இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

பச்சை ரிப்பன் பார்சல்

ராம்ப்ர‌சாத்

ம‌ர‌த்தாலான‌ சிறிய‌ டீபாயில், ஒரு சிறிய கோப்பையில் இருந்த தேனீரை யாருடைய முன் அனுமதியுமின்றி ஆற்றிக் கொண்டிருந்தது மாலை நேரத் தென்றல் காற்று. அந்த ஆறிக் கிட‌ந்த‌ டீக்கோப்பையில் தளர்ந்திருந்த மனநிலையுடன் தொடர்ந்திருந்தது 60 வ‌ய‌து ராமச்சந்திரன்தான். ராமச்சந்திரன், மங்களம் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் பிரியா அழகானவள், 30 வயதுக்காரி. திருமணமாகி 5 வயது மகளுடன் இருக்கிறாள். பி.காம் படித்தவளானாலும் புகுந்த வீட்டில் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டபடியால் வேலைக்குச் செல்லவில்லை. முதல் பெண் திருமணம் என்பதால், ராமச்சந்திரன் செலவு பற்றிப் பார்க்காமல் தடபுடலாய் செய்தார். அதனால் நிறைய பாடங்கள் கற்க நேர்ந்தது.

இந்த திருமணங்கள், ஒவ்வொரு முறையும் புதிதாக பாடங்கள் கற்றுக் கொடுக்கத் தவறுவதே இல்லை. யாரொருவர் அனேக திருமணங்களை நடத்தியிருக்கிறாரோ, அவரிடமிருந்து கற்றுக் கொள்ள அந்த பாடங்கள் இருக்கும். அடுத்தவர் திருமணங்களில் இம்மாதிரியான பாடங்கள் ஒரு வகையில் லாபம், கூடமாட ஒத்தாசை செய்பவருக்கு.

இரண்டாமவள் சந்திரிகா, மூத்தவள் அளவுக்கு அழகில்லை என்றாலும் அடுத்த நிலை அழகு. அவளும் பி.காம் படித்திருந்தாள். வயிற்றுப் பிள்ளைக்காரி. பிரசவம் இப்போதோ அப்போதோ என்றிருக்கிறது. சென்ற வருடம் தான் திருமணம் செய்து வைத்தார். மூத்தவளின் திருமணத்தில் கற்ற பாடங்களில் சற்றே சுதாரிப்புடன் தான் செய்தார் சந்திரிகாவின் திருமணத்தை.



கடைக்குட்டி மஞ்சுளா, சற்றே சுமாரானவள். படிப்பிலும் அத்தனை சுட்டி இல்லை. இருந்தாலும் பெயருக்கு பி.ஏ. படிக்க வைத்தார். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துவிட்டார். மாப்பிள்ளை ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராக வேலையில் இருக்கிறார். திரும‌ண‌ம் அடுத்த‌ மூன்றாவ‌து மாத‌த்தில் ஒரு நாள் ந‌ட‌த்த‌லாம் என்று நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்ட‌து. ம‌ஞ்சுளா மாப்பிள்ளைப் பைய‌னுட‌ன் தொலைபேசி உரையாட‌லில் தொலைந்து போய்விட‌, ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ள் அவ‌ர‌வ‌ர் புகுந்த‌ வீட்டிற்கு சென்று விட‌, ம‌ங்க‌ள‌மும் ராம‌ச்ச‌ந்திர‌னும் வ‌ழ‌க்க‌ம் போல் க‌டைக்குட்டியின் திரும‌ண‌த்தைத் திட்ட‌மிட‌லில் ஆகும் செலவைக் க‌ண‌க்குப் போட்ட‌தில் வ‌ந்த‌ ஒரு வித‌ ம‌லைப்புதான் அவ‌ரின் த‌ற்போதைய‌ த‌ள‌ர்ந்த‌ ம‌ன‌ நிலைக்குக் கார‌ண‌ம்.

ஏற்க‌ன‌வே ரிடைய‌ர்டு ஆகிவிட்ட‌வ‌ர். வ‌ரும் பென்ஷ‌ன் ப‌ண‌த்தில் தான் வீட்டு வாட‌கையும், ஜீவ‌ன‌மும். சொந்த‌மாக‌ இருந்த‌ நில‌ம் நீச்சைக‌ளை விற்றுத்தான் ம‌ற்ற‌ இர‌ண்டு பெண்க‌ளின் திரும‌ண‌த்தை முடித்தார். க‌டைக்குட்டி ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌த்தையும் முடித்து விட்டால் போதும். மீதிக்கால‌த்தை வ‌ரும் பென்ஷ‌னில் ச‌மாளித்து விட‌லாம். ஆனால், மஞ்சுளா திரும‌ண‌த்திற்குக் குறைந்த‌து மூன்று ல‌ட்சாமாவ‌து தேவைப்ப‌டும். கையில் ஒரு லட்சம் தான் இருக்கிறது. ச‌ந்திரிகாவின் திரும‌ண‌த்தில் மாப்பிள்ளை வீட்டார் பாதித் திரும‌ண‌ செல‌வை ஏற்றுக் கொண்டாலும், வ‌ர‌த‌ட்ச‌ணையாக 4 ல‌ட்சம் பெறுமானமுள்ள நகை கேட்ட‌ன‌ர் என்றுதான் ஊரிலிருந்த‌ சொந்த‌ நில‌த்தை விற்று நகையாக 35 சவரன் போட்டு திரும‌ண‌ம் முடித்தார்.

இப்போது ம‌ஞ்சுளாவிற்கும் அதே நிலைதான். ப‌ண‌த்திற்கு என்ன‌ செய்வ‌து என்று 2 நாட்க‌ளாக‌ யோசித்து யோசித்து கிறுகிறுத்து போனது. ஒரு மாற்றம் தேவை என்கிற காரணத்தாலும், பிள்ளைதாய்ச்சிக்காரி சந்திரிகாவைப் பார்த்தும் சில நாட்களாகிப் போய் விட்டதாலும், அவளைப் பார்க்க தம்பதிகள் இருவரும் புறப்பட்டனர். சந்திரிகாவின் வீடு அடுத்த 15வது கிலோமீட்டரில் தான் உள்ளது. பஸ் ஸ்டாண்டிலிருந்து ஆட்டோ பிடித்து அவள் வீடு சென்றனர் தம்பதிகள். வழக்கமான உபசரிப்புகளுடன் தொடங்கியது விருந்தோம்பல், பின் அதைத் தொடர்ந்த உரையாடல் பேச்சுக்களில் மஞ்சுளாவின் திருமணம் தொடர்பான பேச்சுக்கள் மீதான ஆர்வம் சந்திரிகாவின் மாமியார், மாமனார், மாப்பிள்ளை தரப்பிலிருந்து வராதது கண்டு எதையோ உணர்ந்தவராய், பெட்ரூமில் மகளுடன் பேசிக் கொண்டிருந்த மங்கலத்தைக் கிளம்பும்படி சமிஞ்கை செய்தார் ராமச்சந்திரன். சந்திரிகாவின் புகுந்த வீட்டினர், மஞ்சுளாவின் திருமணத்திற்கு எங்கே தங்களிடம் பணம் கேட்ட ுவிடுவாரோ என்று நினைத்திருக்கலாம் என்றே நினைத்திருந்தார் ராமச்சந்திரன்.



புறப்படும் முன் குங்குமம் எடுக்கப் பீரோவை சந்திரிகா திறந்து மூடியதில், சந்திரிகாவின் பள்ளிப்பருவ பச்சை ரிப்பனில் சந்திரிகாவிற்கு போட்ட 35 சவரன் நகைகள் ஒன்றாக முடிந்து கிடந்தது தெரிந்தது. மஞ்சுளாவிற்கும் அதே போன்று செய்து போட வேண்டும். விந்தை உலகம். யாருக்கும் பயணில்லாமல் 35 சவரன் தங்கம் பீரோவில் உறங்குகிறது. ஆனாலும் இதற்குத்தான் மீண்டும் ஓட வேண்டியிருக்கிறது இந்த வயதான காலத்தில். ராமச்சந்திரன் நினைத்துக் கொண்டார். அலுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும். தம்பதிகள் தங்கள் வீடு திரும்பினர்.

நாளை மீதான பயம், என்ன நடக்குமோ என்பதில் இருக்கும் ஒரு தெரியாத தன்மை, எக்குதப்பாக ஏதாவது நடந்துவிட்டால் தன்மானத்தையும், சுயகவுரவத்தையும் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்பந்தம், அதற்குத் தேவை செல்வம், இந்த எண்ணமே செல்வத்தைப் பதுக்குவதில் முடிகிறது. மனிதன் எப்போது மனிதத்தின் மேல் நம்பிக்கை வைக்க மறந்தானோ, மனிதத்தை புரிந்து கொள்ள மறந்தானோ, இயற்கை இதுதான் என்றும், இயற்கையை இப்படித்தான் கையாள வேண்டும் என்று தான் நினைத்த தவறான ஒன்றை ஆணித்தரமாக நம்பத் தொடங்கினானோ அப்போதுதான் தொடங்கியிருக்க வேண்டும் இது போன்ற முகமூடித்தனங்கள்.

மறு நாள், வரவு செலவுக் கணக்குத் தீர்க்க தன் முந்தைய வருட கையேட்டைப் புரட்டிக் கொண்டிருந்த போது ராமச்சந்திரனின் கண்ணில் பட்டது அந்த விசிட்டிங் கார்டு. அது 5 வருடம் முன்பு தான் வேலையில் இருந்த போது, ஒரு நாள், விப‌த்தில் சிக்கிக் கொண்ட‌ ஒருவ‌ரை ம‌ருத்துவ‌ம‌னைக்கு கொண்டு சென்று காப்பாற்றிய‌த‌ற்காக‌, அந்த‌ ந‌ப‌ர் 'என்ன‌ உத‌வியானாலும் தொட‌ர்பு கொள்ளுங்க‌ள்' என்று த‌ந்த‌ அவ‌ரின் கார்டு. அவர் பெயர் கூட உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் கிட்ட‌த்த‌ட்ட‌ அதை ம‌ற‌ந்தே போயிருந்தார். இப்போது நினைவுக்கு வ‌ந்த‌து. அவ‌ர் சொந்த‌மாக ஏதோ வைத்திருந்து வாட‌கைக்கு விடுவ‌தாக‌ சொன்ன‌து நினைவுக்கு வ‌ந்த‌து. என்ன‌ வைத்திருந்தார் என்று நினைவில் இல்லை. ஒரு வேளை அது திரும‌ண‌ ம‌ண்ட‌ப‌மாக‌ இருந்தால் ம‌ண்ட‌ப‌ செல‌வு குறையுமே என்று தோன்றிய‌து ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு. ஏன் குழ‌ப்ப‌ம். ஒரு எட்டு போய் பார்த்து விட்டுத்தான் வ‌ருவோமே என்று கிள‌ம்பினார் அந்த‌ முக‌வ‌ரிக்கு.



அந்த‌ முக‌வ‌ரி உசைனின் வீடு. உசைனுக்கு ந‌ன்றாக‌ நினைவில் இருந்த‌து. ராம‌ச்சந்திர‌னைப் பார்த்த‌தும் க‌ண்டு கொண்டார். கைப்ப‌ற்றி வ‌ர‌வேற்று அம‌ர‌ வைத்து, குடும்ப‌த்தினர் அனைவ‌ரையும் அறிமுக‌ப்ப‌டுத்தினார். மிக‌வும் நெகிழ்ந்தார். ராம‌ச்ச‌ந்திர‌ன் த‌ன்னை காப்பாற்றியிராவிட்டால் தானே இல்லை என்ப‌து போல் பேசினார். பேச்சுக்க‌ள் வெகு நேர‌ம் தொட‌ர்ந்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி பேசினார். பேச்சு வாக்கில், உசைன் வைத்திருப்ப‌து ஒரு ஷாப்பிங் காம்பிள‌க்ஸ் என்ற‌றிந்த‌து ச‌ற்றே ஏமாற்ற‌ம‌ளித்த‌து. ம‌ஞ்சுளாவின் திரும‌ண‌ம் ப‌ற்றி அறிந்த‌ உசைன் தானே உத‌வுவ‌தாக‌வும், த‌ன்னைக் காப்பாற்றிய‌த‌ற்கு கைமாறாக‌ செய்ய‌ நினைப்ப‌தாக‌வும் சொன்னார். ஒரு வார‌த்தில் 35 ச‌வ‌ர‌னுக்கான‌ ப‌ண‌த்தை த‌ருவ‌தாக‌ வாக்க‌ளித்தார் உசைன். ராம‌ச்ச‌ந்திர‌ன் நெகிழ்ந்தே போனார்.

ஒரு வார‌ம் க‌ட‌ந்த‌து. தன் வீட்டில் வைத்து 4 ல‌ட்ச‌ம் ரூபாயை ராமச்சந்திரனுக்கு அளித்தார் உசைன். திருப்பித்த‌ர‌ வேண்டிய‌தில்லை என‌வும், ம‌ஞ்சுளா த‌ன‌க்கும் ம‌க‌ள் தானென்றும் ம‌ஞ்சுளா திருமணத்தில் குடும்ப சகிதம் சந்திப்பதாகவும், திருமணத்திற்கான வேலைகளை மேற்கொண்டு கவனிக்கும்படியும் சொல்லிய‌னுப்பினார். ராம‌ச்ச‌ந்திர‌ன் ப‌ஸ்ஸில் வீடு திரும்புகையில் ம‌ழை ச்சோவென‌ பெய்ய‌த் தொட‌ங்கியிருந்த‌து. ராம‌ச்ச‌ந்திர‌னுக்கு ஏனோ அன்றைய‌ ம‌ழை உசைனின் நிமித்த‌ம் பெய்கிற‌தோ என்று ப‌ட்ட‌து.

வீடு நுழைந்த‌தும் ச‌ந்திரிகாவின் அழும் குர‌ல் ச‌ன்ன‌மாக‌ கேட்டுக் கொண்டிருந்த‌து. ச‌ந்திரிகாவின் வீட்டுல் எல்லோரும் ஒரு திரும‌ண‌த்திற்கு சென்றிருந்த‌ போது பீரோ புல்லிங் கும்ப‌லால் அவ‌ள் பீரோவில் இருந்த‌ 35 ச‌வ‌ர‌ன் ந‌கை திருடு போயிருந்த‌தை அழுகையுட‌ன் ச‌ந்திரிகா விள‌க்கிக் கொண்டிருக்க‌ ம‌ங்க‌ள‌மும், ம‌ஞ்சுளாவும் தேற்றிக் கொண்டிருந்த‌ன‌ர். அங்கே உசைன் த‌ன் ரூமில் தொலைப்பேசியில் க‌ட்ட‌ளையிட்டுக் கொண்டிருந்தார்.

'ஃப‌ர்ஹான், கோட‌ம்பாக்க‌த்துல‌ ஒரு வீடு ஒரு 10 நாளா பூட்டியே கிட‌க்கு. நான் விசாரிச்சிட்டேன். பெரிய பணக்காரன் வீடுதான் அது. நீ கை வ‌ச்சிடு. எல்லா ப‌ண‌மும் ஒரே இட‌த்துல‌ குவிஞ்சிட்டா அப்புற‌ம் ம‌த்த‌வ‌ங்க‌ எப்ப‌டி வாழ‌ற‌து. நீ கை வ‌ச்சிடு. எவ்ளோ ந‌கைன்னு சொல்லு. நான் சேட்கிட்ட‌ பேச‌னும்'.

அவ‌ருக்குப் பின்னால், திற‌ந்திருந்த‌ பீரோவில், ஒரு ப‌ச்சை ரிப்ப‌ன் காற்றில் தொங்கவிடப்பட்டு ஆடிக் கொண்டிருந்த‌து.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p44.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License