இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

தனியே... தன்னந்தனியே….!

மலையாளம்: கே. ஆர். மல்லிகா

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

ப்ளோராவை கல்யாணம் செய்து கொண்ட பிறகு வேணு அவளுடைய வீட்டுக்கு அப்போதுதான் முதல்முறையாக வருகிறான். அவன் வரவேண்டும் என்று மிருதுளா ஆசைப்பட்டாளா என்று அவளுக்கே தெரியவில்லை. கட்டாயமாக வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்தாளா என்றும் தெரியவில்லை.

எப்படியிருந்தாலும் பிரச்சனையில்லை என்ற ஒரு மன நிலையை அவள் பின்பற்றினாள். அவனைப் பார்த்தபோது ஞாபகங்களின் ஏராளமான இழைகள் அவர்களுக்கு இடையில் விழாமல் இருக்க அவள் முயற்சி செய்தாள். அவன் இப்போது இன்னொருத்தியின் சொந்தம் என்பதால் அவளுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம். அவள் அவனை முதல்முறையாகப் பார்ப்பது போல பார்த்தாள்.

எத்தனையோ வருடங்கள் ஒன்றாக வாழ்ந்திருந்தாலும் அவள் கவனிக்காமல் போன அவனுடைய உள்ளங்கையின் நிறம், அடர்ந்து வளர்ந்திருந்த உரோமம், கால்கள், விரல்கள், எழுத்துகள் வற்றிப் போன உதடுகள். எல்லாம் சேர்ந்து ஒரு நிம்மதியில்லாத நிலை அவனுக்குள் உருவாகியிருந்ததை இப்போது கவனித்தாள்.

அது முன்பே இருந்ததா? அப்படியென்றால் அதை அவள் எப்படி இதுவரை பார்க்காமல் இருந்தாள்? குறைகள் இல்லாத மனைவியாகவும் தாயாகவும் தான் இதுவரை அவள் இருந்ததாக அவளுக்கு அகங்காரம். “எதிர்பார்க்கல இல்லயா?” அவன் கேட்டான். அதற்கு என்ன பதில் சொல்வதென்று சத்தியமாக அவளுக்குத் தெரியவில்லை.

“எனக்கொரு எலுமிச்சை சாறு கலந்த தேநீர் வேணும்”. லைம் டீ குடிப்பது அவளுடைய வழக்கமாகவும் இருந்தது. இன்று ஒரு லைம் டீயைத் தயாரிக்கும் போது அவளுக்கு அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திய ஆளைப் பற்றி அவள் அன்று வரை நினைத்துப் பார்க்கவில்லை. அந்த எண்ணத்தால் உருவான சங்கடத்தை உதறித் தள்ளிக்கொண்டு அவள் கேட்டாள்.

“ப்ளோரா உங்களோட பழக்கங்களுக்கு ஏத்த மாதிரி ஒத்துப் போய் நடக்கறாளா?”அவன் சிரித்தான். பிறகு சொன்னான். “ம். பழகிக்கிட்டு இருக்கா”. தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. ஒரு சமயம் வாழ்க்கையில் இருந்து வேறு எதை வெட்டி நீக்கவேண்டி வந்தாலும் கை விட முடியாத விதம் விரல் நுனி வரை திகட்டிக் கொண்டு வந்த வேதனையைத் தந்த மனிதன்தான் இவன்.


இன்று இன்னொருத்தியுடைய மனைவியாக, அதுவும் பரஸ்பர சம்மதத்தோடு பிரிந்ததற்குப் பிறகு வந்திருக்கிறான். வாழ்க்கை எத்தனையெத்தனை அற்புதங்களை பரிசளிக்கக் காத்திருக்கிறது! தேநீரை ஊதி ஊதிக் குடிப்பதற்கு இடையில் அவன் கேட்டான். “அப்பறம் வாழ்க்கை எப்படிப் போகுது?”

அந்தக் கேள்வியை அவள் ரசித்தாள். அதைக் கேட்டபோது அவன் ஒரு புதிய மனிதனைப் போலத் தோன்றினான். பார்ப்து பழகியது எல்லாம்… அனுபவித்துப் பழகியது எல்லாம்… நொடி நேரத்தில் கழற்றி எறிவது போல அவனில் ஒரு புதுமை வந்து புகுந்தது போல இருந்தது. “ரெண்டு பேரு வாழறதுக்கு தேவையானது எல்லாத்தயும் நான் சம்பாதிக்கறேன். நான் வேலைக்குப் போறேன் இல்லயா?. தோல்வியை ஒத்துக் கொள்ளாத விதம் அந்தப் பேச்சு அமைந்திருந்ததாக அவள் நினைத்தாள். என்றாலும் அப்போது அதை அப்படித்தான் சொல்லவேண்டும் என்று அவள் நம்பினாள்.

அவன் பட்டென்று நிசப்தமானதை அவள் கவனித்தாள். அவளுடைய தொழிலை அவன் ஒருபோதும் விரும்பியதில்லை. ஹோட்டலில் சமையலறயில் வேலை செய்பவர்களில் ஒருத்தி அவள். ஒரு சில நாட்களுக்கு முன்பு வரை அவனுடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றாற்போல சமைத்துப் பரிமாறியவள் இப்போது பல பேருடைய ருசியை திருப்திப் படுத்துகிறாள்.

வாழ்க்கையின் எல்லா அர்த்தங்களும் அடைபட்டபோது அந்த ஆளுடைய முன்னாள் மனைவி என்ற நிலையில் அவனிடம் இருந்து ஒரு உதவியையும் பெறாமல் வாழவேண்டும் என்ற பிடிவாதம் அவளுக்குள் வளர்ந்தது. “நான் வாழ்வேன்” என்ற இச்சா சக்தி முக்கியமானதாக மாறியது. அப்போது தோன்றியதுதான் இதெல்லாம்.

ஒரு பெண்ணை பொறுத்தவரை சிறு வயதில் இருந்தே பின்பற்றுகிற ஒன்று உண்டு. சமையல். எந்த வேலையைச் செய்தும் வாழலாம். அதில் உயர்வு தாழ்வு என்று கௌரவம் பார்ப்பதற்கு எதுவும் இல்லை. அப்படித்தான் ருசி மேள தாள கொண்டாட்டங்களின் உலகிற்குள் அவள் நுழைந்தாள்.

“பிரேமா ஸ்கூல்லேர்ந்து வர்ற நேரமாச்சா?” ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு அவன் கேட்டான். “க்ளாஸ் முடிஞ்சு அவ இந்திக்கும் கணக்குக்கும் டியூஷன் போகறா” “அவ என்னைப் பத்தி விசாரிக்கறாளா?” அவன் கேட்டான். மிருதுளா அதற்கு பதில் சொல்லவில்லை.

முட்டிக்கொண்டு வந்த விரக்தியை விழுங்கி அவள் சிரித்தாள். “உன்னோட ஸ்கூட்டி கண்டிஷன்லதானே இருக்கு?”. ஒரு நிமிடம் அவன் புருஷனாக மாறினான். “பரவாயில்ல”. ஒரு நிமிடம் கழித்து அவள் கேட்டாள். “ப்ளோராவயும் கூட்டிகிட்டு வந்திருக்கலாம் இல்லயா?. எனக்கு இப்ப அப்படி ஒன்னும் வேதனை இல்ல தெரியுமா?.


அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. வீட்டுக்காரர்கள் எல்லோரையும் வேதனையில் ஆழ்த்தி… அவர்களை எதையும் செய்ய இயலாதவர்களாக்கிக் கொண்டு ஒரு ராத்திரி வேணுவோடு வீட்டை விட்டு ஓடிப் போகும்போது காதலின் எண்ணம் மட்டும்தான் அவள் மனதில் ஆழமாக இருந்தது.

பிரிந்து போகும்போது அவன் சொன்னான். “நீ இன்னொரு ஆம்பளய கல்யாணம் செஞ்சுகிட்டு நிம்மதியா வாழலாம்”. அதை கேட்டபோது அவள் அவனை மட்டமாக நினைத்தாள். மனதிற்குள் போராட்டத்தை அனுபவித்தபடி அவன் அதை சொன்னானா?. “இப்ப என் கையில நான் மறுபடி கல்யாணம் கட்டிக்கறதுக்கு பொருத்தமா ஒரு ஆளும் இல்ல”

“ஸ்கூட்டியப்பத்தி விசாரிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்” அவளை விட்டு அவன் பிரிந்து சென்ற அன்று இரவு முழுவதும் அவள் யோசித்தாள். மனதில் எங்கேயோ தளர்வு ஏற்பட்டது. மனதின் ஒரு மூலையில் வேதனை ஏற்பட்டது. கட்டுக்கடங்காத ஒரு காற்று உள்ளுக்குள் சீறியது. அவனை கட்டிப்பிடித்த போதெல்லாம் அவள் அந்த நகரம் முழுவதையும்தான் கட்டிப்பிடித்தாள். அவளைப் பொறுத்தவரை நகரம் அவளுடைய புருஷனாக இருந்தது. அந்த நகரத்தோடு சேர்ந்து அன்று அவன் அவளையும் கைவிட்டுவிட்டான். “காதல்”. அவள் யோசித்தாள். அது அவளைப் பொறுத்தமட்டும் இப்போது அது ஒரு பயன்படுத்தப்படாத காசு. அவனைப் பார்த்தாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “உன்னோட முடி நரைக்க ஆரம்பிச்சுடுச்சா?”. ஆச்சரியத்தோடு அவன் கேட்டான். “நீ இப்ப சோர்வாகவும் இருக்க”

“ரெண்டு பொம்பளைங்க தனியா வாழறதுங்கறது என்ன சாதாரண விஷயமா?”. “எங்க ரெண்டு பேருக்கும் புருஷங்க இல்ல” அவன் நிசப்தமானான். சப்போட்டாவின் கிளைகள் ஜன்னல் வரை வளர்ந்து காற்றில் அசைந்து ஆடும் வீடாக அவர்களுடைய வீடு இருக்கவேண்டும் என்று ஒரு காலத்தில் கனவு கண்டாள்.

ஒரு மரத்தின் கிளை இல்லாமல் வாழமுடியாது என்று அவனும் உறுதியாக நம்பினான். செழிப்பான இலைகள் உள்ள செம்பருத்திகள். கொய்யா மரம். இப்படி நிறைய வளர்க்கப்பட்ட மரங்களின் பின்னணியில் வாழ்வை வளப்படுத்தவேண்டும் என்று அவர்கள் முயற்சி செய்தார்கள். இந்த வீட்டின் ஜில்லிப்பில் இருக்கும் பல விஷயங்களையும் அவனால் ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும். “உன்னை நான் தனியா விட்டுட்டுப் போயிட்டேன்னு நினைக்கறது உண்டா?”. அதைக் கேட்கும்போது அவனுடைய குரல் நனைந்திருந்தது. அவன் முகத்தை நிமிர்த்தவும் இல்லை.


“அப்படி ஒரு சமயத்துலயும் நான் நினைச்சதே இல்ல” அவள் பட்டென்று சொன்னாள். “நான் இப்ப அதிக சுதந்திரமா இருக்கேன். சொந்தக் கால்ல நிக்கக் கத்துகிட்டேன். வாழ்க்கைய நானும் அனுபவிக்க ஆரம்பிச்சிருக்கேன்”. “அதுல தாந்தோன்றித் தனம்தான் இருக்கு” அவன் சிரிக்க முயற்சி செய்தபடி சொன்னான்.

முன்பு அதிகாரப்பூர்வமாக புருஷன் இருந்தாலும் அவன் இல்லாமல் வாழவேண்டி ஏற்பட்டவள்தான் அவள். “அந்த அளவுக்கு எல்லாம் நான் யோசிக்கல. வெட்டியா எதுக்கு இந்த மாதிரி பேச்செல்லாம்?. வாழ்க்கை ஒன்னுதான் இருக்கு. நமக்கு பிடிச்சவங்களோட வாழறதுக்குதான் அது” ஈடு செய்யமுடியாத… ஆறுதல் இல்லாத வேதனையோடு ஒரு கடல்சீற்றம் அவனுக்குள் உண்டாவதை அவள் கவனித்தாள்.

அவள் பேசவில்லை. “நான் கிளம்பறேன்”. அவன் எழுந்திருந்தான். அவள் தடுக்கவில்லை. எதையும் சொல்லவும் இல்லை. அவன் பாதையில் இறங்கினான். அந்த உருவம் மெல்ல மெல்ல மறைந்து போனபோது ஒரு சுழற்காற்றாக வேதனை அவளுக்குள் பாய்ந்து இறஞ்கி வீச ஆரம்பித்தது.

வாசல் கதவை இழுத்து மூடினாள். கதறி அழுதாள். தனியே… தன்னந்தனியே…

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p84.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License