1. மனைவி - பொண்டாட்டி (பெண்டு + ஆட்டி = பெண் தோழி என்று பொருள்), வாழ்க்கைத் துணை , ஆம்படையாள்( அகம் + உடையாள், அதாவது தான் வீட்டிற்கு உடையவள் என்று பொருள்), தாரம், அகத்துக்காரி, வீட்டுக்காரி.
2. கணவன் - ஒரு பெண்ணின் துணைவன், ஆம்படையான் (அகம் + உடையோன் = தான் வீட்டிற்கு உடையவன் என்று பொருள்), புருஷன் (வடமொழியில் புருஷன் என்றால் ஆண் என்று பொருள்), அகத்துக்காரர், வீட்டுக்காரர்.
3. மகன் /தனயன் - தான் பெற்ற ஆண் பிள்ளை
4. மகள் - தான் பெற்ற பெண் பிள்ளை
5. மாற்றுப்பெண் - தன் மகனின் மனைவி (மருமகள்)
6. மருமகன் - தன் மகளின் கணவன்
7. மைத்துனன் - மனைவியின் சகோதரர்கள் அல்லது கணவனின் மூத்த சகோதரர்கள்.
8. கொழுந்தன் - கணவனின் இளைய சகோதரர்கள்.
9. கொழுந்தியாள் - மனைவியின் இளைய சகோதரிகள்.
10. மனைவியின் பெற்றோர்கள் - மாமா, மாமி
11. கணவனின் பெற்றோர்கள் - அத்தை / மாமா (ஆனால் ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்க்குப் பிறகு கணவனின் சொந்தங்கள் எல்லாம் தன்னுடையவர்கள் அவர்கள். எனவே ஓர் பெண் தன்னுடைய மாமனார்/ மாமியாரை அப்பா /அம்மா என்று அழைப்பதும் வழக்கம்).
12. மாமனார் - மனைவி / கணவனின் தந்தை
13. மாமியார் - கணவனின் / மனைவியின் அன்னை
14. சம்பந்தி - மகன் / மக்களின் துணையின் தந்தை. இதனைத் தமிழிலே கொண்டான்/கொடுத்தான் என்றும் சொல்லுவார்கள். ஆனால் இந்த வடமொழிச் சொல்லே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது.
15. சம்பந்தி அம்மா - மகன் / மக்களின் துணையின் தாய்.
16. மதினி / அண்ணி - அண்ணன் மனைவி
17. மச்சினி - தம்பியின் மனைவி / மனைவியின் மூத்த சகோதரிகள்
18. நாத்தனார் / நங்கையாள் - நாத்தி என்றால் கணவனுடைய அக்கா / தங்கை. நங்கை என்றால் (கணவன் வீட்டில்) பிறந்த மங்கை / நங்கை என்று பொருள்படும்.
19. ஓரகத்தி / ஓருப்புடி - கணவன் அண்ணன் / தம்பியின் மனைவி
20. சடடகன் / சகலை / சஹாபடி - இது வடமொழில்ச் சொல். மனைவியின் அக்கா / தங்கைகளின் கணவன்.
21. சக்களத்தி - (சக களத்திரா - வடமொழியிl தன்னுடைய கணவனை மணந்தவள் என்று பொருள்) தன் கணவனின் மற்றொரு மனைவி என்று பொருள்.