இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

குன்றின் மேல் ஆசிரமம்

மலையாளம்: விஜயேந்திரலால் வித்யாதரன்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

சாமி இடது கண்னால் சுகுவை ஒரு பார்வை பார்த்தார். அந்தப் பார்வையோடு சேர்ந்து மர்மமான ஒரு மந்தகாசத்தையும் அவர் தன் உதடுகளில் ஒளித்து வைத்திருந்தார். “என்ன கலர் சாமி?” எதுவும் கேட்காமல் போனால் அவர் தவறாக நினைப்பாரோ என்று நினைத்து எதையாவது கேட்கவேண்டுமே என்பதற்காக அவன் கேட்டான்.

“டீப் ப்ளூ. யாரு பாத்தாலும் பிடிச்சு இழுக்கும். அடுத்த வாரம் எல்லாரும் வந்துடுவாங்க. முத்தத்துல இருக்கற தொட்டி செடிங்க எல்லாத்தயும் மாத்தி வச்சுடணும். மனோகரனப் பாத்தா ஒரு தடவ இங்க வரச் சொல்லணும். ஓரமா இருக்கற தென்னை மரங்கள வெட்டணும். மழைக்காலம் வருது. கஷ்தகாலத்துக்கு காரு மேல மரம் விழுந்தா?”

அறியாமல் சுகு தென்னை மரங்களின் நுனிப் பகுதியை ஒரு முறை பார்த்தான். எல்லாம் செவ்விளநீர் மரங்கள். திடகாத்திரமாக இருந்தன. நான்கு பக்கமும் ஓலைக் கைகளை வீசி நிற்கும் தங்க நிறக் கும்பங்கள். மட்ட மத்தியான வெய்யிலில் தொண்டை வறண்டு போய் இருந்த அவனுடைய கண்கள் தானே மூடிக்கொண்டன.

கொடிய வேதனையால் துடிதுடிப்பது போல அவனுடைய முகத்தில் தசைகள் இறுக்கமாகி துடித்தன. வலது கையில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த பலசரக்குச் சாமான்கள் நிறைந்த பாரமான பையை அவன் படிகளில் வைத்தான்.

“வேல இருக்கு சாமி. போகட்டுமா?”. “உனக்கு எப்பப் பாத்தாலும் வேலதான்? ஓய்வுன்னு ஒன்னு இல்லவே இல்ல. அப்படித்தானே?.

பதில் சொல்லாமல் இடது கையால் சைகை காட்டி அவன் நடந்தான்.

“ஏண்டா. பில்லயும் பாக்கிப் பணத்தயும் தரலயே?”

“அது பையில இருக்கு சாமி”

உள்ளே போன சாமிக்கு நிம்மதியானது. சுகு தெருவோரமாக இருந்த தென்னை மரங்களின் நிழலில் வேகமாக நடந்தான். அவன் வீட்டை அடையும் போது வர நேரமாகிவிட்டதால் சுவர்னா வெளியில் பார்த்தபடி வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தாள்.

“சாப்பாடு தயாராயிருக்கு. சாப்பிடலாம்”

“என்ன ஒரு வெய்யில் இது! நான் ஒரு பத்து நிமிஷம் இங்க இருந்துட்டு வரேன்” அவன் தளர்ந்து போய் வாசல் திண்ணைப் படியில் உட்கார்ந்தான்.

“அப்பாக்கு சாப்பாடு போட்டாச்சா?”

“கொடுக்கறேன்” சோர்வு கொஞ்சம் நீங்கியபோது கிணற்றடிக்குப் போய் இரண்டு வாளித் தண்ணீரை இறைத்து ஊற்றி முகத்தைக் கழுவினான்.

ஜில்லென்று இருந்த கிணற்று நீரைக் கைகளால் அள்ளிக் குடித்தான்.


“கிணத்துல ஒரு மோட்டார் வைக்கணும்னு அவ எவ்வளவு காலமா சொல்லிகிட்டிருக்கா?” முகத்தைத் துடைத்து அவன் உள்ளே போனான்.

“சாப்பாடு போட்டு வச்சிருக்கேன்”

சிறிய உருண்டையாகப் பிடித்து எடுத்து அப்பாவுடைய வாயில் வைத்து ஊட்டியபடி அவள் சொன்னாள்.

”அப்பா சாப்பிட்ட பிறகு சாப்பிடலாம். அப்போ நீயும் வருவ இல்லயா?”

சட்டையைக் கழற்றிவிட்டுத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு அவன் வெளியில் இறங்கி நடந்தான். மலை இறங்கி வந்த வறண்ட காற்றின் சிறிய ஒரு அலை அவனை உரசிக் கொண்டு கடந்து போனது. மழையின் வரவுக்காகக் காத்திருந்து காத்திருந்து தளர்ந்து போன கொடிய சூட்டில் உருகி மயங்கி காடு நின்று கொண்டிருந்தது.

உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் சூரிய வெளிச்சத்தில் காடு தெளிவில்லாமல் தெரிந்தது. வீட்டுக்குப் பின்னால் இருந்த பெரிய விசாலமான தாழ்வாரத்திற்கு அப்பால் சற்று தொலைவில் காடு உயரத்தில் இருந்தது.

மழைக் காலமாகும் போது உள் காட்டிற்குள் எங்கிருந்தோ ஊற்றெடுத்து மரங்களினூடாக வெள்ளிக் கொலுசுகள் சிதறி விழுவது போல மெதுவாக நடந்துவந்த சிறிய நீரோடைகள் இப்போது வற்றிப் போயிருந்தன.

“சாப்பிட வரலயா?”. அவன் உள்ளே போனான்.

சாப்பிட்டு முடித்து ஓய்வெடுக்கும் போது சிறிய லிஸ்ட்டுடன் சுவர்ணா அவனுக்கு முன்னால் வந்து நின்றாள். சமையலறைக்குத் தேவையான சாமான்கள். அப்பாவுக்குத் தேவையான சில மருந்துகள்.

“ஏங்க. சாமி கூப்பிட்டிருந்தாரு. சாயங்காலம் வெளியில் போகக் குளித்து விட்டு வந்த போது அவள் போனுடன் வந்தாள்.

“என்ன விசேஷம்?”அவன் திரும்ப அழைத்துக் கேட்டான்.

“சுகு. இங்க வரணும். முன்னால சொல்ல மறந்து போச்சு. ஒரு நல்ல கேக்கும் வேற சில சாமாங்களும் வாங்கணும்”

“வரேன் சாமி”

“கேக் வாங்கறதுக்கு சாமிக்கு என்ன இப்ப என்ன விசேஷம்?”

சுவாமியுடைய அரண்மனை போன்ற ஆசிரமத்திற்குப் போகும் பாதையில் நடக்கும் போது அவன் யோசித்தான்.


“சுகு நீ வந்தது நல்லதாப் போச்சு. சாமியோட பிறந்தநாளாக்கும். எத்தனை வருஷமாச்சு பாத்து?” ஆசிரமத்தைச் சுற்றி நட்டு வளர்த்த சிறிய செடிகளுக்கு நடுவில் வெட்டி, கற்கள் போடப்பட்டிருந்த வழியில் நடந்து முன்னால் வந்த ஜலஜா அன்போடு சிரித்தபடி அவனை குசலம் விசாரித்தாள். செடிகளின் மறைவின் வழியாக அவள் நடந்துவந்ததால் சுகுவால் அவளைப் பார்க்க முடியவில்லை.

“நீ முன்னாலயே வந்துட்டியா?”

“இல்ல. வந்து இப்பதான் அரைமணி நேரமாகுது. அவள் சுகுவுக்குப் பின்னால் நடந்தாள். சுகு நடந்து வந்து ஆசிரமத்தின் வட்ட வடிவ வாசல் பக்கக் கைப்பிடியில் வலது பக்கமாக சாய்ந்து கொண்டு நின்றான். ஜலஜா வாசல் பக்கம் ஏறி வரும் படியில் இருந்தாள்.

“கொஞ்சம் நடந்தாலும் மூச்சு இரைக்கும். வயசாயிடுச்சு இல்லயா?” ஜலஜா சோர்வான ஒரு சிரிப்போடு சுகுவைப் பார்த்தாள்.

“உன்னோட முடியெல்லாம் நரைச்சுப் போச்சே?” அவள் சுகுவின் நரைத்த தலையையும் தாடி உரோமங்களையும் பார்த்துச் சொன்னாள்.

“இன்னமும் நரைக்காம இருக்குமா? வயசாகுது இல்லயா?” சுகு சிரித்தான்.

“அவள் எனக்கு ரெண்டு வகுப்பு முன்னால் படிச்சவ. உடம்பு கொஞ்சம் குண்டாயிடுச்சு. இருந்தாலும் இப்பவும் முன்ன மாதிரியே அழகிதான்” அவன் நினைத்துக் கொண்டான்.

“அப்பா எப்படி இருக்காரு?”

“படுத்த படுக்கைதான். ஒரு வருஷமாச்சு’

“ஒரு சமயம் நீ சொன்ன தென்னை மரத்து மேல ஏறறப்ப முதுகுல பிரச்சனையாயிடுச்சுன்னு?”

சொன்ன ஞாபகம் இருக்கு. “அப்புரம் சரியாவே இல்ல. அதே படுத்தபடுக்கைதான்”

பேச்சு சத்தம் கேட்டு சாமி வாசல் பக்கம் வந்தார். கொஞ்ச நேரம் நின்றார். பிறகு நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு அதில் உட்கார்ந்தார். கைப்பிடியில் இருந்த துண்டை எடுத்து கழுத்திலும் முகத்திலும் இருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டார்.

“சுவர்ணா பாத்துக்கறது இல்லயா?”

“எல்லா காரியங்களயும் அவதான் பாத்துக்கறா”

“அம்மா போய் ரெண்டு வருஷம் முடிஞ்சிருக்கும் இல்லயா?”

“மூனு வருஷமாச்சு”

“பாவம் ரொம்பக் கஷ்டப்பட்டா. இருந்தாலும் சாகற வரைக்கும் அவள நீ நல்லாப் பாத்துகிட்ட. அது போதும் அதோட புண்ணியம் உனக்குக் கிடைக்கும். சுவர்ணா ஒரு நல்ல குடும்பத்துல பிறந்தவளாக்கும். இல்லாட்டா இந்தக் காலத்துல எந்தப் பொண்ணு இந்த மாதிரி பாத்துப்பா? மனைவி முன்னால செத்துப் போய் அப்புறம் தனியா இருந்து கஷ்டப்படற நரக வேதனை அனுபவிக்கற ஆம்பளைங்க எல்லாரும் மகா பாவிங்களாக்கும். சுகுவும் ஜலஜாவும் பட்டென்று ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவரோட வாயில் இருந்து தெறித்து விழுந்த அந்த வார்த்தைகளில் புச்சமான உணர்வு நிறைந்திருப்பது போல ஜலஜாவுக்குத் தோன்றியது.

“மகளுக்கு இது எத்தனையாவது செமஸ்ட்டர்” - விஷயத்த மாற்ற சட்டென்று ஜலஜா கேட்டாள்.

“கடைசி செமஸ்ட்டர். ரெண்டு மூனு கம்பெனிங்க நடத்திய இண்டர்வியூ முடிஞ்சிருக்கு”

“கிடைக்கும் கிடைக்கும். அவனவனோட கையால அள்ள முடியறத மட்டும்தான் அள்ளமுடியும். ரெண்டு பசுவும் நாலு கோழியும். இதுல கிடைக்கறதுதான் வருமானம். நான் அன்னிக்கே சொன்னேன். இங்கயே இருக்க ஏதாச்சும் காலேஜ்ல டிகிரிக்கோ டிப்ளமாவுக்கோ சேருன்னு சொன்னேன். போதாதுன்னு சொன்ன. இதோ இப்பப் பாரு. கடனுக்கு மேல கடன். இதயெல்லாம் எப்ப அடைக்கறது?”


சுகு தலையைக் குனிந்துகொண்டு நின்றான்.

ஜலஜா திரும்பி திகைப்போடு சாமியின் முகத்தைப் பார்த்தாள்.

அபத்தம் நிறைந்த முகத்தோடும் அடுத்தவர்களை மட்டமாக நினைக்கும் கீழ்த்தரமான எண்ணம் கொண்ட முகத்தோடு அவர் நாற்காலியில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்திருந்தார்.

ஜலஜா சட்டென்று அவர் மேல் பதிந்த பார்வையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள்.

“நீ உடனே டவுனுக்குப் போயிட்டு வா. இதோ பை. காசு”

சுகு கையை நீட்டி அதை வாங்கினான். சாமான்களோடு அவன் திரும்பி வந்த போது ஆசிரமத்தை சுற்றி ஏராளமான கார்கள். வரிசை வரிசையாக நின்று கொண்டிருந்தன.

சாமி வெளியில் இல்லை. அவன் சாமான்களையும் ரசீதையும் மீதிக் காசையும் வாசலில் இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தான்.

“மனைவி முன்னால செத்துப் போய் பின்னால நரக வேதனையோட வாழற ஆம்பளைங்க மகா பாவிங்களாக்கும்” இந்த வேதாந்தம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

நடைபாதையில் ஒரு நிமிடம் சுகு ஸ்தம்பித்து நின்றான். சமையலறைக்கு உள்ள சாமான்களை சுவர்ணாவிடம் கொடுத்துவிட்டு அப்பாவுடைய மருந்துகளுடன் அவன் அப்பாவுக்கு பக்கத்தில் போய் அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். “நீ ஏன் மக போன் செய்யறப்ப என்னோட கையில கொடுக்கல?”

தழுதழுக்கும் குரலோடு அப்பா கேட்டார். அவருடைய கண்களில் இருந்து கண்ணீர் நிரம்பி வழிந்தது. நீண்ட நாட்களாகப் படுத்தப் படுக்கையாக இருந்ததால் இரத்த ஓட்டம் குறைந்து அசைவில்லாமல் கிடப்பது போல வாடிப்போன முகம். மெலிந்த கை கால்கள். கன்னங்கள் ஒட்டிப் போய் ஒடுங்கிப் போன முகம். குழி விழுந்த கண்கள். என்றாலும் அதில் பிரகாசம் நிறைந்திருந்தது.

அவன் அப்பாவின் கைகளைப் பிடித்தான். “இன்னிக்கோ நாளைக்கோ அவ கூப்பிடுவா. அப்ப உங்க கையில போன் தரேன்”. சுவர்ணா இரண்டு கோப்பைகளில் தேநீரும் ஒரு ஸ்பூனுமாக உள்ளே வந்தாள்.

தேநீரை வாங்கிக்கொண்டு அவன் வீட்டுக்கு முன்பக்கம் வந்தான். ஆசிரமத்தில் நட்சத்திர பளபளப்புடன் அலங்கார விளக்குகள் விழி திறந்தன.

ஒரு சிறிய குன்றின் உச்சியில்தான் ஆசிரமம். வீட்டு வாசலில் இருந்தால் ஆசிரமத்தைப் பார்க்கலாம். லாரிகள் கூட ஏறி ச்செல்ல வசதியான பாதை. அது ஆசிரமத்தைச் சுற்றி வட்ட வடிவில் இருந்தது. ஆசிரமத்திற்கும் பாதைக்கும் இடையில் அலங்காரச் செடிகளும் நிழல் பரப்பி அடர்த்தியாக நிற்கும் உயரமான மரங்களும்.

*இவற்றுக்கு இடையில் கற்கள் பதித்த நடைபாதைகள். வாசலுக்கு முன்னால் விசாலமான முற்றமும் உண்டு. தெருவில் இருந்து ஆசிரமத்துக்குப் போகும் பாதையில் செல்லும் வாகனங்கள் மரங்களுக்கு இடையில் இருக்கும் வட்டத்தைச் சுற்றி ஏறும். ஆசிரமத்தைச் சுற்றி வந்து கீழ்நோக்கி இறங்கும். அது பார்க்கப் பார்க்க அலுப்பு ஏற்படாத ஆச்சரியமான காட்சி.

“அம்முக் குட்டிக்கு என்னவோ தெரியல? மூச்சு இரைக்குது”. வாசலுக்கு வந்து தேநீர் கோப்பையை வாங்கிக்கொண்டு திரும்பிப் போவதற்கு இடையில் சுவர்ணா சொன்னாள். சுகு தொழுவத்துக்கு சென்றான். தரையில் கிடந்த பசு குட்டி காதுகளை கூர்மையாக்கி கண்களை விரித்து சுகுவைப் பார்த்தது. கூண்டில் நுழையாமல் அம்முக் குட்டியின் முதுகில் ஏறி ஒரு கோழி உட்கார்ந்து கொண்டிருந்தது.

முட்டையிட்டு அடை காக்க முடியாமல் பரிதவித்து பதுங்கிப் பதுங்கி தத்தித் தத்தி நடந்து கொண்டிருந்த கோழி அம்முக் குட்டிக்கு துணையாக இருக்க வந்தது போலத் தோன்றியது. சுகு கோழியை எடுத்து கூண்டில் அடைத்துவிட்டு திரும்பி வந்து அம்முக் குட்டியின் முதுகிலும் நெற்றியிலும் தாடையிலும் பாசத்தோடு வருடிவிட்டான்.

“இன்னிக்கோ நாளைக்கொ பிரசவிக்கும்” சமையலறைக்குள் நுழைந்து இரண்டு மூன்று வாழைப்பழங்களை எடுத்துக் கொண்டு திரும்பி நடக்கும்போது சுகு சுவர்ணாவிடம் சொன்னான். வாழைப்பழங்களை ஒவ்வொன்றாக பசுவுக்குக் கொடுத்துவிட்டு மறுபடியும் ஒரு தடவை அதன் தலையிலும் தாடையிலும் தடவி தொழுவத்தில் விளக்கைப் போட்டு உள்ளே நுழைந்தான்.


இரவு சாப்பாடு முடிந்து ராத்திரி நன்றாக இருட்டும் வரை சுகுவும் சுவர்ணாவும் சமையலறைக்கும் தொழுவத்திற்குமாக நேரத்தை மறந்து காத்துக் கொண்டிருந்தார்கள். விடியற்காலை எப்போதோ அம்முக் குட்டியின் அசைவுகளின் ஓசையை கேட்டு முதலில் கண் விழித்தது அப்பாதான். அப்பாவுக்கு ராத்திரி தூக்கம் மிகக் குறைவு.

சிறிதாக ஏதாவது சத்தம் கேட்டால் கூட விழித்துக் கொள்வார். சுகுவும் சுவர்ணாவும் தொழுவத்திற்கு போகும் போது அம்மு கன்று குட்டியுடன் எழுந்து நின்று கொண்டிருந்தது. பக்கத்தில் கன்று. சுவர்ணா ஒரு நிமிடம் கண்களை மூடியபடி நின்றாள். ஏழு மணியாகும்போது சுகு சமையலறையோடு சேர்ந்திருந்த குட்டிச் சுவரில் ஒரு கோப்பை தேநீருடன் நிம்மதியோடு சாய்ந்து கொண்டிருந்தான்.

அப்போது போனுடன் சுவர்ணா முன்னால் வந்தாள்.

“மகளாக்கும்”. அவள் சொன்னாள். அவன் தேநீர்க் கோப்பையை சுவர் மேல் வைத்துவிட்டு போனை வாங்கினான்.

“அப்பா. கேம்பஸில் செலக்‌ஷன் ஆயிடுச்சு”

“எத்தனை பேருக்குக் கிடைச்சிருக்கு?”

நெஞ்சுக்குள் பொங்கி வந்த சந்தோஷத்தை அடக்கிக்கொண்டு அவன் கேட்டான்.

“எங்க காலேஜ்ல மூனு பேருக்கு செலக்‌ஷன் ஆயிருக்கு. நாலைஞ்சு காலேஜுங்கள்லேர்ந்து இண்டர்வியூ நடந்துச்சு இல்லயா? மொத்தம் எத்தனை பேருக்குக் கிடைச்சதுன்னு தெரியல”

“நீ போறியா?”

“இன்னும் உறுதியா முடிவு செய்யல. இதுக்கு அப்புறமும் வேற இண்டர்வியூங்க எல்லாம் இருக்கு. அதோட் அரிசல்ட் இந்த வாரத்துல வந்துடும் அப்பா”

“நீ காலேஜ் நோட்டீஸ் போர்டுல பாத்து உறுதிப்படுத்திக்க”

“சரி அப்பா. இன்னிக்கே பாக்கறேன் . நம்மளோட அம்மு கன்னு போட்டுடுச்சா?”

“ஆமாம். இன்னிக்கு விடிகாலையிலதான். உன்னோட ஆசப்படியே நெத்தியிலயும் வால்லயும் பொட்டுங்களோட இருக்கற ஒரு அழகுக் கன்னுக்குட்டி”. அவன் ஆனந்தத்துடன் சிரித்தான்.

“போன கொடுக்கறது இல்லைன்னு அப்பா புகார் சொல்ல ஆரம்பிச்சுட்டாரு”

“செலக்‌ஷன் விஷயத்த நீயே அப்பா கிட்ட சொல்லிடு. போன அப்பாகிட்ட கொடுக்கறேன்”. சொல்லிவிட்டு அவன் உள்ளே போய் போனை அப்பா கையில் கொடுத்தான். திரும்பி வந்து தேநீர்க் கோப்பையை எடுத்துக் கொண்டு அரைச் சுவரில் இருந்து அம்முவை பார்த்தபடி தேநீரைக் குடிக்க ஆரம்பித்தான்.

தட்டுத்தடுமாறி எழுந்து தன்னுடைய குழந்தையின் உடம்பை நக்கித் துடைத்து அதற்கு பாலூட்டத் தயாரானது.

தூரத்தில் எங்கோ ஒரு சிறிய இடியோசை. அது மெலிதாகி மெலிதாகி நின்றது. ஆசிரமத்தைச் சுற்றி நிறைய ஆட்களுடன் போலீஸ் ஜீப்புகளும்! குன்றின் உச்சியில் இருந்து ஒரு போலீஸ் ஜீப் வேகமாக முதலில் இறங்குவதை அவன் பார்த்தான். ஜீப்பிற்குள் சாமியும் அரைகுறையான நவ நாகரீக ஆடைகளில் அழகழகான இளம் பெண்களும்! நியாய தருமம் ஒரு நாள் வெல்லும் என்பது தன் கண் முன்னால் உண்மையாவதை அவன் உணர்ந்தான்.

தொழுவத்திற்குப் பின்னால் இருந்த சிறிய இடத்தில் கொத்திக் கிளறி மண்ணைச் சரி செய்து வேலி கட்டி சுவர்ணா போட்ட காய்கறி விதைகள் மொட்டுகளாகவும் பூக்களாகவும் அரும்பியபடி ஆனந்தத்தோடு அவர்களை அழைத்தன.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p88.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License