இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




மொழிபெயர்ப்புக் கதைகள்

காணாமல் போனவர்!

மலையாளம்: ஜி.எஸ். மனோஜ்குமார்

தமிழ்: சிதம்பரம் இரவிச்சந்திரன்

அந்த ஆள் எப்போதோ ஒரு நாடோடி வேஷத்தைப் போட்டுக் கொண்டான். நாகரீகத்துக்கு உகந்த மாதிரியுள்ள ஆடை அணிவதில் இருந்து அவன் எப்போது மாறினான் என்றூம் தென்டியாகச் சுற்ற ஆரம்பித்தான் என்றும் அவனுக்கே சரியாகத் தெரியாது. பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

நடந்து முடிந்த வழிகள் எதிலும் அந்த பாதங்களின் சுவடுகள் மீண்டும் பதியவில்லை. ராத்திரியும் பகலும் பயணம் அவனைக் கூட்டு சேர்த்துக்கொண்டு சென்றது. நடந்து தளர்ந்த போது வழியோரத்திலோ மர நிழலிலோ கடைத் திண்ணையிலோ சுகமான தூக்கம். பார்ப்பவர் எல்லோருக்கும் பொறாமை ஏற்படும்விதம் அந்த ஆள் தூங்கினான்.

பசிக்கும்போது வழியில் கிடைக்கும் எதையும் ஆசையோடு சாப்பிடுவான். சாப்பிட்டது என்ன என்பது பற்றியோ எவ்வளவு சாப்பிட்டோம் என்றோ அந்த ஆள் கவலைப்பட்டதில்லை. பசி அடங்கிவிட்டதாகத் தோன்றும் போது மிச்சமிருப்பதை வழியிலேயே விட்டுவிட்டுப் பயணம் தொடருவான். புத்தி மேதாவி என்று அவனைப் பற்றி நினைத்துக் கொள்ளும் பலரும் அந்த நாடோடியிடம் “எந்த ஊர்?” என்று கேட்பார்கள்.

மணல் வழிகள். செங்கல் பாதைகள். காடு மேடு எல்லாம் கடந்துபோயின. வழிகளில் நடந்தும் நதிகளில் நீந்தியும் ஒரு ஊருக்கும் பிடி கொடுக்காமல் அந்த ஆள் நடந்து கொண்டேயிருந்தான். ஒரு சமயம் கூட அந்த ஆள் திரும்பிப் பார்க்கவேயில்லை. தாண்டிய வழிகளைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொள்வது, பழையகால ஞாபகங்களில் குளிர் காய்வது இதெல்லாம் கோழைத்தனம் என்று அந்த ஆள் நினைத்திருக்கலாம்.

பின்னால் இருந்து வரும் எந்த ஒரு அழைப்பையும் அந்த ஆள் காது கொடுத்துக் கேட்கவில்லை. வசந்தங்கள் முடிவுக்கு வந்தது அந்த ஆளுக்குத் தெரியாது. அந்த ஆளுடைய முகத்தில் சங்கடங்களின் நஷ்டங்களின், ஒரு சுவடு கூட இல்லை. அந்த ஆளுக்கு தோற்றவனுடைய முகம் இல்லை. அந்த யாத்திரை முன்பின் பழக்கமில்லாத வழிகளின் ஊடே தொடர்ந்து கொண்டேயிருந்தது.

ஒரு மகன் ஞாபக சக்தி குறைவால் வழி தவறி பயணம் செய்யும் தன் தந்தையைத் தேடி தெரிந்த வழிகளின் ஊடே அலைகிறான் என்பது அந்த ஆளுக்கு தெரியாது. “காணவில்லை” என்ற கறுப்பு வெள்ளையில் சுவரொட்டியை தன் தந்தை போக வாய்ப்புள்ள இடங்கள் எல்லாவற்றிலும் ஒட்டினான்.


நினைவுகளின் தாளம் தப்பிக் காணாமல் போன தந்தையை தேடும் மகனுக்கு ஆதரவு காட்டிப் பலரும் பயணித்தார்கள். அப்பாவின் நண்பர்கள், அவனுடைய நண்பர்கள், அப்பாவுடன் வேலை பார்த்தவர்கள், ஊர்க்காரர்கள், சொந்தக்காரர்கள் என்று இப்படிப் பலர். சிலர் அவரவர் இடத்தில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு சமூக ஊடகங்களில் தேடுதல் வேட்டை நடத்தும் போராளிகளாக மாறினர்.

“காணவில்லை” என்று கொட்டை எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருந்த நடுத்தர வயதுடைய ஒரு ஆளுடைய படத்தை முன்னூட்டம் செய்யும் தொழிலாளர்களாக சிலர். அவர்கள் வாட்ஸ் ஆப் வழியாகவும் இன்ஸ்டாகிராம் வழியாகவும் ஷேர் செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் உலகம் முழுவதும் விரித்த வலையில் காணாமல் போன அந்த கிழவன் சிக்கிக்கொள்ளவில்லை.

அந்தத் தொழிலாளர்களுக்கு அலுப்பு ஏற்பட்டபோது ரீல்களில் அபயம் புகுந்தனர். பஸ் ஸ்டாண்டுகளிலும் ரயில்வே ஸ்டேஷன்களிலும் காத்திருப்பு மையங்களிலும் அவன் அப்பாவுடைய சுவரொட்டியைப் பதித்தான். வருடங்கள் நீண்ட அவனுடைய தேடல் ஒவ்வொரு நாள் முடியும்போது முன்பை விட அதிக வலிமையுடன் தொடர்ந்தது.

மற்ற எல்லோரும் தேடலை முடித்துக் கொண்டார்கள். சொந்தக்காரர்களில் சிலர் அடையாளம் தெரியாத இறந்தவர்களின் முகத்தில் காணாமல் போன அச்சுதன் நாயருடைய முகச் சாயல் தெரிகிறதா என்று ஆராய்ச்சி செய்தார்கள். அப்போதும் அச்சுதன் நாயர் எங்கேயோ பயணம் தொடர்ந்துகொண்டிருந்தார்.

ஜோலியும் கூலியும் கடந்து உள்ள இந்தத் தேடலை முடிவுக்குக் கொண்டுவர முதலில் நெருங்கியவர்களும் பிறகு எல்லாரும் அவனுக்கு உபதேசம் செய்தார்கள். அதி வேகமாக அவனுடைய முடி நரைத்துப் போக ஆரம்பித்தது. அப்பாவை விட வயதானவனாக அவன் இப்போது தெரிவான் என்று சிலர் பரிதவித்தார்கள்.

புதிய வேலை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து சிலர் அவனை பின்வாங்க முயற்சி செய்தார்கள். மடையன் என்று முத்திரை குத்தப்பட்ட அந்த மகன் அப்போதும் தன் பாழ் முயற்சியைத் தொடர்ந்து கொண்டேயிருந்தான்.

அப்பாவைத் தேட ஆரம்பித்து பதிமூன்று வருடங்கள் கடந்து போய்விட்டன என்பது அவனுக்கு மட்டும் தெரியவேயில்லை. கை விட்டுப் போன இளமையைப் பற்றி அவனுக்குத் தெரியவில்லை. அன்றும் இன்றும் இருக்கும் அப்பாவின் உருவத்தை அவனால் நினைத்துப் பார்க்கமுடியவில்லை. சுவரொட்டிகளை ஆனமட்டும் முடிந்த இடங்கள் எல்லாவற்றிலும் பதித்து அவன் காத்திருந்தான்.

போலீசாரின் உதவியையும் சட்டவழிகளையும் அவன் அணுகினான்.


ஆறுதல் தரக்கூடிய எந்த ஒரு பதிலும் எந்த ஒருவாசலில் இருந்தும் கிடைக்கவில்லை. பெங்களூர் மலையாளி சங்கத்தின் வாட்ஸ் ஆப் குரூப்பில் வந்த சோர்ந்து போயிருந்த ஒரு மலையாளியைப் பற்றிய செய்தியை யாரோ அவனுக்கு வாசித்துக் காட்டினார்கள்.

யாரிடமும் எதுவும் சொல்லாமல் வீட்டையும் பூட்டிக்கொண்டு அவன் அங்கே புறப்பட்டான். வாரக் கணக்கில் அவனை அந்த ஊர்க்காரர்கள் யாரும் கண்டு கொள்ளவேயில்லை. “அவனும் எங்கேயோ அப்பாவைப் போலவே புறப்பட்டுப் போய்விட்டான்” என்று ஊர்க்காரர்களில் சில பேசிக்கொண்டார்கள். நல்ல ஒரு இளைஞன் தன் வாழ்க்கையை இப்படித் தொலைத்துக்கொண்டுவிட்டானே என்று சிலர் அனுதாபப்பட்டார்கள்.

இப்படி இருக்கும்போது ஒரு பகலில் ஊரில் ஆலமரத்தடி ஸ்டாப்பில் நின்ற பஸ்ஸில் இருந்து அவன் அப்பாவை கை பிடித்துக் கீழே இறக்கிவிட்டான்!

ஊர்க்காரர் பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்தக் கிழவனையும் கூட்டிக்கொண்டு அவன் வீட்டை நோக்கி நடந்தான். பலரும் அவனை பேர் சொல்லி கூப்பிட்டார்கள். யாருக்கும் முகம் கொடுக்காமல் அவன் அப்பாவையும் கூட்டிக்கொண்டு வீட்டை அடைந்தான். முன் பின் தெரியாத இடத்துக்கு வந்தது போல அந்தக் கிழவன் வீட்டு முற்றத்தில் நின்றான். முன்பு அப்பா வெளியில் போய்விட்டு வீட்டுக்குத் திரும்பி வரும்போது “வ்விலாசினி” என்று நீட்டி முழக்கிக் கூப்பிட்டுக் கொண்டுதான் வருவார்.

மகன் அந்த அழைப்புக்காக ஆசைப்பட்டான். ஏங்கினான். முன்பு அப்பா படிகள் ஏறி வந்து சட்டையைக் கழற்றிவிட்டு அங்கே இருக்கும் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கொள்வார். அம்மா ஒரு பெரிய டம்ளரில் தண்ணீருமாக வருவாள். மனைவிடம் சொல்வதற்கென்று சில ஊர் செய்திகளோடு அவர் வருவார்.

பேண்ட்டைக் கழற்றி சாய்வு நாற்காலியில் அப்பா உட்காருவதற்காக அவன் காத்துக் கொண்டிருந்தான். கடைசியில் காத்திருப்பை முடித்துக்கொண்டு அவன் அப்பாவின் கையைப் பிடித்து உள்ளே கூட்டிக்கொண்டு போனான். அந்த ஆள் அந்த நீளமான திண்ணையின் தரையில் உட்கார்ந்துகொண்டார்.

அச்சுதன் நாயர் திரும்பி வந்துவிட்டார் என்ற விஷயம் ஊர் முழுவதும் காட்டு தீ போல பரவியது. தெரிந்தவர்கள் பலரும் பார்க்க வந்தார்கள். அவர்களில் பலரும் திண்ணையில் முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த ஆளைப் பார்த்து திரும்பிப் போனார்கள். சிலர் அந்த ஆளிடம் பல கேள்விகளைக் கேட்டார்கள்.

ஆனால் அந்த ஆள் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. முணுமுணுத்துக்கொண்டு சிலர் திரும்பிப் போனார்கள். கூட்டத்தில் ஒருவர் கேட்டார். “யாரு நீங்க?”. உள்ளே அலமாரியில் அப்பா போட்டுக் கொள்வதற்காக ஆடைகளைத் தேடிக் கொண்டிருந்த மகன் சட்டென்று வெளியில் வந்தான். அந்தக் கேள்வியை கேட்டது யார் என்று அவனுக்குப் புரியவில்லை.

அவன் எல்லோரிடமும் சொன்னான். “அப்பா. என்னோட அப்பா!”. கூடி நின்றவர்களில் பலரும் திரும்பிப் போனார்கள். மிச்சமிருந்த சிறிய கூட்டம் பரஸ்பரம் முகத்தோடு முகம் நோக்கி நின்றது. “எவ்வளவு காலம் ஆச்சு இல்லையா? பட்டினி கிடந்து மெலிந்து போயிட்டாரு. அதான் நமக்கு யாருன்னு அடையாளம் தெரியல”. சிலர் சொன்னார்கள்.

“பட்டினி கிடந்தா உயரம் குறையுமா?” மற்றொரு ஆள் சொன்னார்.

“இந்த ஆள் வாயத் திறந்து சொன்னா ஏதாச்சும் தெரிஞ்சுக்கலாம்” என்று ஒரு ஆள் சொன்னார்.

“மகனுக்கு அடையாளம் தெரிஞ்சுது இல்லயா. அப்படின்னா அது அச்சுதன் நாயர்தான்”. மெம்பர் சொன்னார்.

“அவன் ஒரு பைத்தியக்காரன் மெம்பரே” என்று முணுமுணுப்புகள் ஏற்பட்டன.

எல்லோரும் அவரவர் எழுதிய தீர்ப்புகளை அந்த வீட்டு முற்றத்தில் கை கழுவி விட்டு திரும்பப் போனார்கள். சில நாட்களிலேயே மகன் பதின்மூன்று வருடங்கள் செய்யவேண்டிய உபசரிப்புகளில் ஈடுபட்டான். கிணற்றடியில் ஒரு ஸ்டூலில் அப்பாவை உட்காரவைத்து எண்ணை தேய்த்துக் குளிப்பாட்டினான்.

நீளமாக வளர்ந்திருந்த நகங்களை வெட்டிவிட்டான்.

தலைமுடியை பக்கவாட்டில் கோதிவிட்டான். ஒதுக்கிவிட்டான். குட்டிகூரா பவுடர் பூசிவிட்டான். நெற்றியில் சந்தனப் பொட்டு வைத்தான். ஒரு குட்டிக் குழந்தையை பார்த்துக்கொள்வது போல அவன் அப்பாவைக் கவனித்துக் கொண்டான். கடைத்தெருவின் வழியாக அவன் அப்பாவைக் கையைப் பிடித்து கூட்டிக்கொண்டு போனான்.

“அச்சுதன் நாயர். 76” என்ற ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டில் டாக்டர் வைட்டமின் மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார். அவன் வாங்கிக் கொடுத்த புதிய செருப்புகளை போட்டுக்கொண்டு அந்த ஆள் பூமி தொடாமல் நடந்தார். கடைத்தெருவின் திண்ணைகளில் இருந்து பலரும் அவனைப் பார்த்தார்கள்.


காய்கறிகளைக் கூடையில் வைத்து தலையில் தூக்கிக்கொண்டு வந்த காய்க்காரி அவர்களை முறைத்துப் பார்த்தாள்.

பிறகு வாயில் வெற்றிலையைப் போட்டு குதப்பி நீட்டித் துப்பினாள்.

அவளுடைய வம்புப் பேச்சு எல்லாம் அவர்களைப் பற்றித்தான் என்று அவர்கள் இருவருக்கு மட்டும் தெரியவில்லை. அந்நியமான அந்த முகங்களைப் பார்த்துக் கொண்டே அந்த வயதான மனிதன் நடந்தான். யார் யாரெல்லாம் ஏதேதோ கேட்டார்கள்.

கேள்விகள் எல்லாம் கேள்விகளாகவே முடிந்தன. பெரும்பாலான நேரமும் மௌனியாக அந்த வராந்தாவில் உட்கார்ந்திருந்தான் அந்த ஆள். திரும்பி அவனிடம் எதுவும் அந்த ஆள் சொல்வதில்லை. அதுவும் அவனுக்குத் தெரியவில்லை. வருடக் கணக்காகச் சொல்ல வேண்டியதை எல்லாம் அவன் ஒரு குழந்தையைப் போலச் சொல்லிக் கொண்டே இருந்தான்.

ராத்திரி முற்றத்தில் படந்து கிடந்த நிலாவில் அந்த ஆள் இறங்கி நின்றான்.

அச்சுதன் நாயர்உடைய பக்குவம் இல்லாத முழுக்கைச் சட்டைக்குள் ஒற்றைக்கோலம் போல வெகுநேரம் நின்றான். கீழே பாதங்களைச் சுற்றிலும் அந்த ஆளின் கறுத்த நிழல் வளையமிட்டது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/translation/p91.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License