உள்ளத்தினில் கருணை விதைகள்!
உள்ளத்தினுள்ளே உண்மைகள்
உறங்கிடும் வேளையிது
உரைத்திட மொழியின்றி ஏனோ
உணர்வுகள் தவிக்கின்றன
தத்தளிக்கும் வாழ்க்கையிலே
தவித்திடும் உயிர்கள் ஆயிரம்
தனக்காக மட்டும் வாழ்ந்திடுவோர்
தனையும் கொண்டது இத்தரணி
சொல்லித் தெரியா உண்மைகள்
சொல்லியும் புரியா உள்ளங்கள்
சொல்லவும் முடியா நெஞ்சங்கள்
சொற்களை இழந்திட்ட நேரங்கள்
வரைந்திடும் கவிதைக்குள் இங்கு
புதைந்திடும் கருத்துக்கள் உண்டு
விளைந்திடும் எண்ணங்கள் யாவும்
விதைக்கட்டும் கருணை விதைகளை!
- சக்தி சக்திதாசன், லண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.