உன் கனவை நனவாக்க...!
மகாத்மாவே
அஹிம்சையில் வளர்ந்து
அடக்கு முறைக்கு எழுந்து
தேச விருட்சமானாய்
இமயம் முதல் குமரி வரை
சுதந்திர நிழல் கண்டோம்...
உனது
அன்பின் அணிவகுப்பில்
அயராத விழிப்புணர்வில்
அறநெறிப் பாதையில்
ஒற்றுமையாய்ப் பயணித்தோம்...
உனது
சுயநலமற்ற
ஒட்டு மொத்த பாரத நல
கோவணப்போராட்டத்தில்
செங்கோட்டையில் கொடியேற்றி
இந்திய இன மானம் காத்தோம்...
உனது
காலம் உருண்டோடிய
போராட்டக் களத்திலே
உரிமை பெறப்படும் நம்பிக்கையில்
எங்கும் பொறுமை காத்து நின்று
உயர் பெருமையோடு
மக்களாட்சியின் பெருமை உணர்ந்தோம்...
உனது
அடிமையான பூமியிதை
எதிலும் வளமையாக்கி
வல்லரசாக்கிக்காட்டு - என்ற
கனவை உண்மையாக்கும்
முயற்சியில் முன்னேற்றம் காண்கிறோம்..!
- பாரதியான், விருதுநகர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.