இது கவிதையா...?
எதுவுமே எழுதத்தெரியாத நான்
எதோ ஒன்றைக் கிறுக்கி வைத்திருக்கிறேன்
எனக்கு அது கவிதை!
உங்களுக்கு...?
அர்த்தங்கள் இருக்கிறதா, இல்லையா
தெரியாது
அறியாத சொல்லை நான் சேர்க்கவில்லை
தெரியாத பொருளை நான் சொல்லவில்லை
விளங்குவதற்குதான் எழுதுகிறேன்
எனக்கு அது கவிதை!
உங்களுக்கு...?
எனக்கு மகிழ்ச்சி தருகிறது
எனக்கு பொருள் புரிகிகிறது
சொற்களைக் கட்டி இழுத்துச்
சேர்த்திருக்கும்
சொல் கூட்டத்துக்கு
என்ன பெயர் வைப்பது கவிதையா?
இது என்ன ?
ஒவ்வொரு வீரரும் அணிவகுத்து நிற்பது போல்
ஒவ்வொரு எழுத்துகளும் நிற்கிறது
ஒவ்வொரு அணிகளும் சேர்ந்த படைகள் போல்
ஒவ்வொரு வசனங்களும் சேர்ந்த
கூட்டமாய் பொருள்கள் தர
என் மொழிக்குள் ஒரு போர்
அது கவிதையா?
சொல்லுங்கள் நீங்கள்தான்
நடுவர்கள்
இதற்கு என்ன பெயர் வைப்பது?
படிப்பவர்களே... நீங்கள்தான்
முடிவைச் சொல்ல வேண்டும்.
என்னுடையது கவிதையா?
இல்லை...
வேறு என்னவென்று...!
- கிருஷ்ணா.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.