அனைவருக்கும் என்றும் இளமையாகவே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்குச் சான்றோர்கள் மிகவும் எளிய ஒரு வழியைக் கூறுகின்றனர்.
ஓரடி நடவேன், ஈரடி கடவேன், இருந்து உண்ணேன், படுத்து உறங்கேன் என்பதே அது.
அதற்கான விளக்கம்...
ஓரடி நடவேன் - நமது உடம்பின் நிழல் கால் அளவில் ஓர் அடியாக இருக்கும் உச்சிப்பொழுது நேரத்தில் வெளியில் நடக்கக் கூடாது. உச்சி வெயில் ஆகாது.
ஈரடி கடவேன் - அதாவது, ஈர அடி கடவேன், ஈரமான இடங்களில் நீண்ட நேரம் நிற்பதோ, நடப்பதோ கூடாது என்பதால் அப்படி நடக்கக் கூடாது.
இருந்து உண்ணேன் - ஏற்கனவே சாப்பிட்ட உணவு வயிற்றில் இருக்கும் போதே மேலும் உண்ணக் கூடாது. நன்கு ஜீரணமான பின்புதான் மறுபடியும் சாப்பிட வேண்டும்.
படுத்து உறங்கேன் - தூக்கம் வந்த பிறகுதான் படுக்கைக்குச் செல்ல வேண்டும். படுத்துக் கொண்டு தூக்கம் வரவில்லையே என நினைத்தபடி படுக்கையில் கிடக்கக் கூடாது.
இதுவே நீண்டநாள் இளமையோடு வாழும் ரகசியம் என குறிப்பிடுகின்றனர் சான்றோர்.