இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

அந்த அம்மாவின் வீடு

மலையாளம்: ரமேஷ் பாபு

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்


பயணிகள் வண்டி வழக்கம் போல சிக்னலுக்காக அவுட்டரில் நின்றபோது, நான் அங்கே இறங்கக் காரணம் என்னவென்று கேட்டால் அதற்குச் சரியான பதில் என்னிடம் இல்லை. அந்த அம்மாவுடைய வீட்டுக்கு முன்னால் சிறிய ஆள் கூட்டத்தைப் பார்த்த போது மனதில் தோன்றிய நிம்மதியின்மைதான் என்னை அங்கே இறங்கச் செய்தது எனலாம்.

இரயில் தண்டவாளத்திற்கு அருகில் செம்மண் பாதையில் இறங்கிய இடத்தில் இருந்து, சிறிது தூரம் பின்னால் நடந்தேன். கடந்த எட்டு அல்லது பத்து வருடங்களுக்கு முன்பு இதே வழியில் இந்த ரயிலில் நைட் ஷிஃப்ட்டுக்காக நான் பயணிக்க ஆரம்பித்திருந்தேன். முதண்மை ஸ்டேஷனுக்கு முன்னால் இருக்கும் இந்த லோக்கல் ஸ்டேஷனை அடையும் போதெல்லாம் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்து செல்ல வசதியாக பேசஞ்ஜர் வண்டிகள் இங்கே நிறுத்தப்படுவது வழக்கம்.

இரயிலிற்குள் அலுப்பை ஏற்படுத்தும் காட்சிகளில் இருந்து மனதை திசை திருப்ப உதவும் ஜன்னலோர சீட் கிடைக்கும்போதுதான் லேசான ஆறுதல் ஏற்படும். பல வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு நாளில்தான் ஜன்னல் தரும் சின்னஞ்சிறிய காட்சிகளில் மூழ்கி ஆராய்ந்து கொண்டிருந்த என்னுடைய கண்கள் தண்டவாளத்திற்கு அப்பால் இருக்கும் வீட்டிற்கு முன்னால் செடிகளை பராமரித்துக் கொண்டிருந்த அந்த அம்மாவின் மீது பதிந்தது.

பிரபல ஓவியர்களின் அழகுணர்ச்சியை வெளிப்படுத்தும் அழகிய பெண்ணின் உருவத்தையும் பின்புலத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டத்தையும் அந்தக் காட்சிகள் எனக்கு ஞாபகப்படுத்தின. வயது அவருடைய உடலில் முதுமையை வெளிப்படுத்தியிருந்தாலும் முகத்தின் அழகுக்கு ஒரு குறைவும் ஏற்படவில்லை.

ஒரு தனிநிறமுடைய செம்பருத்தியின் தண்டில் கத்தியால் அவர் வெட்டுவதும் அதில் இன்னொரு கிளையை சேர்த்து வைத்துக் கட்டுவதுமாக அவர் வேலையில் மூழ்கியிருந்தார். இதுதான் நான் கண்ட அன்றையக் காட்சி.

நடுநடுவே அவருடைய கண்கள் கேட்டுக்கு வெளியில் செம்மண் பாதையை நோக்கி நீண்டன. அதையும் நான் கவனித்தேன்.


சில நாட்களுக்குப் பிறகு அந்த செடியில் பல்வேறு நிறங்களுடன் பூக்கள் பூத்திருப்பதை நான் ஆச்சரியத்தோடு பார்த்தேன். ஜன்னல் ஓர சீட்டு கிடைக்கும் போதெல்லாம் அந்த வீட்டைக் கவனிப்பதையும் அந்த அம்மாவைத் தேடுவதும் என் வழக்கமாகப் போய்விட்டது. முற்றத்தில் ஈரம் தோய்ந்து எத்தனையெத்தனை வகை வகையான ரோஜாப்பூச்செடிகள்!

டேரியா பூக்கள். சிறிய மரங்கள் எல்லாவற்றிலும் தொங்கவிடப்பட்டிருந்த கூடைகளில் அலங்கார பூச்செடிகள். மொட்டை மாடியில் இரும்பு வளையங்களுக்குள் பத்திரமாக பூச்சட்டிகள் நிறைய விதவிதமான பூக்கள். அங்கே மதில் சுவருக்கு அருகில் பூத்து காய்த்து நெல்லியும் முருங்கையும் பப்பாளியும் பலன் தந்துகொண்டிருப்பதை நான் கவனித்தேன்.

அதிக பட்ச அன்பையும் ஆதரவையும் வரமாகப் பெற்று வளரும் சிறிய குழந்தைகளைதான் அவை எனக்கு நினைவுபடுத்தின. மாடிப்படிகளுக்கு கீழே இருந்த இடத்தில் பல வகையான பூக்களுடன் பூத்து நின்ற காகிதப் பூச்செடிகளை பார்த்தேன். இதையெல்லாம் பார்த்த நானும் விடுமுறை நாட்களில் என் வீட்டில் செடிகளை நட்டு வளர்க்க ஆரம்பித்தேன்.

இந்த வழக்கத்திற்கு மாறான வேலையையும் முயற்சிகளையும் பார்த்த அம்மா ஆச்சரியப்பட்டாள். பிறகு அம்மாவும் எனக்கு உதவியாக தோட்ட வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். ஒரு நாள் எல்லாக் காட்சிகளையும் மறைத்து அவருடைய வீட்டுக்கு முன்னால் பந்தல் போட்டிருப்பதை பார்த்தேன். அங்கே கல்யாணம்!

அது யாருடைய கல்யாணமாக இருக்கும்? கேட்டுக்குப் பக்கத்தில் அவர் நின்றபடி அவர் விருந்தாளிகளிடம் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார்.

கல்யாண வயதை அடைந்திருந்த ஒரு மகள் அவருக்கு இருக்கிறாள் என்ற உணர்வு அப்போதுதான் எனக்கு ஏற்பட்டது. முற்றத்தில் செடிகளை பராமரித்துக் கொண்டிருப்பதற்கு நடுவில் அவருடைய கண்கள் ஸ்கூல் அல்லது கல்லூரிக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் மகளை அடிக்கடிப் பார்த்தபடி இருந்தது. அப்போது எனக்குப் புரிந்தது.

பந்தல் அவிழ்க்கப்பட்ட முற்றத்தில் மரங்கள் தவிர பூச்செடிகள் எதையும் காணவில்லை. சங்கடம் ஏற்பட்டது. மற்றொரு நாள் பூச்செடிகள் எல்லாம் விருந்துக்குப் போய்விட்டு திரும்பி வந்ததைப் பார்த்தபோது எனக்கு சந்தோஷம் ஏற்பட்டது. அந்த வீட்டில் இருப்பது போலவே என்னுடைய வீட்டிலும் செடிகளும் பூக்களும் நிறைந்து நின்றதைப் பார்த்தபோது எனக்குள் ஆனந்தம் தாண்டவமாடியது.


எனக்குக் கல்யாணமாகி மனைவி வந்த போது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வீட்டில் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்த பூக்களின் மீதும், மரங்களில் பழங்களின் மீதும்தான் அவளுடைய முழுக் கவனமும் இருந்தது. நாந்தான் இதையெல்லாம் நட்டு வளர்த்தது என்று அம்மா சொன்னாலும் அவளுடைய கண்களில் அவ நம்பிக்கையின் ஆச்சரியத்தின் நிழல் படர்ந்திருந்தது.

மனைவியுடன் நகரத்துக்கு செல்லும் அந்த வழக்கமான இரயிலில் அழகான அந்த பூந்தோட்டத்தையும் அந்த வீட்டையும் அதற்கெல்லாம் காரணமான அந்த அம்மாவையும் காட்ட அழைத்துக் கொண்டு சென்றேன். இரயில் வண்டி அவுட்டருக்கு செல்வதற்கு முன்பு அவளையும் அழைத்துக்கொண்டு வாசலுக்கு அருகில் போய் நின்றேன்.

வீட்டுக்கு முன்னால் காட்சிகளையும் மறைத்துக்கொண்டு நீல நிறத்தில் தார்ப்பாய் பந்தல் போடப்பட்டிருந்தது. சோகமே வடிவான முகத்துடன் பிளாஸ்டிக் நாற்காலிகளில் ஆங்காங்கே ஆட்கள் உட்கார்ந்திருந்தார்கள். வெளிப்பக்கத்து சுவர்களில் ஒரு நடுத்தர வயதுக்காரருடைய புகைப்படம் இருந்தது.

அது அந்த அம்மாவுடைய கணவனாக இருக்கவேண்டும். கல்யாணமாகிவிட்டதால் கம்பெனி தொலைதூரத்திற்கு வேலையை மாற்றியது.

நான் அந்த இரயில் வண்டி பயணத்தில் இருந்து விடைபெறவேண்டி வந்தது. பயணிகள் இரயில் பயணத்திற்கு பதில் காலை நேர எக்ஸ்பிரஸ் இரயில் பயணியாக நான் மாறினேன்.

அந்த நெரிசல் இருந்த வண்டியில் முண்டி அடித்துக்கொண்டு ஏறும்போது வழக்கமான அந்தக் காட்சிகள் எல்லாம் எனக்கு அந்நியமாகிப் போயின. என்றாலும் ஒரு நாள் அங்கே சென்றபோது அந்த அம்மா வீட்டுக்கு அருகில் ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்தேன். அவர் பாட்டியாகியிருக்கிறார்!


நகரத்திற்குப் போகும் எந்த இரயில் பயணத்திலும் அவருடைய வீடு வரும்போது என்னையும் அறியாமல் என்னுடைய கண்கள் நீள்வதைப் பார்த்து எனக்கு நானே சிரித்துக் கொள்வது உண்டு. அவருக்கே தெரியாமல் அவருடைய வாழ்க்கையை நான் பின்தொடர்கிறேன். இத்தனை வருடங்களாகிவிட்ட பிறகும் ஒரு தடவை கூட என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை.

பதவி உயர்வு கிடைத்தபோது வடக்கில் ஒரு நகரத்திற்கு நான் பறித்து நடப்பட்டேன். குழந்தைகள். பொறுப்புகள். எல்லாம் வந்தன. தற்செயலாக நகரத்திற்குச் செல்லும் இந்தப் பயணிகள் இரயிலில், பயணம் செய்யவேண்டி நேரிட்டது. அவருடைய ஞாபகம் மனதிற்குள் மலர்ந்தது. இரயில் அவுட்டரில் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்போதே என்னுடைய கண்கள் அவருடைய வீடு வருவதற்காகக் காத்திருந்தது.

வீட்டுக்கு முன்னால் நீலத் தார்ப் பாய் விரிக்கப்பட்டிருந்தது! ஆங்காங்கே நாற்காலிகளில் ஆட்கள். சுவர்களில் அந்த அம்மாவின் படம்! இனம் புரியாத ஏதோ ஒரு துக்கம் என் தொண்டையை அடைத்தது! இரயிலில் இருந்து இறங்கி அவருடைய வீட்டை நோக்கி நடந்தேன்!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p86.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License