இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

மீன் தொட்டி

பாளை. சுசி

“அப்பா..”

“என்னடா..”

“எனக்கு வேனும்பா..”

“திரும்பவும் ஆரம்பிச்சிட்டியா..?”

“எல்லா பிரண்ட்ஸ் வீட்லேயும் இருக்கு..”

“இந்தா..பாரு.. அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.. படிக்கிற பையன் நீ... அதையே பாத்துக்கிட்டு இருப்பே... படிப்புக் கெட்டுப் போகும்... தெரியுதா?..”

மோகன் ஆறாம் வகுப்பு இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிற பையன். நன்றாகப் படிப்பான். தன் காரியங்களில் கண்ணும் கருத்துமாக இருப்பான். கூடப்பிறந்தது ஒரு தங்கை மட்டும். அப்பா, தேவா, ஈபீ ஆபீஸில் கிளார்க். அம்மா, பாக்கியம், வீட்டோடு. சொந்த வீடு. எளிய இனிமையான வாழ்க்கை!

மோகனின் கண்களில் பனிப்படலம். முகம் வாடி விட்டது. சோர்வுற்றவனாய் பையையும், ரெடியாக இருந்த டிபன் பாக்ஸையும் எடுத்துக் கொண்டு, அம்மாவை ஏறிட்டு முறைத்து ஒரு பார்வை பார்த்து விட்டு, வெறுப்போடு ஸ்கூலுக்கு கிளம்பினான்.

தாய்க்குத் தெரியாதா தன் பிள்ளையின் ஏக்கம்? அவன் தன்னைப் பார்த்த பார்வையில் பொதிந்திருந்த அர்த்தத்தைப் புரிய முடியாதவளா அவள்? “நீ கையால் ஆகாதவள் தானே..”, என்பதை எவ்வளவு நாசூக்காய் தன் பார்வையால் தெரிவித்து விட்டுச் செல்கிறான்! அவளின் சதையும் ரத்தமும் தானே அவன்... கண்களில் கசிந்த நீரை முந்தானையால் ஒற்றிக் கொண்டாள்.

“ஏங்க... அவனும் தான் எத்தன நாளா கேட்டுக்கிட்டு இருக்கான்... வாங்கிக் கொடுத்தாதான் என்ன..? அப்படி என்ன கேட்டுட்டான்?.. அவன் வயசுப் பையன்க வீட்ல எல்லாம் இருக்காம்.. அதனால..” அதற்கு மேல் பாக்கியத்திற்கு வார்த்தைகள் வரவில்லை. தொண்டை அடைத்தது. நன்றாகத் தெரியும் தன் கணவரைப் பற்றி. யார் சொல்லியும் எதுவும் கேட்க மாட்டார். 15 வருட குடும்ப வாழ்க்கையின் அனுபவமல்லவா? அவராக எது செய்தாலும், அந்த முயலுக்குத் தான் நாலு காலு..! ஆனாலும் தன் பங்குக்கு கடனே என்று சொல்லி வைத்தாள் - பெத்த பாசமல்லவா?.



“பாக்கியம்.. டிபன் பாக்ஸ் ரெடியா?. நான் ஆபீஸ் போர வழியிலே மாசிலாமணி வீட்டுக்குப் போயிட்டுப் போரேன்.. அவங்க வீட்டுப் பை இங்க இருக்குல்லா.. அதைக்குடு.. எடுத்துட்டுப் போரேன்..” தேவா ஆபீஸ்க்கு ஆயத்தமானார்.

“வேண்டாங்க... அந்தப் பையில ஏதாவது போட்டுக் கொடுக்கனும். நான் பிறகு மோகன் கிட்ட கொடுத்து விடுறேன்..”

மாசிலாமணியும், தேவாவும் நல்ல நண்பர்கள். ஒத்த வயதினர். அதே போல் மாசிலாமணியின் மகன், குமாரும், மோகனும் உற்ற நண்பர்கள். இருவரும் ஒரே பள்ளிக்கூடம். ஒரே வகுப்பு.

மாசிலாமணியின் வீட்டை அடைந்த தேவாவை, பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்த குமார் வரவேற்றான். குமார் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டான்.

“அப்பா எங்கே?”

“நேற்று அப்பா ஒரு கண்ணாடி மீன் தொட்டி வாங்கிட்டு வந்தாங்க... அதப் பாத்துட்டு இருக்காங்க... நான் கூப்பிடுறேன்..” குமார் சொன்னான்.

“வேண்டாம் குமார்.., மீன் தொட்டி எங்க இருக்கு? நானும் பாக்கனும்..”, தேவா சொல்ல,

குமார்,“ஏங்கூட வாங்க.. இந்த ரூம்லதான் இருக்கு..”, என்று சொல்லி வழி நடத்த, தேவா பின் சென்றார்.

மீடியம் சைசில் ஒரு கண்ணாடித் தொட்டி. அதில் முக்கால் பாகத்துக்கும் மேலாகத் தண்ணீர். அதற்குள் கருப்பு, சிகப்பு, மஞ்சள், வெள்ளை... இப்படிப் பல கலர்களில் சின்னச் சின்ன அழகு மீன்கள். அவைகள் உற்சாகமாக அங்கும் இங்குமாக நீந்திக் கொண்டிருந்தன. தொட்டிக்குள் பச்சைக்கலரில் ஒரு பிளாஸ்டிக் தவளை. அது வாயைத் திறப்பதும் மூடுவதுமாய் ‘மூச்சு’ விட்டுக் கொண்டிருந்தது. வாயிலிருந்து வெளிவரும் காற்றுக் குமிழிகள் நீர் மட்டத்திற்கு மேல் வந்து வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. தொட்டியின் கீழ்மட்டத்தில் கருப்பும், வெள்ளையுமாய் சிறு சிறு கூழாங்கற்கள் சிதறிக் கிடந்தன. இருவகையான நீர்த்தாவரங்கள், பிளாஸ்டிக் கப்புகளில் தொட்டியில் வைக்கப் பட்டிருந்தன. தொட்டி பார்ப்பதற்கு மிககும் அழகாயிருந்தது..!



“குட்மார்னிங் தேவா..”

“குட்மார்னிங் மணி... என்ன இதெல்லாம் புதுசா..?”

“ஒன்னுமில்ல... குமார் கொஞ்ச நாளா கேட்டுக்கிட்டு இருந்தான். அதான் நேற்று சாயங்காலம் போய் வாங்கிட்டு வந்தேன்.. எப்படி இருக்கு?”

“நல்லா அழகா இருக்கு.. நான் கொஞ்சம் கைமாத்து கேட்டேன்லா, அதை வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேன்..”

“கொஞ்சம் இரு.. எடுத்துட்டு வாரேன்..” என்று கூறி மாசிலாமணி அடுத்த அறைக்குள் போனார்.

தனிமையில் தேவா வைத்த கண் வாங்காமல் மீன்களைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.

திரும்பி வந்த மாசிலாமணி ஒரு கவரை தேவா கையில் கொடுத்து, “இதில் ஆயிரம் ரூபாய் இருக்கு..” என்று சொன்னார்.

“அடுத்த மாதம் தாரேன்,” என்று கூறி விடைபெற்றார் தேவா.

ஆபீஸில் இருக்கையில் அமர்ந்த தேவாவுக்கு, வேலை ஓடவில்லை. மனது பாரமாயிருந்தது. மீண்டும், மீண்டும் மீன் தொட்டியே கண்முன் வந்து போனது. மோகனும் இதைத்தானே கேட்டான்..? எல்லா பிரண்ட்ஸ் வீட்டிலும் இருக்கு... நம்ம வீட்டுக்கும் ஒன்னு வாங்கித் தாங்கன்னான். பாவம்.. காலைல கிடைக்காதுன்னு தெரிஞ்சதும் என்னமா சோர்ந்து போயிட்டான். எவ்வளவு வேதனையோடு பள்ளிக்கூடம் போயிருப்பான்..? இன்னைக்கு வகுப்பிலே, குமார், அவன் அப்பா அவனுக்கு மீன் தொட்டி வாங்கிக் கொடுத்ததைச் சொல்லியிருப்பான். சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் குமார் வீட்டுக்குப் போய் மீன் தொட்டியைப் பார்த்துட்டு வருவான். அவன் மனம் எவ்வளவு வேதனைப் படும்? நல்லா படிக்கிற பையன்.. இனி அவன் கவனம் படிப்பில் ஈடுபடுமா? பிஞ்சு மனம்..! ஏக்கம் அவன் மனதில் பாரமாய் படிந்து வடுக்களை அல்லவா உண்டாக்கிவிடும்...? இப்படியான எண்ணங்கள் தேவாவின் மனதில் அலை அலையாய் மோதின.

ஒரு முடிவுக்கு வந்தவராய் தேவா, பிற்பகலுக்கு அரைநாள் லீவு போட்டார். மாசிலாமணிக்கு போன் போட்டு கலர் மீன்கள் விற்கும் கடையைத் தெரிந்து கொண்டார்.

மதியத்திற்கு மேல் நேராக கலர் மீன் கடைக்குச் சென்றார். கூட்டம் இல்லை. சிறிதும் பெரிதுமாய் நிறைய வெற்று கண்ணாடித் தொட்டிகள் விற்பனைக்காய் இருந்தன. மற்றபடி, நீர் நிறைந்த பெரிய பெரிய கண்ணாடித் தொட்டிகளில், வகைக்கு ஒரு இனமாய் கலர் மீன்கள் ஒவ்வொரு தொட்டியிலும் இருந்தன. கோல்டு பிஷ், ஏஞ்சல் பிஷ், கப்பீஸ், பிளாக் மாலி, வொயிட் மாலி, பிளாட்டீஸ், இப்படியாக... மீன் வகைகள்..!



தேவா, பெரிய சைஸ் மீன் தொட்டி ஒன்று வாங்கினார். ஒவ்வொரு வகை மீனிலும் இரண்டு ஜோடி கேட்டார். கடைக்காரர் ஒரு பெரிய வெள்ளை பிளாஸ்டிக் பையில் தண்ணீர் நிரப்பி, அதில் கலர் மீன்களை வலை கொண்டு பிடித்துப் போட்டு, பிராணவாயுவையும் அடைத்து, பையின் வாயை ரப்பர் பேண்ட் போட்டு கட்டி, தேவா கையில் கொடுத்தார். பின்னும், நீர்த்தாவரங்கள், ‘மூச்சு’விடும் பிளாஸ்டிக் தவளை, மீன் பிடிக்கும் வலை, கூழாங்கற்கள், டப்பாவில் அடைக்கப்பட்ட மீன் உணவு, இவைகளையும் ஒரு பார்சலாகக் கட்டிக் கொடுத்து, ஒரு கணிசமான தொகையைக் கடைக்காரர் தேவாவிடம் பெற்றுக் கொண்டார்.

காலையில் மாசிலாமணியிடம் ஒரு அவசரக் காரியத்துக்காக கைமாற்று வாங்கிய பணம் இதற்கு உதவியது. எல்லா பொருட்களையும் ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அந்தக் கடையில் எடுபிடி வேலை செய்யும் சிறுவனையும் உதவிக்கு அழைத்துக் கொண்டு தேவா வீடு வந்து சேர்ந்தார். சிறுவன் பொருட்களையெல்லாம் இறக்கி வைத்தான்.

தேவாவின் மனைவிக்கு ஒரே ஆச்சரியம்! மோகன் கண்முன் தோன்றி மறைந்தான். சந்தோஷமாயிருந்தது! அதோடு கூட, வாழ்க்கையில் முதல் முறையாக, தான் கேட்டபடி தனக்காக தன் கணவர் ஒரு காரியம் செய்திருக்கிறார் என்பதாய் நினைத்துப் பூரித்துப் போனாள்! பாவம்..! காலையில் மாசிலாமணி வீட்டில் தேவா மீன் தொட்டி பார்த்தது... இதெல்லாம் பாக்கியத்துக்குத் தெரியாது..!

தேவா மகிழ்ச்சியாகக் காணப்பட்டார். அவரின் பேச்சும், செய்கையும் பெருமிதமாக இருந்தது. மனைவி அதை ரசித்தாள்!



மனைவியை ‘அதட்டலாக’, “பிளாஸ்டிக் வாளியில் நல்ல தண்ணி கொண்டு வா... மீன்தொட்டி மேல் காலை வெயில் விழனுமாம்... அதனால அந்த மேஜையை சுத்தப்படுத்தி இந்த ஜன்னல் பக்கம் போடு..., இப்படியான ஏவுதல்களோடு, கண்ணாடித் தொட்டியை மேஜை மேல் வைத்து, தண்ணீர் விட்டு, மீன்களை தொட்டிக்குள் குடியேற்றினார். சிறுவனும், பாக்கியமும் இதற்காக அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார்கள். சிறுவனுக்குப் பணம் கொடுத்து, நன்றி கூறி அனுப்பி வைத்தார். அதன் பின்பு கணவனும், மனைவியும் கண்ணாடித் தொட்டியில் கலர் மீன்கள் சுற்றிச்சுற்றி வலம் வருவதை இரசித்துக் கொண்டிருந்தார்கள்!

“அழகாருக்குல்ல...”, தேவா பேச்சில் பெருமை தொனித்தது!

“ஆமாங்க... இந்த மீன் பேர் என்னங்க...?”

சற்றும் எதிர்பாராத பாக்கியத்தின் இந்தக் கேள்விக்கு நிதானமாய் உண்மையைச் சொன்னார் தேவா, “எனக்குத் தெரியாது... இனிதான் தெரிஞ்சிக்கனும்..”

“இதுல ஆண் எதுங்க...? பெண் எதுங்க..? இதெல்லாம் முட்டை போடுமா..? குட்டி போடுமா..? என்ன இரை சாப்டும்...”

சட்டென கோபப்பட்ட தேவா, எரிச்சலுடன், “தெரியாதுன்னு சொன்னேன்லா... உன்னைப் போலத்தான் நானும்...”

மௌனத்தில் சில மணித்துளிகள் மறைந்தன.

“மோகனுக்கு இதெல்லாம் தெரிஞ்சிருக்கும்... இல்லையா..? அவன்கிட்ட கேட்டு தெரிஞ்சிக்கனும்... அப்புறம் நாமதான் இந்த மீன்களையும், தொட்டியையும் கவனிச்சிக்கனும். பத்திரமா பாதுகாக்கனும். அவன் படிப்பு இந்த மீன் தொட்டியால கெட்டுப் போகக் கூடாது... என்ன.. சரிதானே..?”, பேசும் போது தேவாவுக்கு தொண்டை கரகரத்தது..!

“அப்புறம்... சாயங்காலம் மோகன் வீட்டுக்கு வந்ததும் இந்த மீன் தொட்டியை திடீர்ன்னு பாப்பான்... ஒரு இன்ப அதிர்ச்சியாயிருக்கும்... ரொம்ப சந்தோஷப்படுவான்ல...? காலைல... பாவம் பிள்ள... ரொம்ப சோர்ந்து போயிட்டான்... இல்ல...?”

தேவாவின் கண்களில் உதித்த இரண்டு சொட்டுக் கண்ணீர்த் துளிகள், அந்த மீன் தொட்டியில் விழுந்து தண்ணீரோடு கலந்து போனது. அதைக் கண்டும் காணாதவள் போல் அந்த இடத்தை விட்டகன்றாள் பாக்கியம்... ஆம்...! அவள் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் கசிந்திருந்தது...!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p62.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License