இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சிறுகதை

வெளியேறிச் செல்லும் மகன்

பாரதியான்

வீடு அமைதியாக இருந்ததிலிருந்தே அப்பா வந்திருக்கிறார் என்பத தெரிந்து கொண்டான்,கணேசன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்க வந்திருக்கார்.

“ம்...என்ன கோரிக்கையோ ?”

இன்று கடைசி வெள்ளி ,மாலையில் மனைவியைக் கூட்டிக்கொண்டு கோயிலுக்குப்போகலாம், அப்படியே பர்மாக் கடையில் டிபன் செய்யலாம்னு மனசுக்குள் போட்ட திட்டம் சட்டென திவாலாகிப்போனது.

வராண்டாவில் செருப்புகளைக் கழட்டி விடும்போதே, “இன்னும் காணலேன்னு நெனச்சேன் வந்துட்ட கணேசா. உனக்கு ஆயுசு கெட்டிப்பா.” வழக்கமான பானியில்,அப்பா.

அடுத்த நிலையின் மனைவியோட காட்டமான செயல்கள் தன்னுள் நிழலாடினாலும்...பொய்யாக முகம் மலர வைத்து, ''வந்து ரொம்ப நேரமாச்சாப்பா. ஊர்ல அம்மா நல்லா இருக்காங்களா... அவங்களையும் கூட்டி வரவேண்டியது தானப்பா'' உதட்டு வார்த்தையை உதிர்த்தான், கணேசன்.

“அவ எங்க வர... அது விசயமாத்தான் வந்தேன்.” புள்ளி வைத்தார்.

“அம்மாவுக்கு என்னப்பா'' என்றவாறே அங்கே காபியுடன் வந்த மனைவியைக் கவனித்தான்.

“பதறாதீங்க. தேவையில்லாமல் ஏதாவது வாக்குக் கொடுத்தீக அவ்வளவுதான்” என்பது போல் பார்வையிலேயே உத்தரவுப் போட்டாள்.

அவன் எச்சில் விழுங்கினான்.

“பத்து நாளா அவ உடம்பு முடியாம ரெம்ப செரமப்படுறா நானும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிப்போய்க் காட்டியும் வியாதி கேட்காமல் அலுத்துப் போய்.ஓயாத இருமல் சளின்னு கெடக்கா. நாகர்கோயில்ல ஏதோ ஆஸ்ப்பத்திரி இருக்காம் அங்கப்போனா சரியாகுமாம் முத்து சொன்னார் அதான் உன்ன பார்த்துட்டுப்போகலாமுனு இங்க வந்தேம்பா " அப்பாவின் வார்த்தையில் இயலாமையும், பணத்தேவையின் எதிர்பார்ப்பும் கலந்திருந்தது.



அதையெல்லாம் சாடையாக கேட்ட மாலாவின் முகம், அஷ்டகோனலாக மாறியது.

தனக்கு உயிர்தந்து,சுமந்து, இந்த அழகான பூமிக்குக் கொடுத்தவள் வயதின் பிடியில் நோய்வதைப்படுகிறாள்... வைத்தியத்தில் அவளை அமைதிப்படுத்த வேண்டியது மகனின் கடமைதானே... உள்ளுணர்வு துடித்தாலும் தனக்குக் கல்யாணம் ஆனதும் மாமியாரின் தூபத்தில் மறுவாரமே மில்காலனி வீட்டுக்கு அனுமதி வாங்கி தனிக்குடித்தனம் சென்று விட்டான். மாலாவோ கணவனை முழுமையாகத் தன் வசமாக்கித் தலையாட்டிப் பொம்மையாக வைத்தாள்.

ஒரே மகன் தங்களை விட்டு விலகிப் போனாலும் மனைவியிடம் சந்தோசமுடன் வாழட்டுமென உள்ளுக்குள் நினைத்தார்கள். ஆனாலும் அப்படியே இருந்துட்டா சம்மந்தியம்மாளும், மருமகளும் பெத்தவங்க புள்ளங்கற உறவையே மறக்கடிச்சு, கடைசிக்காலத்துல தங்களைக் கவனிப்பதற்கும், கடைசிக் காரியம் பன்றதுக்கும் கணேசனை அனுப்பாம தடுத்துருவாங்கனு நிறைய யோசித்து, உறவைப் புதுப்பிக்கும் முகமாக மாதத்தில் ஒரு முறையாவது வந்து ஏதாவது ஒரு காரணம் கூறி செலவுக்கு பணம் வேண்டுமென வாங்கிப் போவார்கள்.

அப்பா,அம்மா வருவதும். அவர்களின் தேவைக்குச் செய்வதும் கடமைதான் என கணேசன் மனமார ஏற்றுக் கொண்டலும், அவர்களின் நினைவு அவனுக்குள் தங்கவிடாது மகளின் மூலமாக புகைப்போட்டாள் மாமியார்.

அதன் விளைவு... அடுத்தடுத்த அவர்களின் வருகைக்கு முகச்சுழிப்பு காட்ட, முதுமைப் பிடியிலும் தன்மானம் காத்துக் கிராமத்துலேயே தங்கி விட்டனர்.

“அப்பா ரெண்டு மாசமா மில்ல வேலை நிறுத்தம்பா சம்பளமில்லாம இருக்கிறேன்” மனைவியின் நெனப்பை சட்டென வார்த்தையாக்கிய கணவனின் சாமர்த்தியம் பார்த்து மாலா பூரித்தாள் உள்ளுக்குள்.



“எதிர்பார்த்து சொல்ற மாதிரி சொல்றானே கணேசன்...” பெருமூச்சு விட்டார், இனி பேச ஒன்றுமில்லையென நினைத்தபடி,

“அப்படியாப்பா இது தெரியாம நான்பாட்டுக்கு கிளம்பி வந்துட்டேனே... சரி அவ தலையெழுத்துப்படி நடக்கட்டும்” எழுந்து கொனண்டார்.

தன் மாமனார் ரோசப்பட்டதில் மாலாவுக்கு நிரம்ப சந்தோசம்.

“இருந்து சாப்பிட்டு போங்கப்பா”ன்னு வார்த்தைக்குக் கூட சொல்லவில்லை.

கணேசனின் மனசுகிடந்து தகித்தது... ஆண்மை முட்டியது... சீறத் தயாரானான்... ஆனால் முடியவில்லை. மனைவியோட ஆளுமையின்கீழ் தன்னால் எதுவும் செய்யமுடியாத இயலாமை அவனை அடங்க வைத்தது.

நாட்களின் நகர்வு சுட்டெரித்தது. வேலையில் மனது ஒன்றவில்லை, எப்போதும் இறுக்கம் தடவிய முகமானது. சக ஊழியர்கள்கூட

“என்ன கணேசா வீட்ல ஏதாவது பிரச்சனையா?”ன்னு துருவிக் கேட்டும் அவன் மெளனத்தையே பதிலாக்கினான்.

அன்று வாரவிடுமுறை... மில்லில் வேலையென வீட்டில் பொய் சொல்லி அப்பா அம்மாவைப் பார்க்கச் சென்ற போது, அங்கே அவன் கண்ட காட்சி ஒருநொடி திகைக்க வைத்தது.

அப்பாவும், அம்மாவும் நடுக் கூடத்தில் அமர்ந்து ஆதித்தியா சேனலில் வடிவேல் நகைச்சுவைக்காகச் சிரித்துக் கொண்டிருந்தனர்.

இதென்ன கூத்து...

ஆரோக்கியமாக இருக்கும் மனுசியை ஏன் நோய் எனப் பழிக்கவேண்டும். நாடகமாகத்தான் அப்பா வந்தாரா? என்னிடம் அப்படியென்ன எதிர்பார்ப்பு அவருக்கு?

எதுவாகவும் இருக்கட்டுமே அபாண்டமான சோதனை தேவையில்லையே...

அம்மாவுக்கு உடல் நிலையில் எதுவும் இல்லையோ...

சத்தமில்லாமல் வந்து நிற்கும் மகனைப் பார்த்து, “கணேசா நீ நல்லாயிருக்கியாப்பா” பாசமிகுதியோடு அம்மா கேட்டாள்.



“என்ன கணேசா, மனசு கேட்காம வந்தியா?” அப்பாவின் வார்த்தை குத்துவதாக இருந்தது. பொறுத்துக் கொண்டபோது கண்கள் மெல்ல மெல்ல கசிய ஆரம்பித்து, பின் அழுதே விட்டான்.

போதாதா உருகிவிட்டாள், அம்மா.

“ஏம்பா பொய் சொன்னீங்க” என்று கேட்டான்.

“உன்னோட அம்மாதாம்பா அப்படி சொல்லச் சொன்னா”

“எதுக்குமா” அம்மாவால் பேச முடியவில்லை.

“இதோ பாருப்பா கணேசா நீபாட்டுக்கு மாமியார் சொந்தமே பெருசுன்னு சுத்தமா எங்கள மறந்துட்டு இருக்க. காலம்போன காலத்துல பெத்தபுள்ள கிடைக்கிமோ கிடைக்காதோன்னு தினம் தவிச்சோம். கடைசியா ஒரு சோதனை வச்சுப் பார்த்து நாம பாட்டுக்கு இங்கேயே இருந்தரலாம்னுதான் உன்னோட அம்மா யோசனப்படி அன்னிக்கு நடிச்சேன். அதுல என் கனிப்பு நெசமாச்சுப்பா'' சொல்லிப் பெருமூச்சு விட்ட அப்பா...

கேள்வியாக ஏறிட்டான், கணேசன்.

“என்னதான் உடம்பு சரியில்லேனு சொன்னாலும் உன் மகன் வரமாட்டான், வேனா நீ செத்துட்டேனு தகவல் போனா...கடமைக்காக வருவான்னு...” முடிக்கவில்லை

“நிறுத்துங்கப்பா” கத்தி விசும்பினான்.தன் உள்ளத்தில் முள்ளாய் ஏதோ ஒன்னு குத்தியது.

வாங்கி வந்த ஹார்லிக்ஸ், பழம், பிஸ்கெட் வகை அடங்கிய பையை நீட்டினான்.



“வேணாம்பா... நீயே வேலையில்லாம இருக்க, செரமப்படும் போது இதுவேற கடன் சுமையா. அதுவுமில்லாம நீ எங்களுக்கு மகன்ங்கற ஸ்தானத்துலருந்து சுத்தமா விலகிப் போயிட்ட. இப்ப கணேசன் மூனாம் மனுசன். அடுத்தவங்க கொடுக்கும் எதுவும் தேவையில்லேனு நெனக்கிறவ நான். என்னைய என் வீட்டுக்காரு ரொம்ப சந்தோசமா வச்சுருக்காரு... உன்னோட பொருளை வாங்கி அவரோட அன்யோன்னிய உரிமைய விட்டுக் கொடுக்க விரும்பல” அம்மாதான் இப்படி கூர்மையாக பேசினாள்.

அம்மா கொடுத்த சொல்லின் உள்ளிருந்து கொடுத்த வலி தாங்கமுடியாமல் துடித்தான் கணேசன்.

“பெத்த உறவுல உண்மையில்லேனு தெரிஞ்சிப்போச்சு இனி ‘உனக்கு நான் எனக்கு நீ ’ன்னு எங்களோட உசிரு போர வரைக்கும் இருந்து பார்த்துட்டுப் போறோம்... மரம் செடிலாம் ஈரப்பதம் இருக்கும் வரைக்கும் பசுமையாயிருக்கு. காஞ்சிபோனாத் தானா பட்டுப்போயிருதுல அதுமாதிரிதான் எங்களோட வாழ்க்கையும்... கவலைப்படாம நீ கெளம்பி உன் பெண்டாட்டி, புள்ள, மாமியார்ன்னு அவங்களையாவது அக்கரையோட பார்த்துக்க கணேசா...”

அவனால் அம்மாவின் பேச்சுக்கு எதையும் பதிலாகச் சொல்ல முடியாமல் காலடியில் பூமி பிளந்த பிரமையோடு சட்டென அங்கிருந்து வெளியேறினான் கணேசன்.

பிள்ளை வெளியேறிச் செல்வதைக் கண்டும், ஒன்றும் நடக்காதது போல் அவர்கள் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆமாம். கணேசன் இன்றா வெளியேறிப் போகிறான்? அவன் அவர்களை விட்டு வெளியேறி... பல வருடங்களாகி விட்டதே.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p93.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License