எதுவுமே தெரியவில்லை...?
நேற்றைய பொழுது உன்னோடு
சேற்றில் விளையாடிப்
பழகும் போது தெரிவதில்லை?
நீ என் அருகில் இருக்கும் போது
கூட நான் உன்னை அறியவில்லை!
எனக்காக நீ ! என் மீது
இருந்த அன்பால்
என்னை விட்டு கொடுத்தவரிடம்
விட்டுக்கொடுக்காமல்
பேசிய போது
கூட தெரியவில்லை!
நீ என்னைக் கேட்காமல்
செய்யும் செயலால்
வரும் கோபம் ஏன் என்று
தெரியவில்லை?
உன்னிடம் இருக்கும் போது
எனக்கு ஒரு பலம்.
ஏன் என்று புரியவில்லை?
என்னாலும் செய்ய
முடியும் என்று
எனக்கு சுட்டிக் காட்டினாய்
அப்போது கூட
எனக்கு விளங்கவில்லை
என்னை விட்டு சென்று
விடுவாயோ? என்று நினைக்கும்
போது கூட தெரியவில்லை...!
உன்னைப் பார்த்த போதெல்லாம்
எனக்கு எதுவும் தோன்றவில்லை
இப்போழுது தான் தெரிகிறது
என்னை விட்டுப் பிரிந்து
நெடுந்தொலைவு சென்று விட...
உன்னை வழியனுப்பும் நேரம்
வரும் போதுதான்
எனக்குத் தெரிந்தது
பிரிவுதான்
நட்பை அடையாளம்
காட்டும் என்று!
நீ தான்
என் நண்பன் என்று!
- மு. சந்திரசேகர், இராஐபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.