உழைத்துப்பார்!
ஓடிக் கொண்டிருக்கும் உலகமும்…
முதுமையிலும் உழைக்கும்
உள்ளமும்!
என்றும் இளமை…!
கொடும் வெயிலிலும்
கசியும் தொழிலாளின் வியர்வை…!
மேகத்திலும் கசியாத
மாமழை…!
வளர்ச்சி வயது உயர்வதல்ல!
வானம் வசப்படும்
உழைப்பு…!
துன்பத்திலும் இன்பத்திலும்
உன்னால் முடியும் உழைக்க…
உன்னைத் தேடி வரும்
உழைப்பைக் கொடு…
உலகம் உன் வசமாகும்...!
தோல்விக்குப் பின்னால்
தான் வெற்றி…!
அந்த வெற்றி உன்
கையில் தெரியும்!
உழைத்துப் பார்…
புதிய பிறப்பின்...
புதிய பாதையில்…
- மு. சந்திரசேகர், இராஐபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.