கரிசலில் மலர்ந்த ரோசா!
கரிசல் மண்ணில்
பூத்த கருப்பு ரோசா
காலம் கடந்தும் - புகழ்
வாசம் கமழும்
எங்கள் காமராசர்!
திட்டுத்திட்டாய்
சமூகம் வரண்டு கிடக்க
கல்வி நீரூற்றை
ஒவ்வொருவர் சிந்தையிலும்
ஊற்றெடுக்கச் செய்தவர்!
இன்றோ
எங்கும் செல்வமான பள்ளிகள்
சிகரம் தொட்ட மனிதர்கள்...
அறிவு விழிப்புணர்வு பசுமை
யாவருக்கும் எல்லாம் வெளிச்சம் !
விருதை தந்த விடுதலை வீரர்
கல்வி விருதாய் என்றும்
எங்கள் கர்மவீரர்!
மடமைத் தடைகளை நீக்கி
சமத்துவ உடைமை
அனைவருக்கும் உரிமையென
பொதுவுடமைச் சாலையமைத்தவர்!
தேசம் தேசியமென
வேசமற்று உயர்ந்தவரை
பாசமும் நேசமும் கொண்டு
இப்பாரத்ததில் நாமெல்லாம்
என்றென்றும் நினைத்திருப்போம்!
- பாரதியான், ஆர்.ஆர்.நகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.