இந்து சமயப் புராணங்களிலும், வரலாறுகளிலும் அஷ்டாவதானி, தசாவதானி, சதாவதானி என்று குறிப்பிடுவதைப் படித்திருப்போம். அப்படியென்றால் என்ன? என்று யோசித்திருப்போமா... அதனைப் பொதுவாக, திறன் மிக்கவர் அல்லது வல்லவர் என்ற பொருளிலேயே நாம் எடுத்துக் கொண்டிருப்போம். வாங்க, அதன் உண்மையான பொருள் அறியலாம்.
ஒருவர் ஒரே வேளையில் ஒன்றிற்கு மேற்பட்ட செயல்களில் தனது கவனத்தைக் குவிக்கும் நினைவாற்றல் கலையினை சமஸ்கிருதத்தில் ‘அவதானம்’ என்பர். இதனைத் தமிழில், ‘கவனகம்’ என்று பொருள் கொள்ளலாம். இத்திறன் பெற்றவர்களை, சமஸ்கிருதத்தில் ‘அவதானி’ என்கின்றனர். நாம், தமிழில் ‘கவனகர்’ என்று சொல்லலாம்.
ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கவனகம் வகைப்படுத்தப்படுகிறது. அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட செயல்களில்;
நான்கு செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘சதுரவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘நாற்கவனகம்’ என்றும், நான்கு செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘சதுரவதானி’ என்றும், தமிழில் ‘நாற்கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
எட்டு செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘அஷ்டாவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘எண்கவனகம்’ என்றும், எட்டு செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘அஷ்டாவதானி’ என்றும், தமிழில் ‘எண்கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
பத்து செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘தசவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘பத்துக் கவனகம்’ என்றும், பத்து செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘தசாவதானி’ என்றும், தமிழில் ‘பத்துக் கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
பதினாறு செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘சோடகவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘பதினாறு கவனகம்’ என்றும், பத்து செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘சோடக்கவதானி’ என்றும், தமிழில் ‘பதினாறு கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
முப்பத்திரண்டு செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘துவாத்ரீம் தசாவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘முப்பத்திரண்டு கவனகம்’ என்றும், பத்து செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘துவாத்ரீம் தசாவதாணி’ என்றும், தமிழில் ‘முப்பதிதிரண்டு கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.
நூறு செயல்களைச் செய்யக்கூடியதை, சமஸ்கிருதத்தில் ‘சத அவதானம்’ என்றும், இதனைத் தமிழில் ‘நூறு கவனகம்’ என்றும், பத்து செயல்களைச் செய்யக்கூடியவர்களை சமஸ்கிருதத்தில் ‘சதாவதானி’ என்றும், தமிழில் ‘நூற்றுக் கவனகர்’ என்றும் குறிப்பிடுகின்றனர்.