* நாராயணனின் 12 நாமங்களைக் குறிக்கும் வகையில் வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் திருமண் காப்பு இட்டுகொள்வர்.
* உழவாரப் பணி என்பது கோயில்களில் தன்னார்வலர்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுதலைக் குறிக்கிறது.
* பறவை என்னும் வகுப்பில் மொத்தமாக 9672 இனங்கள் உள்ளன.
* இராவணன் மீசை என்பது ஈராண்டு கால வாழ்க்கைச் சுழற்சியைக் கொண்ட புதர்ச் செடி.
* களிமண்ணால் செய்யப்படும் தலையாட்டி பொம்மைகள் தஞ்சாவூரின் அடையாளமாக விளங்குகின்றன.
* உலகிலேயே சதுர வடிவில் உள்ள தேசியக் கொடிகள் வத்திக்கான் நகரின் தேசியக் கொடி மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டின் தேசியக் கொடியாகும்.
* புடைநொடி என்ற வானியல் அலகு 3.26 ஒளியாண்டுகள் தூரத்திற்கு சமம்.
* இந்தியாவில் அஞ்சல் பெட்டிகளுக்குப் (படம்) பயன்படுத்தப்படும் சிவப்பு நிற வர்ணப்பூச்சு “அஞ்சல் அலுவலகச் சிவப்பு” என்ற பெயரில் பிரபலமானது.
* ஓர் ஆந்தை (படம்) தனது தலையை இரு புறமும் 270 பாகைகள் வரை திருப்ப வல்லது.
* உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் செல்லும் நாடு பிரான்சு.
* ஒட்டகச்சிவிங்கியின் நீண்ட கழுத்தில் 7 எலும்புகள்தான் உள்ளன. சுண்டெலி, மனிதன் உள்ளிட்ட எல்லாப் பாலூட்டிகளும் ஏழு கழுத்தெலும்புகளைக் கொண்டவைதான்.
* ஒரு கரப்பான் பூச்சியின் தலையைத் துண்டித்த பிறகும் அது இரண்டு வாரம் வரை உயிர்வாழக் கூடும்.
* தமிழில் எழுதப்பட்ட முதல் சிறுகதை வ. வே. சு. ஐயரின் குளத்தங்கரை அரசமரம்.
* கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் முதலிய நாட்டுப்புற ஆட்டங்களுக்குப் பின்னணியாய் அமையும் இசையினை நையாண்டி மேளம் என்கின்றனர்.
* பறவைகளில் கோழி அதிகமான எண்ணிக்கை உள்ள பறவையாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் எண்ணிக்கை 2400 கோடிகள் (2003 ஆம் ஆண்டு).
* பறவைகளில் அதிkஅ உயரத்தில் பறக்கும் ரூபெல் பிணந்தின்னிக் கழுகு, கடல் மட்டத்திலிருந்து 11,000 மீற்றர் (36,000 அடி) உயரத்தில் பறக்க வல்லது.
* நெல்லிக்காய் அறுசுவைகளையும் கொண்டது.
* ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும் அந்திமந்தாரை பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் பூவாகும்.
* மூக்கன் பறவை ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ கூடப் பயணத்தை முறிக்காமல் இடைவிடாது தொடர்ந்து எட்டு நாட்கள் வரை பறக்கும்.