விழியின் ஏக்கம்
தினமும் புத்தம் புதிதாய்ப்
பூக்கும் சூரியனைப் போல்br>
சுறுசுறுப்பாய் வாழ்வில் சுழல…
தினம் ஒரு பாதையாய்
செல்கிறது… எனது மனம்!
தோல்வியில் துவண்ட
மனம் வெற்றியில்
திளைக்க போவதுதான்
எப்போது…?
ஏக்கம் இல்லா வாழ்வில்
வசந்தம் வரும் வேளை தான்
எப்போது..?
நிழல்கூட வெளிச்சம்
உள்ளவரைதான்…
தன்னம்பிக்கை
உள்ளவரை தான்…
தலை கூட நிமிந்து நிற்கும்
இருக்கும் நிலைமாற…!
நிலை தடுமாற்றமில்லா
வழியில் பயணம்…
தன்னம்பிக்கையுடன்
தொடங்குகிறது எனது
வாழ்க்கைப்பயணம்…
- மு.சந்திரசேகர், இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.