌ம்ப‌ள‌ உய‌ர்வும் அளிப்ப‌தாக‌ உறுதிய‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.

முருக‌ன் இறைவ‌னுக்கு உள‌மாற‌ ந‌ன்றி சொன்னான். கிராம‌த்திற்குச் சென்று அம்மாவிட‌ம் வேலை கிடைத்த‌து ப‌ற்றி சொன்னான். பெற்ற‌வ‌ள் வ‌யிறு குளிர்ந்தாள். ம‌க‌னை உச்சி மோர்ந்தாள். அம்மாவை சென்னைக்குக் கூட்டி வ‌ந்து வாட‌கைக்கு வீடு பிடித்துக் குடிய‌ம‌ர்த்தினான். கேஸ் வ‌ச‌தியும், தவணையில் ஃப்ரிஜ் ம‌ற்றும் வாஷிங்மெஷின் வாங்கி, வ‌ய‌தான‌ அம்மாவிற்கு அதிக‌ வேலையில்லாம‌ல் பார்த்துக் கொண்டான்.

ஒரே ஏரியா என்ப‌தால் மால‌திக்கும், அவ‌ள் வீட்டாருக்கும் விஷ‌ய‌ம் போயிற்று. மால‌தி வீட்டார் முருக‌னைப் பெருமையாய் பேசினார்க‌ள். ஒரு ந‌ல்ல‌ நாளில், மால‌தியிட‌ம் த‌ன் ம‌ன‌ம் திற‌ந்தான் முருக‌ன். மாலதி மெளனமாய்ச் சிரித்து சம்மதம் சொன்னாள். மாலதி மூலமாக அவள் வீடு வ‌ரை விஷ‌ய‌ம் போயிற்று. முருக‌ன் மால‌தியின் ச‌ம்ம‌த‌த்துட‌ன், த‌ன் அம்மாவுட‌ன் மால‌தி வீடு வ‌ந்து பெண் கேட்டான். இரு வீட்டாருக்கும் ச‌ம்ம‌தமாக‌, ஒரு ந‌ல்ல‌ நாளில் மால‌தி முருக‌ன் திரும‌ண‌ம் இனிதே ந‌ட‌ந்த‌து.

இன்று, இதோ இதே சென்னையில், சொந்த‌மாய் வாங்கிய‌ ப்ளாட்டில், கார் வ‌ச‌தியுட‌ன், மால‌தி முருக‌ன் த‌ம்ப‌தி, ஒரு வ‌ய‌து குழ‌ந்தை, 60 வ‌ய‌துக் குழ‌ந்தை (அம்மாதாங்க) ஒன்றுமாக‌ ச‌ந்தோஷ‌மாக‌ வாழ்கிறார்க‌ள். த‌மிழ் அவ‌ர்க‌ள் வீட்டில் துள்ளி விளையாடுகிற‌து.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p38.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License