* உணவு பரிமாறும் பொழுது வலமிருந்து இடமாக பரிமாறிக் கொண்டு வரவேண்டும்.
* முதலில் இனிப்பு பதார்த்தம் இலையின் இடப்புறம், அதாவது நாம் உட்காரும் போது நமது வலது கைப்பக்க ஒரத்தில் வைக்க வேண்டும்.
* பரிமாறும் போது உப்பு, நெய், சாதம் ஆகியவற்றைக் கையால் எடுத்துப் பரிமாறக் கூடாது.
* தலை வாழையிலை, உட்காரும் நமக்கு இடப்பக்கம் இலையின் தலைப்பக்கம் இருக்க வேண்டும்.
* தண்ணீர் வைக்கமால் உணவு பரிமாறக்கூடாது.
* வாழையிலையை மூடும் போதும் நமக்கு எதிரே உள்ள இலைக் கரையை நம்மை நோக்கியவாறு மடிக்க வேண்டும்.
* வாசல்படிக்கு நேரே அமர்ந்து உண்ணக் கூடாது.
* சாப்பிட்ட பிறகு கையலம்புங்கள் என்று கூறித் தண்ணீர் கொடுக்க வேண்டும். கை கழுவுங்கள் என்று சொல்லக்கூடாது.
* சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு, பதார்த்தங்களை வரிசையாகச் சாப்பிட்டுப் பின்பு நீர் அருந்த வேண்டும்.
* சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக்கூடாது.