மேளகர்த்தா இராகங்கள்
இந்திய இசையில் பயன்படுத்தப்படும் இசை வடிவங்கள் இராகங்கள் எனப்படுகின்றன. கருநாடக இசை இராகம், தாளம் என்னுமிரண்டையும் அடிப்படையாகக் கொண்டது. இராகங்கள் சுரங்களை அடிப்படையாகக் கொண்டன. ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற இவ்வேழு சுரங்களும் ச - ரி - க - ம - ப - த - நி என்னும் எழுத்துக்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் மத்திமத்துக்கு இரண்டு வேறுபாடுகள் உண்டு. ரிஷபம், காந்தாரம், தைவதம், நிஷாதம் என்ற நான்கு சுரங்களுக்கும் மும்மூன்று வேறுபாடுகளுடன் 16 சுர வேறுபாடுகள் உள்ளன. இந்த ஏழு சுரங்களிலும், முன்பு கூறிய வேறுபாடுகளுள்ள சுரங்களுள் ஒன்றையோ, பலவற்றையோ மாற்றுவதன் மூலம், ஏழு சுரங்களைக் கொண்ட 72 வெவ்வேறு சுர அமைப்புக்களைப் பெற முடியும். இவ்வாறு உருவாகும் இராகங்கள் மேளகர்த்தா இராகங்கள் எனப்படுகின்றன. இவையே கர்நாடக இசைக்கு அடிப்படையாக அமைகின்றன.
மேளகர்த்தா இராகங்கள் குறித்த பட்டியல்
மேளகர்த்தா இராகங்கள் சுத்த மத்திம இராகம், பிரதி மத்திம இராகம் என இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
சுத்த மத்திம இராகங்கள்
சுத்த மத்திம இராகம் இந்து சக்கரம், நேத்ர சக்கரம், அக்னி சக்கரம், வேத சக்கரம், பாண சக்கரம் ருது சக்கரம் என ஆறு சக்கரங்களாகவும், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஆறு இராகங்கள் வீதம் மொத்தம் 36 இராகங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
I - இந்து சக்கரம் |
II - நேத்ர சக்கரம் |
III - அக்னி சக்கரம் |
1. கனகாங்கி
2. ரத்னாங்கி
3. கானமூர்த்தி
4. வனஸ்பதி
5. மானவதி
6. தானரூபி |
7. சேனாவதி
8. ஹனுமத்தோடி
9. தேனுக
10. நாடகப்பிரியா
11. கோகிலப்பிரியா
12. ரூபவதி |
13. காயகப்பிரியா
14. வகுளாபரணம்
15. மாயாமாளவகௌளை
16. சக்ரவாகம்
17. சூர்யகாந்தம்
18. ஹாடகாம்பரி |
IV - வேத சக்கரம் |
V - பாண சக்கரம் |
VI - ருது சக்கரம் |
19. ஜங்காரத்வனி
20. நடபைரவி
21. கீரவாணி
22. கரகரப்பிரியா
23. கௌரிமனோகரி
24. வருணப்பிரியா |
25. மாரரஞ்சனி
26. சாருகேசி
27. சரசாங்கி
28. ஹரிகாம்போஜி
29. தீரசங்கராபரணம்
30. நாகாநந்தினி |
31. யாகப்பிரியா
32. ராகவர்த்தனி
33. காங்கேயபூஷணி
34. வாகதீச்வரி
35. சூலினி
36. சலநாட |
பிரதி மத்திம இராகங்கள்
பிரதி மத்திம இராகம் ரிஷி சக்கரம், வசு சக்கரம், பிரம்ம சக்கரம், திசி சக்கரம், ருத்ர சக்கரம், ஆதித்ய சக்கரம் என ஆறு சக்கரங்களாகவும், ஒவ்வொரு சக்கரத்திற்கும் ஆறு இராகங்கள் வீதம் மொத்தம் 36 இராகங்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
VII - ரிஷி சக்கரம் |
VIII - வசு சக்கரம் |
IX - பிரம்ம சக்கரம் |
37. சாலகம்
38. ஜலார்ணவம்
39. ஜாலவராளி
40. நவநீதம்
41. பாவனி
42. ரகுப்பிரியா |
43. கவாம்போதி
44. பவப்பிரியா
45. சுபபந்துவராளி
46. ஷட்விதமார்க்கிணி
47. சுவர்ணாங்கி
48. திவ்யமணி |
49. தவளாம்பரி
50. நாமநாராயணி
51. காமவர்த்தனி
52. ராமப்பிரியா
53. கமனச்ரம
54. விஷ்வம்பரி |
X - திசி சக்கரம் |
XI - ருத்ர சக்கரம் |
XII - ஆதித்ய சக்கரம் |
55. சியாமளாங்கி
56. சண்முகப்பிரியா
57. சிம்மேந்திரமத்திமம்
58. ஹேமவதி
59. தர்மவதி
60. நீதிமதி |
61. காந்தாமணி
62. ரிஷபப்பிரியா
63. லதாங்கி
64. வாசஸ்பதி
65. மேசகல்யாணி
66. சித்ராம்பரி |
67. சுசரித்ர
68. ஜோதிஸ்வரூபிணி
69. தாதுவர்த்தனி
70. நாசிகாபூஷணி
71. கோசலம்
72. ரசிகப்பிரியா |
இந்த ஒவ்வொரு மேளகர்த்தா இராகத்துக்குமுரிய சுரங்களில் ஒன்றையோ, பலவற்றையோ குறைப்பதன் மூலம் ஏராளமான இராகங்கள் பெறப்படுகின்றன.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.