ந. க. துறைவனின் சென்ரியு கவிதைகள்
வண்டுகளின் இம்சை
பொறுக்காமல் முணுமுணுக்கிறது
அன்றலர்ந்த மலர்கள்.
*****
வீரத்திற்குப் பெருமை சேர்த்தது
வரலாற்றுச் சின்னமாய்
வன்னிப் பூக்கள்.
*****
தோப்பில் திருட வந்தவனை
துரத்தித் துரத்திக்
கொட்டியது குளவிகள்.
*****
ஐந்து ரூபாய் விலை
கோலிக்குண்டு போல
எலுமிச்சம் பழம்.
*****
பசிக்கு அன்னதானம்
பார்வைக்குக் கண் தானம்
உயிர் காக்க இரத்ததானம்
*****
குடும்பத்தில் சண்டை
வேடிக்கைப் பார்க்கிறது
மூலையில் மறைந்து பூனை.
*****
நோயாளிகளின் தோழிகள்
உயிர் மீட்புப் பணியாளர்கள்
சிகிச்சை தரும் செவிலியர்கள்.
- ந. க. துறைவன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.