சாங்கம் = ச + அங்கம்: பிரிக்க முடியாத உறுப்புகளாகிய கர சரணங்கள். அதாவது உடல் உறுப்புகள்
உபாங்கம் = உப + அங்கம்: பிரிக்கத்தக்க உறுப்புகளாகிய ஆடை, அணிகலன்கள்.
பிரத்யங்கம் = பிரதி + அங்கம் : பிரிந்தே இருக்கும் உறுப்புகளாகிய நாம் வைத்திருக்கும் பாத்திரப் பண்டங்கள்.
ஆன்மாவுக்குச் சாங்கம் – ஞானம் (ஆன்மாவுடன் பிரிவற நிற்கும்)
ஆன்மாவுக்கு உபாங்கம் – உடம்பு
ஆன்மாவுக்கு பிரத்யங்கம் – மனைவி, மக்கள், வீடு, நிலம், பொன் முதலியன.
ஆன்மிக மார்க்கத்தின் நான்கு வழிகள்
சரியை – மனிதர்களை ரட்சிக்க வேண்டிய சமய ஆசாரங்களைக் கூறும்.
கிரியை – பூசை, வேள்வி முதலிய விவரங்கள் கூறும்.
யோகம் – உடலில் உள்ள நாடி நரம்புகளின் விவகாரங்களையும் மூச்சுக்காற்றின் போக்கு வரவுகளின் அளவுகளையும் அவற்றின் துணை கொண்டு செய்யப்படும் பிராணாயாமம், பிரத்தியாகாரம் முதலியவை பற்றியும் கூறும்.
ஞானம் – உலகத் தோற்றத்திற்குக் காரணமான தத்துவங்களையும், பிறத்தல், இருத்தல், இறத்தல் ஆகிய முத்தொழில்களையுடைய ஆன்ம அனுபவங்களையும், அது வசிக்கும் புவனங்களையும் பந்தம், முத்தி ஆகியவற்றையும் கூறும்.
ஆன்மாக்கள் வீடுபேறு அடைவதற்குரிய நான்கு மார்க்கங்களாகவும் இதனைக் கூறுவர்.