கொஞ்சமாய்க் கொஞ்சலாமா?
கொஞ்சமாய்க் கொஞ்சலாமா?
கொஞ்சும் கிளியே சொல்லாயோ?
கெஞ்சும் எந்தன் எண்ணம் அதையும்
மிஞ்சும் உந்தன் நாணம்
சின்னச் சின்ன விழிகள் தன்னை
மெல்ல மெல்லச் சிமிட்டி என்னை
வெல்ல வெல்ல முடியா உணர்வுகள்
சொல்லிச் சொல்லிக் கட்டி விட்டாய்
எண்ண எண்ண இனிக்குதடி
எண்ணமெல்லாம் சிலிர்க்குதடி
விண்ணை விண்ணை நோக்குகிறேன்
உன்னை நிலவாய் எண்ணி நானே
கனவுகளாய் இரவுகளில் மலர்ந்து விடு
காட்சிகளாய் காணுமிடமெலாம் நிறைந்து விடு
புனைவுகளாய் புகுந்துவிடு கவிதைகளாய்
பகரட்டுமே பாவையுந்தன் வனப்புகளை
- சக்தி சக்திதாசன், இலண்டன்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.