சமாளிப்பு!
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்து காத்திருந்தேன்.
பஸ் போய் விட்டதாவென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை...
காத்திருப்பதும்...
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வதென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன்...
சட்டென மூளையில்
உதித்ததொரு
சின்னக் காரணம்…
- ந. க. துறைவன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.