விசித்திரமான உலகமிது!
போகட்டும் விட்டு விடு
போனதை மறந்து விடு
செய்தவை தனை மறந்து
சொந்தத்தைத் துறந்து
மரித்து வாழும் மனித உலகில்
நடந்தை எண்ணி ஏன் நீ
நடப்பதைத் துறந்து கலங்குகிறாய்?
விசித்திரமான உலகமிது தோழா !
விந்தை மிகு மனிதர் காணாய்
விசைமிகு பந்தினைப் போல
விரைந்தே திரும்பிடும் என மறந்து
வீணர்கள் போல வாழ்கிறார்
விட்டிடுவாய் அவர்தம் எண்ணங்களை...!
நெஞ்சத்தை உண்மையாய் தட்டினால்
நீதியின் கதவுகள் தானாய்த் திறக்கும்
அதுவரை கண்களை மூடி நீயும் அமைதியாய்
ஆன்மீக உணர்வுகளில் மிதந்திடுவாய்
- சக்தி சக்திதாசன், இலண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.