இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

அச்சாயன்

மலையாளம்: பி. வி. குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

இட மாற்றத்தில் வந்த எனக்கு வாடகைக்கு வீடு கிடைக்காமல் போனதால் என்னோடு வேலை பார்த்த ஜோசப் சக்கரியா அச்சாயனைப் பற்றி சொன்னான். உண்மையில் அவனுடைய ஒரு வகை பெரியப்பாதான் அச்சாயன். என்றாலும் அச்சாயனை நேரில் பார்த்து எனக்கு வாடகைக்கு வீடு கொடுக்க வேண்டும் என்று சிபாரிசு செய்வதற்குரிய தைரியம் அவனுக்கு இல்லை.

எடுத்ததற்கெல்லாம் கோபப்படும் ஆள் அவர். போதாக்குறைக்கு ராணுவத்தில் இருந்து ஓய்ய்வு பெற்ற ஆள். அதனால் எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு. தெருவில் திருடனும் போலீசும் விளையாடும் சிறுவர்கள் அச்சாயனின் டக்... டக்கென்று ஓசை எழுப்பும் செருப்பு சத்தத்தைக் கேட்டால் போதும். அவ்வளவுதான். இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிந்து கொள்வார்கள்.

எவனாவது பிடிபட்டால் அவனுடைய காது அச்சாயனுடைய கை பட்டே பழுத்துப் போய்விடும். காதைத் திருகுவதில் அவர் நிபுணர். குடும்பத்தில் பெரியவர்களும் சிறியவர்களும் ரகசியமாக அவரைக் காது திருகு அச்சாயன் என்றுதான் அழைப்பார்களாம். ஜோசப்பின் காதில் அவருடைய காது திருகு கை வேலைப்பாட்டின் அம்சங்களை இப்போதும் பார்க்க முடியும்.

அது தெய்வத்தின் அடையாளம் போல. கம்பி வேலிக்குள் ஐம்பது செண்ட் இடத்தில் ஏதேதோ ஞாபகங்களை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் காடு. நட்ட நடுவில் ஒற்றையாக அந்த வீடு. ஓடு போடப்பட்டது. கைப்பிடியுடன் இருக்கும் நீண்ட வராந்தா. உள்ளே விசாலமான ஹால். இரண்டு பக்கங்களிலும் இரண்டு படுக்கையறைகள்.

குலை குலையாகக் காய்த்து நிற்கும் தென்னைகள். இதுதான் அவருடைய சாம்ராஜ்யம். ஒரு திருவிழாக் காலத்தில்தான் நான் அவரைப் பார்க்கப் போனேன். இருட்டு மூடிய ஆகாயம். பெய்யத் தயாராக இருக்கும் ஒரு கார் மேகக்கூட்டம் உள்ள ஒரு சாயங்காலப் பொழுது அது. வீட்டு வராந்தாவிலும் தென்னை மரங்களோடு தென்னை மரங்களாக குருத்தோலை கட்டி அலங்கரிக்கப்பட்டிருந்தன.

மேள தாளங்களும் கொட்டுகளும் ஆரவாரங்களும் நிறைந்த ஒரு சுற்றுப்புறச் சூழல். பட்டு உடுத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டு கிழக்கு நோக்கி திரும்பி நின்று பூசாரி நீட்டிய எண்ணைப் பாத்திரத்தைத் தொட்டு வணங்கிய அச்சாயனுடைய முகத்தில் ஒரு ஒளிவட்டம் பிரகாசிப்பது போல இருந்தது.

புனிதமான ஏதோ ஒரு கோயில் சந்நிதியில் நிற்பது போல எனக்குத் தோன்றியது. பட்டப்படிப்பு வகுப்பில் சரித்திரப் பாடத்தில் படித்த பகுதிகள் என் நினைவுக்கு வந்தன. கொண்டாட்டங்கள் முடிந்த பிறகும் அங்கேயே நின்றுகொண்டிருந்த என்னைச் சந்தேகத்தோடு அச்சாயன் பார்த்தார். அப்போது நான் லேசாகப் பதுங்கினேன். ஒட்டியக் கன்னங்களும் குழிந்தக் கண்களும் உடைய என்னைப் பார்த்தால் ஒரு திருட்டுப் பயலுடைய லட்சணம் இருக்கிறது என்று சின்ன வயதில் என் அப்பா தமாஷாகச் சொல்வது ஞாபகத்துக்கு வந்தது.


“ம். என்ன?”. என்னுடையக் கையில் இருந்த சூட்கேசைப் பார்த்தபடி ஒரு நயமும் இல்லாமல் கேட்டார். “இங்க நான்... அரசாங்க ஆபீஸ்ல ட்ரான்ஸ்ஃபராயி வந்திருக்கேன். “டிபார்ட்மெண்ட்டுக்கு பேருன்னு ஒன்னும் இல்லயா?”. வெடி வெடிக்கும் சத்தத்தில் கேள்வி. லேசான ஒரு பயத்தோடு நான் சொன்னேன். “ரெவென்யூ டிபார்ட்மெண்ட்”.

பரிகாசப் பாவத்தோடு அவர் விழுங்குவது போலப் பார்த்தார். கீழ்ப்பகுதியில் வாங்கிய நாலு செண்ட் இடத்துக்குப் பட்டா வாங்க நடையாய் நடந்து செருப்பு தேய்ந்த விஷயம் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. அதுதான் பரிகாசச் சிரிப்புக்கு காரணம். பவ்யமாக நான் சொன்னேன். “அச்சாயன் தனியாத்தான் இருக்கீங்கன்னும் முன்னால ஒன்னு ரென்டு பேரு பேயிங் கெஸ்ட்டுங்களா தங்கியிருந்தாங்கன்னும் சொன்னாங்க.

தனியாளா இருக்கறதுனால எனக்கு ஒரு வாடக வீடு கிடைக்க மாட்டேங்குது. இந்த ஊர்ல லாட்ஜுங்கன்னு ஒன்னும் இல்ல. வாடக எவ்வளவா இருந்தாலும் பிரச்சனை இல்ல. கூட தங்கறதுக்கு அனுமதிச்சா உபகாரமா இருக்கும்”. “யாரு சொன்னாங்க நான் இங்க ஆள கூட தங்க வைக்கறேன்னு?”. கரடுமுரடான குரல் உயர்ந்தது.

எந்த ஒரு காரணத்தைக் கொண்டும் தாந்தான் இந்த ரகசியத்தைச் சொன்னதாக அச்சாயனுக்குத் தெரியக்கூடாது என்று ஜோசப் சக்கரியா கண்டிப்பாகக் கூறியிருந்தான். என்றாலும் அவருடைய ரௌத்ர பாவத்துக்கு முன்னால் எனக்குப் பொய் சொல்லத் தோன்றவில்லை. “என் கூட வேல பாக்கற ஜோசப் சக்கரியாதான் சொன்னாரு”. நான் சொன்னேன்.

“ச்சீ! அந்தப் பயலா?”. அந்தச் செய்கையால் பயந்து போய் நான் ஒரு அடி பின்னோக்கி நகர்ந்து நின்றேன். அவர் தலை தாழ்த்தி அதிவேகத்தோடு தெற்கு வடக்காக நடக்க ஆரம்பித்தார். சட்டென்று ஒரு நிமிடம் நின்று தலையை நிமிர்த்திச் சொன்னார். “இங்க தங்கலாம். ஆனா நான் கேக்கற வாடகயத் தரணும்” வீடு தேடி அலைந்து திரிந்த என்னைத் தொட்டு ஒரு குளிர்காற்று கடந்து போனது.

“எவ்வளவுன்னு சொன்னாப் போதும் சார்”. “இந்த சார்ன்னு கூப்பிடறதெல்லாம் ஒன்னும் வேணாம். என்னோட பேரு சாமுவெல். அப்படி கூப்பிடக் கஷ்டமா இருந்தா அச்சாயன்னு கூப்பிடலாம். அது அரசாங்க வேலையால இல்லாமப் போச்சு. வீட்டுக்கு வர்றப்ப ஆபீஸ் சம்பந்தமான எல்லாத்தயும் அங்கயே பூட்டி வச்சுட்டு வந்தாப் போதும்”

சொல்வது எல்லாம் சீரியஸாகவா இல்லை தமாஷாகவா என்று தெரியாமல் நான் குழம்பிப் போனேன். “இந்த மனுஷனோடத்தானே இனிம நாம தங்கணும்” என்று பதட்டப்படவும் செய்தேன். பிறகு ராணுவத்தின் கட்டளைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் சடசடவென்று வந்தன. “அங்கயும் இங்கயும் காரித் துப்பக்கூடாது. படுக்கற அறை எப்பவும் சுத்தமா இருக்கணும்.


வாரத்துல ஒரு நாள் பாத் ரூமைக் கழுவி விடணும். இரண்டு கட்டில் இருக்கு. அதுல ஒன்னுல பாய வாங்கி உபயோகிக்கலாம். இங்க சமைக்கக்கூடாது. வெளியில எங்கேர்ந்தாச்சும் வாங்கிச் சாப்பிடலாம். எனக்குப் பிடிக்காத ஏதாச்சும் தோணிச்சுன்னா அப்பவே இடத்தக் காலி செய்யணும். இது வரை என்னுடைய வாழ்க்கை ஒழுங்கு இல்லாத அலங்கோலம்தான் என்றாலும் கொஞ்சம் முயற்சி செய்தால் இதையெல்லாம் கடைப்பிடிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது.

சந்தேகம் எதையும் காட்டாமல் நான் தலையை ஆட்டினேன். என்னுடைய முகத்தில் தோன்றிய அளவுக்கதிகமான சந்தோஷத்தைப் பார்த்ததால் இருக்கலாம். சந்தேகத்தோடு அச்சாயன் என்னை முறைத்துப் பார்த்தபடிக் கேட்டார். “கரெக்ட்டா ஒன்னான் தேதியே வாடக தந்துடணும்”. தயங்கித் தயங்கி நான் சொன்னேன்.

வாடகை எவ்வளவுன்னு சொல்லல”. முதுகை கொஞ்சம் நிமிர்த்தி நின்று அச்சாயன் ஒரு அறிவிப்பு வெளியிடுவது போலச் சொன்னார். “எனக்கு நூறு ரூபா தந்துடணும்”. குறைந்தது ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருக்கும் என்று நான் மனதில் கணக்குப் போட்டேன். நூறு என்று கேட்டவுடனேயே நான் தலையை ஆட்டினேன்.

என்னுடைய அதி வேகத்தைப் பார்த்ததால் அச்சாயன் மீண்டும் சந்தேகக் கண்ணோடு என்னைப் பார்த்துக் கொண்டு நின்றார். மழையானாலும் வெய்யிலானாலும் அச்சாயன் பரபரவென்று பொழுது வெளுக்கும் முன்பே எழுந்துவிடுவார். எழுந்திருந்தால் உடனே பக்கத்தில் இருக்கும் மேசையில் இருந்து ஒரு குட்டி பைபிளை எடுத்து ஏதாவது ஒரு பகுதியை உரக்க வாசித்து ஒரு நிமிடம் கண் மூடி இருப்பார்.

வேகமாக வெளியில் இறங்கி தோட்டத்தை முழுவதும் உலாத்துவார். ஆங்காங்கே விழுந்து கிடக்கும் தென்னை மட்டைகளை வாரிக் கூட்டி விறகு வைத்திருக்கும் இடத்தில் சேர்த்தப் பிறகு மட்டுமே கேட்டைத் திறப்பார். சரியாக ஏழு மணிக்கு சமையலறையில் பலகையில் சப்பாத்தி இடும் சத்தம் கேட்கும். சரியாக ஏழு முப்பதுக்கு முதல் நாள் வாங்கி வைத்த கடலையையோ பீட்ரூட்டையோ சேர்த்து இரண்டு சப்பாத்தி சாப்பிடுவார்.

பிறகு வராந்தாவில் அரைச் சுவர் மதிலில் சாய்ந்து கொண்டு ஒரு இருப்பு. எதிரில் ரேஷன் கடை திறந்தால் அங்கே போவார். நடத்தத்தின் ஒரு பகுதி அது என்றாலும் ரேஷன் கடைக்காரர் வர்கீஸ் மாப்பிள்ளையோடு குசலம் பேசிய பிறகே திரும்பி வருவார். பொழுது இருட்டிய பிறகே நான் ஆபீசில் இருந்து வீடு திரும்புவேன்.

அப்போது அச்சாயன் எனக்காகக் காத்திருப்பது போல வராந்தாவில் இருப்பார். நாங்கள் இருவரும் பேசிக்கொள்வது அப்போதுதான். அரசியல் விஷயங்களைப் பேசுவதில்தான் அவருக்கு ஆர்வம் அதிகம். டி வி சேனல்கள் ஒன்றும் இல்லை. காலையில் செய்தித்தாளில் வாசித்த கேட்ட அரசியல் விஷயங்களை கண் காது மூக்கு வைத்து நான் அவருக்கு முன்னால் சமர்ப்பிப்ப்பேன்.


கற்பனையுடன் நான் சொல்லும் கதைகளைக் கேட்டு நான் ஒரு அரசியல் நிபுணன் என்று அவர் நம்பினார். ராத்திரி சாப்பிட்டு முடித்தால் கட்டிலில் இருந்து ஒரு நீண்ட நேர பிரார்த்தனை செய்வார். அது பின் வருமாறு. “பரிசுத்த ஆத்மாவே. எல்லாவற்றையும் எனக்கு வெளிப்படுத்தவும் வழி காட்டித் தரவும் மற்றவர்கள் பேரில் என்னை பொறுத்துக் கொள்ளவும், மன்னிக்கவும், தெய்வீக தானம் தரவும், என்னுடைய எல்லா சிந்தைகளிலும் நிறைந்திருக்கும் உமக்கு நான் நன்றி சொல்கிறேன்.

எவ்வளவு பெரிய உலகார்ந்த ஆசைகள் இருந்தாலும் ஒரு நிமிடம் கூட உம்மிடம் இருந்து அகலவோ பிரிந்து செல்லவோ விரும்பவில்லை என்று உறுதியாகச் சொல்கிறேன். நித்ய மகத்துவத்தில் உம்முடன் இருக்க நான் விரும்புகிறேன். கர்த்தாவே...! பிலடெலிபியாவில் இருக்கும் என்னுடைய மகன் ஜோஸ் குட்டனையும் மகளையும் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்.

அவர்களுடைய வாரிசுகளுக்கு உம் கிருபை உண்டாகணும்” ஆரம்பத்தில் இவ்வளவுதான் இருந்தது என்றாலும் பிறகு என்னிடம் இருந்த அன்பு அதிகமான போது பிராத்தனையில் நானும் இடம்பெறத் தொடங்கினேன். “கர்த்தாவே... என்னோடு தங்கியிருக்கற குழந்தைக்கும் அவருடையக் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் உம்முடைய அனுக்கிரகம் உண்டாக வேண்டும்”

பிரார்த்தனை முடிந்தால் அச்சாயன் உடனே மேற்குப் பக்கம் இருந்த ஜோஸ் அக்காவின் வீட்டை நோக்கி நீட்டி முழக்கிக் கூப்பிடுவார். அங்கேயிருந்து பதில் கிடைத்தால் கையில் ஒரு கம்பையும் எடுத்துக் கொண்டு அங்கே போவார். பாம்புகள் வழிவிட வேண்டும் என்பதற்காகத்தான் கையில் கம்புடன் போவார். ஜோஸ் அக்காவுடைய புருஷன் போன வருஷம்தான் தளர்ந்து விழுந்தார்.

அவர் அச்சாயனுடைய விளையாட்டுத் தோழன். ஒற்றையாக இருக்கும் தோழன் மீதுள்ள அக்கறையால்தான் அந்தப் பயணம். ஒரு மணி நேரம் கழிந்து கம்பு டக் டக்கென்று தட்டப்பட்டு வரும் சத்தம் முழங்கும். அச்சாயன் திரும்பி வருகிறார். வந்தவுடனேயே காலைக் கழுவி கட்டிலில் ஒரு நிமிடம் உட்கார்ந்து மௌனப் பிரார்த்தனை நடக்கும்.

பத்து நிமிடத்திற்குள் குறட்டைச் சத்தம் ஒலிக்க ஆரம்பிக்கும். இதெல்லாம் முடிந்த பிறகுதான் என்னுடைய வாசிப்பு ஆரம்பிக்கும். அது ஒரு மணி நேரத்திற்கு நீளும். இதற்கு நடுவில் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கும் அச்சாயன் என்னுடைய அறையில் வெளிச்சம் இருப்பதைப் பார்த்துவிட்டு வருவார். “மகனே. நீ தூங்காம முழிச்சுக்கிட்டு இருக்கறதுனாலதான் சோர்வா இருக்க.

ஏழெட்டு மணி நேரமாச்சும் தூங்கணும். அன்புடன் எனக்கு உபதேசம் செய்த பிறகு அச்சாயன் தன் பேச்சைத் தொடர்வார். ஒரு மாலை நேரம். நான் அது வரை பார்க்காத தயக்கத்தோடு அவர் என் அருகில் வந்தார். கையில் எதையோ பிடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வலுக்கட்டாயத்தோடு அதைக் கொடுத்துவிட்டு அச்சாயன் சொன்னார்.

“மகனே. மறுத்து எதுவும் சொல்லாத. இது இதுவரை நான் வாங்கின வாடகை. நீ இங்க இருக்கறப்ப என்ன்னோட மகன் இருக்கற மாதிரி தோணுது. அதனால இத நீ வாங்கிக்கணும். அதை வாங்கிய போது அச்சாயனுடைய மனதில் இருந்து ஒரு பெரிய பாரம் இறங்கியது போல அவர் விட்ட பெருமூச்சில் இருந்து நான் உணர்ந்தேன். எனக்குச் சங்கடமாக இருந்தது.

நாட்கள் கடந்து செல்ல செல்ல அவருடைய வாழ்க்கையில் இருந்து ஒவ்வொரு ஏடும் எனக்கு முன்னால் திறக்கப்பட்டன. “கேளு மகனே. சர்வீஸ்ல இருக்கறப்ப நான் ஒரு குதிரைப் பந்தயப் பைத்தியமா இருந்தேன். நிறையப் பணத்த அப்படி குதிரை மேல கட்டித் தொலைச்சிருக்கறேன். பணம் போனால் என்ன? ஓடி வரும் பந்தயக் குதிரையின் குட்டி உரோமத்திலும் வாலிலும் தீ பறக்கற காட்சி!

ஹோ! இப்பவும் அது என் கண்ணு முன்னால நிக்குது. அது ஒரு காலம். ஒரு ராத்திரி. அச்சாயன் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துக் கொண்டார். மூச்சு முட்டியபடி என் முன்னால் வந்து நின்றார். “மகனே. நான் இப்ப ஒரு கனவு கண்டேன். என்னோட எல்சி மகளோட கல்யாணம் அது. அய்யோ! கல்யாணத்துக்கு நடுவுல திராட்சை ரசம் தீந்துபோச்சு.

அப்போ அங்க கர்த்தா தோன்றினாரு. திராட்சை ரசம் வச்சிருந்த பாத்திரத்த ஒரு விரலால தொட்டார். அப்ப நான் அவருக்கு பக்கத்திலேயே நின்னுகிட்டு இருந்தேன். அற்புதம்! அவர் தொட்ட காலிப் பாத்திரத்துல திராட்சை ரசம் நிறஞ்சு வழிய ஆரம்பிச்சது. பாத்திரத்துல இருந்து அது வழிஞ்சு ஓட ஆரம்பிச்சது. அப்பறம் அது ஒரு தடாகமா மாறிச்சு. அதுல நான் நீந்தினேன்.

என்னோட பிள்ளைங்க எல்லாரும் திராட்சை ரசத்துக்குள்ள!”. பிறகு அவர் அழ ஆரம்பித்தார். அழுது கொண்டேயிருந்தார். நான் அவரை என்னுடன் சேர்த்துப் பிடித்து ஆறுதல் சொன்னேன். “இது வெறும் ஒரு கனவுதானே அச்சாயா?”. ஒரு வருடம் கழிந்த போது என் ஊருக்கே எனக்கு மாறுதல் கிடைத்தது.


இது தெரிந்தவுடன் அச்சாயனின் வழக்கமான பழக்கங்கள் எல்லாம் மாற ஆரம்பித்தன. காலையில் வர்கீஸ் மாப்பிள்ளையுடைய ரேஷன் கடைக்குப் போகும் பழக்கம் நின்றது. இரவு உணவுக்குப் பிறகு அக்கா வீட்டுக்குப் போவதும் நின்று போனது. முடிவில் அந்த நாளும் வந்தது. விடைபெற்றுக் கொள்ள நான் அவருக்கு முன்னால் போய் நின்றேன்.

இறுக்கமான முகத்தோடு அவர் வராந்தாவிலேயே நின்றார். வீட்டை விட்டு இறங்கி நடக்கும் போது திரும்பிப் பார்த்தேன். அப்போதும் அச்சாயன் அதே நிலையிலேயே நிற்பதைப் பார்த்தேன். அப்புறம் போன் வழியாக அச்சாயனுடன் சில நாட்கள் பேசினேன். மெல்ல மெல்ல அதுவும் நின்று போனது. ஒன்றிரண்டு தடவை போய்ப் பார்த்தேன்.

அப்போது அவர் தன்னந்தனியாகவே வாழ்ந்தார். ஒரு நாள் ஜோசப் சக்கரியாவிடம் இருந்து ஒரு போன் அழைப்பு வந்தது. “நம்ம அச்சாயன் நேத்து ராத்திரி போயிட்டாரு!. தூக்கத்துல நடந்தது. பால்காரன் தட்டி எழுப்பியும் அசயாததுனால அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க கதவ உடச்சுப் பாத்தப்ப கட்டில்ல தூங்கறமாதிரியே கிடந்தாரு”

நான் வீட்டை அடைந்த போது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் சொந்தக்காரர்களுமாக ஒரு பெரிய கூட்டம் இருந்தது. ஜோசப் சக்கரியா அவரோட இறுதி யாத்திரைக்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான். என் கண்கள் அது வரை நான் பார்க்காத அச்சாயனுடைய ஜோஸ் மகனையும் எல்சி மகளையும் தேடின.

ஒரு வெளிநாட்டு மலையாளி என்று தோன்றும் யாரையும் அங்கே காண முடியவில்லை. ஜோசப் சக்கரியாவை கூப்பிட்டு விசாரித்தேன். “தாத்தாவோட எல்சியும் ஜோஸும் எங்க? அவங்க வராமயா அடக்கம்?”. சக்கரியா திகைப்போடு என்னைப் பார்த்துச் சொன்னான். “அவங்க ரெண்டு பேரும் குழந்தயா இருக்கறப்பவே குமரகத்துல நடந்த ஒரு படகு விபத்துல செத்துப் போயீட்டாங்களே!

அவங்களோட சேந்து அச்சாயனோட மனைவி ஜோச்னா பாட்டியும் மூழ்கிப் போயிட்டாங்களே! அப்ப அச்சாயன யாரோ கரைக்குக் கொண்டு வந்துக் காப்பாத்திட்டாங்க”. “அப்படின்னா எல்சியோட கல்யாணம்? யேசுவோட வருகை! பாத்திரத்துல நிறஞ்சு தளும்பிய திராட்சை ரசம்! நான் சொன்னதைக் கேட்டு சக்கரியா திகைப்போடு என்னைப் பார்த்தான்.

சர்ச்சில் இருந்து வந்தவர் பைபிள் வாசகங்களை வாசித்து அச்சாயனை பயணப்படுத்திக் கொண்டிருந்தார். “சமயமாம் ரதத்தில் ஏறி அச்சாயன் சொர்க்கத்தை நோக்கிய பயணத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தார். தெய்வமே! என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லையே!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p104.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License