இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

திசைகள் மாறிவிடுமோ?

ராம்ப்ரசாத்

வீட்டு வாசலில் அம்மா ஆசை ஆசையாய் வளர்த்த பட்டு ரோஜா, செம்பருத்தி, கனகாம்பரம், குரோட்டன்ஸ் முதலான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்த தோட்டத்தினூடே வேயப்பட்ட நடைபாதையில் நின்றபடி ஆக்ஸஸ் கார்டு, அலைபேசி, வாலட் எனப்படும் பணப்பை முதலானவைகளை எடுத்துக் கொண்டோமா என்று மீண்டும் ஒரு முறை அவதானிக்கையில் தான் கவனித்தேன்.

அலைபேசி மின்சார‌ தாகம் கொண்டிருந்ததை. சார்ஜரை அலுவலகத்திலேயே முன்தினம் வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. அலுவலகம் செல்லும் வரை பெரிதாக அழைப்புகள் இருக்காது என்பதால், அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டு பேருந்து நிலையத்திற்கு விரையத் தொடங்கினேன் என் சைக்கிளில்.

பேருந்து நிலையம் வீட்டிலிருந்து 2 கிலோ மீட்டர் தூரம். நாங்கள் இப்போது இருப்பது எங்கள் சொந்த வீட்டில். இந்த வீடு கட்டிய புதிதில் அப்பா தான் தினமும் காலையில் பேருந்து நிலையம் வரை பைக்கில் கொண்டு வந்து விடுவார். தயாராய் என் அலுவலக பேருந்து நின்றிருக்கும். ஏறிக் கொண்டால் அடுத்த 2 மணி நேரத்தில் அலுவலகத்தில் இருப்பேன். என்னைக் கொண்டு வந்து விட்ட பின் வீட்டிற்கு திரும்பி அப்பா, அண்ணனை பிக்கப் செய்ய வேண்டி இருக்கும். இப்படி ஒரு மாதம் போனது. தினமும் 58 வயது கடந்த அப்பாவை இப்படி வரவழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லாத காரணத்தால், ஒரு சைக்கிள் வாங்கினேன்.

முதன் முதலில் சைக்கிளில் நான் சென்ற நாளை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். துவைத்து அயர்ன் செய்யப்பட்டு இன் செய்யப்பட்ட சட்டை, பாண்ட், கறுப்பு நிறத்தில் இடுப்பை இறுக்கமாய் கட்டிக்கொண்ட பெல்ட், கறுப்பு நிறத்தில் எக்ஸிக்யூட்டிவ் ஷூ, இடுப்பில் இடது பக்கம், தொங்கிக் கொண்டிருக்கும் ஆக்ஸஸ் கார்டுடன் ஐந்து இலக்க சம்பளம் வாங்கும் ஒரு பன்னாட்டு நிறுவன ஊழியனைப் பார்க்க வியப்பாக‌வோ அல்லது பெயரிடப்படாத வேறு ஏதோ ஒரு உணர்வாகவோ இருந்திருக்க வேண்டும். தெருவே என்னை ஒரு மாதிரியாக பார்த்தது. ஆனால் எனக்கு எந்த மாதிரியும் தோன்றவில்லை. என் தேவை பூர்த்தியடைந்த திருப்தி எனக்கு.



நான் ஒவ்வொரு நாளும் விடை பெறுகையில், அப்பா கையில் டீ கோப்பையுடன் அன்றைய பேப்பரிலோ அல்லது ஆனந்த விகடனிலோ மூழ்கி இருப்பார். அப்பாவைத் தொந்தரவு செய்யவில்லை, அவருக்கு கஷ்டம் கொடுக்கவில்லை என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். யாருக்கும் தொந்தரவாக இல்லாதிருப்பதில் ஒரு திருப்தி. இரண்டே கிலோமீட்டர் தூரத்துக்கு சைக்கிள் தான் ஏற்ற வாகனம். இதை ஒப்புக்கொள்வதிலோ, பின்பற்றுவதிலோ என்ன குறைந்து விடப்போகிறது.

ஆனால் உலகம் அப்படியல்ல. சமூகம் அப்படியல்ல. கேள்விகள் கேட்காமல் சுற்றி உள்ளவர்களைப் பார்த்து அப்படியே வாழ மட்டுமே பழக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் சம்பளம் வாங்கினால் மொபெட், இருபதாயிரம் வாங்கினால் பைக், நாற்பதாயிரம் வாங்கினால் கார், இதுதான் வருமானத்தைக்கொண்டு உருவான ஜாதிகளின் அடையாளம் இங்கே. அந்த அடையாளங்கள் இல்லாத யாரையேனும் பார்க்க நேர்ந்தால் ஏதோ வேற்று கிரகவாசியை பார்ப்பது போல் இருக்கும் இவர்கள் பார்வை.

சிந்த‌னைக‌ளில் மூழ்கிய‌ப‌டி சைக்கிள் மிதித்த‌தில் பேருந்து நிலைய‌ம் வ‌ந்து விட்டேன். அருகே இருந்த‌ சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிளைப் பூட்டிவிட்டு வெளியில் வந்து, த‌யாராக‌ நின்றிருந்த‌ க‌ம்பெனி பேருந்தில் ஏறிக்கொண்டேன். வெய்யில் சுள்ளென்று அடித்த‌து. அத‌னால் வெய்யில் ப‌டாத‌ பேருந்தின் கூரை நிழ‌ல் ப‌டிந்த‌ இருக்கையில் அம‌ர்ந்து கொண்டேன். ச‌ற்றைக்கெல்லாம் பேருந்து சாலையில் ஒட‌த் துவ‌ங்கியிருந்த‌து.

சிறிது நேர‌ம் க‌ழித்து, சுந்த‌ர் ஒவ்வொரு சீட்டாக‌ வ‌ந்து ஒரு ஆங்கில‌ பேப்ப‌ரை வைத்துவிட்டு போனான். சுந்த‌ர் அந்த‌ பேருந்தின் கிளீன‌ர். வயது பதினெட்டு இருக்கும். 8வதுடன் படிப்பை நிறுத்தியவன். பேருந்தைக் கிளீன் செய்வ‌து, யாரோ நான்கு ப‌ண‌க்கார‌ர்க‌ள், ஆங்கில‌ ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌து எப்ப‌டியென்று பார்க்க‌ இல‌வ‌ச‌மாக‌ வினியோகிக்கும் ச‌ற்றே உய‌ர்ர‌க‌ பேப்ப‌ரில் அச்ச‌டிக்க‌ப்ப‌ட்ட‌ செய்தித்தாள்க‌ளை ப‌ய‌ணிக்கும் ஒவ்வொருவ‌ருக்கும் த‌ருவ‌து, ப‌ய‌ண‌ம் செய்ப‌வ‌ரிட‌ம் வ‌ருகைப் ப‌திவேட்டில் கையெழுத்து வாங்குவ‌து இத‌ல்லாம் இவ‌ன் வேலை. இவ‌னுக்கு ஒரு அம்மா இருக்கிறாள். பாவ‌ம், உட‌ல் ந‌ல‌ம் குன்றிய‌வ‌ள். ஏதோ ம‌ருத்துவ‌ பிர‌ச்ச‌னை. அவ‌ளைக் காப்பாற்ற‌ தான் வேலை செய்வ‌தாக‌ முன்பொரு நாள் சொல்லியிருந்தான்.



பேப்ப‌ர் ப‌டித்துக கொண்டே ய‌தேச்சையாக‌ அவ‌னை க‌வ‌னித்த‌தில் அவ‌ன் முக‌ம் சோர்வில் ந‌னைந்திருந்த‌து தெரிந்த‌து. பார்த்துக் கொண்டிருந்த‌ பேப்ப‌ரை மடித்து வைத்துவிட்டு அவ‌ன் ப‌க்க‌ம் திரும்பினேன். 'சுந்த‌ர்' கூப்பிட்டேன்.

'ண்ணா' திரும்பினான்.

'இங்க‌ வாயேன்'.

இர‌ண்டு வ‌ரிசை த‌ள்ளி உட்கார்ந்திருந்த‌ என் இருக்கைக்கு வ‌ந்து நின்றான்.

'என்ன‌ ட‌ல்லா இருக்க‌'.

'ஒண்ணுமில்லனா'

'சும்மா சொல்லுடா. ஏதாவ‌து பிர‌ச்ச‌னையா?'

ச‌ற்றே த‌ய‌ங்கிய‌வ‌ன், நான் ஏற்க‌ன‌வே அவ‌னிட‌ம் பேசி ஓர‌ள‌வு அறிமுக‌மான‌வ‌னாத‌லால் தொட‌ர்ந்தான்.

'அம்மாக்கு தின‌த்துக்கு மாத்திரை வேணும்ணா, ஆனா தின‌த்துக்கு துட்டு கிடைக்கிற்தில்ல‌ணா. இந்த‌ வேலைல‌ கிடைக்கிற‌ துட்டு வூட்டு செல‌வுக்கே போவுதுணா. வேற‌ வேலை பாக்க‌லான்னா இப்போ வாங்க‌றத‌ விட‌ க‌ம்மியாதான்னா கிடைக்கும். அதான் இன்னா ப‌ண்ற‌துன்னே புரில‌னா' என்றான் சோக‌த்துட‌ன்.

'அம்மா வேலை பாக்குறாங்க‌ளா?'

'முன்ன‌ இட்லி க‌டை போட்ருந்துச்சுனா. அப்பால‌ முடில‌ அதுக்கு. வீட்ல‌ தான் கிட‌க்குது. அதுக்கு எதுனா ப‌ண்ண‌னுனா'.



'எலேய், வ‌ராங்க‌ பாரு.சைன் வாங்கு' அடுத்த‌ நிறுத்த‌த்தில், க‌த்திய‌ டிரைவ‌ரின் குர‌லுக்கு இருவ‌ரும் திரும்பினோம்.

'அப்ப‌ற‌ம் வ‌ரேன்னா' என்ற‌ப‌டியே ஓடினான் அவ‌ன்.

பாவ‌ம் இவ‌ன். ப‌டிக்கும் வ‌ய‌தில் வேலை செய்கிறான். அப்ப‌டியும் ப‌ண‌த்தேவை தீர‌வில்லை. 18-20 வயது வரை பிள்ளைகளுக்கு உலகம் முழுதும் புரியாது. பெற்ற‌ குழ‌ந்தைக‌ளுக்கு ந‌ல்ல‌ ப‌டிப்பும், உட‌ல் ஆரோக்கிய‌த்தையுமாவ‌து பெற்றோர்க‌ள் த‌ர‌வேண்டும். அதன் பின் மேலே வருவதும் தாழ்ந்து போவதும் அவர்கள் பாடு. அப்ப‌டித் த‌ர‌ முடியாத‌வ‌ர்க‌ள் குழ‌ந்தைக‌ள் பெற்றுக் கொள்வ‌தைவிட‌, த‌ங்க‌ள் நிலையை உய‌ர்த்திக் கொள்வ‌தில் அக்க‌றை காட்டுவதே சாலச்சிறந்தது. நிலையை உய‌ர்த்திக்கொண்ட‌ பிற‌கு பிள்ளைக‌ள் ப‌ற்றி யோசிக்க‌லாம். ஆனால், அப்ப‌டி ந‌ட‌ப்ப‌தில்லை. எல்லோரையும் பார்த்து தானும் திரும‌ண‌ம் செய்து, ம‌ல‌ட்டுப் ப‌ட்ட‌த்துக்கு ப‌ய‌ந்து பிள்ளை பெற்று, காப்பாற்ற‌ முடியாத‌ நிலை வ‌ருகையில், அவ‌ர்க‌ள் ப‌டிப்பை விடுத்து வேலைக்குப் போக‌ வைத்து, இப்ப‌டியும்தான் அறியாமை வ‌ள‌ர்க்கிறார்க‌ள் இந்த‌ தேச‌த்தில்.

வாழ்க்கை இம்மாதிரியான‌ எல்லா சிறுவ‌ர்க‌ளையும் ஒரே மாதிரி ந‌ட‌த்துவ‌தில்லை. சில‌ர் உருப்ப‌டியாக‌ தொழில் க‌ற்று வாழ்கையின் ஏதோவொரு க‌ட்ட‌த்தில் தேர்ந்து த‌ங்க‌ள் பிள்ளைக‌ளைப் படிக்க வைக்கும் அளவிற்கேனும் உயர்கிறார்கள். வேறுசில‌ர், ச‌முதாய‌ச் சீர்கேடான‌ விஷ‌ய‌ங்க‌ளை ச‌ந்திக்க‌ நேர்ந்து குற்ற‌வாளி ஆகிறார்க‌ள்.

ஐந்து வருடங்கள் கழித்து இவனை வாழ்க்கை என்னவாக மாற்றப் போகிறது என்கிற சிந்தனை எழும்பியிருந்தது என்னுள். வாய்ப்புக்கள் தான் ஒரு மனிதனை, எந்த திசையில் அவனின் பயணம் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறது. அந்த வாய்ப்பு ஒரு குற்றத்தின் அல்லது நாளைய‌ சமூக சீர்கேட்டின் இன்றைய கதவாக இருப்பின், அதை உணரும் முதிர்ச்சியோ பக்குவமோ இல்லாத நிலையில், சமூகத்தின் இருட்டுப் பாதை எந்த வித எதிர்ப்புமின்றி அப்படியே சுவீகரித்துக் கொள்கிறது. என்ன செய்கிறோம், என்னவாக ஆகிறோம் என்றே தெரியாமல் அதன் ஆழத்தில் புதைந்து போய் விட நேர்கிறது. திரும்பி வருதல் இல்லாத ஒரு ஒற்றையடிப் பாதை, ஒருவழிப்பாதை அது.

என்றோ ஒரு நாள், நான்கு பேர் ஒன்றாய் கூடி ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டு உணவு, துணிமணிகள் வாங்கி ஒரு அனாதை இல்லத்திற்கு சென்று, அங்கிருக்கும் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வருவதில் என்ன இருக்கிறது. அவர்கள் அனாதைகள் என்கிற எண்ணம் அந்த இடத்தை விட்டு வந்த பிறகு அவர்களின் மனதில் தங்கிவிடாதா? இப்படியெல்லாம் உதவுவதைவிட, இது போல், காலத்தின் போக்கில், வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களில் நேரப்போகும் எதையும் எவ்வித உதவிகளும் இன்றி, எதிர் நோக்கும் சுந்தர் மாதிரியானவர்களுக்கு நல்ல வாய்ப்புக்களை வழங்குவது எவ்வளவோ மேல். இந்த ஒரு வாய்ப்பு அவன் ஒட்டு மொத்த வாழ்க்கையின் திசையை தீர்மானிக்க உதவினால் போதுமே. ஒரு நாளின் பொருள் ஈட்ட நல்ல வழிகளும் இருக்கிறது, அதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவனுக்குள் விதையாய் விழுந்தாலும் போதுமே.



பேருந்து அலுவலகம் நெருங்கி நின்றது. ஒரு முடிவுடன் கடைசியாய் எழுந்தேன். அவனைக் கடக்கையில் அவனை தனியே வரும்படி அழைத்தேன். வந்தான். என் 5 நிமிட தகவல் பறிமாற்றம் அவனுக்குள் ஒரு தெளிவைக் கொடுத்திருந்தது அவன் முகத்தில் தெரிந்தது. மாலை சந்திப்பதாய்ச் சொல்லி விலகினேன்.

அதன் பிறகு அலுவலக வேலையில் மூழ்கியதில் தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு இரவுப் பேருந்தையே பிடிக்க முடிந்ததில் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. அடுத்து வந்த வாரத்தில் விடுப்பில் இருந்த நான், அவனை எதிர் நோக்கி அண்ணா நகர் தபால் அலுவலகம் சென்றபோது, நான் சொன்னது போலவே நின்றிருந்தான். அவனை நெருங்குகையில் என்னைப்பார்த்தவுடம் அடையாளம் கண்டு சிரித்தபடி கிட்ட வந்தான்.

'ன்னா, தாங்க்ஸ்னா. நீங்க சொன்னாபோலயே பஸ்ல போடுற பேப்பர் மொத்தத்தையும் இங்க அண்ணாச்சி கடில போடறேன்னா. இருவது ரூவா குடுக்குறாரு. நீங்க சொன்னா போல இந்த ரெவனு இஸ்டாம்பு 3 கிலோ மீட்டர் தள்ளிதான்னா கடிக்கிது. அதுல ஒரு ரூவா ரெவனு இஸ்டாம்பு அங்க வாங்கியாந்து இங்க‌ ஒண்ணேகாலுக்கு விக்கறேன்னா. ரெண்டு தபா விக்கிறதுல ஒரு நாளைக்கு 30 ரூவா கிடைக்கிதுனா. இது போதும்னா. அம்மாவுக்கு மருந்துக்காச்சும் நிக்கிதுனா'. என்றான் மலர்ச்சியோடு.

'அம்மாவ ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போய் காமி. இந்தா' என்றபடி ஒரு 500 ரூபாய்த்தாளை அவன் கையில் திணித்தேன்.

'தாங்க்ஸ்னா' என்றவன் கண்கள் பனித்திருந்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p46.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License