இந்திய இசையில் எல்லா ராகங்களும் எல்லா நேரங்களில் கேட்கக் கூடியதே! என்றாலும் பூஜா காலங்களுக்கு என்றும், ஒவ்வொரு செயலுக்கும், ஒவ்வொரு வித ராகம் ஏற்புடையது என்றும் நம் முன்னோர்கள் பகுத்திருக்கிறார்கள்.
இவற்றில் கோயில் பூஜை நேரங்களில் பயன்படுத்தும் ராகங்கள் இவை:
1. அதிகாலையில் பூபாளம், பௌளி, மலயமாருதம், சக்ரவாகம் போன்றவை பாட, கேட்பவர்களின் உள்ளத்தில் புத்துணர்ச்சியைத் தோற்றுவிக்கும்.
2. காலை பூஜையில் பிலஹரி, கேதாரம், ஆரபி, தன்யாசி போன்ற ராகங்களைப் பாடுவது மகிழ்ச்சியையும் சுறுசுறுப்பையும் ஏற்படுத்தும்.
3. மதிய பூஜையில் ஸ்ரீராகம், சுருட்டி, மணிரங்கு, மத்யமாவதி போன்றவை பாடும்போது தெய்வாம்சம் உடலில் இணையும், உள்ளம் நெகிழும்.
4. மாலையில் நடைபெறும் பூஜையில் சங்கராபரணம், தோடி, கல்யாணி, நாட்டைக்குறிஞ்சி, வாஸஸ்பதி, மோகனம் போன்றவற்றைப் பாடுவது, உடலில் இறைநிலையைத் தோற்றுவித்து இன்பத்தில் ஆழ்த்தும்.
5. இரவு பூஜையில் காம்போதி, ஹரிகாம்போதி, தோடி, பைரவி, ஆனந்தபைரவி ஆகிவற்றைப் பாடினால் தெய்வத்தோடு ஒன்றிய ஐக்கியபாவம் ஏற்பட்டு தன்னிலை மறக்கும் இன்பம் ஏற்படுத்தும்.
6. பள்ளியறை பூஜையில் நீலாம்பரி, ஆனந்தபைரவி, தாளகீர்த்தனைகள் போன்றவை பாடக் கேட்கும்போது பரிபூரண ஆனந்தமும் தெய்வத்தோடு ஒன்றிய பேரானந்தமும் கிட்டும்.