* பஞ்சாமிர்தம் என்பது தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகிய ஐந்து பொருள்களின் கலவையால் செய்யப்படுவதால் ‘ஐந்தமுது’ (பஞ்சாமிர்தம்) என்று அழைக்கப்பெறுகிறது.
* ரம்பை, ஊர்வசி, மேனகை போன்ற 60,000 அரம்பையர்கள் (அப்சரஸ்கள்) பாற்கடலைக் கடையும் பொழுது தோன்றியவர்கள்.
* அகலிகை, துரோபதை, சீதை, தாரை, மண்டோதரி என்ற இவர்கள் ஐவரும் புராணகாலத்தில் வாழ்ந்த சிறந்த இல்லறவழிகாட்டிகளாக முன்னிருத்தப்படுகிறார்கள். இவர்களுக்கு பஞ்சகன்னிகைகள் என்று பெயர்.
* கோயில்களில் கருவறைப் பகுதியிலிருந்து வெளியேறும் திருமஞ்சன நீர் வெளியேறுவதற்காக அமைக்கப்பட்ட பகுதி பிரநாளம் எனப்படுகிறது.
* கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்பன நான்கும் இணைந்தது சதுர்யுகம் எனப்படுகிறது. ஒரு சதுர்யுகம் என்பது 21000 மனித வருடங்களாகும்.
* அத்தி மரத்தில் இறைவனின் உருவம் செய்ய சைவ, வைணவ ஆகமங்கள் அனுமதிதருகின்றன. உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தில் செய்யப்பட்டது.
* கௌசிகர், காசிபர், பரத்வாஸர், கௌதமர், அகத்தியர்,அத்ரி, பிருகு ஆகிய ஏழ்வரும் சப்த ரிசிகள் என்று அழைக்கப்பெறுகிறார்கள்.
* இந்தியாவின் அலகாபாத், அரித்வார், உஜ்ஜைனி மற்றும் நாசிக் ஆகிய நான்கு ஊர்களில் கும்பமேளா கொண்டாடப்படுகிறது.
* பிரமம், தைவம், ஆருசம், பிராசாபத்தியம், ஆகரம், காந்தருவம், இராக்கதம், பைசாசம் என்பவை இந்து சமயத்தில் குறிப்பிடப்படும் எட்டுவகையான திருமணங்களாகும்.
* நளகூபன், மணிக்ரீவன் ஆகிய இருவரும் குபேரனுக்கும் சித்திரலேகைக்கும் பிறந்த இரட்டை கந்தர்வர்களாவர்.
* பாலை நிலத்துக்குரிய தெய்வமாக கொற்றவை வணங்கப்படுகிறாள்.
* தேவலோக நதியான கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தவன் பகிரதன் என்பதனால் கங்கைக்கு பாகீரதி என்ற பெயருண்டு.
* பசுவிலிருந்து கிடைக்கும் சாணம், கோமியம், பால், நெய், தயிர் என்ற ஐந்திலிருந்து தயாரிக்கப்படும் உயிரி நீர்மக்கலவை பஞ்சகவ்யம் எனப்படுகிறது.