மாற்றமாகும் தோற்றங்கள்!
தோற்றங்கள்
பல கொண்டேன்
அவள் என்னைக் காதலித்தாள்!
நான்
கவிஞனாக - உன்
விழிகளிரண்டும் எனது
பார்வையோடு இதமாய்
நிலைகுத்தும் போதெல்லாம்!
நான்
ரசிகனாக - நீ
ஏகமாய் அழகோடு வந்து
எதிர்ப்படும் போதெல்லாம் !
நான்
ஓவியனாக - உன்
நினைவு எனது உணர்வுக்குள்
வண்ணக்கலவையாகி ஞாபகம்
தூரிகையாகும் போதெல்லாம்!
நான்
இலக்கியவாதியாக - நீ
அடிக்கடி என்னிடம்
அம்பிகாவதி அமராவதி
காதலைக் குறிப்பிடும் போதெலாம்!
நான்
பேச்சாளனாக - நீ
என்னுடன் பழகிவிட்ட
பக்குவத்தில் நண்பர்களுடன்
உரையாடும் போதெல்லாம் !
நான்
அதிர்ஷ்டகாரனாக - உன்
நேசக் குறுஞ்செய்திகள்
எனது கைபேசியில்
வரும் போதெல்லாம் !
- பாரதியான்,ஆர்.ஆர்.நகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.